07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, July 6, 2009

வலைச்சரத்தில் ஒரு வலைப்பூ



’’நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவ சக்தி எனை
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே.....”
எனச் சொன்ன என் பாரதிக்கு மலர் தந்து வணக்கம் கூறி என்னைப் பற்றி நான்...

வலைச்சரம் ஆசிரியராய் நான்.... எந்த நம்பிக்கையில் எனக்கு இப்பணியை அளித்தார் என அறியவில்லை.....”சீனா”அண்ணாவின் நம்பிக்கைக்கு நன்றி. அவருக்கு வணக்கம் சொல்லி என்னை வாழ்த்தவும் சொல்லி விஷயத்தை சொல்றேன்.....

நான் தாங்க எழுத்தோசை தமிழரசி..... என்ன சைதை தமிழரசி மாதிரி சொல்ற என்று நீங்கள் சொல்வது கேட்கிறது....என் நண்பர்களின் அன்போடும் ஆசியோடும்.....

நான் தமிழரசி B.A .,Eng Lit படிச்சிருக்கேன் ஆனா தமிழ் இலக்கணமே சரியா வராதுங்க எனக்கு. அதுக்காக English grammerல doubtன்னு யாரும் மெயில் பண்ணிடாதிங்க.....ஆமாம் நான் ஆந்திராவில் இருப்பதால் என்னால் முறையாக
சிறப்புற தமிழை பயில முடியவில்லை....எனக்கு தெரிந்தது சில தமிழ் எழுத்துக்களே..அதை கொண்டுத் தான் என்னுடைய எழுத்துப் பயணம் தொடங்கியது.....

”மகாகவி பாரதி” இவர் மேல் எனக்கு அளவிலாப் பற்று.....என்னுடைய மனவுறுதிக்கும்,தைரியத்திற்கும்,தன்னம்பிக்கைக்கும் வித்திட்டதும் இவர் பாடல்களே...... சோகங்கள் என்னை வீழ்த்தும் போது இவருடைய

”மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கினபொருள்கைப்பட வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்,”

இந்த பாடல் என்னை வெகுவாக தேற்றும்...தெளிந்தும் விடுவேன்........

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
இக்குறளின் பொருள் படி இக்குறள் பயன்ற அன்று முதல் இன்று வரை இதை நான் கடை பிடித்து வருகிறேன்.

எதை பார்த்தாலும் கவிதைகளாய் எப்பவுமே மனசுகுள்ள அசை போடுவது எனக்கு பழக்கம்...... மனசுகுள்ள எழுத எழுத அதை சுவடு இல்லாமல் அழித்தும்விடுவேன் சில நாட்கள் துண்டு பேப்பர் சுவர் என்று ஆரம்பித்து அடுத்து
அதற்காக தனியா ஒரு நோட்டு புத்தகம் வைத்து எழுதத் தொடங்கினேன்.....இந்த சூழ்நிலையில் எனக்கு என் நண்பர் நாமக்கல் சிபி தனது வலைப்பூவான பிதற்றல்களை என்னை படிக்கச் சொன்னார்..அதைப் பார்த்ததும் நான் வியந்தேன் இப்படியெல்லாம் இருக்குமா? என்று?

அதை கண்ட பின் ஏற்பட்ட ஓசை தான் இந்த எழுத்தோசை ...... இன்று இந்த அளவு நல்ல நட்புக்களையும் நல்ல மனங்களையும் எனக்கு அளித்திருக்கிறது..... நான் இத்தனை தூரம் பயணிக்க பாதை அமைத்தது என் நண்பர்களின் வலைப்பூக்கள் தான்..... கடந்த வந்த பாதை எல்லோருக்கும் முட்களாய் இருக்க எனக்கு மட்டும் பூக்கள்.....வலைபூக்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது.... இனி வரும் புதிய வலைப்பூ பதிவர்களுக்கும் நானும் பூக்களால் பாதை அமைப்பேன்.....என் கவிதைகளால் அவர்களுக்கு மேடை அமைப்பேன்.

ஜனவரி 31 முதல் எழுத்தோசையை நான் ஆரம்பித்திருந்தாலும் ஏப்ரல் மாதத்திலிருந்து தான் இதில் முழு கவனம் செலுத்த முடிந்தது.ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாதிருந்த நான் இப்போது ஒரளவு தேர்ச்சி பெற்றுள்ளேன்......ஏப்ரல் 23 முதல் ஜுன் 26 வரை என்னுடைய 18 பதிவுகளுக்கு மேல் இளமை விகடனில் வெளிவந்துள்ளது ஆதலால் இங்கு விகடனுக்கு நன்றி சொல்ல மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய பதிவுகளில் எனக்கு பிடித்த சில பதிவுகள் இங்கு

நட்பை தொலைக்காதே
மனிதரில் இத்தனை நிறங்களா?
பெண்ணும் பூமியும்
பட்டினிக்கு பிறந்தோம்
எல்லாமே இங்கு கேள்விகள் தான்?
முதல்நிலை இடைநிலை கடைநிலை
வாழ்க்கை
உனக்கே உனக்காய்
தாகம்
இறையே உன்னிடமுமா?
நீ வரும் வரை
மறுத்தது ஏன் மறவனே
இம்மையே போதும் இனி மறுமை வேண்டாம்
அழகிப் போட்டி
அச்சு வெல்லம் நான் அவனுக்கு
காதல் வலி
குண்டோசையும் கூக்குரலோசையும்
எய்ட்ஸ்
அழகிப்போட்டி
பூகம்பம்
அன்னிய நாட்டுச் செலவானி நான்

மானிடராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என கவிச் சொன்னான் மாதவம் எதும் செய்திடாமலே மானிடராய் பிறந்திட்டோம்.ஆனால் பிறந்த மண்ணிற்கு என்ன செய்திட்டோம்?

என்ன செய்யப் போகிறோம்?



























பொருப்பில்லாமல் இருக்கிறோம்
பொங்கியெழ மறக்கிறோம்.....
துடிப்போடு இருந்தும் கூட
துணிந்து செல்ல மறுக்கிறோம்....

வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை
வாடிய பயிர்களை பற்றி துயரம் இல்லை!!!!
வற்றாத சேமிப்பு வங்கியில் பெறுக்குவதற்கு
வாழ்நாள் எல்லாம் உழைகிறோம்.....

வறுமை தான் நம் எல்லைக் கோடு
ஆனால் காஷ்மிர் எனச் சொல்கிறோம்....
ஐந்தாண்டு அரசியல் செய்து அள்ளி கொண்டு
போவோனையும் தட்டி கேட்க தயங்குகிறோம்!!!!

அறிவிலிகளாய் மட்டுமே இருந்து
ஆற்றாமை பட்டுக் கொண்டு இருக்கிறோம்!!!!
வாசமுள்ள மலர்களை அறிகிறோம்
வஞ்சம் கொண்ட முகங்களை அறிவதில்லை....

விவசாயிக்கு இங்கு நிலமில்லை
கடனில் விழுந்தவனை எழுப்ப யாருமில்லை....
கேணிகளில் நிரில்லை அதில்
தூர் வாரும் நிலையும் அவருக்கில்லை....

வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொன்னால்
அதை வீதியில் அல்லவா வளர்க்கிறோம்!!!!
நாட்டுக்கு எதேனும் செய்யச் சொன்னால்
ஓட்டு போடாமல் ஒளிகிறோம்!!!!

விதண்டா வாதம் பேசும்
வீண்ர்களாய் இருக்கிறோம்!!!!
முரண்பாடுகளை மட்டும் சுட்டிக் காட்டும்
முட்டாள்களாகத் தானே இருக்கிறோம்!!!!

நாட்டுக்கு ஏதேனும் செய்யச் சொன்னால்
நாம் என்ன செய்யப்போகிறோம்????

************************************

இன்று இத்துடன் விடைப் பெற்றுக் கொண்டு நாளை சந்திக்கிறேன்.நாளை முதல் சிறந்த பதிவர்களை மேலும் இங்கு சிறப்பிக்க எண்ணுகிறேன்..... என்னுடைய பதிவுகளில் எதேனும் சொல்குற்றமோ பொருள்குற்றமோ இருப்பின் பொருத்தருள வேண்டாம் எடுத்தருளவும்.....

இவன் தமிழ்

187 comments:

  1. வாழ்த்துக்கள் தமிழ்

    ReplyDelete
  2. வாழ்த்துகள்

    ReplyDelete
  3. //B.A .,Eng Lit படிச்சிருக்கேன் //

    சொல்லவேயில்ல....அப்ப ஆங்கிலத்துலயும் போயம் எழுதுவீங்களோ !!!!

    ReplyDelete
  4. /பொருப்பில்லாமல் இருக்கிறோம்
    பொங்கியெழ மறக்கிறோம்.....
    துடிப்போடு இருந்தும் கூட
    துணிந்து செல்ல மறுக்கிறோம்....

    வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை
    வாடிய பயிர்களை பற்றி துயரம் இல்லை!!!!
    வற்றாத சேமிப்பு வங்கியில் பெறுக்குவதற்கு
    வாழ்நாள் எல்லாம் உழைகிறோம்.....

    வறுமை தான் நம் எல்லைக் கோடு
    ஆனால் காஷ்மிர் எனச் சொல்கிறோம்....
    ஐந்தாண்டு அரசியல் செய்து அள்ளி கொண்டு
    போவோனையும் தட்டி கேட்க தயங்குகிறோம்!!!!

    அறிவிலிகளாய் மட்டுமே இருந்து
    ஆற்றாமை பட்டுக் கொண்டு இருக்கிறோம்!!!!
    வாசமுள்ள மலர்களை அறிகிறோம்
    வஞ்சம் கொண்ட முகங்களை அறிவதில்லை....

    விவசாயிக்கு இங்கு நிலமில்லை
    கடனில் விழுந்தவனை எழுப்ப யாருமில்லை....
    கேணிகளில் நிரில்லை அதில்
    தூர் வாரும் நிலையும் அவருக்கில்லை....

    வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொன்னால்
    அதை வீதியில் அல்லவா வளர்க்கிறோம்!!!!
    நாட்டுக்கு எதேனும் செய்யச் சொன்னால்
    ஓட்டு போடாமல் ஒளிகிறோம்!!!!

    விதண்டா வாதம் பேசும்
    வீண்ர்களாய் இருக்கிறோம்!!!!
    முரண்பாடுகளை மட்டும் சுட்டிக் காட்டும்
    முட்டாள்களாகத் தானே இருக்கிறோம்!!!!

    நாட்டுக்கு ஏதேனும் செய்யச் சொன்னால்
    நாம் என்ன செய்யப்போகிறோம்????
    /

    சொல்வதற்கு ஒன்றுமில்லை

    ReplyDelete
  5. ஆமா..அந்த படத்துல இருக்கிறது யாரு ??

    பாலசந்தர் படத்துல வர்ற சரிதா தான ??

    ReplyDelete
  6. வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வலைச்சர ஆசிரியர் ழுத்தோசை தமிழரசிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. பொருத்தருள வேண்டாம் எடுத்தருளவும்.....\\

    அட புச்சாக்கீதே ...

    ReplyDelete
  9. sandhya said...
    வாழ்த்துக்கள் தமிழ்

    நன்றி சந்தியா....

    ReplyDelete
  10. நட்புடன் ஜமால் said...
    வாழ்த்துகளுங்கோ!

    நன்றிங்கோ....

    ReplyDelete
  11. திகழ்மிளிர் said...
    வாழ்த்துகள்

    நன்றி திகழ்...

    ReplyDelete
  12. அ.மு.செய்யது said...
    வாங்க !!!

    வந்தோம்...

    ReplyDelete
  13. Tamil,
    Intha link unga blog la intha vaara valaichara aasiriyarnu potu seperata thanga..
    matavangaluku inga vara easyaa irukkum..

    Vinoth gowtham.

    ReplyDelete
  14. அ.மு.செய்யது said...
    //B.A .,Eng Lit படிச்சிருக்கேன் //

    சொல்லவேயில்ல....அப்ப ஆங்கிலத்துலயும் போயம் எழுதுவீங்களோ !!!!

    யெஸ் எழுதியிருக்கேன்....

    ReplyDelete
  15. அ.மு.செய்யது said...
    ஆமா..அந்த படத்துல இருக்கிறது யாரு ??

    பாலசந்தர் படத்துல வர்ற சரிதா தான

    ஒத விழும் அது நான் தான்...

    ReplyDelete
  16. அமுதா said...
    வாழ்த்துகள்

    நன்றி அமுதா...

    ReplyDelete
  17. சென்ஷி said...
    வலைச்சர ஆசிரியர் ழுத்தோசை தமிழரசிக்கு வாழ்த்துக்கள்!

    நன்றி சென்ஷி....

    ReplyDelete
  18. நட்புடன் ஜமால் said...
    பொருத்தருள வேண்டாம் எடுத்தருளவும்.....\\

    அட புச்சாக்கீதே ...

    ஆமா சொன்ன திருத்திக்கலாமே...

    ReplyDelete
  19. //இந்த சூழ்நிலையில் எனக்கு என் நண்பர் நாமக்கல் சிபி தனது வலைப்பூவான பிதற்றல்களை என்னை படிக்கச் சொன்னார்//

    அந்த 'ஏழு தோசை' ப்ளாக்குனு என் கிட்ட சொன்னாரே அந்த சிபி தான ??

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. அ.மு.செய்யது said...
    //இந்த சூழ்நிலையில் எனக்கு என் நண்பர் நாமக்கல் சிபி தனது வலைப்பூவான பிதற்றல்களை என்னை படிக்கச் சொன்னார்//

    அந்த 'ஏழு தோசை' ப்ளாக்குனு என் கிட்ட சொன்னாரே அந்த சிபி தான ??

    அவரே தான்....

    ReplyDelete
  22. மொதல்ல வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!!!

    மீதி கமெண்ட்ஸ் அப்புறம் எழுதுகிறேன்!!

    ReplyDelete
  23. கடந்த வந்த பாதை எல்லோருக்கும் முட்களாய் இருக்க எனக்கு மட்டும் பூக்கள்.\\

    ரோஸாவில் இரண்டும் இருக்குமாமே

    உங்களை தாங்கிய கிளைகளாக இருக்கலாம் சிபி போன்றோர் ...

    ReplyDelete
  24. மானிடராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என கவிச் சொன்னான் மாதவம் எதும் செய்திடாமலே மானிடராய் பிறந்திட்டோம்.ஆனால் பிறந்த மண்ணிற்கு என்ன செய்திட்டோம்?
    \\

    நல்ல கேள்வி - விடை தான் ...

    ReplyDelete
  25. நட்புடன் ஜமால் said...
    கடந்த வந்த பாதை எல்லோருக்கும் முட்களாய் இருக்க எனக்கு மட்டும் பூக்கள்.\\

    ரோஸாவில் இரண்டும் இருக்குமாமே

    உங்களை தாங்கிய கிளைகளாக இருக்கலாம் சிபி போன்றோர் ...


    ஆம் வருவதற்கு சிபி வந்தபின் ஜமால் இப்படி கிளையாய் இருந்து தாங்கிய நல்ல மனங்கள்...

    ReplyDelete
  26. Anonymous said...
    Tamil,
    Intha link unga blog la intha vaara valaichara aasiriyarnu potu seperata thanga..
    matavangaluku inga vara easyaa irukkum..

    Vinoth gowtham.

    சரி வினு...

    ReplyDelete
  27. நட்புடன் ஜமால் said...
    மானிடராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என கவிச் சொன்னான் மாதவம் எதும் செய்திடாமலே மானிடராய் பிறந்திட்டோம்.ஆனால் பிறந்த மண்ணிற்கு என்ன செய்திட்டோம்?
    \\

    நல்ல கேள்வி - விடை தான் ...

    விடைத் நாம் தான் சொல்லனும்....

    ReplyDelete
  28. வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்ற தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் தமிழரசி!

    ReplyDelete
  29. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்!!

    கலக்குங்க தமிழ்...




    ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே..!!!

    சிபி சார்பா...நானே கலாய்ச்சுகறேன்.. கிகிகி...

    ReplyDelete
  30. வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. அ.மு.செய்யது said...

    //B.A .,Eng Lit படிச்சிருக்கேன் //

    சொல்லவேயில்ல....அப்ப ஆங்கிலத்துலயும் போயம் எழுதுவீங்களோ !!!!

    அதானே.

    ReplyDelete
  32. தமிழரசி said...

    அ.மு.செய்யது said...
    ஆமா..அந்த படத்துல இருக்கிறது யாரு ??

    பாலசந்தர் படத்துல வர்ற சரிதா தான

    ஒத விழும் அது நான் தான்...

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  33. வலைச்சரத்தில் சிகரமாய்த்திகழ் வாழ்த்துக்கள் அக்கா!!

    ReplyDelete
  34. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  35. S.A. நவாஸுதீன் said...

    தமிழரசி said...

    அ.மு.செய்யது said...
    ஆமா..அந்த படத்துல இருக்கிறது யாரு ??

    பாலசந்தர் படத்துல வர்ற சரிதா தான

    ஒத விழும் அது நான் தான்...

    ஹா ஹா ஹா

    சிரிப்பா போய் அந்த செய்யதுவை ரெண்டு போடுங்க.....

    ReplyDelete
  36. //விதண்டா வாதம் பேசும்
    வீண்ர்களாய் இருக்கிறோம்!!!!
    முரண்பாடுகளை மட்டும் சுட்டிக் காட்டும்
    முட்டாள்களாகத் தானே இருக்கிறோம்!!!!//

    காலத்தை வீனடிக்கும் இரன்டு காரனிகள்...அழகிய வரிகள்

    ReplyDelete
  37. ஷ‌ஃபிக்ஸ் said...
    வலைச்சரத்தில் சிகரமாய்த்திகழ் வாழ்த்துக்கள் அக்கா!!

    வாழ்த்துக்கு வேண்டுமானால் நன்றி சொல்லிக்கிறேன் இங்கு இமயங்கள் உண்டு நீங்க என்னப் போய் சிகரமாய் திகழ் என்று சொன்னால் எப்படி?

    ReplyDelete
  38. ரங்கன் said...
    நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்!!

    கலக்குங்க தமிழ்...




    ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே..!!!

    சிபி சார்பா...நானே கலாய்ச்சுகறேன்.. கிகிகி...

    என்னது சார்பா வா கொன்னுபுடுவேன் ....

    ReplyDelete
  39. ஷ‌ஃபிக்ஸ் said...
    //விதண்டா வாதம் பேசும்
    வீண்ர்களாய் இருக்கிறோம்!!!!
    முரண்பாடுகளை மட்டும் சுட்டிக் காட்டும்
    முட்டாள்களாகத் தானே இருக்கிறோம்!!!!//

    காலத்தை வீனடிக்கும் இரன்டு காரனிகள்...அழகிய வரிகள்

    ஆம் நம் இயலாமைக்கு சுட்டிக் காட்டுவது....

    ReplyDelete
  40. உங்கள் அறிமுகம் நன்றாக இருக்கிறது. உங்கள் பதிவில் சிலது நான் இன்னும் படிக்கவில்லை. இன்று படிக்கத் தொடங்கப் போகிறேன்.
    ஆங்கில இலக்கியப் பட்டதாரி இத்தனை அழகான தமிழ்க் கவிதை வடிப்பது ஆச்சரியப் படுத்துகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. பொருப்பில்லாமல் இருக்கிறோம்
    பொங்கியெழ மறக்கிறோம்.....
    துடிப்போடு இருந்தும் கூட
    துணிந்து செல்ல மறுக்கிறோம்....

    வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை
    வாடிய பயிர்களை பற்றி துயரம் இல்லை!!!!
    வற்றாத சேமிப்பு வங்கியில் பெறுக்குவதற்கு
    வாழ்நாள் எல்லாம் உழைகிறோம்.....

    அருமை உங்கள் புலமை

    ReplyDelete
  42. மனதி லுறுதி வேண்டும்,
    வாக்கினி லேயினிமை வேண்டும்,
    நினைவு நல்லது வேண்டும்,
    நெருங்கினபொருள்கைப்பட வேண்டும்,
    கனவு மெய்ப்பட வேண்டும்,
    கைவசமாவது விரைவில் வேண்டும்,”

    இந்த பாடல் என்னை வெகுவாக தேற்றும்...தெளிந்தும் விடுவேன்........


    ஆம் தமிழ் அந்த வரிகளுக்கு தான் என்ன ஒரு சக்தி

    ReplyDelete
  43. எதை பார்த்தாலும் கவிதைகளாய் எப்பவுமே மனசுகுள்ள அசை போடுவது எனக்கு பழக்கம்.....

    ReplyDelete
  44. ஜெஸ்வந்தி said...
    உங்கள் அறிமுகம் நன்றாக இருக்கிறது. உங்கள் பதிவில் சிலது நான் இன்னும் படிக்கவில்லை. இன்று படிக்கத் தொடங்கப் போகிறேன்.
    ஆங்கில இலக்கியப் பட்டதாரி இத்தனை அழகான தமிழ்க் கவிதை வடிப்பது ஆச்சரியப் படுத்துகிறது. வாழ்த்துக்கள்

    ரொம்ப சந்தோஷம் ஜெஸ்வந்தி... நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.. நன்றி

    ReplyDelete
  45. sakthi said...
    பொருப்பில்லாமல் இருக்கிறோம்
    பொங்கியெழ மறக்கிறோம்.....
    துடிப்போடு இருந்தும் கூட
    துணிந்து செல்ல மறுக்கிறோம்....

    வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை
    வாடிய பயிர்களை பற்றி துயரம் இல்லை!!!!
    வற்றாத சேமிப்பு வங்கியில் பெறுக்குவதற்கு
    வாழ்நாள் எல்லாம் உழைகிறோம்.....

    அருமை உங்கள் புலமை

    ஹஹஹாஹ வளமையில்லாப் புலமை...சரி தானே....

    ReplyDelete
  46. வாங்க தமிழரசி!!!
    வாங்க!!

    ReplyDelete
  47. sakthi said...
    எதை பார்த்தாலும் கவிதைகளாய் எப்பவுமே மனசுகுள்ள அசை போடுவது எனக்கு பழக்கம்.....

    ஆமாம் வீட்டில் என்னை ஒரு மாதிரியா பார்ப்பாங்கடா....ஹஹஹஹ

    ReplyDelete
  48. தேவன் மாயம் said...
    வாங்க தமிழரசி!!!
    வாங்க!!

    வந்தோம் ஐயா!!!!

    ReplyDelete
  49. sakthi said...
    மனதி லுறுதி வேண்டும்,
    வாக்கினி லேயினிமை வேண்டும்,
    நினைவு நல்லது வேண்டும்,
    நெருங்கினபொருள்கைப்பட வேண்டும்,
    கனவு மெய்ப்பட வேண்டும்,
    கைவசமாவது விரைவில் வேண்டும்,”

    இந்த பாடல் என்னை வெகுவாக தேற்றும்...தெளிந்தும் விடுவேன்........


    ஆம் தமிழ் அந்த வரிகளுக்கு தான் என்ன ஒரு சக்தி

    ஆமா சக்தி உணர்ந்தால் மட்டுமே உண்மை விளங்கும் இந்த வரியின் மகத்துவம்...

    ReplyDelete
  50. //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    வலைச்சரத்தில் சிகரமாய்த்திகழ் வாழ்த்துக்கள் அக்கா!!

    வாழ்த்துக்கு வேண்டுமானால் நன்றி சொல்லிக்கிறேன் இங்கு இமயங்கள் உண்டு நீங்க என்னப் போய் சிகரமாய் திகழ் என்று சொன்னால் எப்படி?//

    யப்பா..தன்னடக்கத்திர்க்கும் தமிழரசித்தான் போங்கோ

    ReplyDelete
  51. எதை பார்த்தாலும் கவிதைகளாய் எப்பவுமே மனசுகுள்ள அசை போடுவது எனக்கு பழக்கம்......

    அதுதான் ஓசையா கெளம்பி இருக்கு.

    ReplyDelete
  52. நான் இத்தனை தூரம் பயணிக்க பாதை அமைத்தது என் நண்பர்களின் வலைப்பூக்கள் தான்..... கடந்த வந்த பாதை எல்லோருக்கும் முட்களாய் இருக்க எனக்கு மட்டும் பூக்கள்.....வலைபூக்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது....

    நல்ல கவிதைகள் தருவதில் மட்டுமல்ல நண்பர்களை உற்சாகப்படுத்துவதில் நீங்களும் சளைத்தவர் அல்ல தமிழ்.

    ReplyDelete
  53. // S.A. நவாஸுதீன் said...
    எதை பார்த்தாலும் கவிதைகளாய் எப்பவுமே மனசுகுள்ள அசை போடுவது எனக்கு பழக்கம்......

    அதுதான் ஓசையா கெளம்பி இருக்கு. //

    அதுவும் ஏழு தோசையா கெளம்பிருக்கு...சாரி எழுத்தோசையா கெளம்பிருக்கு..

    ReplyDelete
  54. வாழ்த்துக்கள் தமிழரசி...

    ReplyDelete
  55. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    வலைச்சரத்தில் சிகரமாய்த்திகழ் வாழ்த்துக்கள் அக்கா!!

    வாழ்த்துக்கு வேண்டுமானால் நன்றி சொல்லிக்கிறேன் இங்கு இமயங்கள் உண்டு நீங்க என்னப் போய் சிகரமாய் திகழ் என்று சொன்னால் எப்படி?//

    யப்பா..தன்னடக்கத்திர்க்கும் தமிழரசித்தான் போங்கோ

    ஹிஹிஹி நிஜமாவச் சொல்ற?

    ReplyDelete
  56. S.A. நவாஸுதீன் said...
    எதை பார்த்தாலும் கவிதைகளாய் எப்பவுமே மனசுகுள்ள அசை போடுவது எனக்கு பழக்கம்......

    அதுதான் ஓசையா கெளம்பி இருக்கு

    ஆக்ரோஷமாய் அலையாய் அடித்துக் கொண்டு இருந்தது இன்று உங்களை அடித்துக் கொண்டு இருக்கிறது..ஹாஹஹஹாஹ

    ReplyDelete
  57. அ.மு.செய்யது said...
    // S.A. நவாஸுதீன் said...
    எதை பார்த்தாலும் கவிதைகளாய் எப்பவுமே மனசுகுள்ள அசை போடுவது எனக்கு பழக்கம்......

    அதுதான் ஓசையா கெளம்பி இருக்கு. //

    அதுவும் ஏழு தோசையா கெளம்பிருக்கு...சாரி எழுத்தோசையா கெளம்பிருக்கு..

    பார்த்துப்பா கவிதைப் பசியில் தின்னுடாதா?

    ReplyDelete
  58. S.A. நவாஸுதீன் said...
    நான் இத்தனை தூரம் பயணிக்க பாதை அமைத்தது என் நண்பர்களின் வலைப்பூக்கள் தான்..... கடந்த வந்த பாதை எல்லோருக்கும் முட்களாய் இருக்க எனக்கு மட்டும் பூக்கள்.....வலைபூக்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது....

    நல்ல கவிதைகள் தருவதில் மட்டுமல்ல நண்பர்களை உற்சாகப்படுத்துவதில் நீங்களும் சளைத்தவர் அல்ல தமிழ்.

    ஆம் ஊட்டங்கள் தானே வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.. நன்றிப்பா எப்பவும் போல மனமார்ந்த பாராட்டு..

    ReplyDelete
  59. நன்றி பாலா, வியா, ஜீவராஜ்,அமுதா.அன்புமணி,மங்களூர் சிவா...

    ReplyDelete
  60. ஆங்... வாழ்த்துக்கள்

    முதல் பதிவு அருமை.. சுயபுராணம்

    //நான் தமிழரசி B.A .,Eng Lit படிச்சிருக்கேன் ஆனா தமிழ் இலக்கணமே சரியா வராதுங்க எனக்கு//

    அதனாலே தான் தமிழரசி நு பேரு வெச்சிருக்காங்க

    ReplyDelete
  61. //ஆந்திராவில் இருப்பதால் என்னால் முறையாக
    சிறப்புற தமிழை பயில முடியவில்லை....//

    ஏதும் தெலுங்கிலே செப்பிடாதீங்கோ

    ReplyDelete
  62. //”மனதி லுறுதி வேண்டும்,
    வாக்கினி லேயினிமை வேண்டும்,
    நினைவு நல்லது வேண்டும்,
    நெருங்கினபொருள்கைப்பட வேண்டும்,
    கனவு மெய்ப்பட வேண்டும்,
    கைவசமாவது விரைவில் வேண்டும்,”
    /

    இது இருந்தால் அப்துல் கலாம் கண்ட கனவு மெய்யாகிடும், அவரு நேத்து கண்ட கனவி ஃபோன் பண்ணி சொன்னாரானு கேட்டுறாதீங்க.. ஆஅவ்வ்வ்வ்

    இந்தியாவைன் வல்லரசு கனவை சொன்னேன்

    ReplyDelete
  63. அபுஅஃப்ஸர் said...
    ஆங்... வாழ்த்துக்கள்

    முதல் பதிவு அருமை.. சுயபுராணம்

    //நான் தமிழரசி B.A .,Eng Lit படிச்சிருக்கேன் ஆனா தமிழ் இலக்கணமே சரியா வராதுங்க எனக்கு//

    அதனாலே தான் தமிழரசி நு பேரு வெச்சிருக்காங்க

    ஹஹஹ்ஹஹா

    ReplyDelete
  64. அந்த ஃபோட்டோ யாருங்க ரொம்ப சோகமா இருக்காங்க....

    ஹய்யோ ஹய்யோ....

    ReplyDelete
  65. அபுஅஃப்ஸர் said...
    //ஆந்திராவில் இருப்பதால் என்னால் முறையாக
    சிறப்புற தமிழை பயில முடியவில்லை....//

    ஏதும் தெலுங்கிலே செப்பிடாதீங்கோ

    ஏமண்டி பாகா உன்னாரா?

    ReplyDelete
  66. //சில நாட்கள் துண்டு பேப்பர் சுவர் என்று ஆரம்பித்து //

    வீட்டுலே வாரா வாரம் பெயிண்ட் அடிப்பாங்களோ

    ReplyDelete
  67. அபுஅஃப்ஸர் said...
    அந்த ஃபோட்டோ யாருங்க ரொம்ப சோகமா இருக்காங்க....

    ஹய்யோ ஹய்யோ....

    நான் தாங்க இவ்ளோ நேரம் கழிச்சி கமெண்ட் போட்டா சோகமாத் தானே இருப்பாங்க...

    ReplyDelete
  68. //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //ஆந்திராவில் இருப்பதால் என்னால் முறையாக
    சிறப்புற தமிழை பயில முடியவில்லை....//

    ஏதும் தெலுங்கிலே செப்பிடாதீங்கோ

    ஏமண்டி பாகா உன்னாரா?
    //

    எப்பா யாராவது மீனிங் சொல்லுங்களேன் ஆஅவ்வ்வ்வ் என்னைய திட்டுராங்கோ

    ReplyDelete
  69. அபுஅஃப்ஸர் said...
    //சில நாட்கள் துண்டு பேப்பர் சுவர் என்று ஆரம்பித்து //

    வீட்டுலே வாரா வாரம் பெயிண்ட் அடிப்பாங்களோ

    வாடகை வீடு அதான் தைரியம்...

    ReplyDelete
  70. அபுஅஃப்ஸர் said...
    //தமிழரசி said...
    அபுஅஃப்ஸர் said...
    //ஆந்திராவில் இருப்பதால் என்னால் முறையாக
    சிறப்புற தமிழை பயில முடியவில்லை....//

    ஏதும் தெலுங்கிலே செப்பிடாதீங்கோ

    ஏமண்டி பாகா உன்னாரா?
    //

    எப்பா யாராவது மீனிங் சொல்லுங்களேன் ஆஅவ்வ்வ்வ் என்னைய திட்டுராங்கோ

    ஹைய்யோ ஹைய்யோ நல்லாயிருக்கீங்களான்னு கேட்டேன் அதுக்குள்ள ஊரைக் கூட்டாதீங்க..

    ReplyDelete
  71. //அதைப் பார்த்ததும் நான் வியந்தேன் இப்படியெல்லாம் இருக்குமா? என்று?
    //

    ஏன் வியந்தீர்? அனகொண்டாவா இருக்கு இங்கே ஹெ ஹெ

    ReplyDelete
  72. அபுஅஃப்ஸர் said...
    //”மனதி லுறுதி வேண்டும்,
    வாக்கினி லேயினிமை வேண்டும்,
    நினைவு நல்லது வேண்டும்,
    நெருங்கினபொருள்கைப்பட வேண்டும்,
    கனவு மெய்ப்பட வேண்டும்,
    கைவசமாவது விரைவில் வேண்டும்,”
    /

    இது இருந்தால் அப்துல் கலாம் கண்ட கனவு மெய்யாகிடும், அவரு நேத்து கண்ட கனவி ஃபோன் பண்ணி சொன்னாரானு கேட்டுறாதீங்க.. ஆஅவ்வ்வ்வ்

    இந்தியாவைன் வல்லரசு கனவை சொன்னேன்

    நமக்குத்தான் வலிகளை சுமக்கவே வாழ்க்கை போதலை வல்லரசாக்குவது எப்போது?

    ReplyDelete
  73. //ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாதிருந்த நான் இப்போது ஒரளவு தேர்ச்சி பெற்றுள்ளேன்......//

    நல்லாவே தேர்ச்சி.. கும்மியடிக்கிறதுலே.. சரிதானே

    ReplyDelete
  74. அபுஅஃப்ஸர் said...
    //அதைப் பார்த்ததும் நான் வியந்தேன் இப்படியெல்லாம் இருக்குமா? என்று?
    //

    ஏன் வியந்தீர்? அனகொண்டாவா இருக்கு இங்கே ஹெ ஹெ

    அதை சினிமாவில் பார்த்தேன் இதை பார்க்கவில்லை அதான் வியந்தேன்

    ReplyDelete
  75. //நமக்குத்தான் வலிகளை சுமக்கவே வாழ்க்கை போதலை வல்லரசாக்குவது எப்போது?/

    ஒத்தடம் கொடுத்து ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தால் வலி போய்டுமே

    ReplyDelete
  76. அபுஅஃப்ஸர் said...
    //ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாதிருந்த நான் இப்போது ஒரளவு தேர்ச்சி பெற்றுள்ளேன்......//

    நல்லாவே தேர்ச்சி.. கும்மியடிக்கிறதுலே.. சரிதானே

    ஆம் வித்தையை குருவிடமே காட்டத்தான்...

    ReplyDelete
  77. அபுஅஃப்ஸர் said...
    //நமக்குத்தான் வலிகளை சுமக்கவே வாழ்க்கை போதலை வல்லரசாக்குவது எப்போது?/

    ஒத்தடம் கொடுத்து ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தால் வலி போய்டுமே

    ஒப்புக்கு உணரும் வலி அல்ல உணர்வுகள் உண்டாக்கும் வலியால்....

    ReplyDelete
  78. //ஏமண்டி பாகா உன்னாரா?//


    உன்னர்...

    நல்லாயிருக்கேன்.. ஏதோ சொல்றீங்க கேட்டுகிறேன்

    இந்த இந்தியாவை எத்தனை மொழிகளிலே பிரிச்சிவெச்சிருகாங்க மக்கா?

    ReplyDelete
  79. //ஒப்புக்கு உணரும் வலி அல்ல உணர்வுகள் உண்டாக்கும் வலியால்....//

    வலிக்கு இவ்வளவு மீனிங் இருக்கா

    பாத்தீங்களா தமிழிலே தேர்ச்சி பெறலேனு பொய்தானே சொல்றீங்க‌

    ReplyDelete
  80. //ஏப்ரல் 23 முதல் ஜுன் 26 வரை என்னுடைய 18 பதிவுகளுக்கு மேல் இளமை விகடனில் வெளிவந்துள்ளது /

    அதான் மொத்தமும் குத்தகைக்கு எடுத்துட்டீங்களே...

    ReplyDelete
  81. //இன்று இத்துடன் விடைப் பெற்றுக் கொண்டு நாளை சந்திக்கிறேன்.//

    நாளையுமா? ஆஆஆவ்வ்வ்வ்

    ReplyDelete
  82. அபுஅஃப்ஸர் said...
    //ஒப்புக்கு உணரும் வலி அல்ல உணர்வுகள் உண்டாக்கும் வலியால்....//

    வலிக்கு இவ்வளவு மீனிங் இருக்கா

    பாத்தீங்களா தமிழிலே தேர்ச்சி பெறலேனு பொய்தானே சொல்றீங்க‌

    உங்களை மாதிரி முறையா முழுசா பயிலவில்லைப்பா...உண்மையாவே எனக்கு இது குறைத்தான்...

    ReplyDelete
  83. //நான் தமிழரசி B.A .,Eng Lit படிச்சிருக்கேன் //

    உங்கபேரை கிளாஸ் ரூமிலே எப்படி கூப்பிடுவாங்க‌

    daமிழரசி இல்லே taமிழரசி

    ReplyDelete
  84. //உங்களை மாதிரி முறையா முழுசா பயிலவில்லைப்பா...உண்மையாவே எனக்கு இது குறைத்தான்...//

    நாங்க படிச்சதெல்லாம் daமிழ்மீடியம் தாங்கோ

    ReplyDelete
  85. அபுஅஃப்ஸர் said...
    //இன்று இத்துடன் விடைப் பெற்றுக் கொண்டு நாளை சந்திக்கிறேன்.//

    நாளையுமா? ஆஆஆவ்வ்வ்வ்

    என்ன இது சிறு புள்ளத்தனமா? நாளையுமான்னு கேட்டு கிட்டு அடுத்த வாரமும் நான் தான்....

    ReplyDelete
  86. அபுஅஃப்ஸர் said...
    //உங்களை மாதிரி முறையா முழுசா பயிலவில்லைப்பா...உண்மையாவே எனக்கு இது குறைத்தான்...//

    நாங்க படிச்சதெல்லாம் daமிழ்மீடியம் தாங்கோ

    அதானல என்ன? இங்க நாங்க என்ன நுனி நாக்கு ஆங்கிலமா பேசறோம் அதான் உஷார இங்கிஷ் கிராமர் கூட தெரியாதுன்னு சொல்லிடோம்ல...

    ReplyDelete
  87. முதல் நாள் வாழ்த்துக்கள் தமிழக்கா..

    ReplyDelete
  88. //அதானல என்ன? இங்க நாங்க என்ன நுனி நாக்கு ஆங்கிலமா பேசறோம் அதான் உஷார இங்கிஷ் கிராமர் கூட தெரியாதுன்னு சொல்லிடோம்ல...//

    அப்போ பிட் அடிச்சா பாஸ் பண்ணுனீங்க ஆஆவ்வ்வ்

    ReplyDelete
  89. அபுஅஃப்ஸர் said...
    //அதானல என்ன? இங்க நாங்க என்ன நுனி நாக்கு ஆங்கிலமா பேசறோம் அதான் உஷார இங்கிஷ் கிராமர் கூட தெரியாதுன்னு சொல்லிடோம்ல...//

    அப்போ பிட் அடிச்சா பாஸ் பண்ணுனீங்க ஆஆவ்வ்வ்

    ஹஹஹ அது எப்படிங்க தன்னைப் போல் பிறரை நேசின்னு சொன்ன நீங்க தன்னைப் போல் பிறரை யோசிக்கிறீங்க...ஹஹஹஹா

    ReplyDelete
  90. வலைச்சர ஆசிரியருக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  91. அபுஅஃப்ஸர் said...

    //ஏப்ரல் 23 முதல் ஜுன் 26 வரை என்னுடைய 18 பதிவுகளுக்கு மேல் இளமை விகடனில் வெளிவந்துள்ளது /

    அதான் மொத்தமும் குத்தகைக்கு எடுத்துட்டீங்களே...


    நல்ல விஷயம் தானே

    ReplyDelete
  92. முதல் நாள் வாழ்த்துக்கள் தமிழக்கா..

    ReplyDelete
  93. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொன்னால்
    அதை வீதியில் அல்லவா வளர்க்கிறோம்!!!!
    நாட்டுக்கு எதேனும் செய்யச் சொன்னால்
    ஓட்டு போடாமல் ஒளிகிறோம்!!!!

    அறிவுரை தூள்

    ReplyDelete
  94. நாளை முதல் சிறந்த பதிவர்களை மேலும் இங்கு சிறப்பிக்க எண்ணுகிறேன்.....

    காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  95. மேலும் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  96. sakthi said...
    வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொன்னால்
    அதை வீதியில் அல்லவா வளர்க்கிறோம்!!!!
    நாட்டுக்கு எதேனும் செய்யச் சொன்னால்
    ஓட்டு போடாமல் ஒளிகிறோம்!!!!

    அறிவுரை தூள்

    அறிவுரை இல்லைடா நாம் செய்வது இது தானே....

    ReplyDelete
  97. வாழ்த்துக்கள் amma

    ReplyDelete
  98. ஆமா..அந்த படத்துல இருக்கிறது யாரு ??

    பாலசந்தர் படத்துல வர்ற சரிதா தான ??

    itha than naanum sollanumnu nenachen

    ReplyDelete
  99. தோழியே.. அருமையான துவக்கம்.

    //வறுமை தான் நம் எல்லைக் கோடு
    ஆனால் காஷ்மிர் எனச் சொல்கிறோம்....//

    ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோலதான், நான் மேலே மேற்கோள் காட்டிய உங்களின் வரிகள்.

    எங்கள் மண்ணுக்காரன் பாரதியைப் போற்றி ஆரம்பித்துள்ள உங்களின் இந்த ஆசிரியப் பணி சிறப்புடன் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  100. sakthi said...
    நாளை முதல் சிறந்த பதிவர்களை மேலும் இங்கு சிறப்பிக்க எண்ணுகிறேன்.....

    காத்திருக்கின்றோம்

    அவசியம் உங்கள் அன்பும் துணையும் இருக்கும் வரை செவ்வனே செய்வேன்..

    ReplyDelete
  101. //
    ’’நல்லதோர் வீணை செய்தே அதை
    நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவ சக்தி எனை
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
    வல்லமை தாராயோ இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே.....”
    //

    அருமையான ஆரம்பம் !

    ReplyDelete
  102. //
    நான் தமிழரசி B.A .,Eng Lit படிச்சிருக்கேன்
    //

    படிப்பிலும் நல்ல தேர்வு!

    ReplyDelete
  103. //
    அதுக்காக English grammerல doubtன்னு யாரும் மெயில் பண்ணிடாதிங்க.....
    //

    இதை படிக்குமுன்னே எனது சந்தேகத்தை அனுப்பிட்டேனே
    இப்போ என்ன செய்யலாம் :))

    ReplyDelete
  104. " உழவன் " " Uzhavan " said...
    தோழியே.. அருமையான துவக்கம்.

    //வறுமை தான் நம் எல்லைக் கோடு
    ஆனால் காஷ்மிர் எனச் சொல்கிறோம்....//

    ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோலதான், நான் மேலே மேற்கோள் காட்டிய உங்களின் வரிகள்.

    எங்கள் மண்ணுக்காரன் பாரதியைப் போற்றி ஆரம்பித்துள்ள உங்களின் இந்த ஆசிரியப் பணி சிறப்புடன் நிறைவேற மனதார வாழ்த்துகிறேன்.

    நன்றி உழவன்....

    ReplyDelete
  105. //
    ”மகாகவி பாரதி” இவர் மேல் எனக்கு அளவிலாப் பற்று.....என்னுடைய மனவுறுதிக்கும்,தைரியத்திற்கும்,தன்னம்பிக்கைக்கும் வித்திட்டதும் இவர் பாடல்களே......
    //

    எல்லா பெண்களுக்குமே இவர் பாடல்தான் முன்னுதாரணமா இருக்குது!

    ReplyDelete
  106. உங்கள் படத்தின் கண்களில் ஏன் இந்த சோகம் தோழி?

    ReplyDelete
  107. RAMYA said...
    //
    அதுக்காக English grammerல doubtன்னு யாரும் மெயில் பண்ணிடாதிங்க.....
    //

    இதை படிக்குமுன்னே எனது சந்தேகத்தை அனுப்பிட்டேனே
    இப்போ என்ன செய்யலாம் :))

    எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க....

    ReplyDelete
  108. //
    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    //

    ஆமாம் ஆமாம் இது ஒரு சரியான தீர்வு..

    ReplyDelete
  109. //
    என்னுடைய பதிவுகளில் எனக்கு பிடித்த சில பதிவுகள் இங்கு
    //

    எங்களுக்கும் பிடித்ததுதான்!

    ReplyDelete
  110. RAMYA said...
    உங்கள் படத்தின் கண்களில் ஏன் இந்த சோகம் தோழி

    என் அன்புத் தோழி இப்போது வந்து பின்னுட்டம் இடுவதால் நாளை நல்ல ஃபோட்டோ போடறேன்....

    ReplyDelete
  111. //
    மானிடராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என கவிச் சொன்னான் மாதவம் எதும் செய்திடாமலே மானிடராய் பிறந்திட்டோம்.ஆனால் பிறந்த மண்ணிற்கு என்ன செய்திட்டோம்?
    //

    சரியான கேள்வி விடை விரைவில் தெரியும் என்று விடியலை நோக்கி காத்திருப்போம்!

    ReplyDelete
  112. RAMYA said...
    //
    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    //

    ஆமாம் ஆமாம் இது ஒரு சரியான தீர்வு..

    ஆம்.....

    ReplyDelete
  113. RAMYA said...
    //
    மானிடராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என கவிச் சொன்னான் மாதவம் எதும் செய்திடாமலே மானிடராய் பிறந்திட்டோம்.ஆனால் பிறந்த மண்ணிற்கு என்ன செய்திட்டோம்?
    //

    சரியான கேள்வி விடை விரைவில் தெரியும் என்று விடியலை நோக்கி காத்திருப்போம்!


    காத்திருத்தல் கூடாது நாமும் கைக் கொடுக்கணும்....

    ReplyDelete
  114. //
    பொருப்பில்லாமல் இருக்கிறோம்
    பொங்கியெழ மறக்கிறோம்.....
    துடிப்போடு இருந்தும் கூட
    துணிந்து செல்ல மறுக்கிறோம்....
    //

    துணிவு வேண்டும் நமக்கு!
    ஒவ்வொருவர் மனதிலும் துணிவு
    தேவையான, நியாயமான துணிவு
    இருந்தால் வெல்வது உறுதி!

    ReplyDelete
  115. //
    வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை
    வாடிய பயிர்களை பற்றி துயரம் இல்லை!!!!
    வற்றாத சேமிப்பு வங்கியில் பெறுக்குவதற்கு
    வாழ்நாள் எல்லாம் உழைகிறோம்.....
    //

    சரியாச் சொன்னீங்க!

    உழைத்து சேர்க்கும் சேமிப்பும் கூட
    நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை தோழி.

    ஏமாற்றுபவர்களிடம் நாம் சிக்கிட்டோம்னு வையுங்க அந்த சேமிப்பும் நமக்கு இல்லை.

    ReplyDelete
  116. //
    வறுமை தான் நம் எல்லைக் கோடு
    ஆனால் காஷ்மிர் எனச் சொல்கிறோம்....
    ஐந்தாண்டு அரசியல் செய்து அள்ளி கொண்டு
    போவோனையும் தட்டி கேட்க தயங்குகிறோம்!!!!
    //

    இதற்கு ஒரு விடிவு வரவேண்டும்
    மாற்றங்கள் வேண்டும்.

    மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    இந்த எண்ணங்கள் கனவாகிப் போகாமல் நனவாக வேண்டும்

    ReplyDelete
  117. //
    அறிவிலிகளாய் மட்டுமே இருந்து
    ஆற்றாமை பட்டுக் கொண்டு இருக்கிறோம்!!!!
    வாசமுள்ள மலர்களை அறிகிறோம்
    வஞ்சம் கொண்ட முகங்களை அறிவதில்லை....
    //

    ஆமாம் அந்த முகங்கள் சில சமயம் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை :(

    ReplyDelete
  118. //
    விவசாயிக்கு இங்கு நிலமில்லை
    கடனில் விழுந்தவனை எழுப்ப யாருமில்லை....
    கேணிகளில் நிரில்லை அதில்
    தூர் வாரும் நிலையும் அவருக்கில்லை....
    //

    அருமையான வெளிப்பாடு
    விவசாயியின் துயரங்கள்
    என்றுதான் தூர் வாரப்படுமோ??

    ReplyDelete
  119. //
    வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கச் சொன்னால்
    அதை வீதியில் அல்லவா வளர்க்கிறோம்!!!!
    நாட்டுக்கு எதேனும் செய்யச் சொன்னால்
    ஓட்டு போடாமல் ஒளிகிறோம்!!!!
    //

    ஒளியாமல் ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகள்!

    ReplyDelete
  120. //
    விதண்டா வாதம் பேசும்
    வீண்ர்களாய் இருக்கிறோம்!!!!
    முரண்பாடுகளை மட்டும் சுட்டிக் காட்டும்
    முட்டாள்களாகத் தானே இருக்கிறோம்!!!!

    நாட்டுக்கு ஏதேனும் செய்யச் சொன்னால்
    நாம் என்ன செய்யப்போகிறோம்????
    //

    நாட்டுக்கு செய்ய வேண்டியவைகளை யோசித்தால் நிறைய செய்யலாம்!

    ReplyDelete
  121. முதல் நாளே அட்டகாசமான ஆரம்பம் தோழி! வாழ்த்துக்கள்.

    நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  122. இதை படிக்குமுன்னே எனது சந்தேகத்தை அனுப்பிட்டேனே
    இப்போ என்ன செய்யலாம் :))

    எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க....\\

    இப்போதைக்கு இரண்டு பேர்தான்

    ReplyDelete
  123. நட்புடன் ஜமால் said...

    இதை படிக்குமுன்னே எனது சந்தேகத்தை அனுப்பிட்டேனே
    இப்போ என்ன செய்யலாம் :))

    எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க....\\

    இப்போதைக்கு இரண்டு பேர்தான்

    சாரி மாப்ள. லைன்ல வா. நீ மூணாவது

    ReplyDelete
  124. நட்புடன் ஜமால் said...
    இதை படிக்குமுன்னே எனது சந்தேகத்தை அனுப்பிட்டேனே
    இப்போ என்ன செய்யலாம் :))

    எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க....\\

    இப்போதைக்கு இரண்டு பேர்தான்

    சரி சிலேட்டு பல்பம் இருக்கா குட் எங்க எழுதுங்க A FOR APPLE
    B FOR BALL C CAT....

    ReplyDelete
  125. //தமிழரசி said...
    நட்புடன் ஜமால் said...
    இதை படிக்குமுன்னே எனது சந்தேகத்தை அனுப்பிட்டேனே
    இப்போ என்ன செய்யலாம் :))

    எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க....\\

    இப்போதைக்கு இரண்டு பேர்தான்

    சரி சிலேட்டு பல்பம் இருக்கா குட் எங்க எழுதுங்க A FOR APPLE
    B FOR BALL C CAT....//

    டீச்சர், இவன் கிள்ரான் பாருங்க‌

    ReplyDelete
  126. S.A. நவாஸுதீன் said...
    நட்புடன் ஜமால் said...

    இதை படிக்குமுன்னே எனது சந்தேகத்தை அனுப்பிட்டேனே
    இப்போ என்ன செய்யலாம் :))

    எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க....\\

    இப்போதைக்கு இரண்டு பேர்தான்

    சாரி மாப்ள. லைன்ல வா. நீ மூணாவது

    ஓஹ்.. நவாஸ் கூட வா குட் அவங்களுக்கு சொன்னதயே நீங்களும் எழுதுங்க,,,,,

    ReplyDelete
  127. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    நட்புடன் ஜமால் said...
    இதை படிக்குமுன்னே எனது சந்தேகத்தை அனுப்பிட்டேனே
    இப்போ என்ன செய்யலாம் :))

    எத்தன பேரு கிளம்பியிருக்கீங்க....\\

    இப்போதைக்கு இரண்டு பேர்தான்

    சரி சிலேட்டு பல்பம் இருக்கா குட் எங்க எழுதுங்க A FOR APPLE
    B FOR BALL C CAT....//

    டீச்சர், இவன் கிள்ரான் பாருங்க‌

    ஏய் யாரது அங்க ஸ்கேல் எடுக்கனுமா?

    ReplyDelete
  128. RAMYA said...
    //
    விதண்டா வாதம் பேசும்
    வீண்ர்களாய் இருக்கிறோம்!!!!
    முரண்பாடுகளை மட்டும் சுட்டிக் காட்டும்
    முட்டாள்களாகத் தானே இருக்கிறோம்!!!!

    நாட்டுக்கு ஏதேனும் செய்யச் சொன்னால்
    நாம் என்ன செய்யப்போகிறோம்????
    //

    நாட்டுக்கு செய்ய வேண்டியவைகளை யோசித்தால் நிறைய செய்யலாம்!

    யோசிப்பது தானே பிரட்சனை....

    ReplyDelete
  129. இந்த குட்டி பசங்களுக்காக ஒரு கவிதை சொல்லுங்க இல்லாட்டி கோரஸா அழுவோம்

    ReplyDelete
  130. ஷ‌ஃபிக்ஸ் said...
    இந்த குட்டி பசங்களுக்காக ஒரு கவிதை சொல்லுங்க இல்லாட்டி கோரஸா அழுவோம்

    அட அப்படியா....எங்க அழுவுங்க.... நீங்க அழுவதை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு

    ReplyDelete
  131. //அட அப்படியா....எங்க அழுவுங்க.... நீங்க அழுவதை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு//

    இப்படி ஒரு ஆசையா, அப்போ உஙக பழைய பதிவுகள் ஒன்னு ஒன்னா படிச்சா போதும்..கம் ஆன் ஸ்டார்ட்.

    ReplyDelete
  132. வாழ்த்துக்கள் தமிழரசி...

    ReplyDelete
  133. ஷ‌ஃபிக்ஸ் said...
    //அட அப்படியா....எங்க அழுவுங்க.... நீங்க அழுவதை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு//

    இப்படி ஒரு ஆசையா, அப்போ உஙக பழைய பதிவுகள் ஒன்னு ஒன்னா படிச்சா போதும்..கம் ஆன் ஸ்டார்ட்.

    அடப்பாவி நீயெல்லாம் ஒரு தம்பியா? இரு இரு அறிமுகப் பதிவில் உன்னைப் போட்டுத்தாக்குறேன்.....

    ReplyDelete
  134. முனைவர்.இரா.குணசீலன் said...
    வாழ்த்துக்கள் தமிழரசி...

    நன்றி குணா...

    ReplyDelete
  135. //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    //அட அப்படியா....எங்க அழுவுங்க.... நீங்க அழுவதை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு//

    இப்படி ஒரு ஆசையா, அப்போ உஙக பழைய பதிவுகள் ஒன்னு ஒன்னா படிச்சா போதும்..கம் ஆன் ஸ்டார்ட்.

