07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 9, 2009

எங்கே எப்படி ...?

எப்படி எழுதினேன்,யாரிடமிருந்து வந்தது இந்த எழுத்து நேயம்?
அடிக்கடி எனக்குள் கேட்டுக் கொள்வேன்.பள்ளியில் கவிதை என்று ஒரு புள்ளியிடக் கூட என் பேனாவுக்குத் தெரியாது.கல்லூரியில் ?அதுவும் சுத்தம்.
கையளவோ கடலளவோ ,கற்றது போதும் என்று வீட்டில் அமர்ந்திருந்த சமயம்,
பொழுது போக்காக வள்ளுவரிடமும் பாரதியாரிடமும் உரையாடத் தொடங்கினேன்.சின்னச் சின்னதாக தமிழில் என் நடை வண்டிப் பயணம் தொடங்கியது.வீட்டிலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்று ஃபுல்ஸ்கேப் பேப்பரில் நுணுக்கி நுணுக்கி எழுதி வெளியிட்டிருக்கிறேன்.
தலைப்புச் செய்தியாக “...தூத்துக்குடியிலிருந்து அக்கா வருகை”,அண்ணன் மதுரை பயணம்...இப்படியாக ஒரே ஒரு பத்திரிகையாக , குடும்ப மலராக மலர்ந்திருக்கிறது.
அடுத்து ,என் மாமனார் சதாபிஷேக விழாவில் “ஏற்றம் பெற எண்பது என்ற தலைப்பில் 80 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான பொழிப்புரை எழுதி புத்தகமாக்கினேன். அன்று வைபவத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் பெரியவர்கள் ஆசியுடன் புத்தகமும் வழங்கப் பட்டது.
துணுக்குகள்,ஜோக்ஸ் என்று தொடங்கி...இன்று ஓரளவு நானும் எழுதுகிறேன் என்று தைரியமாகச் சொல்லும் நிலையில் நிற்கிறேன்
நான் சென்னை ’கிழக்கு சென்னை அரிமா சங்கத்தின்’ அங்கத்தினராக இருந்த சமயம் மன்றத்தின் மாத மலர் ஆண்டு மலருக்கு எழுதியது, என் எழுத்துக்கு உரம் இட்டது.

83-85 என் எழுத்து எனக்கென ஒரு பாணியுடன் வளரத் துவங்கியது .

அடுத்த மைல்கல்.திண்ணை.காம்
2001-06 வாரம் தவறாமல் என் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு பதிவாகி வந்தன.அவைகளில் சிலவற்றை என் அறிமுக எழுத்தாக வலைப்பூவில் பதிந்திருக்கிறேன்.

இன்று, 07 அக்டோபரில் தொடங்கி இன்று வரை ஹாஸ்யமும் வள்ளுவமும் என் எண்ண அலைகளை தமிழ் உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

எப்படி எழுதினேன் என்பதை உணர்த்த இதோ என் கவிதை.
http://valluvam-rohini.blogspot.com/2007/12/blog-post_26.html#links

45 comments:

  1. ஹைய்ய்ய்ய் நான் நினைச்சேன் :)

    கலக்குங்க அம்மா :))

    ReplyDelete
  2. \\.பள்ளியில் கவிதை என்று ஒரு புள்ளியிடக் கூட என் பேனாவுக்குத் தெரியாது\\

    ஆஹா . ஒரு கவிதை தானே

    அதுவும் சுபம்

    ReplyDelete
  3. //தூத்துக்குடியிலிருந்து அக்கா வருகை”,அண்ணன் மதுரை பயணம்...இப்படியாக ஒரே ஒரு பத்திரிகையாக , குடும்ப மலராக மலர்ந்திருக்கிறது.//

    அட டிப்ரெண்டா இருக்கே இந்த தீம் :))

    ReplyDelete
  4. வீட்டிலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்று ஃபுல்ஸ்கேப் பேப்பரில் நுணுக்கி நுணுக்கி எழுதி வெளியிட்டிருக்கிறேன்\\

    ஓஹ்! வாழ்த்துகள்
    (மிகத்தாமதம் என்றாலும்)

    ReplyDelete
  5. ஏற்றம் பெற எண்பது என்ற தலைப்பில் 80 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான பொழிப்புரை எழுதி புத்தகமாக்கினேன்\\

    எங்கே அதெல்லாம் ...

    ReplyDelete
  6. \\சேய்கை எழுதியச் சித்திரம் போல,
    மழலை வாய் வழி வந்த மொழி போல,
    எதுகை இல்லை மோனையில்லை,
    நானும் எழுதினேன் புதுக்கவிதை.
    மறுக்கவில்லை பழிக்கவில்லை,
    ஏற்றுக் கொண்டாள் தமிழன்னை.
    \\

    மிகவும் அருமை சகோதரி.

    ReplyDelete
  7. ஆயில்யன்
    நீங்க நெனச்சீங்களா.
    சரியா நெனச்சிட்டீங்க .வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. எண்பதுகளில் ஆரம்பித்த உங்கள் எழுத்துப் பயணத்தில் இருந்தே உடன் இருக்கிறேன் இன்று வரை என்பதில் எனக்குத் தனி மகிழ்ச்சி!

    ReplyDelete
  9. ஆயில்யன்
    நான் வடிவமைத்த நாளிதழ் தற்பொழுது என் வசம் இல்லை.
    அந்த நாளில், நான் சோ வின் ரசிகை .துக்ளக் பத்திரிகையில் ஒரே அடியாக அரசியல் கலக்காத காலம் அது .கொஞ்சம் வாசகர் துணுக்குக்கும் இடம் இருக்கும் .73-76 வரை,என் ஜோக்ஸ் பல அதில் அச்சேறியிருக்கின்றன.

    ReplyDelete
  10. \.பள்ளியில் கவிதை என்று ஒரு புள்ளியிடக் கூட என் பேனாவுக்குத் தெரியாது\\

    ஆஹா . ஒரு கவிதை தானே
    ------
    ஏற்றம் பெற எண்பது என்ற தலைப்பில் 80 குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான பொழிப்புரை எழுதி புத்தகமாக்கினேன்\\

    எங்கே அதெல்லாம் ...
    --------
    பாராட்டுக்கு நன்றி .ஏற்றம் பெற 80 ,புத்தகத்தைப் பெற்றவரிடமிருந்து பெற முயன்று கொண்டிருக்கிறேன்
    என்னிடம் இருந்திருந்தால் தினம் ஒரு குறள் என்று கலக்கி யிருக்க மாட்டேனா

    ReplyDelete
  11. கலக்குகிறேன்
    டி.வி.ஆருக்கு என்ன வேண்டும்.
    சுக்குக் காப்பி [அறிவுரைகள்]
    பூஸ்ட் போர்ன்விடா[ஆலோசனைகள்]
    ஐஸ்க்ரீம்[நகைச்சுவை]
    என்ன கலக்கணும்

    ReplyDelete
  12. ராமலஷ்மி
    80லிலிருந்து தொடங்கிய நம் இலக்கிய பயணம் என்றும் தொடரட்டும்

    ReplyDelete
  13. //கவிதை என்று ஒரு புள்ளியிடக் கூட என் பேனாவுக்குத் தெரியாது.//

    கவிதை என்ற எழுத புள்ளியிட தேவையில்லையே! (சும்மா... ஒரு தமாசுக்கு...)

    ReplyDelete
  14. //வீட்டிலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்று ஃபுல்ஸ்கேப் பேப்பரில் நுணுக்கி நுணுக்கி எழுதி வெளியிட்டிருக்கிறேன்\\

    நம்மளமாதிரிதானா, நீங்களும்...

