வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-4
வலையும் நட்பும் உங்களிடம் ஓர் அறிமுகம் ...பகுதி-4
வணக்கங்களுடன் ஆ.ஞானசேகரன்
எல்லா உயிர்களும் நடக்க வேண்டும் என்றால் பொதுவாக முன்னால்தான் நடக்கும். அதன்படிதான் அவற்றிக்கு கண் மற்றும் கால்களின் அமைப்பும் இருக்கும். ஆனால் நண்டுக்கு மட்டும் தனி சிறப்பு என்னவென்றால் இதனால் நான்கு புறமும் நடக்க முடியும். பொதுவாக இது பக்கவாட்டில் இரண்டு புறமும் எட்டு கால்களுடன் நடக்க முடியும். உதவிக்கு இரண்டு பெரிய கொடுக்கும் இதற்கு பயன்படுகின்றது.
நாம் பதிவு எழுதும்பொழுது பல சமயங்களில் நமக்கு என்ன எழுதுவது என்றே தெரியாது. இதற்கு கருத்து வறட்சி என்றே சொல்லலாம். உண்மையில் கருத்திற்கு வறட்சி இல்லை மாறாக நம் மனம் தான் நண்டு போல் நாலா புறமும் போய்கொண்டிருக்கும். மனம் ஒன்றித்து நான்கு புறமும் நாம் சென்றால் கருத்துகள் குவிந்து கிடப்பதை காணலாம். என்னை பொருத்தவரை மனிதன் மனம் வைத்தால் கல்லும் கவிப் பாடும்..., கன இரும்பும் நடனமாடும்....
1. முற்போக்கு சிந்தனைகளை தன் எழுத்தில் வைத்திருக்கின்றார். திருச்சியில் வளர்ந்து தற்பொழுது அமெரிக்காவில் வேலை செய்கின்றார். இவரின் தளத்தில் நான்கு இடுக்கைகள் இருந்தாலும், நான்கிலும் மனிதனின் அணுக்கூறுகளையும் உலகின் அணுக்கூறுகளையும் பிச்சி வைத்துள்ளார். ஆமை முயல் என்ற காதாப்பாத்திரங்கள் மூலம் விளக்கியுள்ள பாங்கு மிக அருமையாக இருக்கும். இவர் தளத்தின் முக்கிய நாதம் "கண்ணால் பார்ப்பதும் பொய்யாகலாம்! காதால் கேட்பதும் பொய்யாகலாம்! சுய அறிவுக்கு பட்டதும் பொய்யாகலாம்! பொது அறிவுக்கு பட்டதும் பொய்யாகலாம்! (எந்த ஒரு அசாதாரணமான விசயத்திற்கும், அதற்கு நிகரான ஆதாரங்களை எதிர் பார்!)" இவற்றை அவரே அவர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒரு முறை நீங்கள் படித்துப் பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும். இவருக்கும் எனக்கும் ஒரு முக்கிய தொடர்பு உள்ளது, இவர் என் கூட பிறந்த இளைய சகோதரர். இவர்தான் RajK இவரின் தளம் புதிய பார்வை. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் இடுக்கைகளை அவரின் தளத்திலேயே பார்க்கலாம்.
2. சிலநேரங்களின் பலமுறை பார்த்த திரைப்படத்தை மறுபடியும் பார்ப்பதுண்டு அதுபோல எல்லோருக்கும் தெரிந்த நபரையும் அறிமுகம் செய்வதும் உண்டு. ஏனெனில் அவர் மூலம் தாங்களும் அறிமுகமாகிவிடலாம் என்ற நிலைதான். அப்படிதாங்க இவரை தெரியாத பதிவர் இல்லை என்றே சொல்லலாம். இவரின் இடுக்கைகளை அனைத்தையும் படிக்கவில்லை என்றாலும் ஒரு சில இடுக்கைகளை படித்ததுண்டு ஆனால் இவரின் பின்னூட்டத்தை எந்த தளத்தில் பார்த்தாலும் படித்துவிடுவேன். நீங்கள் சொல்வது சரிதான் வால் பையன் தாங்க. இவரின் தளத்தின் பெயரும் வால் பையன். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்....
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.சாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று...
2.ஓரினசேர்க்கை ஆதரவும் எதிர்ப்பும்!!
3.மீண்டும் ஒரு முறை!..
4.கதை சொல்லும் கதை!..
3. இவரின் ஒரு சில இடுக்கைகள்தான் நான் படித்துள்ளேன். இவரின் பின்னூட்டம் என் தளத்தில் அடிக்கடி வருவதுண்டு. எனது நல்ல இடுக்கைகளை பாராட்ட தவறுவதில்லை. அவர் தளத்தைப்பற்றி அவரே கூறுவது போல இது ஒரு அம்மாக்களின் வலைத்தளம். அவரது இடுக்கைகளும் அப்படியே இருக்கும். அவர்தான் அமுதா, சென்னையில் வசிப்பவர். இவரின் தளம் என் வானம், இவரின் மற்றொரு தளம் சுட்டி உலகம். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.குழந்தைகளும், ஒரு கவளம் சோறும், கதைகளும்..
2.பரிமாறல்
3.தொலைந்து போன கவிதைகள்
4.காரணங்கள் தேவையில்லை
4. கலக்கலான பதிவர்கள் என்ற வரிசையில் இவரும் ஒருவர். இவரை 187 நண்பர்கள் பின் தொடர்கின்றார்கள். இவரின் பல இடுக்கைகள் சூடான இடுக்கையில் வரும். தவிற்க முடியாத காரணங்களால் தற்பொழுது எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளார். மீண்டு பொழிவோடு வருவார் என்று எதிர்ப்பார்க்கின்றேன். உங்களின் பின்னூட்டங்கள் அவரை மறுபடியும் எழுத வைக்கலாம். திருச்சியிலிருந்து பெங்களூரில் வேலைசெய்யும் நண்பர் சக்கரைதான். இவரின் தளம் சக்கரை பெயருக்கு ஏற்றார் போல் இனிக்கும். இவரின் தளத்தைப் பார்க்க படத்தில் மேல் தட்டவும்..
இவரின் இடுக்கைகளை இவரே இவர் தளத்தில் தொகுத்துள்ளார்.
5. இவருடன் பின்னூட்டங்களில் மட்டுமே எனக்கு தெரியும். சமீபகாலமாக இவரின் இடுக்கைகளை படித்துள்ளேன், சமுகம் சார்ந்த இடுக்கைகள் அதிலும் தமிழர் சார்ந்த இடுக்கைகளாக இருக்கும். சொந்த ஊர் கோயமுத்தூர் குவைதில் வேலை செய்கின்றார். இவரைப்பற்றி பலருக்கும் தெரியும் என்றே நினைக்கின்றேன். அவர்தான் ராஜ நடராஜன், இவரின் தளம் பார்வையில். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.எழுத்துகள் பல விதம்
2.போர் நிறுத்தம் செய்- ஒபாமா
3.இனி மனிதம் மட்டுமே பேசுவோம்
4.தமிழ் தொலைகாட்சிகள் ஒரு பார்வை-பகுதி 2
6.இவரை பற்றி எனக்கு பின்னூட்டங்களில் மட்டுமே தெரியும். இவரின் சில இடுக்கைகளையும் படித்துள்ளேன், தமிழர் சாந்த இடுக்கைகளாக இருக்கும். என்னுடைய தளத்தில் நல்ல இடுக்கைகளுக்கு இவரின் பின்னூட்டம் இருக்கும். இவரை பற்றி இவரே இவரின் தளத்தில் என்னைப்பற்றி சொல்லியிருக்கின்றார். இவர்தான் திகழ்மிளிர், இவரின் தளங்களில் ஒன்று என்றும் அன்புடன். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.வட்டதிற்குள் பெண்
2.படமும் பாதிப்பும் (27/05/2009)
3.படமும் பாதிப்பும் (01/06/2009)
4.நீங்காத நிலவரைகள் (landmarks) சூலை 2009 ஒளிப்படப்போட்டிக்கு
7. இவரும் எனக்கு பின்னூட்டங்களில் மட்டுமே தொடர்பு,சென்னையில் வசிக்கின்றார். தாய்மையும் பிள்ளைகளும் தொடர்புடைய இடுக்கைகளை பதிந்து வருகின்றார். இவர்தான் அம்மாக்களின் பகிர்வுகள் என்ற தளத்தின் சொந்தக்காரர் சந்தனமுல்லை. இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்..
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.குழந்தை வளர்ப்பும் பெற்றோர் பொறுப்பும்..!
2.ஒரு அம்மாவின் குறிப்புகள்-5
3.இடது கை பழக்கம் -செய்ய வேண்டியது
4.தாய்மையை கொண்டாடுவோம்..
8. சிங்கபூரில் இருந்தாலும் நான் இவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என் பல இடுக்கைகளுக்கு பாராட்டி பின்னூட்டம் இட்டுள்ளார். இவர் கவிதை மற்றும் சமுகம் சார்ந்த கட்டுரைகளை எழுதுகின்றார். வானம் உன் வசப்படும் என்ற தளத்திற்கு சொந்த காரர், அவர்தான் புதியவன். இவரின் தளத்தைப் பார்க்க படத்தின் மேல் தட்டவும்...
அவரின் சில இடுக்கைகள் பார்வைக்கு...
1.பதிலைத் தேடிய கேள்விகள்
2.இன்று எப்படியாவது தொட்டுவிட வேண்டும்..
3.பெய்யென பெய்யும் காதல் மழை..
4.எனக்கானதொரு தேவதை
இன்னும் வரும் அதுவரை
அன்புடன்
ஆ,ஞானசேகரன்
|
|
http://sites.google.com/site/artificialcortext/ இது blog அல்ல. பல்வேறு format மற்றும் இதர காரணத்தால் இதை என்னுடைய Artificial-Intelligence site-ல் வைத்துள்ளேன். என்னுடைய blog சாரல்: http://4saral.blogspot.com/.
ReplyDeleteஎன்னுடைய தளத்தை அறிமுகபடித்திய அண்ணனுக்கு நன்றி!
அண்ணே பத்து பத்தா போட்டு பட்டையக் கிளப்புறீங்களே!!!!
ReplyDeleteவாழ்த்துகள்.
அன்பின் ஞானசேகரன்
ReplyDeleteபல பதிவர்கள் பலரால் பார்க்கப்படாத ப்திவர்கள் - அருமையான தளங்கள் - அனைத்தையும் தேடிப்பி்டித்து அறிமுகப்படுத்திய விதம் நன்று
நல்வாழ்த்துகள்
உங்கள் பணி சிறப்பாக தொடர்கிறது வாழ்த்துக்கள்.
ReplyDelete//அப்பாவி முரு said...
ReplyDeleteஅண்ணே பத்து பத்தா போட்டு பட்டையக் கிளப்புறீங்களே!!!!
வாழ்த்துகள்.
//
ரிப்பீட்டே...
நண்டு படம் / விளக்கம் அட்டகாசம்
நல்லதொரு அறிமுகம், நன்றி!
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteவாழ்த்துகள்
// RajK said...
ReplyDeletehttp://sites.google.com/site/artificialcortext/ இது blog அல்ல. பல்வேறு format மற்றும் இதர காரணத்தால் இதை என்னுடைய Artificial-Intelligence site-ல் வைத்துள்ளேன். என்னுடைய blog சாரல்: http://4saral.blogspot.com/.
என்னுடைய தளத்தை அறிமுகபடித்திய அண்ணனுக்கு நன்றி!//
மகிழ்ச்சியும் நன்றியும்
// அப்பாவி முரு said...
ReplyDeleteஅண்ணே பத்து பத்தா போட்டு பட்டையக் கிளப்புறீங்களே!!!!
வாழ்த்துகள்.//
வணக்கம் தம்பி..
சோம்பலின் காரணமாக இந்த முறை எட்டோடு முடிந்துவிட்டது..
மிக்க நன்றி நண்பா
// cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் ஞானசேகரன்
பல பதிவர்கள் பலரால் பார்க்கப்படாத ப்திவர்கள் - அருமையான தளங்கள் - அனைத்தையும் தேடிப்பி்டித்து அறிமுகப்படுத்திய விதம் நன்று
நல்வாழ்த்துகள்//
மிக்க நன்றி ஐயா
// முனைவர் சே.கல்பனா said...
ReplyDeleteஉங்கள் பணி சிறப்பாக தொடர்கிறது வாழ்த்துக்கள்.//
வணக்கம்..
மிக்க நன்றிங்க
// கோவி.கண்ணன் said...
ReplyDelete//அப்பாவி முரு said...
அண்ணே பத்து பத்தா போட்டு பட்டையக் கிளப்புறீங்களே!!!!
வாழ்த்துகள்.
//
ரிப்பீட்டே...//
நண்டு படம் / விளக்கம் அட்டகாசம்////
மகிழ்ச்சி
மிக்க நன்றி கண்ணன்
// ஐந்திணை said...
ReplyDeleteநல்லதொரு அறிமுகம், நன்றி!//
மிக்க நன்றி நண்பரே
//திகழ்மிளிர் said...
ReplyDeleteநன்றி நண்பரே
வாழ்த்துகள்//
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகளும்
பல புதிய தளங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். வந்து படிக்கிறேன்!
ReplyDelete// தேவன் மாயம் said...
ReplyDeleteபல புதிய தளங்களை அறிமுகப் படுத்தியுள்ளீர்கள். வந்து படிக்கிறேன்!//
மிக்க மகிழ்ச்சியும் நன்றிம் சார்...
படித்ததும் சொல்லுங்கள்
இன்னைக்குமா நானுமா?
ReplyDeleteரொம்ப நன்றி நண்பரே!
சுட்டி உலகம் எனக்கு புதிது!
அதற்கும் ஒரு நன்றி!
// வால்பையன் said...
ReplyDeleteஇன்னைக்குமா நானுமா?
ரொம்ப நன்றி நண்பரே!
சுட்டி உலகம் எனக்கு புதிது!
அதற்கும் ஒரு நன்றி!//
வணக்கம் நண்பா,..
மிக்க நன்றிபா
5ம் நாள் வாழ்த்துக்கள் சேகர்...
ReplyDeleteநண்டு மாதிரியே வலையில் நுழைந்து நாங்கள் அறியா பதிவர்களையெல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.. நன்றி வாழ்த்துக்கள் இன்றைய அறிமுகங்களுக்கு....
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteசிறப்பான பணி அற்புதமான தொகுப்புக்கள்!
வழக்கம் போல அசத்தல் ரகம்!!
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!
இதில் சிலர் எனக்கு தெரியாது. என்ன சேகர் சிரிக்கறீங்க
ReplyDeleteதெரிஞ்சவங்களை மட்டும்... அப்படிதானே...... :))
சரி சரி எல்லார் பதிவுகளும் பார்க்கின்றேன்........
வலைச்சர பொறுப்பை சிறப்புற நடத்திவரும் ஆ.ஞானசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். அறிமுகமாகியிருக்கும் நட்புள்ளங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete//தமிழரசி said...
ReplyDelete5ம் நாள் வாழ்த்துக்கள் சேகர்...
நண்டு மாதிரியே வலையில் நுழைந்து நாங்கள் அறியா பதிவர்களையெல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கீங்க.. நன்றி வாழ்த்துக்கள் இன்றைய அறிமுகங்களுக்கு//
வணக்கம் தமிழ் மிக்க நன்றிங்க
// RAMYA said...
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
சிறப்பான பணி அற்புதமான தொகுப்புக்கள்!
வழக்கம் போல அசத்தல் ரகம்!!
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!!//
வணக்கம் ரம்யா..
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க
//RAMYA said...
ReplyDeleteஇதில் சிலர் எனக்கு தெரியாது. என்ன சேகர் சிரிக்கறீங்க
தெரிஞ்சவங்களை மட்டும்... அப்படிதானே...... :))
சரி சரி எல்லார் பதிவுகளும் பார்க்கின்றேன்........
//
பாருங்க உங்களுடைய பின்னுட்டத்தை அவர்களுக்கும் போடுங்க... உங்களின் ஊக்கம் அவர்களுக்கும் இருக்கட்டுமே
///குடந்தை அன்புமணி said...
ReplyDeleteவலைச்சர பொறுப்பை சிறப்புற நடத்திவரும் ஆ.ஞானசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். அறிமுகமாகியிருக்கும் நட்புள்ளங்களுக்கும் வாழ்த்துகள்.//
மிக்க நன்றி நண்பா
நல்ல அறிமுகங்கள்,
ReplyDeleteதொடந்து கலக்குகிறீர்கள்....
வாழ்த்துகள்....
// அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்,
தொடந்து கலக்குகிறீர்கள்....
வாழ்த்துகள்....//
மிக்க நன்றிங்க ஜோதிபாரதி
அருமையான பதிவுகளையும் அவர்களின் சுய விபரங்களோடு அறிமுக படுத்தும் உங்கள் பதிவுகள் அருமை
ReplyDelete// Suresh Kumar said...
ReplyDeleteஅருமையான பதிவுகளையும் அவர்களின் சுய விபரங்களோடு அறிமுக படுத்தும் உங்கள் பதிவுகள் அருமை//
வணக்கம் சுரெஷ் குமார்.
மிக்க நன்றிபா
உங்கள் அறிமுகங்கள் நன்று. ஆனால் அவர்கள் எழுத்துக்களை/பதிவுகளை இடுக்கை இடுக்கை என்று கூறுகிறீர்களே??
ReplyDeleteஇடுகை என்றல்லவா கூறவேண்டும்?
//உங்கள் அறிமுகங்கள் நன்று. ஆனால் அவர்கள் எழுத்துக்களை/பதிவுகளை இடுக்கை இடுக்கை என்று கூறுகிறீர்களே??
ReplyDeleteஇடுகை என்றல்லவா கூறவேண்டும்? //
தவற்றை சுட்டி காட்டியதற்கு மிக்க நன்றி நண்பாரே.. மாற்ற முயற்சிக்கின்றேன்
நண்பா நம்ம பிளாக்கையும் போட்டதுக்கு ரொம்ப நன்றி ...
ReplyDeleteமற்றும் எல்லா பதிவர்களும் நம் நண்பர்களே :-)
உங்களுக்கு வாழ்த்துகள் ரொம்ப லேட்டா சொன்னாலும் மனமார வாழ்த்துகள் :-)