    அடப்பாவி நீயெல்லாம் ஒரு தம்பியா? இரு இரு அறிமுகப் பதிவில் உன்னைப் போட்டுத்தாக்குறேன்.....//

    அய்யோ அது ஆனந்த கண்ணீர் அக்கா...

    ReplyDelete
  136. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    ஷ‌ஃபிக்ஸ் said...
    //அட அப்படியா....எங்க அழுவுங்க.... நீங்க அழுவதை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு//

    இப்படி ஒரு ஆசையா, அப்போ உஙக பழைய பதிவுகள் ஒன்னு ஒன்னா படிச்சா போதும்..கம் ஆன் ஸ்டார்ட்.

    அடப்பாவி நீயெல்லாம் ஒரு தம்பியா? இரு இரு அறிமுகப் பதிவில் உன்னைப் போட்டுத்தாக்குறேன்.....//

    அய்யோ அது ஆனந்த கண்ணீர் அக்கா...

    அந்தக் கதையே வேணாம் கண்ணு ..முடிவு எடுத்தாச்சி....

    ReplyDelete
  137. //அந்தக் கதையே வேணாம் கண்ணு ..முடிவு எடுத்தாச்சி....//

    சரி சரி குட்டுவதுன்னு முடிவு செய்துட்டீங்க‌, மோதிர விரலால் குட்டுங்க, அதுல ஒரு பெருமையாம், யாரோ ஒரு பெருசு சொன்னது

    ReplyDelete
  138. ஷ‌ஃபிக்ஸ் said...
    //அந்தக் கதையே வேணாம் கண்ணு ..முடிவு எடுத்தாச்சி....//

    சரி சரி குட்டுவதுன்னு முடிவு செய்துட்டீங்க‌, மோதிர விரலால் குட்டுங்க, அதுல ஒரு பெருமையாம், யாரோ ஒரு பெருசு சொன்னது

    சீ தம்பியை கண்டிப்பேன் அடிப்பேனா?இனிமேல் சண்டை வேணாம் பழம் சரியா?

    ReplyDelete
  139. தமிழரசி said...

    ஷ‌ஃபிக்ஸ் said...
    //அந்தக் கதையே வேணாம் கண்ணு ..முடிவு எடுத்தாச்சி....//

    சரி சரி குட்டுவதுன்னு முடிவு செய்துட்டீங்க‌, மோதிர விரலால் குட்டுங்க, அதுல ஒரு பெருமையாம், யாரோ ஒரு பெருசு சொன்னது

    சீ தம்பியை கண்டிப்பேன் அடிப்பேனா?இனிமேல் சண்டை வேணாம் பழம் சரியா?

    ஆகா என்னே ஒரு ஞானப்பழம்!!

    ReplyDelete
  140. S.A. நவாஸுதீன் said...
    தமிழரசி said...

    ஷ‌ஃபிக்ஸ் said...
    //அந்தக் கதையே வேணாம் கண்ணு ..முடிவு எடுத்தாச்சி....//

    சரி சரி குட்டுவதுன்னு முடிவு செய்துட்டீங்க‌, மோதிர விரலால் குட்டுங்க, அதுல ஒரு பெருமையாம், யாரோ ஒரு பெருசு சொன்னது

    சீ தம்பியை கண்டிப்பேன் அடிப்பேனா?இனிமேல் சண்டை வேணாம் பழம் சரியா?

    ஆகா என்னே ஒரு ஞானப்பழம்!!

    அய்யே இது கா விட்ட உடற பழம்மா...

    ReplyDelete
  141. //தமிழரசி said...
    S.A. நவாஸுதீன் said...
    தமிழரசி said...

    ஷ‌ஃபிக்ஸ் said...
    //அந்தக் கதையே வேணாம் கண்ணு ..முடிவு எடுத்தாச்சி....//

    சரி சரி குட்டுவதுன்னு முடிவு செய்துட்டீங்க‌, மோதிர விரலால் குட்டுங்க, அதுல ஒரு பெருமையாம், யாரோ ஒரு பெருசு சொன்னது

    சீ தம்பியை கண்டிப்பேன் அடிப்பேனா?இனிமேல் சண்டை வேணாம் பழம் சரியா?

    ஆகா என்னே ஒரு ஞானப்பழம்!!

    அய்யே இது கா விட்ட உடற பழம்மா...//

    எனக்கு இந்த 'கேம்' புரியவே இல்லை, அடுத்த வாரம் வலைச்சரத்தில் சிரிப்பாய் சிரிக்க்ப்போறோம்போல...அவ்வ்வ்வ்!!

    ReplyDelete
  142. ஆங்கில இலக்கியம் படித்த உங்களின்
    தமிழ் புலமையை கண்டு வியக்கிறேன்..

    வாழ்த்துகள்...
    நாமக்கல் சிபிக்கும்...

    ReplyDelete
  143. ஒரு பின்னூட்டம் போட்டு முடிக்கிறதுக்குள்ள எவ்ளோ பின்னூட்டம் ?

    ReplyDelete
  144. sarathy said...

    ஆங்கில இலக்கியம் படித்த உங்களின்
    தமிழ் புலமையை கண்டு வியக்கிறேன்..

    வாழ்த்துகள்...
    நாமக்கல் சிபிக்கும்...

    சாரதி, நாமக்கல் சிபி வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப் போற மாதிரி தெரியுது.

    ReplyDelete
  145. //S.A. நவாஸுதீன் said...
    சாரதி, நாமக்கல் சிபி வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப் போற மாதிரி தெரியுது//

    ஒரு பின்னூட்டம் போடவே நாக்கு தள்ளுது..
    உங்களை போல சான்சே இல்லை..

    நல்ல காரியத்தை யாரு செஞ்சாலும் வாழ்த்தனும் இல்லையா?

    ReplyDelete
  146. ஷ‌ஃபிக்ஸ் said...
    //தமிழரசி said...
    S.A. நவாஸுதீன் said...
    தமிழரசி said...

    ஷ‌ஃபிக்ஸ் said...
    //அந்தக் கதையே வேணாம் கண்ணு ..முடிவு எடுத்தாச்சி....//

    சரி சரி குட்டுவதுன்னு முடிவு செய்துட்டீங்க‌, மோதிர விரலால் குட்டுங்க, அதுல ஒரு பெருமையாம், யாரோ ஒரு பெருசு சொன்னது

    சீ தம்பியை கண்டிப்பேன் அடிப்பேனா?இனிமேல் சண்டை வேணாம் பழம் சரியா?

    ஆகா என்னே ஒரு ஞானப்பழம்!!

    அய்யே இது கா விட்ட உடற பழம்மா...//

    எனக்கு இந்த 'கேம்' புரியவே இல்லை, அடுத்த வாரம் வலைச்சரத்தில் சிரிப்பாய் சிரிக்க்ப்போறோம்போல...அவ்வ்வ்வ்!!

    ஹைய்யோ கேம்மும் இல்லை ஒன்னுமில்லை ....

    ReplyDelete
  147. sarathy said...
    ஆங்கில இலக்கியம் படித்த உங்களின்
    தமிழ் புலமையை கண்டு வியக்கிறேன்..

    வாழ்த்துகள்...
    நாமக்கல் சிபிக்கும்...

    நானும் அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன்....

    ReplyDelete
  148. sarathy said...
    //S.A. நவாஸுதீன் said...
    சாரதி, நாமக்கல் சிபி வீட்டுக்கு ஆட்டோ அனுப்பப் போற மாதிரி தெரியுது//

    ஒரு பின்னூட்டம் போடவே நாக்கு தள்ளுது..
    உங்களை போல சான்சே இல்லை..

    நல்ல காரியத்தை யாரு செஞ்சாலும் வாழ்த்தனும் இல்லையா?

    யாருப்பா அது?

    ReplyDelete
  149. //ஹைய்யோ கேம்மும் இல்லை ஒன்னுமில்லை .... //

    விளையாட்டுப்பசங்க....!!

    ReplyDelete
  150. //தமிழரசி said...
    நானும் அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன்..//


    நீங்களும் ஆட்டோ அனுப்ப போறீங்களா?

    ReplyDelete
  151. sarathy said...
    //தமிழரசி said...
    நானும் அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன்..//


    நீங்களும் ஆட்டோ அனுப்ப போறீங்களா

    யாரது என் நண்பன் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிற தைரியசாலி,,

    ReplyDelete
  152. ஷ‌ஃபிக்ஸ் said...
    //ஹைய்யோ கேம்மும் இல்லை ஒன்னுமில்லை .... //

    விளையாட்டுப்பசங்க....!!

    ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான் டா வளர்ச்சி ஹிஹிஹிஹி நாம வளர்ந்தோம் அறிவு ஹிஹிஹி இதையெல்லாம் வெளிய சொல்வாங்களா?

    ReplyDelete
  153. மேல உள்ள கமெண்டை வலைச்சரத்துக்கு அனுப்பாம
    தவறுதலா எழுத்தோசை-க்கு
    அனுப்பிட்டேன்.
    புதுசு தானே நான், கண்டுக்காதீங்க..

    ReplyDelete
  154. sarathy said...
    மேல உள்ள கமெண்டை வலைச்சரத்துக்கு அனுப்பாம
    தவறுதலா எழுத்தோசை-க்கு
    அனுப்பிட்டேன்.
    புதுசு தானே நான், கண்டுக்காதீங்க

    பரவாயில்லைப்பா...

    ReplyDelete
  155. நாளைக்கும் பெரிய கவிதை
    எழுதுங்க..
    அதுவும் விகடன்ல வரணும்.

    ReplyDelete
  156. வலைசர வாத்தியாரம்மாவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  157. sarathy said...
    நாளைக்கும் பெரிய கவிதை
    எழுதுங்க..
    அதுவும் விகடன்ல வரணும்.

    நாளை நோ கவிதை....

    ReplyDelete
  158. நசரேயன் said...
    வலைசர வாத்தியாரம்மாவுக்கு வாழ்த்துக்கள்

    வாங்க வாங்க நாளைக்கும் வகுப்புக்கு லேட்டா வராமா நேரத்துக்கு வாங்க....

    ReplyDelete
  159. முதல்ல வணக்கம்ம்ம்ம்ம் டீச்ச்ச்சர்.....

    //நான் தாங்க எழுத்தோசை தமிழரசி..... என்ன சைதை தமிழரசி மாதிரி சொல்ற என்று நீங்கள் சொல்வது கேட்கிறது....//

    யாரு சொன்னா நீங்க சைதை தமிழரசின்னு

    நீங்க ஹைதை தமிழரசியாச்சே.....

    ReplyDelete
  160. //ஆமாம் நான் ஆந்திராவில் இருப்பதால் என்னால் முறையாக
    சிறப்புற தமிழை பயில முடியவில்லை....எனக்கு தெரிந்தது சில தமிழ் எழுத்துக்களே..//

    அபுடண்டீ தெலுகு மீகு பாக தெலுசட்ட செப்பண்டி....

    பாக உந்தீரா?

    ReplyDelete
  161. //பொருப்பில்லாமல் இருக்கிறோம்//

    யாரு சொன்னாங்க?

    பின்னூட்டம் போட்டமா இல்லியா?

    ReplyDelete
  162. //வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை//

    பல நதிகளையே காணோம்

    ReplyDelete
  163. //ஐந்தாண்டு அரசியல் செய்து அள்ளி கொண்டு
    போவோனையும் தட்டி கேட்க தயங்குகிறோம்!!!!//

    தட்டிக்கேட்டா முட்டிய பேத்துடுவேன்றாய்ங்க

    ReplyDelete
  164. //நாட்டுக்கு ஏதேனும் செய்யச் சொன்னால்
    நாம் என்ன செய்யப்போகிறோம்????//

    என்ன செய்யணும்?

    ReplyDelete
  165. வாழ்த்துகள் தோழி....

    பாராட்டுகள் பல
    ஒவ்வொன்றாக சொன்னால் விடுபட்டுபோகும்..
    அனைத்தும் அருமை...
    கேள்விகள் புதுமை...
    நான் சொல்ல வந்தனைத்தும் இடுக்கையில் இருக்கு,.
    அன்புடன் பாராட்டுகள்

    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  166. பிரியமுடன்.........வசந்த் said...
    //ஆமாம் நான் ஆந்திராவில் இருப்பதால் என்னால் முறையாக
    சிறப்புற தமிழை பயில முடியவில்லை....எனக்கு தெரிந்தது சில தமிழ் எழுத்துக்களே..//

    அபுடண்டீ தெலுகு மீகு பாக தெலுசட்ட செப்பண்டி....

    பாக உந்தீரா?

    இதி ஏந்திரா? சுந்தர தெலுங்கை குற்றுயிராய் ஆக்கிவிட்டாயே வசந்த்....

    ReplyDelete
  167. பிரியமுடன்.........வசந்த் said...
    //பொருப்பில்லாமல் இருக்கிறோம்//

    யாரு சொன்னாங்க?

    பின்னூட்டம் போட்டமா இல்லியா?

    இதில் எண்ணோட்டம் எங்கே?

    ReplyDelete
  168. பிரியமுடன்.........வசந்த் said...
    //வற்றிய நதிகளை பற்றி கவலை இல்லை//

    பல நதிகளையே காணோம்

    ஊர்களே காணாமல் போகிறது....உன்மை தான் என்னச் செய்யப் போகிறோம்

    ReplyDelete
  169. ஆ.ஞானசேகரன் said...
    வாழ்த்துகள் தோழி....

    பாராட்டுகள் பல
    ஒவ்வொன்றாக சொன்னால் விடுபட்டுபோகும்..
    அனைத்தும் அருமை...
    கேள்விகள் புதுமை...
    நான் சொல்ல வந்தனைத்தும் இடுக்கையில் இருக்கு,.
    அன்புடன் பாராட்டுகள்

    ஆ.ஞானசேகரன்

    உண்மையை நம்முள் யார் சொன்னால் என்னங்க? நன்றி சேகர்....

    ReplyDelete
  170. வாங்க வாங்க வாங்க


    //நான் தமிழரசி B.A .,Eng Lit படிச்சிருக்கேன்//

    எந்த ஸ்கூலுல்ல படிச்சிங்கன்னு சொல்லுங்க!

    ReplyDelete
  171. வால்பையன் said...
    வாங்க வாங்க வாங்க


    //நான் தமிழரசி B.A .,Eng Lit படிச்சிருக்கேன்//

    எந்த ஸ்கூலுல்ல படிச்சிங்கன்னு சொல்லுங்க!

    எல்லாம் நீங்க படிச்ச உஸ்கோல் தான் சாமியோவ்....

    ReplyDelete
  172. முதல்நாள் வாழ்த்துக்கள் தமிழக்கா.

    ReplyDelete
  173. //
    B.A .,Eng Lit படிச்சிருக்கேன் ஆனா தமிழ் இலக்கணமே சரியா வராதுங்க எனக்கு
    //
    B.A .,Eng Lit க்கும் தமிழ் இலக்கணத்துக்கும் என்னங்க சம்பந்தம்..
    தமிழ் Lit. படிச்சு, தமிழ் இலக்கணம் சரியாவரலைனா தான் மேட்டர்..

    ReplyDelete
  174. //
    என்னுடைய பதிவுகளில் எதேனும் சொல்குற்றமோ பொருள்குற்றமோ இருப்பின் பொருத்தருள வேண்டாம் எடுத்தருளவும்.....

    இவன் தமிழ்
    //
    நீங்க கேட்டுக்கிட்டதுக்காக சொல்றேன்..

    "இவன் தமிழ்"'னு வருமா..?

    "இவள் தமிழ்"'னு வருமா..?

    ReplyDelete
  175. This comment has been removed by the author.

    ReplyDelete
  176. சுரேஷ் குமார் said...
    //
    B.A .,Eng Lit படிச்சிருக்கேன் ஆனா தமிழ் இலக்கணமே சரியா வராதுங்க எனக்கு
    //
    B.A .,Eng Lit க்கும் தமிழ் இலக்கணத்துக்கும் என்னங்க சம்பந்தம்..
    தமிழ் Lit. படிச்சு, தமிழ் இலக்கணம் சரியாவரலைனா தான் மேட்டர்..

    தமிழிலேயே வராது இன்னும் ஆங்கிலத்தில் எப்படின்னு அர்த்தம் தம்பி....

    ReplyDelete
  177. சுரேஷ் குமார் said...
    //
    என்னுடைய பதிவுகளில் எதேனும் சொல்குற்றமோ பொருள்குற்றமோ இருப்பின் பொருத்தருள வேண்டாம் எடுத்தருளவும்.....

    இவன் தமிழ்
    //
    நீங்க கேட்டுக்கிட்டதுக்காக சொல்றேன்..

    "இவன் தமிழ்"'னு வருமா..?

    "இவள் தமிழ்"'னு வருமா..?

    வரும் இவண் என்றால் இப்படிக்கு என்று பொருள்... நான் தவறாக இவன் எனப் போட்டு விட்டு இருக்கிறேன் நன்றி தம்பி..

    ReplyDelete
  178. //நான் தமிழரசி B.A .,Eng Lit படிச்சிருக்கேன்//

    அப்போ 'பாபா ப்ளேக் ஷிப்' பாட்டு நீங்க எழுதியதா? அதுல எனக்கு நிறைய டவுட் இருக்கு.

    ReplyDelete
  179. வாழ்த்துக்கள் தமிழரசி
    ஒப்பன் பண்ணதும் ஆகா ஒரு கொத்து ரோஜா சூப்பர், உள்ளே உள்ள அனைத்து பதிவுகளும் அருமை

    //விதண்டா வாதம் பேசும்
    வீண்ர்களாய் இருக்கிறோம்!!!!
    முரண்பாடுகளை மட்டும் சுட்டிக் காட்டும்
    முட்டாள்களாகத் தானே இருக்கிறோம்!!!!// சரிதான்..


    இனி தான் எல்லாத்தையும் படிக்கனும்.
    நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.

    ReplyDelete
  180. வாழ்த்துக்கள் தமிழ் லேட்டா வந்தால்உம் லேட்டஸ்டா வரனும் ;)

    ReplyDelete
  181. தமிழ்மகன்Wed Feb 24, 12:49:00 AM

    தமிழ் அரசி - உன் கவிதை
    என்னுள் எழுந்து நின்றது
    இதயத்தை உரசி...

    திருத்தி வாசிக்கவும்.

    பொருப்பில்லாமல் இருக்கிறோம் தவறு
    பொறுப்பில்லாமல் இருக்கிறோம்

    வற்றாத சேமிப்பு வங்கியில் பெறுக்குவதற்கு தவறு
    வற்றாத சேமிப்பு வங்கியில் பெருக்குவதற்கு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது