அகரம் அமுதா - ஒரு சிறு அறிமுகமும் - விடை அளித்தலும்
அன்பின் பதிவர்களே
கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்று பணியாற்றியவர் நண்பர் அகரம் அமுதா அவர்கள். இவரை ப் பற்றிய அறிமுகப் பதிவு இவர் இடுகை இடும் முன்னரே இட இயலாது போனது.
இவர் 30 வயது இளைஞர். பெரம்பலூரைச் சார்ந்தவர். அயலகத்தில் பணி புரிகிறார். இவர் அகரம் அமுதா, இலக்கிய இன்பம், தமிழ்ச் செருக்கன், தமிங்ழிஷ்.காம் என்ற வலைப்பூக்களிலும், இயன்ற வரையில் இனிய தமிழ் மற்றும் வெண்பா எழுதலாம் வாங்க என்ற குழுப் பூக்களிலும் இடுகைகள் இட்டு வருகிறார்.
வெண்பா எழுதுவதில் புலி. வெண்பாவில் புகழேந்தி என்பதற்கு இணையாக வெண்பாவில் அமுதா என்ற பெயரினைப் பெற்றவர். குறுகத் தரித்த குறளை - குறள்வெண்பா வடிவினில் இருந்து இன்னிசை வெண்பா வடிவினில் தருகிறார். நேரிசை வெண்பாவும் எட்டிப் பார்க்கிறது. இலக்கணம் இவருக்கு இன்பா வடிவில் குறளோவியம் தருகிறது.
இவர் கடந்த ஒரு வார காலம் வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். அப்பொழுது ஆறு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 125க்கும் மேலாக மறுமொழிகள் பெற்றுள்ளார்.
இவர் 25 பதிவர்களைத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்து - அனைவரும் வெண்பா எழுதுபவர்கள் - அவர்கள் எழுதிய வெண்பாக்களில் சிறந்தவற்றை அறிமுகம் செய்தார்.
ஏற்ற பொறுப்பினைச் சிறப்பாக நிறைவேற்றி மன நிறைவுடன் விடை பெறுகிறார். இவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.
நன்றி கலந்த நல்வாழ்த்துகள் அகரம் அமுதா
சீனா
----------
|
|
சோதனை மறு மொழி
ReplyDeleteஎன்னை அழைத்து வலைச்சரத்தில் எழுதவைத்தமைக்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர் சீனா அவர்களே!
ReplyDeleteவாழ்த்துகளும் நன்றியும் அகரம் அமுதா
ReplyDeleteவாழ்த்துகளும் நன்றிகளும் அகரம் அமுதா அவர்களுக்கு
ReplyDelete