07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 10, 2009

சமையல் வாரம் 2


http://tamilmeal.blogspot.com/2008/09/blog-post_25.html
புதுகைத் தென்றல் குச்சினி[பயந்து விடாதீர்கள்,ஊட்டியில் இப்படித்தான் கிச்சனை செல்லமாக அழைப்பார்கள்]


தலைவாழை இலை போட்டு லன்ச் டின்னர் பறிமாறியிருக்கும் விதத்தைப் பாருங்கள் ,பார்த்தால் பசி தீரும் என்று பாடலாம்
அருமையான குறிப்பு எஸ்.ஏ. கேட்டுக்கொண்டபடி செய்வது சாப்பிடுவதும் சுலபமான ஒரு ரெசிபி.இந்த வெங்காயச் சட்னிக்கு க்ளோஸ் ஃபிரண்ட் நானானியின் கருப்பு தோசை.
S.A.navasudeen கவனிக்க.
இந்த பதிவுக்கு ஒரு நேயர் அனுப்பிய கடிதம் இது.

மிக்க நன்றி. உங்கள் குறிப்புகள் மிகவும் உதவியாக இருந்தது. பெற்றொரை விட்டு வேறு நாடுகளின் இருக்கும் என் போன்ற சைவர்களுக்கு(தேசி உணவுபிரியர்களுக்கும் தான்) நல்ல உதவிதான். நன்றி.

-ஷங்கர்-
இவர் செய்து காட்டியிருக்கும் மசாலா பப்பட் சூப்பர்.மும்பையில் சாப்பிட்ட நினைவைத் தட்டி எழுப்பியது .
நிறைய விஷயங்கள் நிறைந்திருக்கின்றன.யார் யாருக்கு என்ன வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டு போட ஆரம்பித்தால் சமையலறை இன்னும் விஸ்தாரமாகும்
-----------------

முத்துலஷ்மி கயல்விழி
http://tamilmeal.blogspot.com/search?updated-min=2007-01-01T00%3A00%3A00-08%3A00&updated-max=2008-01-01T00%3A00%3A00-08%3A00&max-results=6

இந்த பதிவில் இஞ்சி முரபா செய்வதை விளக்கியிருக்கிறார்.
“...கன்னி ராசி படத்துல கவுண்டமணி சொல்வாரே "டேய் உங்கக்காக்கு சூப் வைக்க தெரியும்ங்கறதே நீ வந்தப்பரம் தான் தெரியும் " அப்படின்னு மச்சான் பிரபு கிட்ட அது மாதிரி ...
எனக்கு இதெல்லாம் தெரியும்ன்னு என் வீட்டுக்காரருக்கு தெரியாது. பாவம் அவங்களுக்கு இஞ்சி மரப்பான்னா ரொம்ப பிடிக்கும் . நானும் செய்யணும் ஒரு தடவை இந்த பதிவ படிச்சுட்டு ..... ”
இதையே நானும் வழி மொழிகிறேன் கயல்விழி.
சமயத்தில் சின்ன விஷயங்கள் கூட நம்மை அழகாக உசுப்பி விடும் சமையல் ஆகட்டும் எழுத்தாகட்டும் அந்த ரீதியில் உங்கள் பதிவு அனைத்தும் எளிமையாய் விளக்கப்பட்டு படங்களோடு கமகமக்கின்றன.
சாவியைத் தொலைத்து விடாதீர்கள் என்று கூறி மருத்துவ மலராக கிச்சனில் கிடைக்கும் மருந்து என்று ஒரு பதிவு தேவையான ஒன்று.
ஒரு சஜஷன்
சக பதிவாளர்களுக்குள் போட்டி ஒன்று வையுங்களேன்.

சமையல் ஒரு நல்ல கலை .
ஒரு சின்ன கோடு கூட ஓவியத்தின் அழகைக் கூட்டும் வண்ணம் இருப்பது போல் சமையலிலும் பல ரசனையை ருசியைக் கொண்டு வந்து விடலாம் .என் கண்ணில் படாமல் குக்கரி குயின்ஸ் பலர் இருக்கலாம் .அவ்வப் போது சென்று பார்க்கிறேன் நன்றி .நான் சொன்னது போல் தாரணி பிரியாவின் பதிவை மற்றொரு சமயம் வெளியிடுகிறேன்.

15 comments:

  1. மிக்க மகிழ்ச்சி

    முயற்சி செய்து பார்போம். இந்த வாரம் விடுமுறையில் இதுதான் எங்கள் ஸ்பெசலாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete
  2. பகுதி -1 , பகுதி - 2ன்னு போட்டு கலக்கிறீங்க போங்க!

    ReplyDelete
  3. விருந்தோடயா ஆரம்பம்.. ம்ம் கலக்குங்க!

    ReplyDelete
  4. //புதுகைத் தென்றல் குச்சினி[பயந்து விடாதீர்கள்,ஊட்டியில் இப்படித்தான் கிச்சனை செல்லமாக அழைப்பார்கள்]//

    அது குச்சினி அல்ல!
    குசினி!

    வழக்கொழிந்து கொண்டிருக்கும் தமிழ் சொற்களில் இதுவும் உள்ளது!

    ReplyDelete
  5. //சமையல் ஒரு நல்ல கலை .//

    அது மட்டுமா
    எங்களை போல ஆட்களுக்கு

    சாப்பிடுவதும் ஒரு கலை தான்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்...!
    சமையல் ஒரு கலை மட்டுமல்ல...

    ReplyDelete
  7. S.A.N.
    முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பகுதி -1 , பகுதி - 2ன்னு போட்டு கலக்கிறீங்க போங்க!
    ஆமா அன்புமணி
    கலக்கச் சொல்லித்தானே பொறுப்பைத் தந்தார்கள்.

    ReplyDelete
  9. தமிழ்பிரியன் வருகைக்கு
    நன்றி
    இருந்து விருந்து சாப்பிட்டுட்டு போகணும்

    ReplyDelete
  10. அது குசினியா நான் குச்சினி என்று நினைத்துக்கொண்டேன்.
    நன்றி வால்பயன்.[பிரிட்டீஷார் ஊட்டியில் வாசம் செய்த காலத்தில் கிச்சன் என்று சொன்னதை ஊட்டிவாழ் மக்கள் குச்சினி என்று சொல்லி வருவதாக சொன்னதாக நினைவு]
    ஊட்டி வாசம் முடிந்து 20 ஆண்டுகள் ஓடி விட்டனவே.அதான் மறதி

    ReplyDelete
  11. உண்மைதான் சாப்பிடுவதும் ஒரு கலைதான்.
    சிலர் சாப்பிடும் அழகைக் கண்டால் நமக்கும் பசி எடுக்கும் சிலரது ஸ்டைல் நம் பசியை ஓட்டி விடும்.

    ReplyDelete
  12. இந்த சமையல் குறிப்புகள் எல்லாம் நல்லா இருக்கு!!

    கலக்கல் பகுதிகள்!!

    ReplyDelete
  13. குசினி என்பது ஆங்கிலம் அல்ல..கிச்சன் என்பதன் மருவி வந்த சொல்லும் அல்ல..

    எனக்கு தெரிந்தவரை அது போர்த்துகீஸ் வார்த்தை [கன்பேர் பண்ணி சொல்றேன்]

    ReplyDelete
  14. நன்றி தூயா
    ஃப்ரென்ச்,போத்துகீஸ் என்று வந்து நம் மண்ணில் அவர்கள் பாஷையைத் தூவிச் சென்றிருக்கின்றனர் பாருங்கள்

    ReplyDelete
  15. உண்மை தான்..அதை விட கொடுமை தமிழில் இருந்து ஆங்கிலம் சென்ற பல தமிழ் வார்த்தைகளை நாம் அவை ஆங்கிலம் என நினைப்பது..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது