07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 24, 2009

வெண்பா எழுதலாம் வாங்க! (2)

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!

1.சிக்கிமுக்கி (யாரெனத்தெரியவில்லை அறிந்தவர் உரைப்பீராக)

என்னைக்கவர்ந்த வெண்பா எழுதுபவர்களுள் இவரும் ஒருவர். இவரைப்பற்றி அறிந்தவர்கள் எனக்கு உரைப்பீர்களேயாயின் நன்றிக்கடன் பட்டவனாவேன். சிக்கிமுக்கி என்ற பெயரில் மறுமொழிப்பகுதியில் ஈற்றடிக்கு வெண்பாக்கள் எழுதுமிவரை யாரென என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. இவர் வலையல்லாத ஓர் வலைஅமைத்துக்கொண்டு மறுமொழியிடுவதே காரணம். இவர் என்னோடு வினா தொடுத்த வெண்பா.

எங்குற்றாய் இத்தனைநாள் என்னசெய்தாய் என்னி்னன்பா!
பொங்குமகிழ் வுன்பதிவைப் பார்த்தவுடன்- இங்கேநீ
ஈற்றடி தந்திலை ஏனோ குழப்பமென
சாற்றுக செய்தியினைச் சற்று.


அவர் தொடுத்த வினாவிற்கு நானுரைத்த பதில்…

நாட்கள் சிலவாக நான்ஆள் மடிக்கணினி
ஆட்கொண்ட நோயால் ஆவதியுற -மீட்டதனை
முன்போல் பொலிவாய் முகிழ்ந்துழைக்க செய்தற்கே
ஒன்றிரண்டு மாதமாச்(சு) ஓர்!

பூவைமேல் எத்தனை பூ! என்ற ஈற்றடியில் ‘பூவைமேல் எத்தனைப் பூ!’ எனவந்து ஒற்றுமிக வேண்டும் என்பதை அழவிய வெண்பாவாக்கித் தந்தருந்தார். அதைக் காண்போம்.

அகரம் அமுதா! அணிவிளக்கம் தந்தாய்!
மிகுவல் லெழுத்தது மேவல் - பகர்ந்தாயே!
தேவையன்றோ பூவின்முன் பகரமெய் திருத்தமுற
"பூவின்மேல் எத்தனை'ப்' பூ!

இவ்வினாவிற்கு எனது பதில்.

எண்ணுப் பெயர்முன் எழாதொற் றெனவுரைத்த
முன்னைப் புலவர் மொழியிலுள்ள –உண்மையினை
மேவிப்பார்; பார்த்து மிகாதென் றறிந்திடுக
பூவைமேல் எத்தனை பூ!

7. இரத்தினகிரி.

மரபுக்கவிதையில் மாலைமாற்றுப் பாடும் அளவிற்கு ஆற்றல் வாய்க்கப்பெற்ற இவர் எனது உற்ற நண்பரும் ஆவார். பலதுறை சார்ந்த எழுத்து வித்தகர் என்றால் அது மிகையாகாது. இவரது சில வெண்பாக்கள்.

பாயதில் புன்னகைப் பாங்குடன் பள்ளிகொள்
மாயவனாய்த் தூங்கி மகிழ்ந்திட்டுச் - சேயவன்நீ
தேம்புவதால் தொய்வுண்டாம்; மெய்முயற்சி கொள்ளாது
சோம்புவதால் உய்வுண்டா சொல்?

தோன்றப் புசித்திடார் தாண்ட வழியிலார்
ஈன்ற வலிதினங் கொண்டிறப்பார் - ஊன்நோக
வாயில் அரிசி வயிற்றுத்தீ வைப்பசித்
தீயிற் கொடியதோ தீ?

8. ஜீவா.

என் வாசகம் என்ற பெயரில் வலையமைத்து எழுதிவரும் இவர் ஆண்மீகம் சார்ந்த இடுகைகளை அதிகம் இட்டுவரும் அவர் மரபுப்பாக்கள் மீது தீராக்காதலுடையவர். அவ்வப்போழ்து வெண்பா எழுதுவதிலும் நாட்டமுடையவர். இவரது வெண்பா.

புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்
கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்
உள்ளிருள் நீக்கும் ஒளி.


அஞ்சி அவதியுற வேண்டா அவனியில்
விஞ்சி வல்லரசாய் மிஞ்சிட தஞ்சமிலா
தன்னிறைவு தந்திடும் ஒப்பம் இதனில்
அணுவாற்றால் வேண்டும் அறி.


9. இப்னு ஹம்துன்

அடிமைத் தனமதை ஆர்த்திடின் நம்மின்
குடிமையில் கூடும் குறைதான் - முடிவாய்
இணக்கத்தைப் பேணிடும் இந்தியர் கூற்றாய்
அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அடகு நிலையினில் ஆட்படுத்தி னாரா?
இடறுகள் ஏனோ இயம்பு - மடமைப்
பிணக்கினைப் போக்கிடு; பிற்காலம் நன்மை
அணுவாற்றல் வேண்டும் அறி!

அழைத்தாரே நண்பர் அகரம் அமுதன்
இழையினில் வெண்பா இழைக்க - மழையென
நண்பரின் ஞானமும் நானறிவேன் அன்புடன்
வெண்பா விரிப்பேன் விரைந்து!


10. சங்கர் (யாரெனத்தெரியவில்லை அறிந்தவர் உரைப்பீராக)

எத்தனை தாக்கங்கள் எவ்வளவு சேதங்கள்
தீர்ந்ததோ தாகம் உயிர்நாசம் செய்வோர்க்கு
நண்பா, படைதிரட்டி நேர்நிறுத்தி நெஞ்சுயர்த்தி
வன்முறையை வேரறுப்போம் வா!

'பூவை உனையன்றி வாழ்வேது' என்றேன்நான்
பூரித்து 'நீயன்றி நானேது' என்றாய்நீ
பூவையுன் கண்தனில் பூப்பூத்(து) அருவியாக
பூவைமேல் எத்தனை பூ!



வளர்வேன்...
அகரம் அமுதா

8 comments:

  1. வாழ்த்துகள்

    தொடருங்கள்

    ReplyDelete
  2. இந்த இடுகையின் வாயிலாக‌
    அன்பர்களின் முகவரிகள்
    கிடைக்கட்டும்

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பா

    ReplyDelete
  4. மிக்க நன்றிகள் திகழ்!


    ஆ.ஞானசேகரன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  5. அன்பின் அகரம் அமுதா

    வெண்பா இயற்றும் பதிவர்களாகத் தேடிப் பிடித்து அறிமுகம் செய்தமை நன்று

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  6. மிக்க நன்றிகள் சீனா!

    ReplyDelete
  7. நாட்கள் சிலவாக நான்ஆள் மடிக்கணினி
    ஆட்கொண்ட நோயால் ஆவதியுற -மீட்டதனை
    முன்போல் பொலிவாய் முகிழ்ந்துழைக்க செய்தற்கே
    ஒன்றிரண்டு மாதமாச்(சு) ஓர்!

    செந்தமிழ் விளையாடியுள்ளது

    ReplyDelete
  8. புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
    வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்
    கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்
    உள்ளிருள் நீக்கும் ஒளி.

    அருமை

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது