07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 9, 2011

ஸ்டாப் வந்துட்டுது...... இறங்கிக்கறேன்!!..

கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு எப்படி ஓடிப்போச்சுன்னே தெரியலை..  இந்தவாரத்தைச்சொன்னேன். என்னையும் நம்ம்ம்ம்ம்ம்பி இந்த பொறுப்பை ஒப்படைச்ச சீனா ஐயாவுக்கும், வலைச்சரக்குழுவினருக்கும், மொதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.

ஏன்னா,.. வழக்கமா படிக்கிற பதிவுகள் தவிர நெறைய புதிய பதிவுகளையும் கண்டுக்கிடறதுக்கு, எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பா இருந்திச்சு. அதையெல்லாத்தையும், பிரபலம்,புதுசுன்னு கதம்பமா தொடுத்துட்டேன். ஜூரமெல்லாம் ஒண்ணும் வரலை. மத்தபடி பரீட்சைக்கு படிக்கிறமாதிரி ஜாலியா படிச்சுட்டே இருந்தேன் :-))). வலைச்சரப்பொறுப்பை சாக்குவெச்சு, கணினியை ஆக்கிரமிக்க முடிஞ்சது. இல்லைன்னா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல எனக்கு அனுமதிகிடைக்காது :-))

பின்னூட்டமிட்டு 'ஊக்கு'வித்த உங்கள் அனைவருக்கும், பின்னூட்டம் போடலைன்னாலும்..  தினமும் படிச்சுட்டுப்போன மற்ற அனைவருக்கும்,  'லேட்டானாலும் லேட்டஸ்டா, நமக்கெல்லாம் தளம் கொடுத்து உதவிய கூகிளம்மனுக்கும்(இதெல்லாம் ரொம்ப ஓவருன்னு ஆரும் திட்டப்டாது:-)) நன்றி'.... ('சொல்ல மறந்தா,  பாஸ்வேர்டு மறந்துபோகக்கடவதாக' அப்படீன்னு யாரோ சொல்றமாதிரியே.. காதுக்குள்ள கேட்டுக்கிட்டிருக்கு). 

எங்கூடு இங்க பக்கத்துலதான் இருக்கு.. வீட்டுக்கு முன்னால சின்னதா ஒரு முற்றமும் இருக்கும். நேரம் கிடைச்சா எட்டிப்பாருங்க..

மறுபடியும்,..  அடுத்து வரப்போற ஆசிரியருக்கு வாழ்த்துக்களும், எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களும், வரப்போற பொங்கலுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களும் சொல்லிக்கிறேன்.வாய்ப்பு கிடைச்சா, மறுபடியும் சந்திக்கலாம்.. நன்றி, வணக்கம்.




19 comments:

  1. அருமையாகச் சென்றது வாரம்.

    நல்வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்!!

    ReplyDelete
  2. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஒரு வாரம் சூப்பரா போச்சு,
    வாழ்த்துக்கள் அமைதிச்சாரல் அப்படியே எங்குட்டு பக்கமும் அப்ப வந்து எட்டிப்பார்க்கோனும்.
    பதிவுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஸ்டாப் வந்துட்டுது...... இறங்கிக்கறேன்!!..//

    அப்பாட தப்பிச்சோம். ஹிஹி

    ReplyDelete
  5. உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அருமையான வாரம்.

    நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாங்க ராமலஷ்மி,

    ரொம்ப நன்றிப்பா.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாங்க அரசன்,

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  9. வாங்க ஜலீலா,

    கண்டிப்பா உங்கூட்டுக்கு வருவேன்.. ஸ்பெஷலா ஏதாவது செஞ்சு தருவீங்கதானே :-))))

    நன்றி.

    ReplyDelete
  10. வாங்க ரமேஷ்,

    தப்பிக்க வுடறதா!!!...



    'அங்கே' எங்கூட்ல ஆரம்பிப்போமில்ல :-)))))

    நன்றி வாழ்த்துக்களுக்கு.

    ReplyDelete
  11. வாங்க குமார்,

    உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

    நன்றி.

    ReplyDelete
  12. நன்றாக ஒரு வாரம்.. எழுதியமைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. பல புதிய வலைப்பூக்களை வித்தியாசமாய் சுவைபட
    தொகுத்து வழங்கினீர்களே, பாராட்டுக்கள்
    உங்களுக்கு அமைதிச்சாரல்!
     -கலையன்பன்.

    இது பாடல் பற்றிய தேடல்!
    சிரிச்சா கொல்லி மலைக் குயிலு!
    !

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அமைதிச்சாரல். வேளை பளு இன்றுதான் தங்களின் ஆசிரியர் பதிவுகளை வாசிக்க நேர்ந்தது . சிறந்த முறையில் வழிநடத்தி இருக்கிறீர்கள் . இன்னும் சிலப் பதிவுகளை வாசிக்கவில்லை வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன் .

    ReplyDelete
  15. வாங்க மாதவன்,

    தவறாமல் பின்னூட்டமிட்டு ஊக்குவித்த உங்களுக்கும் நன்றிகள்..

    ReplyDelete
  16. வாங்க கலையன்பன்,

    பாராட்டுக்களுக்கு நன்றி..

    ReplyDelete
  17. வாங்க பனித்துளி,

    வாசிச்சுட்டு, அப்படியே நண்பர்களின் தளத்தையும் ஒரு எட்டு பாத்துட்டு வாங்க சரியா :-)))

    நன்றி.

    ReplyDelete
  18. அருமையான வாரம்.அனுபவித்து ரசித்தேன்.

    ReplyDelete
  19. கொடுத்த ஆசிரியர் பணியை ஒரு வாரம் முழுவதும் செவ்வனே செய்து இருக்கீங்க சாரல். வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது