வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-6
வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-6
வணக்கங்களுடன் ஆ.ஞானசேகரன்
தெரு நாய்கள் தங்களுக்கென ஒரு எல்லையை வகுத்துக்கொள்கின்றன. தன்னோட இடத்திற்கு பக்கத்துத் தெரு நாய் வந்தால் போதும் உற்ற்ற் என்று உரும ஆரம்பித்துவிடும். அப்படிதான் மனிதனும் தனக்கென எல்லைகளும் அதற்கான காவல்களும், நாய் தன் வாயால் உற்ற்ற் என்று சொல்லும் ஆனால் மனிதன் துப்பாக்கி, பீரங்கி தோட்டாக்களால் உருமும் அவ்வளவுதான்..... அது கவ்வும் இது கொல்லும்.
பறவைகளுக்கு எல்லையே கிடையாது இரைக்காக நாடு விட்டும், கண்டம் விட்டும், பருவக்காலம் விட்டும் சென்று வரும். இந்த பறவைகளுக்கு வானமே எல்லையானது. இப்படி எல்லையில்ல உணர்வு மனிதா உனக்கு எப்பொழுது வரும்?????????.......... என்ற கேள்வியுடன் இன்றைய அறிமுகம்...
1. இவரை அறிமுகம் படுத்த வேண்டிய அவசியம் இங்கில்லை, ஏனனில் இவரே ஒரு அறிவிப்பாளார். ஆமாங்க வானலை (வெற்றி FM) மூலம் தன் குரலை ரசிகர் மத்தியில் பதிந்துகொண்டும் வலைப்பதிவுகளிலும் கலக்கி கொண்டிருக்கும் இலங்கை பதிவர் லோசன். இவரின் தளத்தின் பெயர் லோசனின் களம், இவரின் சிங்கை பதிவர் சந்திப்பு பற்றிய என் பதிவை பார்க்க சுட்டுங்கள் ....> "லோஷன்" அவர்களுடன் மாபெரும் சிங்கை பதிவர் சந்திப்பு (20-06-200). இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு..
1.மைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யவில்லை - புதிய பரபரப்பு
2.ஒளிமயமான இலங்கை - 2025இல் இலங்கை.. படங்களுடன்
3.ஐயாவிடம் (கலைஞர்) மன்னிப்பு & 'ஐ'க்கு நன்றிகள்
4.????? + 20 - 200வது பதிவு
2. இவர் ஒரு மூத்த பதிவர் வரிசையில் இருப்பவர். இவரின் தளத்தில் அரசியல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். சமீபத்தில் ஒரு பதிவர் சந்திப்பில் பழக்கமானார், நல்ல நண்பர். இவர்தான் குழலி, இவரின் தளத்தின் பெயர் குழலி பக்கங்கள். இவரின் தளத்தை பார்க்க படத்தின் மேல் தட்டவும்....
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.தமிழ் விக்கிபீடியா - வருந்துகிறேன்
2.உதயகுமாரிலிருந்து முத்துகுமார் வரை - கலைஞரின் பிண அரசியல்
3.தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள்
4.தமிழ் ஆயுதத்தை கொண்டு மக்களை இழிவு படுத்தும் தமிழ்கடல் கண்ணன் & குழு
3. கொஞ்சம் தமிழ் பற்று, கொஞ்சம் பகுத்தறிவு, கொஞ்சம் காமடி, கொஞ்சம் கலக்கல் என்று தன் தளத்தை எப்பவும் கலக்கலாகவே வைத்திருப்பவர். நல்ல நண்பர் திருச்சி பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் இருக்கின்றேன். இவர்தான் Daily coffe ன் சொந்தக்காரர் இளய கவி. இவர் திருச்சியை சார்ந்தவர், இவரின் தளத்தைத் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.இமெயில்லையுமா இப்படி ?? அடங்கமாட்டானூங்க இவனுங்க
2.மாமன் மேல ஒட்டிகிட்டு மத்தியான வேளையில...........
3.தமிழ்வெளி திரட்டி ஒரு அலசல்.
3."இது" ரொம்ப முக்கியம்!!!!
4. இவர் சிங்கபூரில் வேலைச்செய்கின்றார், இவரிடம் ஒரு பதிவர் சந்திப்பில் பேசியுள்ளேன். இவரின் எல்லா இடுக்கைகளையும் படிக்கவில்லை என்றாலும் ஒரு சில இடுக்கைகளை பார்த்துள்ளேன். சனரஞ்சகமாக எழுத கூடியவர், இவர்தார் கிரி. இவரின் தளத்தின் பெயர் கிரி Blog, தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.பாகிஸ்தான் காமெடிகள் :-))
2.தமிழக தமிழர்கள் தமிழுணர்வு இல்லாதவர்களா!
3.உலகில் எவராலும் மதிப்பிட முடியாத ஒரு விஷயம்!!!
4.பார்வை இருந்து பின் பார்வை இழந்தவருடன் ஒரு சந்திப்பு
5. இவர் சமீபத்தில்தான் பதிவெழுத வந்துள்ளார், எழுத்தில் இவரின் ஆர்வம் தெரிகின்றது, கவிதை கட்டுரை என கலக்குகின்றார், என் பதிவுகளில் பலவும் படித்து பின்னூட்டம் இட்டுயுள்ளார், பின்னூட்டத்தில் மட்டுமே பழக்கமானவர். இவர்தான் பனையூரான், இவரின் தளத்தின் பெயர் பனையூரான். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
6. இவரை பின்னூட்டங்களில் மட்டுமே எனக்கு தெரியும். இவரின் பதிவில் சில நான் படித்துள்ளேன். இவரும் என் பதிவை படித்து பின்னூட்டமும் ஊக்கமும் கொடுத்துள்ளார். இவர்தான் ஜோதி, இவர் தளத்தின் பெயர் சிறிய பறவை. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...

அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.நடிகையின் படம் வரைந்து பாகங்களை குறி
2.உங்கள் பதிவு பிரபலமாக வள்ளுவன் காட்டும் வழிகள்
3.இது வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு
4.இது பெண்களை பற்றி மட்டுமல்ல
7. இவரும் எனக்கு பின்னூட்டங்களில் மட்டுமே தெரியும், இவரின் எழுத்தில் இளமை தெரியும். 11 இடுக்கைகள் மட்டுமே எழுதி இருந்தாலும் முதிர்ச்சியான எழுத்து நடை இருக்கின்றது. இவர்தான் கணேஷ் குமார் கோ, இவர் தளத்தின் பெயர் தீப்பெட்டி. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...

அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.தூக்குவாளியும் மஞ்சப்பையும்..
2.முற்றுப்பெறாத கேள்விகள்
3.பார்வைகள்..
4.இந்திய ஜனநாயகத்தில் பண நாயகர்களின் பங்கு
8. இது சின்ன சின்ன கவிதைகள் மூலம் சமூகத்திலும், அரசியலிலும் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் தளம். தளத்தின் சொந்தக்காரர் சி.கருணாகரசு, சிங்கபூரில் வேலை செய்யும் இவரை ஒரு பதிவர் சந்திப்பில் பார்த்தும் பேசியும் உள்ளேன். இவரின் தளத்தின் பெயர் அன்புடன் நான், தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...

அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.இரட்டை மரணம்
2.போருக்குப்பின்...
3.மறுநடவு (திரு நங்கை)
4.இப்படிக்கு...ஈழத்தமிழன்
அன்புடன்
ஆ,ஞானசேகரன்
|
|
நன்றாக தொகுத்து வழங்குகிறீர்கள்! உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது என்று நினைக்கிறேன். தொடருங்கள்!
ReplyDelete// ச.செந்தில்வேலன் said...
ReplyDeleteநன்றாக தொகுத்து வழங்குகிறீர்கள்! உங்களுக்கு நல்ல நினைவாற்றல் உள்ளது என்று நினைக்கிறேன். தொடருங்கள்!//
மிக்க நன்றி நண்பா..
தொடர்ந்து பதிவர்களை
ReplyDeleteஅறிமுகப்படுத்துகின்றீர்கள்.
உண்மையிலேயே இது ஒரு மதிப்பிடமுடியா சேவை,
படிப்பவருக்கும் பலன், பதிவருக்கும் பலன்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான புதிய அறிமுகங்கள்
ReplyDeleteஎனக்கு பலர் புதிய அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துகள்
வெறுமனே படித்து "விட்டு" விடுகின்றவர்கள் மத்தியில். கருத்துரை எழுதி ஊக்கப்படுத்தும் உங்களின் மனப்போக்கு என்னைக்கவர்ந்தது. இப்போது அனைத்து பதிவர்களையும் அலசும் விதம் மிக சிறப்பு. எதையுமே ஒரு தெளிவுடன் அணுகும் உங்களை வியக்கிறேன். "அன்புடன் நான்' தளத்தைப் பற்றிய உங்களின் பார்வைக்கு மிக்க நன்றி.
ReplyDelete"அன்புடன்...நான்".
சி.கருணாகரசு.
கலக்கல் அறிமுகங்கள் வாழ்த்துக்கள்
ReplyDelete// நிகழ்காலத்தில்... said...
ReplyDeleteதொடர்ந்து பதிவர்களை
அறிமுகப்படுத்துகின்றீர்கள்.
உண்மையிலேயே இது ஒரு மதிப்பிடமுடியா சேவை,
படிப்பவருக்கும் பலன், பதிவருக்கும் பலன்.
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நண்பா
// sakthi said...
ReplyDeleteவாழ்த்துக்கள்//
நன்றிமா
// sakthi said...
ReplyDeleteஅருமையான புதிய அறிமுகங்கள்//
மிக்க நன்றி
// திகழ்மிளிர் said...
ReplyDeleteஎனக்கு பலர் புதிய அறிமுகங்கள்
வாழ்த்துகள்//
நன்றி நண்பரே
// சி. கருணாகரசு said...
ReplyDeleteவெறுமனே படித்து "விட்டு" விடுகின்றவர்கள் மத்தியில். கருத்துரை எழுதி ஊக்கப்படுத்தும் உங்களின் மனப்போக்கு என்னைக்கவர்ந்தது. இப்போது அனைத்து பதிவர்களையும் அலசும் விதம் மிக சிறப்பு. எதையுமே ஒரு தெளிவுடன் அணுகும் உங்களை வியக்கிறேன். "அன்புடன் நான்' தளத்தைப் பற்றிய உங்களின் பார்வைக்கு மிக்க நன்றி.
"அன்புடன்...நான்".
சி.கருணாகரசு.//
வாழ்த்துகளுடன் நன்றி நண்பரே
// Suresh Kumar said...
ReplyDeleteகலக்கல் அறிமுகங்கள் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நண்பா
வாழ்த்துக்கள் சேகர்..உண்மையிலேயே வியப்பெய்துகிறேன் வலையிட்டு தேடினீரோ இந்த வலைப்பூக்களை இதுவரை அறியாத வாசனை மலர்களை தொடுத்து சரமாக்கினீர் வலைச்சரம் வாசம் கொள்ள...வாழ்த்துக்கள் அனைத்து அறிமுகங்களுக்கும்.....
ReplyDelete// தமிழரசி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் சேகர்..உண்மையிலேயே வியப்பெய்துகிறேன் வலையிட்டு தேடினீரோ இந்த வலைப்பூக்களை இதுவரை அறியாத வாசனை மலர்களை தொடுத்து சரமாக்கினீர் வலைச்சரம் வாசம் கொள்ள...வாழ்த்துக்கள் அனைத்து அறிமுகங்களுக்கும்.....//
வணக்கம் தமிழ்..
உங்களுக்கும் என் வாழ்த்துகளுடன் நன்றிமா
ஒவ்வொருவர் வலைப்பூவிலிருந்தும் அவரவரின் சிறந்த இடுகைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளீர்கள். தொடர்ந்து உங்கள் கடின உழைப்பு புலப் படுகிறது. பாராட்டுக்கள்.
ReplyDelete// ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஒவ்வொருவர் வலைப்பூவிலிருந்தும் அவரவரின் சிறந்த இடுகைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளீர்கள். தொடர்ந்து உங்கள் கடின உழைப்பு புலப் படுகிறது. பாராட்டுக்கள்.
உங்களின் பாராட்டுகளுக்கு மிகுந்த நன்றிகள்
மிக்க நன்றி ஞான சேகரன், உங்கள் லிஸ்டில் உண்மையிலேயே நான் வருவேன் என நான் நினைக்கவில்லை. இது போன்ற பதிவுகளை பார்க்கும் போது எனக்கு இன்னும் நன்றாக எழுதவேண்டும் என பொறுப்பு வருகிறது.
ReplyDeleteநீங்களும் நல்ல பதிவுகளை தொடர்ந்து வழங்குங்கள் நண்பரே,..