அன்பென்று கொட்டு முரசே!!!
அன்பூ
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
இல்லம் என்பதற்கு உயிரூட்டுவதே அன்பான உறவுகள் தானே!!! உறவுகள் பற்றி சில பதிவுகளையும், குழந்தைகளுக்கான சில வலைப்பூக்களையும் பார்ப்போம்
"எத்தனை உயரம் சென்றாலும் தளத்தை மறக்காதீர்கள்.. இறங்கிய பின் தளம்தான் தேவை.. இறக்கைகள் அல்ல.." இந்த வரிகள் என் மனதில் மிக ஆழப் பதிந்துவிட்டது. நர்சிமின் "கிராமத்து அப்பாவும் ஏரோப்ளேனும்" என்ற பதிவில் இருந்து தான் இவ்வரிகள். நம்மை உயரத்தில் அமர்த்த முயன்ற எந்த ஒரு உறவுக்கும் பொருந்தும் இவ்வரிகள்.
ஜீவனின் "மாற்றாந்தாய்" பதிவு மாற்றாந்தாய் உறவைப் பற்றி சிந்திக்க வைக்கும் பதிவு
இணையம் அம்மாக்களின் பூரிப்பிலும் அப்பாக்களின் பெருமிதத்திலும் மலர்ந்து இருக்கின்றது. "அம்மாக்களின் வலைப்பூக்களும் ", பேரண்ட்ஸ் கிளப்பும் பெற்றோரின் அன்பையும் பொறுப்பையும் கட்டியம் கூறும். இவ்வுலகைத் தாங்கப் போகும் சின்னஞ்சிறு கைகளையும் மனதையும் வலுவூட்டும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. வலையெங்கும் சிதறிக்கிடக்கும் நல் விசயங்கள் அவர்களுக்கு செல்ல வேண்டும்.
குழந்தை வளர்ப்பு என்பது சாதாரணமானது அல்ல. அதுவும் இப்பொழுது குழந்தைகளின் துறுதுறுப்புக்கும் ஆர்வத்துக்கும் தீனி போடுவது என்பது பெரிய விஷயம "பூந்தளிர்" வலைப்பூவில் தன் மகள் தீஷுவிற்கு தியானா சொல்லிக் கொடுக்கும் முறைகள் எளிமையானவை; இனிமையானவை. என் மூளையும் இதையே கொஞ்சம் பெரிய குழந்தைக்கு எப்படி செய்யலாம் என யோசிக்கும். பருப்பு வகைகள் வைத்து என்ன சத்தம் என்று யோசிக்க வைப்பதும், கோப்பைகளில் நீர் நிரப்பி ஜலதரங்கம் செய்வதும் என்று பல எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் இவ்வலைப்பூ படிப்பவர்களுக்கு நிச்சயம் குழந்தைகளை ஈர்க்கும் நல்ல யோசனைகள் கிடைக்கும்
சின்ன கைகளுக்கு நல்ல வேலை கொடுத்து வீட்டை அலங்கரிக்க இங்கே பொறுமையுடன் கற்றுத்தருகிறார் Mrs.Faizakader
"ஒரு வண்டின் ரீங்காரம் " என்ற இந்த வலைப்பூவில் இனிமையான வண்டு-சிண்டு படக்கதைகள் காணலாம்.
"ட்ரூடுல்ஸ்" குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் சுவாரசியமான புதிர். குழந்தைகளுக்கு புதிர் , விளையாட்டு, கைவேலை என்று பன்முகம் காட்டும் தளம் அரும்புகள் .
மழலைகளுக்கு கற்றுக் கொடுப்பதே இனிமை; பாடல் கற்றுக் கொடுப்பது இனிமைக்கு இனிமை சேர்க்கும். "நிலா நிலா ஓடி வா", "அம்மா இங்கே வா வா", "தோசை அம்மா தோசை..." என்று என்றோ கற்றவை இன்னும் இனிக்கின்றதே!!!. நம் குழந்தைகளுக்கு இதுபோன்று அழகான பாடல்களை "சிறுவர் பாடல்கள்" வலைப்பூ கற்றுக்கொடுக்கிறது. சமீபகாலமாக இவ்வலைப்பூவில் பதிவுகள் இல்லையென்றாலும் இனிமையான சிறுவர் பாடல்கள் 54 உள்ளன.
அதிலிருந்து ஒரு அழகான பாடல்:
அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்
கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!
|
|
நல்ல தொகுப்பு அமுதா!
ReplyDeleteவாவ்...குழந்தைகள் உலகமா ??
ReplyDeleteநர்சிம்,ஜீவன்,ஃபாய்ஸா காதர் பதிவுகளை படித்திருக்கிறேன்.
நல்ல அறிமுகப்பதிவுகள் அமுதா.
அழகான தலைப்புடன் அருமையான சுட்டிகளுடன் அன்பூ மிளிர்கிறது! வாழ்த்துக்கள் அமுதா!
ReplyDeleteஐந்தாம் நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteகுழந்தைகள் என்ற பெயரை கேட்டாலே
அன்புதான்
பிறகென்ன கொட்டும் முரசுதான் ...
பேரண்ட்ஸ் கிளப்பின் சுட்டிக்கு மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteஅருமையான தொகுப்பு அமுதா.
ReplyDeleteமிக்க நன்றி!!!
ReplyDeleteநர்சிமின் பதிவு மிக அருமை!!
பிற பதிவுகளையும் படிக்கிறேன்!!!
அருமையான தொகுப்பு அமுதா
ReplyDeleteஅருமையான தலைப்புகள்
ReplyDeleteநாளும் ஒரு பூ
வாழ்த்துகள்