07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 27, 2009

வலைச்சரத்தில் இரண்டாம் பதிவு.





தமிழ்…


இந்த உயிர் வார்த்தையிலிருக்கும் முதல் எழுத்திற்கு நான் கொள்ளும் விளக்கம்,


த – தர்க்கம் (வாதம் – விவாதம், கற்பனை…).,


ஆம், அன்பர்களே. தமிழ் மொழியின் மூலம் மனித வாழ்விற்கு தேவையான அனைத்தையும், அடுத்த மொழி கலப்பு இல்லாமலேயே, ஒவ்வொரு நொடியையும் மிக எளிதாக அழகுணர்வு மிளிர நடத்த முடியும்.

அதற்கும் மேலாக, வாழ்வை எளிமைபடுத்தத் தேவையான வளர்ச்சியை நாம், நம் தமிழ் மொழி புலமையின் மூலமாகவே, கற்பனையின் உச்சங்களையும் வெளிப்படுத்தியே, அறிவியல் ஆராச்சிகளையும் நம் தமிழ் மூலம் வளர்த்தது, உள்ளங்கை நெல்லிக்கனி.


கன்னியை, கற்பனையால், காதலால், கவிதையால் மனைவியாக ஆக்குவதும் தமிழ்,


அணுவை பிளந்து… என்ற கற்பனையால் அறிவியலை வளர்த்ததும் தமிழ்,


பல்லாயிரக்கணக்கான நோய்களுக்கு மருத்துவம் கண்டதும் தமிழ்.



இப்பிடி வாழ்வோடு இரண்டெனக் கலந்திருக்கும் தமிழை, நவீனம் மற்றும் நாகரீக வளர்ச்சியால் கடல்கடந்து எடுத்து வந்திருந்தாலும், நேரமில்லாதக் கொடுமையைச் சொல்லி தமிழுடனான தொடர்பை முற்றிலும் அழிக்காமல், தன்னால் முடிந்தளவு காப்பாற்றி, தமிழில் எழுதிவரும் அனைவருக்கு நன்றி கலந்த வணக்கம் சொல்லி,

இன்று சில பதிவர்களை அறிமுகப்படுத்துகிறேன்.


பிரியமுடன்.... வசந்த்.

பாரமான மனதின் அழுத்தத்தை குறைக்க விரும்புபவர்களுக்கான சிறந்த பதிவர். பாதி எழுத்து, பாதி படம் என ரொம்ப எதார்த்தமான இடுக்கைகளை வெளியிடுபவர்.

வயசுப் பெண்களுக்கு எந்த உடை எடுப்பா இருக்கும் என ஆர்குட்டில் ஒரு கருத்துகணிப்பு நடத்தி, பெரும்பாலான ஆண்கள் விரும்புவது தாவணியேன்னு ஒரு இளமை துள்ளும் பதிவு, அழகான பெண்களின் படத்துடன் இடுக்கையிட்டிருக்கார்.


^^^^^^^^^^^^^^^^

ரசிகன்..

என்ற தலைப்பில் எழுதிவரும் மகேஸ் அவர்கள், மேலே சொன்னவருக்கு இணையான பதிவர்.

பின்நவீனத்துவ பிறந்தநாளும் இன்ன பிறவும்! இந்த இடுக்கையில் விடுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாடிய விதத்தை படத்துடன் விளக்கியிருக்கிறார். படித்து, இதே போல் நண்பரின் பிறந்தநாளை கொண்டாட விரும்புகிறவர்கள் மேலதிக தகவல்களுக்கு அன்பர் மகேசை அணுகவும்.

நண்பர் மகேஸ், நாட்டிய பேரொளி பத்மினியின் தீவிர ரசிகர் எனபது நாட்டியப் பேரொளி என்ற பதிவில் பப்பியைப் பற்றி விலாவாரியாக எழுதியிருப்பதிலேயே தெரிகிறது.


^^^^^^^^^^^^^^^^^^^^^

என்ற தலைப்பில் எழுதிவரும் மலர் அக்கா. இதுவரை பத்து பதிவுகள் தான் எழுதியிருந்தாலும், பத்தும், பத்து ரகம். ஆனா, எல்லாமே சுவாரசியமோ, சுவாரசியம்...

நான் ஒரு கதை படித்தேன் (படித்ததில் பிடித்தது ) இந்தக்கதை மூலமா, வீட்டில் இருக்கும் பெண்கள் மீது போறாமைபடும் ஆண்களுக்கு மறைமுகமா எச்சரிக்கை விடுறாங்க.
படிங்க, கவனமா இருங்க...


நான் படித்ததில் பிடித்தது . இதில் நம் மலர் அக்கா எல்லாருக்கும் நல்புத்தி சொல்றாங்க.
ப்ப்போப்பான்னு சொல்லாம, இடுக்கையை படிச்சு பண்போடு நடந்துக்கங்க மக்களே...


பொன்னான நேரத்தை என்னோடு செலவழித்த நல் உள்ளங்களுக்கு,

நன்றி சொல்லி விடைபெறுவது..

அப்பாவி முரு.

17 comments:

  1. அன்பின் மூரு

    அருமையான பதிவு - அறிமுகப் படுத்தி இருக்கும் மூவருமே எனக்குப் புதியவர்கள் - பதிவுகளுக்குச் சென்று வந்தேன் - அருமை - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. Machan tamil font problem

    thanks for giving intro for bloggers nan padikiran valthukkal

    ReplyDelete
  3. எனக்கும் புதியவர்கள். நன்று முரு

    ReplyDelete
  4. /தமிழ்…



    இந்த உயிர் வார்த்தையிலிருக்கும் முதல் எழுத்திற்கு நான் கொள்ளும் விளக்கம்,


    த – தர்க்கம் (வாதம் – விவாதம், கற்பனை…).,


    ஆம், அன்பர்களே. தமிழ் மொழியின் மூலம் மனித வாழ்விற்கு தேவையான அனைத்தையும், அடுத்த மொழி கலப்பு இல்லாமலேயே, ஒவ்வொரு நொடியையும் மிக எளிதாக அழகுணர்வு மிளிர நடத்த முடியும்.

    /
    அருமை

    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. எல்லாருமே புதுசா இருக்குறாங்க!

    ரொம்ப நன்றி தல

    ReplyDelete
  6. இரெண்டாம் நாள் வலைச்சர ஆசிரியர் எனதன்பான வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  7. அறிமுகப் படுத்தியவரகள் அனைவருமே புதியவர்கள்தாம்.

    புதிய அறிமுகங்களுக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  8. பதிவுகளும் அருமை அவர்களுக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. இரண்டாம் நாள் வலைச் சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள் தம்பி முரு.

    ReplyDelete
  10. ப்ரியமுடன் வசந்த்...

    அழகான வலைப்பூ...

    மிக அருமையாக சிரிக்க வைக்கின்றார்.

    அதிலும் அந்த கடிஜோக்குகள் இருக்கு பாருங்க.. மனுஷன் எப்படித்தான் யோசனைப் பண்ணுவார் என்றே புரியவில்லை

    ReplyDelete
  11. ரசிகன் பதிவு...

    18 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும்...

    கலக்கல் இடுகை..

    ReplyDelete
  12. தீதும் நன்றும் பிற தர வாரா...

    வலைப்பூவின் பேரிலேயே.. கலக்கல். அதிலும் அவர்கள் சிந்தனை என்ற இடுகை இருக்கின்றதே... அருமையிலும் அருமை..

    ReplyDelete
  13. தீதும் நன்றும் பிறர் தர வாரா இடுகையில் காணப்பட்ட ஒரு வரி...

    //ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவி என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது. //

    என்ன அருமையா சொல்லியிருக்காங்க பாருங்க...

    ReplyDelete
  14. வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. என்னுடைய வலைப்பதிவுமா
    நன்றி முரு..........

    ReplyDelete
  16. என்னது?

    நானுமா?

    வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, அப்பாவி முரு அவர்களே!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது