ஆண்டுதோறும் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடினாலும், சாதி மத பேதம் இல்லாமல் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை பொங்கல்தான். கடவுளை மையப்படுத்தாமல், உழைப்பை, நன்றியை, இயற்கையை மையப்படுத்துவதாலேயே இந்த சிறப்பு. உலகின் பெரும்பாலான இடங்களில் இந்த பண்டிகை வெவ்வேறு பெயர்களால் கொண்டாடப்பட்டு வருவது ஒரு சிறப்பு. அனைவருக்கும்
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். (அட மறந்தே போய்ட்டென். அனைவருக்கும் இனிய (தமிழக அரசு அறிவித்த) தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.)
|
ஆறு ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம். அம்புக்குறி காட்டும் நபர்தான் இந்த பதிவை எழுதுபவர் (ரொம்ப அப்பாவியா இருக்கார்ல?) |
இது ஒரு பொங்கல் ஸ்பெஷல் பதிவு. அதென்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. பெரும்பாலும் டிவியில் சாதாரண நாட்களில் ஒளிபரப்பப்படும் மொக்கை நிகழ்ச்சிகள் எல்லாம், பொங்கல் அன்று சிறப்பு நிகழ்ச்சி ஆவதில்லையா? மொக்கை படங்கள் எல்லாம் சூப்பர்ஹிட் படம் ஆவதில்லையா? அது மாதிரிதான். இது மொக்கை அல்ல. சாதாரண பதிவுதான். ஆனாலும் பொங்கல் அன்று வெளியிடுவதால் சிறப்பு பதிவு.
நண்பர் பாலாஜி சரவணன் கவிதைகளில் பட்டய கிளப்புகிறார். அதிலும், பிரிவு, சோகம், அழுகை என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி போலிருக்கிறது.
காதலியை பிரிந்த துயரில் புலம்பி தள்ளுகிறார். புதுமையாக மனதை
மின்விசிறியுடன் ஒப்பிட்டு அசத்துகிறார்.
முகமூடி மனிதர்களின் நிதர்சனத்தை வெளிப்படுத்துகிறார். நட்பை பற்றி
தலைப்பிடாமலும் கவிதை சொல்கிறார்.
வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்துபார்ப்போம் என்று சொல்லும் குடந்தையூர் நண்பர் சரவணனை நிறைய பேர் அறிந்திருப்பீர்கள்.
இங்க்ரீமெண்ட் கேட்டு கெஞ்சும் குறுஞ்சிறுகதை புன்னகைக்க வைக்கிறது.
இருமன அழைப்பிதழ் என்ற கதை அவரே சொல்வது போல வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சில நொடி சினேகம் என்று ரயில், பேருந்து சினேகங்களை
ஞாபகப்படுத்துகிறார். அப்பப்ப
ஜோக்'கடி'க்க வேறு செய்கிறார்.
தன்னடக்கத்துடன் தன்னை சின்னப்பயல் என்று சொல்லிக்கொள்கிறார் இந்த பரமக்குடிக்காரர்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிக்கிறார். கண்ணாடியோடு பேசுகிறார்.
கண்ணாடியும் நம்மோடு பேசுகிறது. கண்ணாடியால் உறவுகளைப்பற்றியும் விவரிக்கிறார் இந்த சின்னப்பயல். புன்னகைக்க வைக்கும்
புள்ளயார் புடிக்க போன கத சொல்கிறார். காதலன் காதலியிடம் என்ன
எதிர்பார்ப்பான். ஒன்றும் அதிகமில்லை என்று பட்டியலிடுகிறார்.
மழை ஏன் யாருக்குமே பிடிக்கிறதில்லைனு கேள்வி கேட்கிறார்.
சகோதரி அபுசனா
குழந்தைகள் மேதைகளாக வளர்ப்பதற்கு சில ஐடியாக்கள் தருகிறார். உக்காந்து யோசிச்சதுன்னு சொல்லி மனசாட்சியே இல்லாமல்
மொக்கை போடுகிறார். தொலைக்காட்சி பெட்டியின்
முன்னேற்றம் பற்றிய செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறார். அளவில் பெரிய தகவல்களை மெயிலில் அனுப்ப
டெக்னிக்கல் ஆலோசனையை எளிய முறையில் தருகிறார்.
நண்பர் மகாதேவன் தான் தளத்துக்கு தகவல்துளிகள் என்று பெயர் வைத்தது சரிதான். நிறைய தகவல்களை அள்ளித்தருகிறார். உங்கள்
தலைமுடியின் உண்மையான நிறம் என்ன என்று சொல்கிறார்.
கடவுச்சொல் (பாஸ்வார்ட்) எப்படி பாதுகாப்பான முறையில் அமைப்பது என்று ஆலோசனை தருகிறார்.
சிறுநீரகக்கல் உருவாகுவது பற்றி விளக்குகிறார். உலகத்திலேயே மிகப்பெரிய
புகைப்படத்தைப்பற்றிய தகவல்களை தருகிறார்.
பைலட்டின் அறையை 360 டிகிரி கோணத்தில் சுற்றி காட்டுகிறார்.
பாராசூட்டில் இருந்து குதிக்க கற்று தருகிறார். இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.
இன்னிக்கு அறிமுகங்கள் முடிந்து விட்டது. எல்லோரும் பொங்கல், கரும்பு எல்லாம் சாப்பிட்டு விடுமுறையை எஞ்சாய் பண்ணுங்க. என்ன நண்பர்களே நாளைக்கு சந்திப்போமா?