    ReplyDelete
  15. அன்பு மணி
    ரசித்தேன் உங்கள் தமாசு

    ReplyDelete
  16. //கலக்குகிறேன்
    டி.வி.ஆருக்கு என்ன வேண்டும்.
    சுக்குக் காப்பி [அறிவுரைகள்]
    பூஸ்ட் போர்ன்விடா[ஆலோசனைகள்]
    ஐஸ்க்ரீம்[நகைச்சுவை]
    என்ன கலக்கணும்//

    ஆகா! கோடைக்கு ஐஸ்கீரிம்தான் ஓ.கே.

    ReplyDelete
  17. ஆராய முற்பட்டால் அடுத்த நொடியிலேயே நம்மளைப் போல் ஆயிரம் பேர் நம் கண்ணில் தென்படுவர்.

    ReplyDelete
  18. ஸ்ட்ராபெரி,சாக்லேட்,எது வேணும்
    அன்புமணி

    ReplyDelete
  19. உங்களை தேடிட்டிருந்தேன்.....இப்ப தான் கிடைச்சீங்க.

    பதிவுகளை படிச்சுட்டு வரேன்.

    ReplyDelete
  20. வாங்க சிந்து சுபாஷ்
    என் பதிவுகளை படித்து விட்டு வந்து பாராட்டோ கண்டனமோ, பெட்டியில் சிந்தும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.
    எதுவானாலும் சிந்து ,சபாஷ் என்று வாசித்து மகிழ்வேன்

    ReplyDelete
  21. //ஆகா! கோடைக்கு ஐஸ்கீரிம்தான் ஓ.கே.//

    repeateyyy

    ReplyDelete
  22. //நீ நனைய நனையக் கவிதை மழை பொழிவேன்.
    நீயும் சேய் குரல் கேட்டு,
    ஓடிவரும் தாயென வருவாய்,
    அமுதென ஆசியை,
    அள்ளி அள்ளித் தருவாய்.
    அதுவரை,
    என் எண்ணமும் ஓயாது,
    எழுத்தாணியும் சாயாது.//

    சற்று தாமதமாகவே அன்னை வரட்டும். அப்போதுதான் எங்களுக்கு பல கவிதைகள் கிடைக்கும்!

    ReplyDelete
  23. //goma said...
    ஸ்ட்ராபெரி,சாக்லேட்,எது வேணும்
    அன்புமணி//

    இதுவேறயா? எனக்கு எதுவானாலும் சரிதான்!

    ReplyDelete
  24. இன்னைக்கு என் பதிவிலும் 25 வது பதிவு. இங்கும் 25 நான்தான்!

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள்! தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  26. அருமை கோமா. இப்பவாவது எனக்குப் படிக்கக் கிடைத்ததே என்று சந்தோஷமாக இருக்கிறது.

    ReplyDelete
  27. // பள்ளிச்சீருடையில்
    பவனி வந்த, பருவத்தில்
    தமிழும் இலக்கணமும்
    இஞ்சியென்றே இருந்தேன்.//

    ஆரம்பமே அருமைங்க...

    //நீயும் சேய் குரல் கேட்டு,
    ஓடிவரும் தாயென வருவாய்,
    அமுதென ஆசியை,
    அள்ளி அள்ளித் தருவாய்.
    அதுவரை,
    என் எண்ணமும் ஓயாது,
    எழுத்தாணியும் சாயாது. //

    தமிழ் மேல் உள்ள உங்க காதல் புரிகின்றது.. இந்த வரிகளில்

    // சேய்கை எழுதியச் சித்திரம் போல,
    மழலை வாய் வழி வந்த மொழி போல,
    எதுகை இல்லை மோனையில்லை,
    நானும் எழுதினேன் புதுக்கவிதை.
    மறுக்கவில்லை பழிக்கவில்லை,
    ஏற்றுக் கொண்டாள் தமிழன்னை.
    //

    வாழ்த்துக்கள்.

    மிக மிக ரசித்த வரிகள்.

    ReplyDelete
  28. // வீட்டிலேயே கையெழுத்துப் பத்திரிகை ஒன்று ஃபுல்ஸ்கேப் பேப்பரில் நுணுக்கி நுணுக்கி எழுதி வெளியிட்டிருக்கிறேன். //

    பத்திரிக்கை ஆசிரியரா...

    வாவ்..

    ReplyDelete
  29. " ....இப்பவாவது எனக்குப் படிக்கக் கிடைத்ததே என்று சந்தோஷமாக இருக்கிறது.
    ..."
    வல்லிசிம்ஹன்
    நானும் அதையேதான் சொல்கிறேன் .
    இப்பவாவது படிக்க வந்தீங்களே என்று சந்தோஷமா இருக்கு

    ReplyDelete
  30. அபுஅஃப்ஸர்
    முதல் வருகை வாழ்த்துக்களுடன் .
    நன்றி

    ReplyDelete
  31. அன்புமணி 25வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    25ன் பலம் மடங்கு காண என் விஷஸ்

    ReplyDelete
  32. இராகவன் நைஜீரியா
    அந்த பத்திரிகையில் குறுக்கெழுத்து போட்டி கூட வைத்த நினைவு இருக்கிறது.

    ReplyDelete
  33. // சேய்கை எழுதியச் சித்திரம் போல,
    மழலை வாய் வழி வந்த மொழி போல,
    எதுகை இல்லை மோனையில்லை,
    நானும் எழுதினேன் புதுக்கவிதை.
    மறுக்கவில்லை பழிக்கவில்லை,
    ஏற்றுக் கொண்டாள் தமிழன்னை.
    //

    \.பள்ளியில் கவிதை என்று ஒரு புள்ளியிடக் கூட என் பேனாவுக்குத் தெரியாது\\

    மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  34. SYED AHAMED NAVASUDEEN
    வணக்கம்.
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  35. எதிர் பார்க்காததாக இருக்கின்றது... உங்கள் வலைப் பதிவுக்கு இதுவரை நான் வந்ததே இல்லை.. எப்படி மிஸ் செய்தேன் என்றே தெரியல.. இனி கண்டினியூ பண்ணிடலாம்..:)
    வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. அழகான அறிமுகக் கவிதை - தமிழ்த்தாயின் விரல் நுனியோ - கூந்தல் நுனியோ பட்டு இன்றைய உலகில் கவிதை கட்டுரை என ஒரு 25 ஆண்டு காலமாக இலக்கிய உலகில் கால் பதித்து நிற்கும் அருமைச் சகோதரி - கோமா - தங்கள் எழுத்துப் பணி மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள். எழுபதுகளிலேயே துகளக்கில் எழுதியவர் எனில் பெரிரிரிரிரிரிரிரிரிரிரிரிய ஆள் தான்

    ReplyDelete
  37. ஏற்றம் பெற 80 - எப்படியாவது தேடிப் பிடிக்கவும்.

    ReplyDelete
  38. சீனா
    நான் பெர்ர்ர்ர்ர்ர்ரிய ஆள் இல்லை.ஐந்தடிக்கு ஒண்றை இன்ச் கம்மியா படைக்கப் பட்ட உயரம்தான்.

    ReplyDelete
  39. எதிர் பார்க்காததாக இருக்கின்றது... உங்கள் வலைப் பதிவுக்கு இதுவரை நான் வந்ததே இல்லை.. எப்படி மிஸ் செய்தேன் என்றே தெரியல.. இனி கண்டினியூ பண்ணிடலாம்..:)
    வலைச்சரத்துக்கு வாழ்த்துக்கள்...

    குடத்து விளக்கைக் குன்றில் ஏற்றியது இந்த வலைசரம்.
    வலைச்சரத்துக்கு நன்றி

    ReplyDelete
  40. ஏற்றம் பெற எண்பது புத்தகத்தைக் கண்டு பிடிப்பது என் அடுத்த கட்ட நடவடிக்கை...

    ReplyDelete
  41. //கவிதை என்று ஒரு புள்ளியிடக் கூட என் பேனாவுக்குத் தெரியாது.//

    நீங்க என் இனமுங்க

    ReplyDelete
  42. 80 லேவேயா
    நான் பிறக்கவேயில்லை

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது