07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 12, 2009

எல்லாரும் சிரிச்சுட்டே இருக்கணும்

சிரிக்காமல் இருந்து பாருங்கள் திண்டாடிப் போவீர்கள்.நகைச்சுவையினால் பல நோய்கள் குணமாகியிருப்பதாக பல மருத்துவ வல்லுனர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.உங்களுக்கு இன்று ஒரு அருமையான ஒளடதம் தந்திருக்கிறேன்
http://mohanacharal.blogspot.com/2009/03/blog-post.html#comment-form

முதலில் ,தம்பி மோஹன் பதிவுக்குள் நுழைந்தேன் .நகைச் சுவைச் சாரல் குளுகுளுவென்றிருந்தது.இவரது பதிவுக்குள் சாவகாசமாய் சென்று அலசணும்

அந்த சாரலின் ஒரு ஐஸ்க்யூப்

”காந்திஜியின் உழைப்பால் -ஆகஸ்ட் 15 -ல் நாம் என்ன பெற்றோம் ?

”ஒரு நாள் விடுமுறை”

maths க்கு விளக்கம் ஒரு மாணவன் விளக்கம் சொல்கிறான்

படித்து சிரியுங்கள்

-----------------

http://ushnavayu.blogspot.com/2009/03/blog-post_08.htmlˆ

நாகர்கோவில் நாஞ்சிலான்..வகுப்பறை துணுக்குகள் பதிவிட்டிருக்கிறார்.

உலகத்திலேயே சிறந்த மொழி எது என்ற ஆசிரியர் கேட்க,தலை சிறந்த மாணவன்பதில் இது.”உங்கள் மகள் தேன் மொழி சார்.

அச்த்தப் போவது யாரு,கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் 75% ஆசிரியர்கள்தான் பங்கேற்கின்றனர் என்றால் வகுப்பறையில் எத்தனை பேர் அசத்தியிருப்பார்கள்,கலக்கியிருப்பார்கள்?

தலைமை ஆசிரியர் கேட்கிறார்...”யார்டா தமிழ் ஆசிரியர் காலை வாரிவிட்டது?

பதில்?

பதிவில் சென்று பாருங்கள்.


http://guhankatturai.blogspot.com/2009/03/20.html
குஹன் பதிவு ஒரு நகைச்சுவை தோணி..நம்மை சோர்வு என்ற கரையிலிருந்து உற்சாகம் என்ற அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார்.அவருடைய துடுப்பு துடிப்பானது
பார்த்திபனும் வடிவேலுவும் சேர்ந்தால் கேட்கணுமா?
வடிவேலுவின் சம்பளம் எப்படி கணக்கிடப் படுகிறது .
இரண்டு பேரையும்[வடிவேலு-லுங்கியைத் தூக்கி மடித்துக் கொண்ட கோலம்,பார்த்திபனின் லொள்ளு பார்வை கற்பனை செத படி ,வாசித்துச் சிரியுங்கள்.வயிறு வலித்தால் பக்கத்திலேயே குஹனின் தம்பி மருந்துக்கடை வைத்திருப்பார்,ஒரு மாத்திரை வாங்கிக் கொள்ளுங்கள்

http://ungalranga.blogspot.com/2009/03/blog-post_11.html
பழகலாம் வாங்க...என்று அழைத்து பழக விடாமல் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த ரங்கன் வலைப்பூ. சேலத்துக்காரர் பின்னே அவர், நகைச்சுவை அவ்வூர் மாம்பழம் போல் சுவையாக இருக்காதா?இருக்கிறது.கட் பண்ணி சாப்பிடுவீங்களோ தூயா சொன்ன மாதிரி ஜூஸ் எடுத்து உறிஞ்சுவீர்களோ அல்லது அப்படியே கடிப்பீங்களோ உங்கள் இஷ்டம்.
பேனாவை இரவல் கொடுத்தவனின் திண்டாட்டம் 14 ‘என்று விவரித்திருக்கிறார்.
சிரித்து முடிக்க 1 மணி நேரம் தருகிறேன் .பிறகு பின்னூட்டம்தான் அது எனக்கு ஊட்டம்தான்

19 comments:

  1. சிரித்து வாழ வேண்டும் ...

    நல்ல விடயம் தான்

    ReplyDelete
  2. சிரித்து வாழ வேண்டும் ...

    நல்ல விடயம் தான்//

    நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  3. //எல்லாரும் சிரிச்சுட்டே இருக்கணும்"///


    இதைத்தான் எப்பவும் எல்லாரும் மனசுல வைச்சுக்கணும் :))))

    ReplyDelete
  4. நான்காம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. //காந்திஜியின் உழைப்பால் ஆகஸ்ட் 155ல் நாம் என்ன பெற்றோம் ?//

    சுதந்திரதினம் தேதி தவறுதலாக இரண்டு 5 உள்ளது.

    ReplyDelete
  6. ராமல்ஷ்மி எங்கே போய் விட்டார் பதியும் முன் பார்த்திருப்பாரே.
    நன்றி அன்புமணி .இதோ ஒரு ஐந்தை அடித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  7. மாற்றி விட்டேன் .அது ஒண்ணுமில்லை அன்புமணி நாம் சுதந்திரம் வாங்கின மாதிரியே தெரியலையா அதான் அது 15 ஆ இருந்தா என்ன 155 ஆ இருந்தா என்னன்னு....கொஞ்சம் விரக்தியில் தட்டியிருப்பேன் என்று நினக்கிறேன்.
    தப்பு என் மேல் இல்லை நம்ம நாட்டு நடப்பு அப்படி இருக்கு.....ஹி ஹி ஹி

    ReplyDelete
  8. நட்புடன் ஜமால் சொன்னதை வழிமொழிந்த ,புதுகைதென்றல்,ஆயில்யன் அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  9. அறிமுகப்படுத்தப்பட்ட நால்வருமே எனக்கு புதிதுதான். எல்லாமே நன்றாக இருந்தது. அதிலும் குகனின் பார்த்திபன் - வடிவேலு காமெடி கலக்கல். அப்புறம் ரங்கன் போட்டிருந்த வீடியோவும் சூப்பருங்க...

    ReplyDelete
  10. எல்லாமே புதிய பிளாகுகளாக இருக்கே... வாழ்த்துகள்... :)

    ReplyDelete
  11. வாங்க விக்னேஷ்வர் நன்றி.
    எல்லாம் புதிதாக இருக்கவேண்டுமென்று நல்லா சலிச்சு தேடினேன்...
    வலச்சரத்தின் குறிக்கொளும் அதுதானே புதியவர்களை அறிமுகப் படுத்தவேண்டும் அல்லது இதுவரை போகாத பதிர்வர்களாக அமைந்தால் சிறப்பு.கோமாதான் உங்களுக்குத் தெரியுமே ஹி ஹி ஹி

    ReplyDelete
  12. வந்தேன் வந்தேன் இன்று வலைக்குள்ளேயே இப்போதுதான் நுழைகிறேன். நுழைந்ததும் முதல் விசிட் உங்களைப் பார்க்கத்தான்:)!

    ReplyDelete
  13. மோகன் சாரலில் ‘பள்ளி நாட்கள்’ அத்தனையும் சரவெடி என்றால் நாஞ்சிலானின் ’வகுப்பறை’யில் முதல் துணுக்கே லெச்சுமி வெடி:))! வடிவேலு பார்த்திபன் கூட்டணியை ரசிக்காதவர் உண்டா? குகனுக்கு வாழ்த்துக்கள்! சேலத்துக்காரரின் ‘திண்டாட்டம் 14’-க்கு சிரித்து முடிக்க ஒரு மணி நேரமாகுமென நீங்களே சொல்லிவிட்டீர்கள். அப்போ அடுத்த பதிவுக்கு சரியாக ஒரு மணி கழித்து வரவா:))?

    ReplyDelete
  14. எனக்கு பசிக்குதுன்னு புரிஞ்சிகிட்டு பூரி சுட்டதுக்கு நன்றி.
    ஆனா பிள்ளையார் பூரிய சாப்பிட்டா பிள்ளையார் கோவிச்சிக்க மாட்டாரா?

    ReplyDelete
  15. எல்லாமே நல்ல நகைச்சுவைகள்

    ரொம்ப நன்றி சிரிக்க வைத்ததற்கு

    ReplyDelete
  16. பிள்ளையாரைச் சாப்பிடலாம்.வெல்லப் பிள்ளையார் செய்து விண்டு விண்டு சாப்பிடுவார்களே...தப்பே இல்லை.

    12 அடி உயரத்துக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிசில் பிள்ளையாரை செய்து...ஆயில் பெயிண்ட் அடிச்சு ,10 நாள் பூஜை நைவேத்யம் ..பிரசாதம் என்று முடிந்த பின் கணபதி பப்பா மோரியா...னு பாடி கடலுக்குள்ளே போட்டுறதுதான் தப்பு.
    கடல் மீன்கள் மறு நாள் ஆயில் பெயிண்ட் கலக்கலில் இறந்து போய் கடலோரம் ஒதுங்கும் .
    பக்தியுடன் வழிபட்ட கணபதியின் தலை ஒரு பக்கம் ,கால்கள் ஒரு பக்கம் என்று பரிதாபமாக கடலில் மிதக்கும் கோரத்தைப் பார்த்தால் பூரி பிள்ளையாரைச் சாப்பிட்டால் தப்பே இல்லை.

    ReplyDelete
  17. அருமையான சிரிப்பு விருந்து படைத்த கோமா அவர்களுக்கு நன்றிகள் பல.

    வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

    அதை சரியா செஞ்சு இருக்கீங்க கோமா.

    ReplyDelete
  18. நான்காம் நாள் வாழ்த்துகள் கோமா!!

    வித்தியாசமாக வலைச்சரம் தொடுத்து இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  19. வித்தியாசமாக வலைச்சரம் தொடுத்து இருக்கிறீர்கள்.
    ரம்யமான பாராட்டுக்கு நன்றி ரம்யா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது