07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 13, 2009

முதல் கட்ட தேர்வு


தமிழ் அமுதம் ஊட்டி வந்த ராமலஷ்மி, க்ளிக்-ஓவியம் தீட்டியிருக்கிறார்.
அவருடைய கவிதை கட்டுரை கதைகள் அனைத்தையும் நான் சுட்டிக்காட்டி சொல்ல வந்தால் ,”அந்த பூச்செண்டில் இந்த மலர் அழகு அந்த பூ அழகு ”என்று சொல்வது போல் இருக்கும் .
அவர் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன் .பிட் தந்த ஊக்கத்தில் புகைப்பட ஆர்வத்தை அதிகரித்துக் கொண்டார் என்பதை, இவரது படங்கள் ஒவ்வொன்றும் நிரூபிக்கும்.
தற்பொழுது கருப்பு வெள்ளைப் படஙக்ளைப் பாருங்கள் வளர்ச்சி புரியும். இவரது வலை இங்கே.

http://tamilamudam.blogspot.com/

பிட் என்ற புகைப்படக் கல்லூரியின் மாணவி ,என்ற
ரீதியில் இவரது படங்களில் என்னைக் கவர்ந்தது

http://tamilamudam.blogspot.com/2009/01/blog-post_12.html

இவரது இந்த பதிவில் அணில் ஒன்றைப் படமெடுத்திருக்கிறார்.அணில் ,நாம் கண் சிமிட்டும் நேரத்தில் பல அடிகள் ஓடி விடும் ...அந்த அணிலுக்கு க்ராக்ஜாக் கொடுத்து படமெடுத்திருக்கிறார்.இது கேமராவும் கையுமாக இருந்தால்தான் முடியும்.
அடுத்தது வாத்துக்கள் .அவை தண்ணிரில் சிறகடிப்பதை ஷேக் ஆகாமல் எடுத்திருப்பதும் அழகுதான்.இவருடைய வலைப்பூவுக்குள் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பாருங்கள்.
விகடன் இணையதளத்தில் ,இவரது கட்டுரை,கவிதை என்று வெளியாகியிருக்கின்றன.பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை
------------------------
குழந்தையை எப்படி எடுத்தாலும் அழகு என்றேனே அதற்கு உதாரணம் நெல்லை சிவாவின் இந்த படம்.
சிவா கலிஃபோர்னியாவின் அழகை நமக்கெல்லாம் எடுத்து வந்து கொட்டிக்காட்டினார்.
ஹாஸ்யம் இவரது இன்னொரு சிறப்பு .இவரது வலைப்பூவில் அவ்வப்போது மலர்கள் வந்து விழும் .காத்திருக்க வைத்தாலும் கலக்கலாய்,கவனமுடன் பதிவிடுவார் .பயணக்கட்டுரை படங்களுடன்,,சினிமா சம்பந்தமான விவரங்கள்,பொதுநல அக்கரை, என்று சகலத்திலும் சங்கதி வைத்திருக்கிறார்.
என்ன , அவரது அடுத்த பதிவுக்குக் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் . இவரது வலை இது.

http://vinmathi.blogspot.com/

போய் விழுந்து பாருங்கள்.விழுந்தால் வெளியே வர இயலாது.

http://picasaweb.google.com/minminiblog/Cameraparvai?fgl=true&pli=1#

இவருடைய மின்மினி பிளாக் பிகாசாவில் கடைசி படம்தான் -குழந்தையை எப்படி எடுத்தாலும் அழகு -என்ற என் கருத்துக்கு உ.ம்

[இன்னும் வரும்]

9 comments:

  1. இங்கயும் மீ த பர்ஸ்டு நான் தான்.

    ராமலக்‌ஷ்மியின் படங்கள் கலக்கல்.

    தொகுப்பிற்கு நன்றி

    ReplyDelete
  2. ராமலட்சுமி அக்கா, படங்கள் கலக்கல்.

    ReplyDelete
  3. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை
    //
    ரொம்ப சரி.

    ReplyDelete
  4. ஆஹா முதல் கட்டத் தேர்வுக்குள் நானும்:)! நன்றி நன்றி:)!

    //பிட் தந்த ஊக்கத்தில்//

    ரொம்பச் சரி.

    //அவர் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்//

    தொடரும் உங்கள் போன்றோரின் ஊக்கத்தினால்தான் விகடன் வரை அத்தனையும் சாத்தியமாயிற்று.

    ReplyDelete
  5. நெல்லை சிவாவின் வலைப்பூக்கள்தான் முதன் முதலில் எனக்கும் அறிமுகம். நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனையையும் நானும் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  6. இங்கு நல்ல் பூக்கள் விற்கப்படும் என்று யாராவது போர்டு போடுவார்களா.....போட்டேன்னு வச்சுக்கோங்க கடைசியில் போர்டு கூட இருக்காது...பார்த்திபன் மாதிரி எத்தனைபேர் இருப்பாங்களோ யார் கண்டது.
    கடையத்துக்காரரே! என்ன நான் சொல்றது.

    ReplyDelete
  7. இந்த இந்த வாரத்துக்குள் எனக்கு எத்தனை, புது கை, முளைக்கப் போகிறது என்று பார்க்க இருக்கிறேன்.

    நன்றி
    தென்றல் ஃப்ரம் புதுகை

    ReplyDelete
  8. நெல்லை சிவாவுக்கு என்ன வேலை பளுவோ...புகைப்படங்களையாவது அப்பப்ப பிளாகில் பேஸ்ட் பண்ணலாம்

    ReplyDelete
  9. ராமலஷ்மி
    உங்கள் வலைப்பூங்கொத்தில் வித்தியாசமான ஒரு மலரை எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.
    இன்னொரு கோணத்தில் ராமலஷ்மி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது