07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, July 1, 2009

பாட்டிலே தனியின்பத்தை நாட்டவும்....


கவிதைப்பூ

ஒரே கருத்தானாலும்
ஆயிரம் பேர் கூறினாலும்
ஆயிரம் முறை கூறினாலும்
வெவ்வேறு சொல்லாக்கத்தால்
ஒவ்வொரு முறையும்
தனித்தன்மையுடன் பூக்கிறது...


இது கவிதை பற்றிய என் எண்ணம். ஒவ்வொரு கவிதை வாசிக்கும் பொழுதும் எனக்குள் கவிதைகளின் தனித்தன்மை குறித்த ஆச்சர்யம் எழும். "பேசும் கவிதைகள்" என்ற வலைப்பூவில் படம் பார்த்து எழுதப்படும் கவிதைகள், இதற்கு சான்று.

எளிமையான யதார்த்தமான கவிதைகளே என்னை அதிகம் ஈர்க்கின்றன. வலையில் பல கவிதைகள் நான் இரசித்துள்ளேன்; வலைச்சர வாரம் முழுதும் எழுதினாலும் தீராது கவிதைகள்!!! எனவே எளிமையாக இனிமையாக என் மனதில் ஒட்டிக்கொண்ட சில கவிதைகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

மழையோடும் வெயிலோடும் மண்குதிரையின் "மழையும் வெயிலும்" என்ற கவிதை எப்பொழுதும் நினைவுக்கு வருகிறது.

என் செல்ல மகள்
நடை பயில்வதைப் போல்
தத்தி தத்தி வருகின்றது
மழைக்காலத்தின் முதல் மழை

கையில் எடுத்து கொஞ்சிக்கொண்டிருக்கிறேன்

சின்னதாக முகம் மாற்றும்
என் மூத்த மகள் போல்
வந்து தொற்றிக்கொள்கிறது
இந்த வெயிலும்.


இராஜா சந்திரசேகரின் "உங்கள் பெயர்" கவிதை பறவைகளுக்கு தானியங்களை அள்ளிக் கொடுத்துவிடத் தூண்டுகிறது

அருகில் வர
அச்சப்படுகிறது
பறவையின் தானியங்களில்
உங்கள் பெயரை
எழுதி வைத்திருக்கிறீர்கள்



தாய் வீடு சென்ற மனையாளுக்கு "என் மனையாளே" என்ற கவிதையில் பிரிவின் வலியை அழகாக உழவன் கூறி இருப்பார். நான் இரசித்த சில வரிகள் இதோ...

உன்னோடு பேசிப் பழகிய
பாத்திரங்கள் எல்லாம்
உன் குரல் கேட்காததால்
ஊமையாகிப் போனதோ?
கீழே விழுந்தாலும்
இப்போதெல்லாம்
சத்தம் எழுப்புவதில்லை!


கெளரியின் மழலை பற்றிய கவிதைகளில் ஓர் அழகான கவிதை

உடையின் நிறத்தில்
உதட்டுச் சாயமும்
நகையும் செருப்பும்
நகப் பூச்சுமென
நிறங்கள் புசித்து
நீளுமிவ்வாழ்வின்
இன்னுமோர் பிறந்தநாளில்
எதை விடவும்
அழகாய் இருக்கிறது
இரட்டைவரிக் காகிதத்தில்
இதழுக்கொரு நிறந்தீட்டி
மழலையொன்று வரைந்து தரும்
மலரின் வாழ்த்து.


அம்மாவின் கைக்கு ஒரு மணம் உண்டு. வளையலுக்கு? வளைக்கரம் பற்றி வெங்கிராஜாவின் கவிதை அம்மாவின் அன்பையும் அம்மா மீதான அன்பையும் அழகாக வெளிப்படுத்தும்...

எத்தனையெத்தனையோ
உடைந்த வளையல்கள் நினைவுக்கு வருகின்றன...
கோலாட்டம் ஆடுகையில்
விழுந்துடைந்த தங்கையுடையது,
துணியலசுகையில்
அவிழ்ந்துடந்த வேலைக்காரியுடையது,
காற்றாடி விடுகையில்
கழன்றுகொண்ட அண்டைவீட்டுத்தோழியுடையது,
சீரியல் கிளிசரினில்
கரைந்துடைந்த பாட்டியுடையது,
எம்பிராயட்ரி போடுகையில்
வழுக்கிவிழுந்த மாமியுடையது,
பிரம்பெடுக்கையில்
நலிந்துபோன ஆசிரியையுடையது,
நான் மட்டும் பார்த்துரசிக்க
கலைடோஸ்கோப்புக்காக
விரும்பி மட்டும் கொடுக்கப்பட்ட
என் தாயினுடையது!


முதுகில் புத்தகமூட்டை சுமந்து செல்லும் குழந்தைகளைக் கவலையுடன் பார்க்கும் வேளையில் காலத்தின் கட்டாயம் என்ற கவிதையில் மிக இயல்பான நடை மிளிர்கிறது; "பத்திரமா கரை சேர்றோம்" என்று நம்பிக்கையுடன் முடிகிறது. இராமலஷ்மி அவர்களின் முத்துச்சரத்தில் இருந்து முத்தான சில வரிகள் :

*
கதவை விரியத் திறங்க!
இன்னும் என்னென்ன
காத்து இருக்குன்னு
பாத்து வச்சுக்கிறோம்.
*
கவலையைப் பறக்க விடுங்க!
காலத்தோட கட்டாயமிது.
பயப்படாம பயணிச்சு
பத்திரமா கரை சேர்றோம்.



பாசமலரின் முரண்கள் பலவிதம் வாழ்வில் சந்திக்கும் முரண்களைக் கூறுகிறார். அந்த பதிவில் இருந்து என் நினைவில் நின்ற நடைமுறை முரண் ஒன்று:

கண்ணாடிக் குடுவையில்
கண்ணாய் வளர்த்த
குட்டிமீன் மரித்ததென்று
கண்ணீர் விட்ட பிள்ளையைக்
குதூகலப்படுத்தத்
தாய் சமைத்தாள் மீன்குழம்பு


பிரார்த்தனைகள் பொய்த்துப் போனது இதனால் தானோ என்று தோன்ற வைத்தது இராவணனின் "சந்திப்பு" :

பயபக்தியுடன்
கோவிலின் கருவறை
உள் நுழைந்தேன்

நேற்றிரவுப்பார்த்த
பிசாசைப்பற்றி
கடவுள் முன்
கூறிக்கொண்டிருந்தேன்
வெளிறிய முகத்துடன்

தானும் தான்
என்ற கடவுளின்
முகமும் வெளிறி இருந்தது



அருமையான கவிதைகளை நான் ஒரு பதிவில் சொல்வது வானத்து நட்சத்திரங்களை ஒரு நொடியில் எண்ண முயல்வது போன்றது. அந்த ஒரு நொடியில் தென்பட்ட நட்சத்திரங்களை இங்கு பகிர்ந்தேன். வலை முழுவதும் எண்ணிலா நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன.

மீண்டும் சந்திப்போம்

15 comments:

  1. வாழ்த்துகள்

    ReplyDelete
  2. /ஒரே கருத்தானாலும்
    ஆயிரம் பேர் கூறினாலும்
    ஆயிரம் முறை கூறினாலும்
    வெவ்வேறு சொல்லாக்கத்தால்
    ஒவ்வொரு முறையும்
    தனித்தன்மையுடன் பூக்கிறது... /

    அருமை

    /அருமையான கவிதைகளை நான் ஒரு பதிவில் சொல்வது வானத்து நட்சத்திரங்களை ஒரு நொடியில் எண்ண முயல்வது போன்றது. அந்த ஒரு நொடியில் தென்பட்ட நட்சத்திரங்களை இங்கு பகிர்ந்தேன். வலை முழுவதும் எண்ணிலா நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன./

    உண்மை தான்

    நீங்கள் குறிப்பிட்ட எல்லா கவிதைகளும் அருமை

    தொடரட்டும்

    ReplyDelete
  3. மூன்றாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நல்ல கவிதை தொகுப்புகள் கொடுத்து இருக்கீங்க ...


    நன்றி.

    ReplyDelete
  5. வெங்கி ராஜாவின் வளைக்கரம் கவிதை அருமை.

    நல்ல தொகுப்பு அமுதா..

    தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
  6. நல்ல கவிதை தொகுப்புகள் கொடுத்து இருக்கீங்க ...

    ReplyDelete
  7. நல்ல கவிதை தொகுப்புகள் கொடுத்து இருக்கீங்க ...

    ReplyDelete
  8. நல்ல கவிதை தொகுப்புகள் கொடுத்து இருக்கீங்க ...

    ReplyDelete
  9. அருமையான கவிதைகளுடன் கூடிய தொடுப்புகள். கவிதைகளை படிக்கும்போதே மனதுக்கு மகிழ்வை தருகிறது. வாழ்த்துகள் அமுதா!

    ReplyDelete
  10. அருமையான கவிகளின் அணிவகுப்பு.. வாழ்த்துக்களும் நன்றிகளும் :-)

    ReplyDelete
  11. இங்கே கொடுக்கப்பட்டுள்ள கவிதைகள் மிக அருமை! அந்த தளங்களுக்கு இனிமேல்தான் செல்ல வேண்டும் நன்றி!!

    ReplyDelete
  12. நன்றி திகழ்மிளிர், ஜமால், செய்யது, மயாதி, அன்புமணி, உழவன், ஜீவன்

    ReplyDelete
  13. //நல்ல கவிதை தொகுப்புகள் கொடுத்து இருக்கீங்க ...

    //

    அதே ! அதே !!

    ReplyDelete
  14. மலர்ந்து சிரிக்கும் கவிதைப்பூவின் அத்தனை இதழ்களும் அழகு. அதில் ஒரு இதழாக என் கவிதையும். அதற்கும் என் நன்றிகள்.

    கவிதை பற்றிய உங்கள் எண்ணம் அருமை. அதை நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  15. //அருகில் வர
    அச்சப்படுகிறது
    பறவையின் தானியங்களில்
    உங்கள் பெயரை
    எழுதி வைத்திருக்கிறீர்கள் //

    சந்திரசேகர் எழுதியது மிகவும் நல்ல கவிதை, ஆனால் பொருட்பிழை இருக்கிறது.

    பெயர் இருப்பது தனியாத்தில் அல்ல, பறவையின் மேல், பக்கத்துல வந்தா சுக்காவருவல் தான்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது