அன்பின் நண்பர்களே !
07.05.2010 வெள்ளி இரவு - அருமை நண்பர் லதானந்தின் அழைப்பின் பேரில் குடும்பத்துடன் ஊட்டி சென்றோம். இப்பொழுடு இப்போ இப்போ தான் திரும்பி வந்தோம். அருமையான உதகைத் தங்கல் - சுற்றுலா - அதனைப் பற்றிய பதிவு விரைவினில். அதனால் குறித்த காலத்தில் இவ்வார ஆசிரியரிடம் பொறுப்பினை அளிக்க இயலவில்லை.
சென்ற ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்ற நண்பர் சைவகொத்துப்பரோட்டா, ஒரு வார காலத்தில் ஏழு இடுகைகள் இட்டு, ஏறத்தாழ நூற்று எண்பது மறு மொழிகள் பெற்று, பல புதிய / பிரபலமான பதிவர்களை அறிமுகப் படுத்தி, மன நிறைவுடன் ஏற்ற பொறுப்பினைச் சிறப்பாகச் செய்து முடித்த மகிழ்ச்சியுடன் நமீடமிருந்து விடை பெறுகிறார். அவரை நல்வாழ்த்துகள் கலந்த பாராட்டுகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.
இவ்வாரத்திற்கு - இன்று துவங்கும் இவ்வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்க வருகிறார் நண்பர் சேட்டைக்காரன். பெயர் வயது ஊர் - போன்ற விபரங்களைத் தேவைப்படும் போது தருவார். இப்பொழுது சேட்டைக்காரன் என்ற வலைப்பூவினில் ( பதிவினில் ) ஜனவரி 2010ல் இருந்து எழுதி வருகிறார். இடுகைகள் இடும் வேகம் பாராட்டுக்குரியது. 130 நாட்களில் 122 இடுகைகள் இட்டிருக்கிறார். இவரை ஏற்கனவே பல ஆசிரியர்கள் அறிமுகப் படுத்தி இருக்கிறார்கள். இவரை இங்கு அறிமுகப்படுத்துகிறார் நண்பர் பிரபாகர். இதோ அவரது எழுத்துகளில் சேட்டைக்காரனின் அறிமுகம்.
சேட்டைக்காரன்!
வலைச்சர அறிமுகத்துக்காக வலைவீசித் தேடும் போது கிடைத்திட்ட ஒரு பொக்கிஷம்! அச்சமயத்தில் அவர் இடுகையெழுத ஆரம்பித்து பதினைந்து நாட்கள்தான் ஆகியிருந்தன!
சோற்றுப்புதூர் சொறிகால்வளவன் படித்து இவரின் ஆபாசக்கலப்பில்லாத நகைச்சுவைக்கு மயங்கி... இன்று வரை முதல் ஆளாய் படித்து ரசித்து வருகிறேன். எழுதுவதிலேயே மிகவும் சிரமமான ஒரு விஷயம் நகைச்சுவையாய் எழுதுவது தான்! ஆனால் இவரின் எழுத்துக்களை படித்து சிரிக்காமல் இருப்பதுதான் சிரமம். கண்டிப்பாய் அலுவலக நேரத்தில் படிக்கவே இயலாது! படித்தவுடன் மனம் லேசாக வேண்டும் என கேட்கும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தும் முதல் நபர் சேட்டைக்காரன் தான்!
இவரின்
ஆந்தக்குளம் அய்யாக்கண்ணு இன்னொரு அற்புதமான பாத்திரப்படைப்பு! இந்த வரிசையில் நான்கு, பிறகு ஜிம்முக்கு போய் உடம்பை தேற்றுவதற்காய் செய்யும் உத்திகளைக்கொண்டு
ஜிம்மாயணம் என எழுதி கலக்கியிருக்கிறார். ராசிபலன் என்றால் நம்முடைய ராசியை மட்டும்தான் படிப்போம்... ஆனால்
சேட்டையின் ராசிபலன்கள் விஷேசமாயும், எல்லோரும் படித்து வயிறு குலுங்க சிரிக்கும்படியாயும் இருக்கும்!
அவர் சந்தித்த நிகழ்வுகளை தனது அழகான நடையில் எழுதி படிப்பவர்களை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவைக்கவும் முடியும் என
பயணத்தில் ஓர் நாள்!,
மனம் ஒரு குரங்கு ஆகிய இடுகைகளின் மூலம் கலக்கியிருப்பார்!
எழுத வந்து மிகக்குறுகிய காலத்திலேயே வலைச்சர ஆசிரியர் குழுவினைக் கவர்ந்து வலைச்சர ஆசிரியராய் பொறுப்பேற்றிருப்பதே இவரின் எழுத்துக்கு கிடைத்திட்ட வெற்றி.
மொத்தத்தில் சேட்டையின் சேட்டை என்றும் நமக்கு வேட்டைதான்!
பிரபாகர்...
நல்வாழ்த்துகள் சேட்டைக்காரன்
நன்றி பிரபாகர்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவருக!! வருக!! சேட்டைக்கார நண்பா,
ReplyDeleteஇந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள் சேட்டை நண்பா! கலக்குங்கள் இந்த வாரத்தில்... படித்து ரசிக்க ஆவலாய்...
ReplyDeleteபிரபாகர்...
அருமையான அறிமுகம்;அசத்துங்க சேட்டை.., வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்.
ReplyDeleteசேட்டையின் சேட்டை ஆரம்பமாயிடுச்சு! :)
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteசேட்டைக்காரன்... இன்னும் படித்ததில்லை.... அண்ணன் பிரபாகரின் அறிமுகம் என் ஆவலைத்தூண்டுகிறது...
ReplyDeleteநன்றி பிரபாகர் அண்ணா....
வாழ்த்துக்கள் சேட்டைககாரன்....
சேட்டைக்காரன் வரவு நல்வரவாகுக.
ReplyDeleteவாழ்த்துக்கள் சேட்டைக்கார அண்ணாச்சி. வழக்கம் போல கலக்குங்க.
ReplyDeleteவாங்க சேட்டை வந்து கலக்குங்க.
ReplyDeleteவாழ்த்துகள் சேட்டைககாரன்
ReplyDeleteவாங்க...!
ReplyDeleteவாய்ப்பளித்து வரவேற்ற சீனா ஐயாவுக்கு முதற்கண் நன்றி!
ReplyDelete@சைவகொத்துப்பரோட்டா
@பிரபாகர்
@Starjan ( ஸ்டார்ஜன் )
@அநன்யா மஹாதேவன்
@r.v.saravanan
@க.பாலாசி
@மசக்கவுண்டன்
@முகுந்த் அம்மா
@அக்பர்
@நேசமித்திரன்
ஆகியோருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக!
சேட்டைக்காரன்
Best wishes!
ReplyDeleteவாழ்த்துகள் சேட்டைகாரரே....
ReplyDelete@NIZAMUDEEN
ReplyDelete@Chitra
@Kandavel Rajan C
உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது உளமார்ந்த நன்றி!
சேட்டைக்காரன்
ஆஹா... வாழ்த்துகள் சேட்டை :)
ReplyDeleteசேட்டை சின்ன வயசில ஸ்கூல படிக்கும்போதே.. பின்னாளில் பெரிய கலைஞராய் வருவாருனு எனக்குத்தெரியும்... என சொல்ல ஆசை..
ReplyDeleteஆனா உங்களை சின்ன வயசில பார்க்கலை..அதனாலென்ன ..
இப்ப..இப்ப..
இது..நேரம்
கலக்க ஆரம்பிங்க..
எங்களுடை ஆதரவு ..உங்களுக்கு எப்பொதும் உண்டு...
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
ReplyDelete@☀நான் ஆதவன்☀
ReplyDelete@பட்டாபட்டி
@Jaleela
உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்
சேட்டைக்காரன்
வாழ்த்துக்கள்!
ReplyDelete