விடை பெறும் நேரம்
➦➠ by:
கார்த்திக் (எல்கே)
இன்றைக்கு விடைபெறும் முன்பு ஒரு சிலப் பதிவர்களை பார்க்கலாம். "இதயம் பேசுகிறது " என்ற வலைப்பூவில் எழுதும் பாலாஜி எனது நண்பன். "நண்பன்டா " என்று இவரது நண்பருக்கு இவர் செஞ்ச உதவியை கொஞ்சம் பாருங்க .
போகாமல் விட்டத் திருமணத்தை விசாரிக்க சென்று அங்கு மாட்டிக்கிட்டு முழிச்சதை பத்தி கோமதி சொல்றதை கொஞ்சம் பாருங்க. அதே மாதிரி ஒருத்தர் புத்தகக் கண்காட்சியில் தனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்கிறார்.
கணிணி பத்தி எனக்கு எதுவும் தெரியாது, அடிப்படையில் இருந்துக் கற்று கொள்ளவேண்டும்னு நினைப்பவர்கள். இதோ இந்த வலைப்பூவை பாருங்கள் ( இது அடிப்படை மட்டுமே. கணிணி நன்கு தெரிந்தவர்களுக்கு அல்ல ).
இவ்வளவு பேரை அறிமுகப் படுத்தி விட்டு ,ஒருவரை நான் விட்டுவிட்டால் அப்புறம் எனக்கு ரொம்பப் பிரச்சனை. அவர் யாரு என்ன அப்படின்னு இந்த லிங்கில் பார்த்துகோங்க .
கடந்த ஒரு வாரமாக வலைச் சரத்தில் எழுதும் வாய்ப்புக் கொடுத்த சீனா அய்யாவிற்கு எனது நன்றிகள். முடிந்த வரை புதியப் பதிவர்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்றுதான் எழுத ஆரம்பித்தேன். அவ்வாறே நடந்ததுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
அனைத்து இடுகைகளுக்கும் வந்து பின்னூட்டம் இட்டு, அறிமுகப் படுத்திய பதிவர்களின் தளங்களுக்கும் சென்று அவர்களுக்கும் பின்னூட்டம் இட்டு உற்சாகப் படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.