07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 31, 2009

எழுத்து ஒரு இனிய விஷம்

ஒரு மதுக்கோப்பையினுள் எழுத்துக்கள் மிதந்து கிடக்கின்றன. அவை நன்கு ஊறிப்போய் நுண்ணிய குமிழ்களை அடக்கிய காகிதங்களாக மாறிவிட்டிருக்கின்றன. பருகுவதற்குத் தயக்கமாக இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு மூச்சடக்கி, பருகிவிட்டேன். எழுத்து ஒரு இனிய விஷம். அது என்னை அரித்துக் கொண்டேயிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டேயிருக்கிறேன். முழுவதுமாக அரித்து தீர்ந்த பிறகு ஊறிய அவ்வெழுத்துக்கள் நன்கு உப்பி பெருத்து மிச்சமாய் இருக்கின்றன.மதுவின்...
மேலும் வாசிக்க...

Thursday, July 30, 2009

இரவின் ஒளி

வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக ரசித்து, கற்பனையின் எல்லைக்கோட்டில் ஊர்ந்து சிந்தி அசாதாரண வாக்கிய அமைப்பின் மூலம் எளிய கவிதை எழுதும் வலைப்பதிவர்களுள் எனக்கு மிகவும் பிடித்தமானவர் ஆ.முத்துராமலிங்கம். நான் படித்தவரையிலும் அவரது கவிதையில் நிஜங்களுக்கு ஊடாக மனவோட்டத்தின் வெளித்தோற்றத்தை உலவவிடுகிறார். கூடவே உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தோரணையில் பூனையையோ, பல்லியையோ, ஏதாவது ஒரு ஜந்துவை உலவவிடுகிறார்.நிசப்தம் கூடியிருந்தஅவ்விரவில் உன்...
மேலும் வாசிக்க...

Wednesday, July 29, 2009

நகர்ந்து செல்லும் பாதை

இந்த பாதை நகர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. நாம்நின்று கொண்டிருக்கிறோம்.- ஆதவா.நண்பர் கவிஞர் "அகநாழிகை" பொன்.வாசுதேவன்  அவர்களோடு ஆரம்பம் முதற்கொண்டு நல்ல தொடர்பிருக்கிறது. அவ்வப்போது படைப்பு எப்படி எழுதவேண்டும், படைப்புகள் எப்படி இருக்கிறது, எப்படி எழுதுகிறார்கள் போன்ற "எப்படி"களைப் பற்றி நிறைய பேசியதுண்டு. தன்னை நோக்கி, "எப்படி" என்று கேட்பவர்கள் தனக்குள்ளான படைப்பின் மாற்றத்தை நிச்சயம் உணர்வார்கள். கவனிக்க, தன்னைத்தானே...
மேலும் வாசிக்க...

Tuesday, July 28, 2009

எழுத்து நிறைந்த காடு

முன்னேபின்னே அறிந்திராத யாரோ ஒருவரின் எழுத்துக்கள் நமக்கு, புன்னகையை, அழுகையை, வியப்பை, ரசனையை, என எல்லாவிதமான உணர்வுகளையும் தருகின்றன. எப்படி இந்த பந்தங்கள் உருவாகின்றன? பால்யவயது முதலே பழகின நண்பனைப் போன்ற உணர்வு எப்படி வலைஞர்களை அல்லது எழுத்தாளர்களைச் சந்திக்கும் பொழுது ஏற்படுகின்றன? ஆச்சரியமான விஷயம்...நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் தங்கை திருமணத்தின்போது சொல்லரசனும்  நானும் மதுரைக்குக் கிளம்பிச் சென்றோம். (இருவரும்...
மேலும் வாசிக்க...

Monday, July 27, 2009

ரசனையின் பின்புறம்

வணக்கம் நண்பர்களே!வலைச்சரத்தில் ஆசிரியராக பதிவிட அழைத்த திரு.சீனா அவர்களுக்கு என் பணிவான நன்றிகள்! தொடர்ந்து இவ்வளவு தூரம் என்னைத் தூக்கி வைத்த நண்பர்களுக்கும் நன்றி!!தொடர்பில்லாத கருப்பொருள், ரசனையின் தீண்டலில் கவிதையாகிவிடுவதைப் போலவே அறிமுகமில்லாத நபர்களின் எழுத்துக்களை உருவகித்து வலைத்தளங்களில் நட்பு கொள்ளுகிறோம். வலைத்தள நட்பு எழுத்துக்கும் எழுத்துக்கும் இடையிலான பாலத்தை நன்கு இறுக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. நண்பர்கள்...
மேலும் வாசிக்க...

Sunday, July 26, 2009

வருக வருக ஆதவா

அன்பின் பதிவர்களே27 சூலை துவங்கும் வாரத்திற்கு - வலைச்சர ஆசிரியர் வருகிறார் அருமை நண்பர் ஆதவா அவர்கள். இவர் 25 வயது இளைஞர். திருப்பூரில் இருக்கிறார். குழந்தை ஓவியம் என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். ஏறத்தாழ 150 இடுகைகள் இட்டிருக்கிறார். கவிதை, சிறுகதை, இலக்கியம், அனுபவம், காதல் மற்றும் சினிமா என்ற பல்வேறு பகுதிகளில் எழுதி வருகிறார்.இவரை வருக வருக - இடுகைகளைத் தருக தருக - பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துக என வலைச்சரம் சார்பினில்...
மேலும் வாசிக்க...

அகரம் அமுதா - ஒரு சிறு அறிமுகமும் - விடை அளித்தலும்

அன்பின் பதிவர்களேகடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்று பணியாற்றியவர் நண்பர் அகரம் அமுதா அவர்கள். இவரை ப் பற்றிய அறிமுகப் பதிவு இவர் இடுகை இடும் முன்னரே இட இயலாது போனது.இவர் 30 வயது இளைஞர். பெரம்பலூரைச் சார்ந்தவர். அயலகத்தில் பணி புரிகிறார். இவர் அகரம் அமுதா, இலக்கிய இன்பம், தமிழ்ச் செருக்கன், தமிங்ழிஷ்.காம் என்ற வலைப்பூக்களிலும், இயன்ற வரையில் இனிய தமிழ் மற்றும் வெண்பா எழுதலாம் வாங்க என்ற குழுப் பூக்களிலும்...
மேலும் வாசிக்க...

ஆ.ஞான சேகரன் - வாழ்த்துகள்

அன்பின் பதிவர்களேகடந்த சூலை 13ம் நாள் துவங்கி 19ம் நாள் வரை வலைச்சரத்தின் ஆசிரியராகச் சிறப்புடன் பணியாற்றிய அருமை நண்பர் ஆ.ஞானசேகரனை வாழ்த்தி விடையளிக்கும் பதிவு இது.சூலை 19 / 20 - இன்னாட்களில் நான் அயலகம் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்த படியாலும் - இணையம் - தமிழ் எழுத்துரு இல்லாத காரணத்தினாலும் அவருக்கு வாழ்த்துரை இடுகை இட இயலவில்லை.நண்பர் ஞானசேகரனின் அயராத உழைப்பும் தளராத பொறுமையும் பாராட்டுக்குரியவை. ஏழு நாட்களில் ஏறத்தாழ ஐம்பதுக்கும்...
மேலும் வாசிக்க...

Saturday, July 25, 2009

வெண்பா எழுதலாம் வாங்க! (3)

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!11. சவுக்கடி! (யாரெனத்தெரியவில்லை)மிகச்சிறந்த வெண்பா எழுதும் ஆற்றல் படைத்தவரான இவர் பலமுறை மறுமொழிப்பகுதியின் வழியாக, தாங்கள் யார் அறிவதற்கு விவரங்களைத் தாருங்கள் என்றாலும் கண்டுகொள்ளாதிருக்கிறார். இவரது வெண்பாக்களுக்கு இரசிகன் நான் என்றால் அது மிகையாகாது. அருள்கூர்ந்து இவரை அறிந்தவர்கள் இருப்பின் மறுமொழி வாயிலாகத் தெரியப்படுத்துவீர்களாக.சொல்லே மிகவும் சுடும் என்ற, வழங்கப்பட்ட ஈற்றடிக்கு இன்றைய நாட்டுநடப்போடு...
மேலும் வாசிக்க...

Friday, July 24, 2009

வெண்பா எழுதலாம் வாங்க! (2)

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!1.சிக்கிமுக்கி (யாரெனத்தெரியவில்லை அறிந்தவர் உரைப்பீராக) என்னைக்கவர்ந்த வெண்பா எழுதுபவர்களுள் இவரும் ஒருவர். இவரைப்பற்றி அறிந்தவர்கள் எனக்கு உரைப்பீர்களேயாயின் நன்றிக்கடன் பட்டவனாவேன். சிக்கிமுக்கி என்ற பெயரில் மறுமொழிப்பகுதியில் ஈற்றடிக்கு வெண்பாக்கள் எழுதுமிவரை யாரென என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. இவர் வலையல்லாத ஓர் வலைஅமைத்துக்கொண்டு மறுமொழியிடுவதே காரணம். இவர் என்னோடு வினா தொடுத்த வெண்பா.எங்குற்றாய்...
மேலும் வாசிக்க...

Thursday, July 23, 2009

வெண்பா எழுதலாம் வாங்க! (1)

பொதுவாக மரபுக்கவிதைகள் புனைபவர்கள், ‘‘வெண்பா எழுதலாம் வாங்க’’ என்ற எனது வலையை அறிந்திருக்கும் வாய்ப்புள்ளது. இவ்வலையின் தோற்றத்திற்குக் காரணம் என்னவென்றால் வெண்பா எழுதத்துடிப்போருக்கும் புதிதாக வெண்பா பயிலத்துடிப்போருக்கும் ஊக்குவிப்பதாகவும், வழிகாட்டியாகவும் அமையவே துவங்கப்பட்டதாகும். இவ்வலையில் சற்றேறக் குறைய நாற்பதிலிருந்து ஐம்பது வரையிலான பாட இடுகைகள் வழங்கப்பட்டு பாடத்தின் முடிவில் வெண்பாவிற்கான ஈற்றடிகளும் வழங்கப்பட்டு...
மேலும் வாசிக்க...

Wednesday, July 22, 2009

எடக்கு மடக்கு!

நான் இணையத்தில் எழுதத் துவங்கிய காலந்தொட்டு, பிறர் வலைப்பதிவுகளைப் படிக்க நேர்ந்தால் மிகப் பிடித்த இடுகைகளுக்குப் பின்னூட்டமாக வெண்பாக்களைப் பாடி விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.பல்லாண்டு நீவாழப் பண்பார்ந்த பைந்தமிழின்சொல்லாண்டு பாடுகிறேன் தூயவளே! –இல்லாண்டுசெய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டுவையத்துள் வாழ்வாங்கு வாழ்க!பொன்மானின் பின்போனப் பொய்யனவன் பூங்கதையைத்தன்மானச் சிங்கமிவன் சாடிவிட்டான் –என்மானச்சிந்தையின் நேருற்ற...
மேலும் வாசிக்க...

Tuesday, July 21, 2009

உவமையிற் புதுமை!

சிலநாட்களுக்குமுன் ஓர் நிகழ்வுக்குச் செல்ல நேர்ந்தது. கவிதை சார்ந்த நிகழ்வு ஆதலால் பலரும் கவிதைப் பாடினார்கள். ஒருவர் பெண்ணை புகழ்ந்து பாடலாகவே படித்தார். பொதுவாகப் புதுக்கவிதைப் படைப்பாளர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று பெண்ணைப்பற்றிப் பாடும்போது பலரும் படைத்த உவமைகளையே திரும்பத்திரும்பச் சொல்லிச் சலிப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். பெண்ணை மானென்பதும் மயிலென்பதும் விழியை மீனென்பதும் மலரென்பதும் தொன்றுத்தொட்டு வள்ளுவன் காலத்தில் இருந்து...
மேலும் வாசிக்க...

Monday, July 20, 2009

என்னைப்பற்றி!

அன்பனென் பேரமுதா! ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே!தென்னவன்நான் செந்தமிழின் சீரெடுத்து -மன்னும்குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்குவணக்கங்கள் வைக்கின்றேன் வந்து!நான்:-கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றேகருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்பருவமியற் பேர்சுதா கர்!ஊர்:-கெடுப்பதற் கோர்கூட்டம்; கெட்டாரைச் சார்ந்துகொடுப்பதற் கோர்கூட்டம் என்றே -குடிசைமிகக்கொண்ட குக்கிராம மேநான் பிறந்தஅகரம்சீ கூர்என்ப...
மேலும் வாசிக்க...

Sunday, July 19, 2009

நட்பிற்கு நன்றி!.....வலைச்சரத்தில்

நட்பிற்கு நன்றி!.....வலைச்சரத்தில்வணக்கங்களுடன் ஆ.ஞானசேகரன்சூலை 13ம் நாள் - திங்கள் முதல் - 19 - ஞாயிறு இன்று வரை நான் உங்களோடு செய்துகொண்ட அறிமுகங்களின் மகிழ்ச்சியோடு நன்றிகள்.. மகிழ்ச்சியிலேயே பெரிய மகிழ்ச்சினா மத்தவங்கள மகிழ்விற்கின்றது. (இது பாக்கியராஜ் சாரோட பொன்மொழி) இப்படி என்னால நீங்களும், உங்களால நானும் கண்ட மகிழ்ச்சிக்கு...
மேலும் வாசிக்க...