07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 14, 2009

நீங்க புதுசா...

நீங்க புதுசா ?
ஏ...ங்? புதுசா இருந்தா மட்டும் என்ன செய்யப் போறே?
இல்லே புதுசான்னு கேட்டேன் ....
பழசா இருந்தா மட்டும் ......
இல்லே பதிவு புதுசா இருக்கேன்னு கேட்டேன்
என்ன பதிவு புதுசு....?
இல்லே இப்பத்தான் எழுத வந்தியான்னு கேட்டேன் ....
என்ன எழுத வந்தியா....
ஐயோடா சாமி ஆதித்யா சேனல் சிரிப்பொலி சேனல்வந்தாலும் வந்துச்சு மனுஷி பேச முடியலியே....
சரி முயற்சி பண்றேன்
இந்த அறிமுகம் புதியவர்களுக்கு .தமிழ் மணம் எடுத்துக் கொடுத்த வலப்பூக்கள் இவை
மதுரைக்காரர்.இன்ஜினியர்.
http://tucklasssu.blogspot.com/2009/03/blog-post_827.html
நியூட்டன் விதிகளை அழகாக விளக்கியிருக்கிறார்.
இது போல் தெள்ளத் தெளிவாக என் கல்லூரி பேராசிரியையும் விளக்கியிருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேனே.
நீங்களே பாருங்கள் நான் சொல்வது எத்தனை உண்மையென்று புரியும்
”......நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில்நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம்உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும்எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும்....”
என்று தாயை வணங்கி ஒரு பதிவு வழங்கியிருக்கிறார்.
காலையில் வேகமா அதாவது சீக்கிரமாக எழுந்திருக்கக் கூடாது என்று இவர் சொல்கிறார் ஏனென்று இவரையே கேளுங்கள் .கதையின் முடிவில் ஒரு குழந்தை உங்களைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே ...நம்மை அப்படியே சுருட்டி விடும்
http://tucklasssu.blogspot.com/2009/02/blog-post_8195.html
--------------------------------------------------------------------
http://nilaraja.blogspot.com/2009/03/blog-post_12.html
இந்த பதிவர் பெயர் கோமதி[அதானே பார்த்தேன் சேம் நேம் ..அட்ராக்‌ஷன்?!!ஹ்ஹு..ம்?]
7 மாத குழந்தைக்குத் தாய் .எதிர்காலத்தில் குழந்தை வளர்ந்து அவள் வாசித்து மகிழ இவர் கோர்த்துக் கொண்டிருக்கும் பாசவலை.[குழந்தையை கான்வெண்ட்டில் சேர்த்தாலும் தமிழ் சொல்லிக்கொடுத்து வாருஙக்ள்.உங்கள் பதிவை வாசிக்க வேண்டாமா?]
ஏஏ....ய்ய்ய்ய்
தா... தா...உய்ய்ய்ய்ய்
அ..க்...கே பா...ர்...ர்ர்ர்.....
அம்மாவுக்கு குழந்தையின் பேச்சு வீணையின் நாதம்,குழலின் ஓசை...[வள்ளுவர் சொன்னது எப்படிப்பொய்யாகும்?]
போய் பாருங்கள்.நிலா குட்டியோடு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு,குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து ஆசி கூறி வாருங்கள்.பதிவுக்கும் சேர்த்துதான்தான்

15 comments:

  1. // நீங்க புதுசா ? //

    இல்லீங்க.. அதுக்காக பழசுன்னு சொல்ல முடியாதுங்க..

    ஆனா பழசுக்கு புதுசுங்க.. புதுசுக்கு பழசுங்க...

    அதாவது இரண்டுக்கும் இரண்டுவிதமா இருப்பேனுங்க..

    ReplyDelete
  2. // ஏ...ங்? புதுசா இருந்தா மட்டும் என்ன செய்யப் போறே? //

    பழசா இருந்தாலும் ஒன்னும் பண்ண முடியாதுங்க..

    இதுல ஒரு விசயம் பாருங்க..

    புதுசு பழசா மாற முடியுங்க ஆனா பழசு புதுசா மாற முடியுங்களா?

    ReplyDelete
  3. // யுனிவர்சல் விதி :
    காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.மாறாக அது ஒரு பெண்ணிடமிருந்து மற்றோர் பெண்னைக் கண்டு மாறும். //

    சரியாகச் சொல்லியிருக்காருங்க...

    ReplyDelete
  4. // My Photo

    டக்ளஸ்.......
    மதுர (ரை)...., தமிழ் நாடு....
    எனக்கும் ஆசைதான் "Hello! I am Tucklassu..Super Blogger " அபடினு சொல்ல..என்ன பண்றது இந்த பாழாப் போன‌ மனசாட்சிதேன் தொல்லை பண்ணுது...மத்தபடி " நான் ரொம்ப நல்லவன் "...ங்கோ..//

    ஆமாங்கோ.. மனசாட்சி உள்ள மதுரைக்காரர்ங்கோ..

    விரைவில் சூப்பர் ப்ளாக்கராக வாழ்த்துக்கள்.

    -----------

    நான் இவர் பாலோயர் ஆயிட்டேங்க... அப்ப நீங்க...

    ReplyDelete
  5. // அம்மாவுக்கு குழந்தையின் பேச்சு வீணையின் நாதம்,குழலின் ஓசை //

    சரியாகச் சொன்னீர்கள்.

    ரொம்ப நல்லா இருக்கு நிலாக் காலம்.

    ReplyDelete
  6. //புதுசு பழசா மாற முடியுங்க ஆனா பழசு புதுசா மாற முடியுங்களா?//

    அண்ணே! நீங்க எங்கயோ போயிட்டீங்க!

    ReplyDelete
  7. ஆகா! சோம்பேறித்தனத்தை ஆதரித்து இப்படி ஒரு கதையா டக்ளஸ்? நடத்துங்க...

    ReplyDelete
  8. நிலாராஜா அவர்களின் வலைத்தளம் ரொம்ப அழகா இருக்கு.

    ReplyDelete
  9. இராகவன் பர்ஸ்ட்டாய் வந்தமைக்கு பாராட்டுகள்.என் பதிவுக்கு பர்ஸ்ட்டாய் வந்ததை சந்தோஷமாகச் சொன்னதற்கு நன்றி

    ReplyDelete
  10. நீங்க புதுசா....
    இல்லீங்க ரொம்ப பழசு..பழசானாலும் புதுசுங்க....

    ReplyDelete
  11. சங்கம் வளர்த்த மதுரைக்காரரை, பிளாக் வளர்க்க வாழ்த்துவோம்

    ReplyDelete
  12. குழந்தையின் இங்கு இங்கு ஆக்கு ....ஏ...ய்ய்ய்ய் ...கிர்ர்...ர்ர்ர் என்று அர்த்தம் இல்லாமல் சொல்லும் மொழியில் நாம் எப்படி கிரங்கிப் போகிறோம் பாருங்கள்...

    ReplyDelete
  13. டக்ளஸ் நல்லாவே கதை அளக்கிறார் இல்லையா.

    ReplyDelete
  14. அன்புமணி நிலா பதிவு ஏன் நல்லா இருக்கு தெரியுமா அதன் ஆசிரியரும் ஒரு கோமதி.பின்னே கேட்கணுமா?பின்னி எடுக்றதுக்கு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது