07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 5, 2011

பாப்பா.. பாப்பா.. கதை கேளு..

அன்றைக்கு குழந்தைகளின் கும்மாளம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருந்தார் அவர்களின் அம்மா சவிதா. . , "என்ன!!.. ஒரே சத்தக்காடா கெடக்குது?" என்று கேட்டபடி வீட்டுக்குள் நுழைந்தார் மரகதம்பாட்டி.

பாட்டியின் கையிலிருந்த கூடையிலிருந்து குங்குமப்பிரசாதத்தை எடுத்துக்கொண்டபடியே சவிதா," ஏம்மா இவ்ளோ நேரம்??.. கோயில்ல ரொம்ப கூட்டமா?" என்று கேட்டாள்.

"கோவில்ல நம்ம சௌந்தரம்மா(கேணிப்பித்தன்) மகளைப்பார்த்தேன். ஊருக்கு வந்திருக்கா போலிருக்கு. ஹூம்!!.. எப்படியிருந்த குடும்பம்.."

"என்ன பண்றது!!.. காலம் யாரை எங்க கொண்டுபோய் வைக்கும்ன்னு யாருக்குத்தெரியும்!!.."

அப்படியே, வர்ற வழியில ஜெயந்தியையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்தேன். அதான் இம்புட்டு நேரமாயிடுச்சு.இந்தப்பொண்ணோட ரௌத்திரத்துக்கு பின்னாடி இருக்கிற கதை(ராகவன்)யை நினைச்சா மனசு அப்படியே கலங்கிப்போகுது.."

இதற்கிடையில் பசங்களின் கூச்சல் அதிகமானது."அது என்னங்கேன்.. .. ஒரே வாக்குல" செல்லமாக அதட்டினாள் பாட்டி.

" பாட்டி.. அம்மாட்ட கதை சொல்லச்சொன்னோம். அம்மா எனக்கு கத சொல்லத்தெரியாதுன்னு சொல்றாங்க" என்று புகார் வாசிக்கப்பட்டது.

"கதைதானே... பாட்டி சொல்றேன். கேட்டுக்கிட்டே சாப்பிடுவீங்களாம். சரியா?.."

எல்லோரும் வட்டமாக அமர்ந்துகொள்ள, சாத உருண்டையை குழந்தைகளின் கைகளில் வைத்தவாறே பாட்டி கேட்டாள்.

"ஏண்டா தங்கம்... மூன்று சல்லடைகள்ன்னு ஒரு கதை.. யோகானந்தன் கணேசன் சொன்னது. அதை  சொல்லட்டா?.."

"அது ஏற்கனவே சொல்லியாச்சு"

"அப்ப.. கைப்புள்ள சொல்லித்தந்த கிராமிய பாடல்கள் ஏதாவது பாடட்டுமா?.."

"அது தூங்கப்போகும்போது பாடுங்க பாட்டி.. "


"குறும்புக்காரபசங்கடா நீங்க.. அது கிடக்கட்டும்.. நீங்கல்லாம் வளந்தப்புறமும் அப்பாம்மா கிட்ட பாசமா இருப்பீங்கதானே?.."

" நிச்சயமா இருப்போம். ஏன் அப்படி கேக்கிறீங்க?.."

ஒண்ணுமில்லை.. ஒரு அப்பா மகனுக்கிடையேயான உறவை 'கொத்துபுரோட்டாவும் பழையசோறும்' ன்னு ஒரு கவிதையில பசுபதி ரொம்ப அழகா சொல்லியிருக்காரு.. அது ஞாபகம் வந்துச்சு.."


"பாட்டி,  நாமெல்லாம் ஒரு நாளைக்கு கன்னியாகுமரி போலாமா?.. சூரிய உதயம், அஸ்தமனம், விவேகானந்தர் பாறை எல்லாம் பாத்துட்டு வரலாம்"

"அதுக்கென்ன.. போலாமே.. ஆனா,  அர்ஷியாசுக்கு நடந்தமாதிரி நடக்காம
இருக்கணும் :-).."

"பாட்டி.. எனக்கும் ஒரு கவிதை தெரியும்!!.."செல்போனில் காதலிக்கிறவங்களைப்பத்தி அஹமது சுஹைல் எழுதியிருக்காரு சொல்லட்டுமா?.." என்று குறும்புடன் குரல் கொடுத்தான் கல்லூரியில் படிக்கும் மூத்த பேரன்.

இடையில் குறுக்கிட்டது ஒரு வாண்டு. " பாட்டி .. நீங்களும் சின்னவயசுல உங்கபாட்டிகிட்ட கதையெல்லாம் கேப்பீங்களா.. " என்றான்.

மீனா சொல்லியிருக்கிறமாதிரி பாட்டிவீடு இருந்தா,.. யாருக்குத்தான் பிடிக்காது. ஹூம்.. அதெல்லாம் ஒரு பொற்காலம். வயசானவங்களை சுமையா நினைச்சு திண்ணை(சிவகுமாரன்)க்கோ முதியோரில்லத்துக்கோ அனுப்பாம மரியாதையா நடத்தின காலம்..". ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு பாட்டி தொடர்ந்தார்,"அவங்களோட பேர்ல வாங்கின மொதச்சொத்தைப்பத்தி எப்பவும் பேசுவாங்க.நம்ம சே.குமார்கூட அதைப்பத்தி ஒரு கதை எழுதியிருக்காரு. பாட்டிவீட்ல எப்பவும் விளையாட்டும் கும்மாளமும்தான்."

"படி.. படின்னு சொன்னதேயில்லியா அவங்க?/.."

"ஊஹூம்.. இப்ப நம்ம நாணல் சொல்லியிருக்கிறதை அப்பவே கடைப்பிடிச்சவங்க அவங்க"

பேச்சு சுவாரஸ்யத்தில் குழந்தைகள் சாப்பிட்டுமுடிக்கவும், சுபாவின்குறிப்புகளை பார்த்து செஞ்ச பேரீச்சம்பழ கேக்கை அம்மா கொண்டுவந்து வைக்க, ஆளுக்கொரு துண்டு எடுத்துக்கொண்டார்கள்.



49 comments:

  1. வருட ஆரம்பத்தில் வலைச்சரத்தில் மீண்டும் ஒரு அறிமுகம்.
    ரொம்ப சந்தோஷம் அமைதிச்சாரல் அவர்களே...
    என்னையும் மற்ற நண்பர்களையும் ஒரு கதையின் ஊடாக... அதன் ஓட்டத்திலேயே சொன்னவிதம் அருமை...
    உங்களுக்கும் உங்கள் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சபாஷ்! பல பதிவுகளின் கருத்தை இணைத்து ஒரு நல்ல கதையை சொல்லி விட்டீர்கள்.
    என்னுடைய பதிவும் இதில் இடம் பெற்றது குறித்து மகிழ்ச்சி

    ReplyDelete
  3. வழக்கம்போலவே சிறப்பான அறிமுகங்கள்....

    தொடரட்டும் உங்கள் வலைப்பணி....

    பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  4. //
    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    padichchittu varen//

    எவ்வளவு நேரம் படிக்கிறது சீக்கிரம் படிச்சுட்டு வாங்க இங்க படிக்கிறதுகெல்லாம் மாமூல் தரமாட்டாங்க.....
    ஹிஹிஹி

    ReplyDelete
  5. நல்ல அறிமுகங்கள் இன்று!
    எனக்கு சிவகுமாரனை மட்டும்தான் தெரியும்! நேற்று என்னையும் அறிமுகப்படுத்தி இருந்தீங்க நன்றி!

    ReplyDelete
  6. நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  7. அறிமுகப்படுத்திய விதம் நன்றாக இருக்கிறது.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மிக அருமையான அறிமுகங்கள். கலக்குங்க

    ReplyDelete
  9. மிக அருமையான அறிமுகங்கள். கலக்குங்க

    ReplyDelete
  10. வாங்க ரமேஷ்,

    இன்னுமா படிச்சு முடிக்கலை :-)))))

    ReplyDelete
  11. வாங்க குமார்,

    ரொம்ப நன்றிங்க.. மத்தவங்களையும் கண்டுக்கோங்க :-)

    ReplyDelete
  12. வாங்க மீனா,

    ரொம்ப அழகா எழுதறீங்கப்பா.. தொடருங்கள்.

    ReplyDelete
  13. வாங்க மாணவன்,

    வரவுக்கு நன்றிங்க..

    மாமூல் கேக்காத போலீசா!!.. ரொம்ப நல்லவரா இருக்காரே :-)))

    ReplyDelete
  14. வாங்க ஜீ,

    மத்த நண்பர்களையும் சந்தியுங்கள் :-))

    ReplyDelete
  15. வாங்க ஆசியா,

    அருமையா எழுதறாங்கப்பா ஓரொருத்தரும் :-))

    ReplyDelete
  16. வாங்க மாதேவி,

    நன்றிங்க.

    ReplyDelete
  17. அறிமுகப்படுத்தப்படும் பதிவுகளின் சுட்டிகளைக் ஒரு கதையினூடாகவே சொன்ன விதம் அருமை. அதில் என்னுடைய பதிவும் இடம்பெற்றிருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  18. வாங்க ஜலீலா,

    ரொம்ப நன்றிங்க.

    ReplyDelete
  19. கதையுடன் கூடிய அறிமுகம் சூப்பர் :-)

    ReplyDelete
  20. இந்த வாரம் - வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தும் மேலிடம் நீங்கள் தானா? சூப்பர்! சூப்பர்! சூப்பர்!

    ReplyDelete
  21. வலைச்சரம் மூலம் நிறைய பதிவர்களைத்தெரிந்துகொள்ள முடிகிரது. கதைமூலமே அறிமுகம் சூப்பரா இருந்தது.

    ReplyDelete
  22. புதிய அறிமுகங்கள். எல்லா பதிவுகளும் படித்து விடுகிறேன்....

    ReplyDelete
  23. சூப்பரு............

    வாரம் முழுசும் வரேன் கதைகேக்க!

    ReplyDelete
  24. கதைமூலம் அறிமுகப் படலம் அருமை அமைதிச்சாரல்.

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. வாங்க ஜெய்லானி,

    நன்றிங்க..

    ReplyDelete
  26. வாங்க சித்ரா,

    நன்றி.. நன்றி.. நன்றி..

    டூர் நல்லபடியா முடிஞ்சதா :-))

    ReplyDelete
  27. வாங்க லஷ்மியம்மா,

    புதியவர்களை கண்டுகொள்வதற்கான சிறப்புக்களம்தான் இது..

    நன்றிங்க.

    ReplyDelete
  28. வாங்க வெங்கட்,

    கண்டிப்பா படியுங்க. நாமளும் ஒருகாலத்துல காத்திருந்தவங்கதானே :-))

    நன்றி.

    ReplyDelete
  29. வாங்க துளசியக்கா,

    முன்வரிசையில் துப்பட்டாவை போட்டுவெச்சிட்டேன் :-))

    நன்றி.. தினமும் வரணும் :-)

    ReplyDelete
  30. சிறப்பாக கதையுடன் அறிமுகம்... நன்று.

    ReplyDelete
  31. இன்னிக்கும் வித்தியாசமா கலக்கிட்டீங்க தோழி. பாராட்டுக்கள். போய் மத்தவங்களை கண்டுக்கிட்டு வரேன்

    ReplyDelete
  32. //"பாட்டி.. எனக்கும் ஒரு கவிதை தெரியும்!!.."செல்போனில் காதலிக்கிறவங்களைப்பத்தி அஹமது சுஹைல் எழுதியிருக்காரு சொல்லட்டுமா?.." என்று குறும்புடன் குரல் கொடுத்தான் கல்லூரியில் படிக்கும் மூத்த பேரன்.//

    நன்றி ஐய்யா.

    வலைப்பதிவில் தவழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு எழுந்த நடக்க கை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் கோடி ஐய்யா.

    தொடர்ந்தும் உங்கள் ஆதரவை நோக்கி
    Ahamed Suhail

    ReplyDelete
  33. வித்தியாசமான முறையில் தொகுத்து வழங்கி வருகிறீர்கள். சுவாரஸ்யம் தொடரட்டும்.

    அறிமுகங்களுக்கு நன்றி! அவர்களுக்கு வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  34. படித்தவுடன் தூங்கி விடவும்ன்னு சொன்னாங்க. அதான் தூங்கிட்டேன் ஹிஹி

    ReplyDelete
  35. மிக்க நன்றிங்க. என்னை அறிமுகம் செய்ததற்கும், இன்னும் பலரோடு தொடர்பு ஏற்படுத்தியதற்கும்.

    ReplyDelete
  36. கதை  சம்பவத்தினூடே ஆஹா எத்தனை பதிவர்
    அறிமுகங்கள்... சூப்பர்.
    -கலையன்பன்.
    இது பாடல் பற்றிய தேடல்!

    கோவி.மணிசேகரன் பற்றி சிறு குறிப்பு + ஒரு பாடல்!

    ReplyDelete
  37. வாங்க மாதவன்,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  38. வாங்க ராஜி,

    நன்றிப்பா :-))

    ReplyDelete
  39. வாங்க அஹமது,

    ரொம்ப நல்லா எழுதறீங்க.. தொடர்ந்து எழுதுங்க :-))

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  40. வாங்க ராமலஷ்மி,

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  41. வாங்க ரமேஷ்,

    அடடா!!.. பாட்டி சொல்லைத்தட்டாத பேரனா நீங்க!! :-)))))

    ReplyDelete
  42. வாங்க சிவகுமாரன்,

    நிறையப்பேர் அறிந்துகொள்ளப்படுகிறார்கள். வலைச்சரத்தின் பலமே அதுதான் :-)

    இன்னும் நிறையப்பேர் கண்டுகொள்ளப்படவேண்டும்.

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  43. வாங்க கலையன்பன்,

    ரொம்ப நன்றிங்க:-)

    ReplyDelete
  44. கதையோடு சேர்த்து ஆங்காங்கே இணைப்புகள் தந்த உங்கள் கிரியேட்டிவிட்டி ரசிக்க வைக்கிறது...

    ReplyDelete
  45. அறிமுகப்படுத்தும் விதமாக சொன்ன கதை செம டாப்புக்கா!!!!

    ReplyDelete
  46. வாங்க பிரபாகரன்,

    ஆமினா,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  47. ஹை.. கதை மூலம் அறிமுகமா.. புதுசா இருக்கு... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அமைதிச்சாரல் :)

    ReplyDelete
  48. வாங்க நாணல்,

    உங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

    வரவுக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது