07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 2, 2010

நன்றி நவிலல் மற்றும் விடை பெறுதல்

நண்பர்களே! நாளை காலை (திங்கள்) எட்டு மணிக்கு தமிழகம் வருவதற்குக் கப்பல் என்பதால், நிறைய வேலைகள். அலுவலகப்பணி, சுயதொழிலில் உதவியாளர் விடுமுறையில் சென்றதால் அவரின் வேலையையும் நானே செய்ய வேண்டி இருந்ததால் நேரமின்மை காரணமாக, முழுமையான ஈடுபாட்டுடன் எழுத முடியவில்லை. அதற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். வேலைப்பளு இருக்கும் இந்த நேரத்தில், கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்க்காக ஆவலில் ஒப்புக்கொண்டு, குற்ற உணர்வுடன் விடைபெறும் நிலை.  இருந்தாலும் என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர் சீனா ஐயா அவர்களுக்கும், பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி! நன்றி!


வலைச்சரத்தில் முன்னர் எழுதியுள்ள அனைவரும் புதிய,புதிய அறிமுகங்களைத் தந்திருந்தார்கள். இங்கு நானே புதிது என்பதால் புதியவர்களை அறிமுகப்படுத்த் தெரியவில்லை.ஒரு வாரம் என்னை வலைச்சர ஆசிரியராய் அங்கீகாரம் தந்த உங்கள் அனைவரிடமும் தலைவணங்கி விடை பெறுகிறேன்.கவிதைகள் தலைப்பில் இடம்பெற்ற கட்டுரையில் கவிஞர் நேசமித்ரன் அவர்களின் பின்னூட்டம் மிக அருமை. வலைச்சரம் எனக்கொரு அருமையான அறிமுகத்தை, அறியாதவர் பலருக்கும் தந்தது.வலைச்சரம் தந்த இந்த அருமையான வாய்ப்பினை என் வாழ்நாளில் மறக்க முடியாது. 

உங்களிடம் விடை பெறும் இந்த நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். ஒரு வேளை உங்கள் அனைவரிடமும் நேரில் விடைபெறும் தருணமாய் இருந்திருந்தால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப்போயிருப்பேன்.அடுத்த வீட்டில் இருப்பவர் யாரென்று அறிய முடியாத இந்தக்கால கட்டத்தில், உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்து கொண்டு, யாரோ முகமறியாதவர்களை நட்பாகவும், உறவாகவும் தரும் இந்த வலையுலகம் வாழ்க! வளர்க! என்றென்றும். 

நண்பர்களே! அவ்வப்போது என் வலைப்பக்கமும் வாருங்கள். ஊக்கமும், விமர்சனமும் தாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன். 

 நன்றி!

என்றும் அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்

10 comments:

  1. இந்த வாரம் சிறப்பாகவே இருந்தது!!!
    உங்களின் தமிழக பயணம் சிறப்பாக அமைய
    வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  3. மிகவும் முயற்சி மேற்கொண்டு, பலவிதமான வலைப்பதிவுகளை இந்த வாரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்! பாராட்டுக்களும் நன்றிகளும்!

    ReplyDelete
  4. சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் சாந்தி. என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்

    வாழ்த்துக்கள், நன்றி.

    ReplyDelete
  6. சிறப்பாகவே அறிமுகப்படுத்தியிருந்தீங்க. தமிழகப்பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அவசரமாய் வந்த வார்த்தைகளுக்கே இத்தனை ஆளுமை என்றால் ஆற அமர்ந்து நேரம் கிடைத்து இருந்தால்? மீண்டும் ஒரு முறை அமைதியான நேரத்தில் இதே பணியை கேட்டு வாங்கவும்.

    ReplyDelete
  8. மிக அருமையாக தொகுத்திருந்தீர்கள்.

    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. சிறப்பாய் செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
    வலைப்பூக்களின் அறிமுகத்திற்கு நன்றிகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது