07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 25, 2010

நமக்கு நாமே உந்துசக்தியும் உற்சாகமும்

கல்லூரிப் படிப்புங்குறதே கல்யாணத்துக்கு ஒரு டிகிரி தேவைங்கிற மனப்பான்மையோட படிக்க வைக்கப் பட்டது ..அப்பா அம்மாவை சொல்ல முடியாது சார்ந்த சமூகம் அப்படி .. ஆனா இப்போ எல்லாரும் வேலைக்குப் போறாங்க ..சுயமா நிக்கிறாங்க தன்னம்பிக்கையோட.. என் பெரிய பையன் போன வருஷம் வரை நெட்ல ஜி மெயில் பார்க்க உக்கார்ந்தா கூட ,”வெட்டி ஆஃபீசர் அப்புறம் பாருங்க.. வீட்டுல வெட்டியா மோட்டுவளையைப் பார்த்துகிட்டு இருக்குற நேரத்துலன்னு.”. சொல்வான். ஆனா இந்த வருஷம் நிலைமை கொஞ்சம் பெட்டரா இருக்கு..கல்லூரிக் காலத்துல ஹாஸ்டலில் இருந்ததால்.. எல்லா கல்லூரிகளுக்கும் கவிதைப் போட்டிகளுக்குப் போய் இருக்கேன்,,ஆன் த ஸ்பாட் கவிதைகள்.. யாதவா., மதுரை மெடிக்கல் காலேஜ்., தியாகராஜா எஞ்சினியரிங்.,மேலூர் அக்ரி காலேஜ் ., தியாசபிகல் காலேஜ்.. பாளையங்கோட்டை செயிண்ட் ஸேவியர்ஸ்னு எல்லாவற்றிலும் முதல் இரண்டு பரிசுகள்தான் .. கோப்பையோ சர்டிபிகேட்களோ..உண்டு நிச்சயம்,..கவியரங்கம். பட்டிமன்றம்., எல்லாம்... திருமணம் நிச்சயித்த ஒரு தருணத்தில் எழுத்து நின்று போனது..எப்படி உயிர்த்தது என்று தெரியாமல் சென்ற வருடம் என் பிறந்த நாளின் போது அதுவும் உயிர்த்தது.. என் தமிழம்மாதான் மறைமுக உந்து சக்தி,,60 வயதிலும் அவர்கள் வலையில் ஈடுபாட்டோடு தானறிந்தவற்றைப் பகிரும்போது நாமும் செய்யலாம் என்ற எண்ணம்.. இளமை விகடன்., என் முயற்சிகளுக்கு தூண்டுகோலாய் இருக்கிறது ,,, என் நன்றியும் வாழ்த்துக்களும்..இன்றும் இளமை விகடனில் ஜன்னல்களும் கதவுகளும் என்ற கவிதை ஒன்று வந்துள்ளது,,

மனைவி பற்றி தினேஷ்பாபு சொல்றது ரொம்ப டச்சிங்பா..

கல்யாணம் ஆகலைனாலோ., பொண்டாட்டி ஊருக்குப் போனாலோ நம்ம அள்ளிவிட்டான் மாதிரி சவ்சவ் பாத்தான் தினம் சாப்பிடணும்..

புத்தகப் பரிசு கொடுக்கும் என் டைரி ரவிப்ரகாஷ் மனைவி உடல் நலமில்லாததால சாரி சாரின்னு வருந்தி இருக்காரே..

சேட்டைக்காரனோட அவனும் அவளும் வித்யாசமான படைப்பு..

மனைவி ஊருக்குப் போயிட்டாங்க போல இந்த கட்டபொம்மனோட காக்டெயிலைப் பாருங்க

மன அழுத்தத்தால திவ்யா புகைக்க ஆரம்பிக்கி்றாங்கன்னு சொல்றாரு இந்த கார்பரேட் கதையில் ஜெகனாதன்..

ஆனாலும் மிஸ்டர் கும்மாச்சி நானே கட்சி., நானே எல்லாம்னு நீங்க எங்க தலைவியை இப்படி கலாய்க்கக் கூடாது..

கோவை சதீஷுக்கு பாட்டிகிட்ட கிடைச்ச பட்டப் பேரைப் பாருங்க.

சொன்னா உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கும் உன் சிரிப்பினில்னு ஒரு காதல் கதை எழுதி இருக்காரு இந்த புலவரு..!!

சமையல்னா பெண்கள் மட்டுமல்ல இந்த பித்தனும் சூப்பர்தான்.. இந்த ஆரஞ்சுப் பழத்தோல் குழம்பும் பச்சடியும் சாப்பிட்டுப் பாருங்க. அருமையா இருக்கு.. சாப்பிடுவீங்க..சாப்பிடுவீங்க. சாப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க..!!!

இந்த NRI யின் ஊர் குடும்பம் சார்ந்த இதயம் என்னை நடுங்கச் செய்த
ஒன்று.. சீக்கிரம் ஊர்லேருந்து ஒரு இடுகை போடுங்க நவாஸ்..

என் அன்பு நண்பர் ஜெயராஜின் மதுரை பற்றிய இடுகை இது..
அதுக்குள்ள இவரும் இளமை விகடன் கவிஞராகிட்டாரு... வாழ்த்துக்கள்..ராஜ்

சாத்தூர் மாக்கானின் இந்த சொத்து பற்றிய கவிதை அம்மா என்றால் அன்புன்னு சொல்லுதுங்க.. உணர்வு பூர்வம்...

மதுரை சரவணனின் இந்த பிரிவின் வலி எனக்கும் வலிக்கச் செய்த ஒன்று

ஆனால் வேல்கண்ணனின் கருவறை அற்றவளின் விசும்பலோசை என்னைத் துடிக்கச் செய்த ஒன்று..

ஒருத்தியின் கதைன்னு இவர் பிரியமாய் சொல்றது நம்ம காவிரியின் கதைங்க

கல்யாண ஃபோட்டோக்களில் ஆல்பம் டிசைன் செய்ய வேலன் சொல்லித் தருகிறார்..

டிஸ்கி:- டிஸ்கில வேற கதையடிக்கப் போறீங்களான்னு யாரும் கதற வேண்டாம்.. பாவம் பொழைச்சுப் போகட்டும்...நாளைய இடுகைகளைப் பார்க்க போவோம்.. OMG ...!!! நாளைக்குமானா ஆமாம்பா ஆமாம்..இன்னும் நாலு போடணுமே....:-)

23 comments:

  1. :)) அருமையாக இருக்குங்க.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தேனம்மை
    நிறைய புது பதிவர்கள் .நன்றி

    ReplyDelete
  3. முன்குறிப்புகளும் அறிமுகங்களும் அழகு... தொடர்ந்து எழுதிதள்ளுங்க.. வாழ்த்துக்கள்


    நாங்களும் 1 or 2 Prize கொடுத்தர்றோம்...

    ReplyDelete
  4. சிறப்பாக இருந்தது உங்களின் அறிமுகங்களும், உங்களின் அனுபவமும் . பகிர்வுக்கு நன்றி !இந்த வார ஆசிரியர் பணி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. வாழ்த்துகள் தேனம்மை

    :)

    ReplyDelete
  6. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    ReplyDelete
  7. நன்றிக்கா. என்னய பத்தியும் சொன்னதுக்கு.

    ReplyDelete
  8. indru niraya outhu nabargal arimugam pathivar ottumai ongattum

    ReplyDelete
  9. அருமையாக - ஒரே தீமில் தொகுத்து தந்து இருப்பது நல்லா இருக்குது, அக்கா.

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு இருங்க பாத்துட்டு வரேன்...

    ReplyDelete
  11. கல்லூரிப் படிப்புங்குறதே கல்யாணத்துக்கு ஒரு டிகிரி தேவைங்கிற மனப்பான்மையோட படிக்க வைக்கப் பட்டது .


    பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது. பார்த்தீர்களா.

    ReplyDelete
  12. நல்ல தொகுப்பு

    வாழ்த்துக்கள் honey அக்கா

    விஜய்

    ReplyDelete
  13. வாழ்த்துகள் தேனம்மை

    ReplyDelete
  14. நன்றி வித்யா

    நன்றி பத்மா

    ReplyDelete
  15. நன்றி அஷோக் எங்கே எப்போ கொடுப்பீங்கன்னு சொல்லணும்..
    அப்பதானே இன்னும் நல்லா எழுத முடியும்

    ReplyDelete
  16. நன்றி அஹமத்

    நன்றி அந்நியன்

    ReplyDelete
  17. நன்றி நேசன்

    நன்றி ராம்

    ReplyDelete
  18. நன்றி கண்ணன்

    நன்றி LK

    ReplyDelete
  19. நன்றி சித்து


    நன்றி ஜெய்லானி

    ReplyDelete
  20. நன்றி ரமேஷ்

    நன்றி விஜய்

    ReplyDelete
  21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது