07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 3, 2012

ஒன்பதாவது திசை, பத்தாவது கிரகம்!

விஷ்ணு, விவேக்கைப் பார்ப்பதற்காக ஒரு மாலை நேரத்தில் வீட்டுக்குப் போனபோது ரூபலா வரவேற்பறை சோஃபாவில் உட்கார்ந்து ‘பெமினா’வைப் புரட்டிக் கொண்டிருந்தாள். விஷ்ணுவைப் பார்த்துதும், ப்ராக்கெட் குறி ‌போன்ற தன் அழகிய புருவங்களை உயர்த்தினாள். உதடுகளை ஒரு கேலிப் புன்னகையோடு விரித்தாள்.

‘‘என்னடா..? திடீர் விஜயம்? இது டிபன் சாப்பிடற நேரமும் இல்லை... காஃபி டயமும் கிராஸ் ஆயிடுச்சு. இப்ப எதுக்கு வந்திருக்கே?’’

விஷ்ணு தன் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு ரூபலாவை முறைத்தான். ‘‘மேடம்! திஸ் ஈஸ் டூ மச்...! என்னை இன்சல்ட் பண்றதுக்கும் ஒரு அளவு இருககு. பாஸ் இன்னி்க்கு நைட் டிபன் உங்க வீட்ல சாப்பிடச் சொன்னார். நீங்க என்னை ரொம்ப ‌இன்சல்ட் பண்ணிட்டதால... நான் இன்னிக்கு...’’

‘‘‌இன்னிக்கு..?’’

‘‘நைட் டிஃபனை எட்டே எட்டு சப்பாத்தியோட நிறுத்திககப் ‌போறேன் மேடம்..!’’

ரூபலா சுற்றும் முற்றும் பார்த்தாள். ‘‘என்ன தேடறீங்க மேடம்?’’

‘‘உன்னை எதால சாத்தலாம்னு பாக்கறேன்...’’ ரூபலா தன் அரிசிப் பற்களைக் கடிக்க, உள்ளேயிருந்து வந்த விவேக், ‘‘வாடா, தடியா... இரு, அஞ்சு நிமிஷத்துல ட்ரெஸ் பண்ணிட்டு ரெடியாகி வந்துடறேன்...’’ என்று விட்டு மீண்டும் உள்ளே ‌போனான்.

விஷ்ணு, ரூபலாவை ஏறிட்டான். ‘‘மேடம்! நான் ஒரு விடுகதை சொல்றேன். ரெண்டு நிமிஷத்துக்குள்ள அதுக்கு விடை சொல்லணும். அப்படிச் சொல்லலைன்னா நாளைக்கு மூணு வேளையும் உங்க வீட்லதான் எனக்கு ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர்...’’

‘‘நான் விடையச் சொல்லிட்டா..?’’

‘‘நீங்க சொல்ற ஹோடடலுக்கு உங்களையும் பாஸையயும் கூட்டிக்கிட்டுப் போய் என்னோட செலவுல இன்னிக்கு ராத்திரி டின்னர்...’’

‘‘ஓ.கே. நீ விடுகதையைச் சொல்லு...’’

‘‘ஒரு டப்பா நிறைய மோகினிப் பிசாசுகள். அது என்ன?’’ ரூபலா விழித்தாள். ‘‘ஏதாவது க்ளூ கொடுடா...’’

‘‘நோ க்ளூ...’’ என்றான் விஷ்ணு. நிமிடங்கள் கரைய... ரூபலா, ‘‘சரி, நாளைக்கு மூணு வேளையும் கொட்டிக்க வந்துடு. விடையச் சொல்லு...’’ என்றாள்.

‘‘ஒரு டப்பா நிறைய மோகினிப் பிசாசுகள். வேற ஒண்ணுமில்ல மேடம்... லேடீஸ் ஸ்பெஷல் பஸ்தான்!’’ ரூபலா தீப்பார்வையோடு விஷ்ணுவை அடிக்க வர, வெளியே வந்த விவேக் தடுத்தான். ‘‘டேக் இட் ஈஸி ரூபி... விஷ்ணு ஒரு ப்ளேபாய்ன்னு தெரிஞ்சதுதானே...? கிளம்பலாமாடா விஷ்ணு’’

‘‘ஒரு அஞ்சு நிமிஷம் இருஙக பாஸ்...’’ என்ற விஷ்ணு தன் லேப்டாப்பை மடியில் வைத்து உயிர்ப்பித்தான். ‘‘மேடம்... மூணு‌ வேளைக்கும் மெனு லிஸ்ட் இங்க இருக்கு பாருங்க...’’ என்றான். ரூபலா ஆர்வமாய் அருகில் வந்தாள். ‘‘மார்னிங் டிபனுக்கு ‌கமலாவின் அடுப்பங்கரைல சொல்லியிருக்கற சோள ரவா இட்லி, தொட்டுக்க கோவை 2 தில்லி சொல்லியிருககற புளியில்லா சாம்பார், கீதா சொல்லியிருககிற கோவைக்காய் சட்னி, கூடவே தெய்வசுகந்தி சொல்லியிருககற எளியமுறை கார்ன் சாலட்...’’

‘‘அட தடியா! மெனு சூப்பராச் சொல்‌றியே... மதியச் சாப்பாட்டுக்கு என்னன்னு ப்ளான் பண்ணி வெச்சிருப்பியே..?’’ சிரித்தான் விவேக்.

‘‘ஆமாம் பாஸ்! முதல்ல மிராவின் கிச்சன்ல சொல்லியிருக்கற அகத்திக் கீரை சூப், அப்புறம் மாதேவி சொல்லியிருக்கற காரட் வெங்காய பிரியாணி, அப்புறம் ஆசியா ஓமர் சொல்லியிருக்கிற முருங்கைப் பூ முட்டை சாதம், இதுக்குத் தொட்டுக்க புதுகைத் தென்றல் சொல்லியிருககிற ஹோட்டல் க்ரேவியும், ஜலீலா கமல் சொல்லியிருக்கிற செளராஷ்ட்ரிய சிக்கன் க்ரேவியும் பண்ணிடலாம் பாஸ்’’

ரூபலா மூககில் விரலை வைத்தாள். ‘‘மெனு லிஸ்ட் இவ்வளவுதானா விஷ்ணு..? இன்னும் இருக்கா?’’

‘‘இருக்கு மேடம். சாயங்காலம் நாலு மணிக்கு எனக்கு சத்யாஸ் கிச்சன்ல சொல்லியிருககற வெஙகாய சமோசாவும், ஸஷிகா சொல்லியிருக்கிற பேக்ட் வெண்டைககாய் பகோடாவும் சிம்பிளா ரெடி பண்ணிடுங்க மேடம்...!’’

‘‘இது சிம்பிளா உனக்கு?’’ என்று விஷ்ணுவின் தலையில் தட்டினாள் ரூபலா. ‘‘நைட்டுககு என்னங்கறதையும் கையோட சொல்லிடு’’

‘‘அதுவா மேடம்...? நைட்டுக்கு... தூயாவோட அடுப்பங் கரைல ‌சொல்லியிருக்கற வெஜிடேரியன் நூடுல்ஸ், அதோட ஜோடி சேத்துக்க தமிழ்ச் சமையல்ல சொல்ற கத்தரிக்காய் க்ரேவி, அப்புறம் லக்ஷ்மிம்மா சொல்லியிருக்கற புல்கா ரொட்டி, அதுக்கு துணையா பாசமலர் சொல்லியிருக்கிற பாசிப்பருப்பு இட்லி சாம்பார் பண்ணிடுங்க மேடம்...’’

‘‘ஹப்பா... ஒரு வழியா முடிச்சியே...’’

‘‘இன்னும் முடிக்கலை மேடம். நான் சொன்ன ஐட்டங்களுக்கப்புறம் சாப்பிட ஸவிதா ‌சொல்லியிருக்கற குக்கர் கேக்கும, சாப்பிட்டதும் குடிக்க அமைதிச்சாரல் சொல்லியிருககற புளிககும் காயில் இனிக்கும் சர்பத்தும் ப்ரிப்பேர் பண்ணிடுங்க மேடம்!’’

ரூபலா பிரமிப்புடன் விஷ்ணுவைப் பார்க்க, விவேக் சிரித்தான். ‘‘டேய், நீ சொன்ன இத்தனை ஐட்டத்தையும் செஞ்சு சாப்பிட்டா ஒரே நாள்ல நீ குண்டாயிடுவ. ரெடி பணணினதுல ரூபி ஒரேநாள்ல ஒல்லியாயிடுவா. அதுககுப் பதிலா... நாளைக்கு நாம மூணு பேருக்கும் ஸ்டார் ஹோட்டல்ல என் செலவுல ட்ரீட்... புறப்படுடா...’’

‘‘ஓ.கே. பாஸ்! மேடம், நாளைக்கு அப்ப சமையலறைப பக்கம் போக வேண்டாம் நீங்க. சமையலறைய எப்படி சுத்தமா வெச்சுக்கறதுங்கறதை ராஜி சொன்ன உன் சமையலறையில் நீ சமர்த்தாங்கறதைப் படிச்சுத் தெரிஞ்சுக்கங்க... நான் புறப்படறேன்...’’ ரூபலா இன்னும் பிரமிப்பு விலகாமல் நிற்க, விவேக்குடன் கிளம்பிச் சென்றான் விஷ்ணு.

=================================================
பின்குறிப்பு: ஃப்ரெண்ட்ஸ்! ஒண்ணு கவனிச்சீங்களா? இந்த விஷ்ணு இவ்வளவு மெனு ‌சொன்னாரே... 100 சதம் லேடீஸ் ஸ்பெஷலாக்கிட்டார். ஏன் வலையுலகில ஒரு நளனோ, ஒரு பீமனோ கிடையாதா? -பா.கணேஷ்.

=================================================

51 comments:

  1. hotel gravy அறிமுகத்துக்கு மிக்க நன்றி

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  3. @ புதுகைத் தென்றல் said...

    பதிவேற்றம் பண்ணிட்டு அனைவருக்கும் தகவல் தெரிவிச்சுட்டு இருந்தேன். அதற்கு முன்பாகவே கவனித்து கருத்திட்டு எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

    @ தெய்வசுகந்தி said...

    படித்துக் கருத்தி்ட்ட தங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  4. கோவை2தில்லி - புளியில்லா சாம்பார் பதிவினை அறிமுகம் செய்ததற்கு நன்றி.

    நளனோ பீமனோ ஏன் இல்லை கணேஷ். இருக்கிறார்கள். :))

    இன்னிக்கு விஷ்ணுவும் விவேக்கும் கலக்கிட்டாங்க! வாழ்த்துகள். இருக்கிற எல்லா உணவு வகைகளையும் ஒரு பிடி பிடுச்சுட்டு வரேன்!

    ReplyDelete
  5. ஹாஹாஹாஹா...


    பீமனும் நளனும் இப்போ சமைக்கறதை(யே) விட்டுட்டாங்களாம்:-)))))

    ReplyDelete
  6. @ வெங்கட் நாகராஜ் said...

    ஆமாம் வெங்கட். நான் ரசிச்ச ரெஸிபி வலைச்சரத்துல வந்திருக்குன்னு சொல்லலாம்னு பாத்தா, மேடம் ப்ளாக்ல விடுமுறை அறிவி்ப்பு வெச்சிருககாங்க. அவங்க சார்பா நீங்க ரசிச்சுப் படிச்சதுக்கும், ஊக்குவிக்கும் கருது்துச் சொன்னதுக்கும் என் மனமார்ந்த நன்றி!

    @ துளசி கோபால் said...

    இங்க பெண்கள் தந்திருக்கிற ரெஸிபியெல்லாம் படிச்சதும் எனக்கும் அதான் தோணிச்சு டீச்சர்! சரியாச் சொன்னீங்க. உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  7. மிக அருமையாக சமையல் குறிப்புகள் அடங்கிய வலைத்தளங்களை தொகுத்து அளித்தது மிக நன்றாக உள்ளது.

    ReplyDelete
  8. ஏன் வலையுலகில ஒரு நளனோ, ஒரு பீமனோ கிடையாதா? -

    நீங்கள் தேடிய நளன் நான் தான் ஆனால் அதற்கு என்ற வலைத்தளம் தொடங்கி பதிவு போட நேரம் இல்லை. எனக்கு நன்கு ரசித்து சாப்பிடுபவர்களுக்கு சமைத்து போடுவது எனது ஹாபியில் ஒன்றாகும்.

    நெட்டில் ஒரு சில பெண்களைத்தவிர மற்றவர்கள் போடும் சமையல் குறிப்புக்ளை பார்க்கும் போது இதையும் சமையல் குறிப்பு என்று படத்துடன் விளக்கம் தந்து போடுவதை எண்ணி சிரிப்பதை தவிர வேறு வழியில்லை

    ReplyDelete
  9. அறுசுவை உணவுகள் தயாரிப்பது பற்றிய பதிவுகளை தங்கள் பாணியில் சுவையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.நன்றி!

    வலையுலகில் ஒரு நளனோ, ஒரு பீமனோ கிடையாதா? எனக்கேட்டுள்ளீர்கள். நிச்சயம் இருக்கிறார்கள்.அவர்களின் பதிவுகளை திரு விஷ்ணு படிக்கவில்லை என நினைக்கிறேன்!

    ReplyDelete
  10. அறிமுகங்கள் அருமை.என் குறிப்பையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. @ Avargal Unmaigal said...

    தொகுத்து வழங்கியதை ரசித்துப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி! நளபாகத்தையும் அவ்வப்போது வெளியிடுங்கள் நண்பா. நான் ரவை உப்புமா செய்வது பற்றி எழுதலாம்னு நினைச்சேன் (அவ்வளவுதான் தெரியும்). அப்புறம் கல்லடிக்குப் பயந்து அந்த யோசனையை விட்டுட்டேன். இந்த லெட்சணம்தான் என் சமையல் அனுபவம். நீங்களாவது எழுதுங்க...

    @ வே.நடனசபாபதி said...

    ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி. விஷ்ணுவை இன்னும் நன்றாய் வலையுலகில் தேடச் சொல்கிறேன்.

    @ Asiya Omar said...

    உற்சாகம் தந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்!

    @ NIZAMUDEEN said...

    சுவையை ரசித்து மகிழ்ந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

    ReplyDelete
  12. ஆஹா.. ஒரே வாரத்துல மூணு பிரபலங்கள் வாயால் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும் பாக்கியம் பெற்றேன்..

    நன்றி ..இதைத்தவிர பொருத்தமான சொல் இருக்கா!!..

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  13. என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நன்றி + சந்தோஷம்
    அனைத்து சமையல் ராணிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

    சாந்தி மூன்று முறை அறிமுகமா? சூப்பர். மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  14. சோள ரவா இட்லியை தங்கள் வலைச்சரத்தில் இணைத்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. கணேஷ் இவ்வளவி ஐட்டங்களையும் ஒரே நாளிலா சாப்பிட்டாங்க.? புல்கா ரொட்டியையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. //ஒரு டப்பா நிறைய மோகினிப் பிசாசுகள்.// நல்ல காமெடி

    கதைக்கு தேவையான கருவும் அந்த கருவை வளர்க்கும் வித்தையும் அபாரம.

    அருமையான செயல் வாத்தியாரே. உங்களுக்குள் இருக்கும் வாத்தியார் சிறப்பாக செயல்படுகிறார்

    ReplyDelete
  17. தலைப்பை பார்த்ததும் ஜோதிடப்பதிவு அறிமுகம் என்று நினைத்தேன்.நீங்களோ விவே ரூபலா விஷ்ணுவை வைத்து பெரிய பந்தியே பறிமாறி விட்டீர்கள்.அறுசுவை அருமை..

    ReplyDelete
  18. அங்க ஜோதிடம் இங்க சமையல் அடுத்து என்ன என்ற ஆவல் கூடுகிறது . வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  19. எனக்கு பிடித்த.., என்னை செதுக்கிய ராஜேஷ்குமாரின் காதாபாத்திரங்களான விவேக், ரூபலா, விஷ்ணு தங்களது இப்பதிவில் வந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது..,


    அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  20. @ அமைதிச்சாரல் said...
    ரசித்துக் கருத்திட்டு நன்றி நவின்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    @ Jaleela Kamal said...
    அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி.

    @ Kamala said...
    கருத்திட்டு மகிழ்வித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

    @ Lakshmi said...
    விஷ்ணு இவ்வளவு ஐட்டங்களையம் ஒரே நாள்ல சாப்பிட ஆசைப்பட்டா விவேக் விட்றுவாரா? அதான் ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறேன்னுட்டார், உங்களுக்கு என் இதய நன்றிம்மா.

    ReplyDelete
  21. ஒவ்வொன்னையும் போய்ப் படிச்சா நாக்கு ஊறுது. யார் நமக்கு இதெல்லாம் பண்ணிக் குடுப்பாங்க....போங்க கணேஷ்... பசி நேரத்துல...!

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. உண்மையைச் சொல்லணும்னா பரத், சுசீலா, விவேக் ரூபலா எல்லாம் நான் படிச்சதே இல்லை.

    ReplyDelete
  24. @ seenuguru said...
    தினம் தவறாமல் கருத்திட்டு எனக்கு உற்சாக டானிக் கொடுக்கும சீனுவுக்கு என் மனமார்ந்த நன்றி.

    @ ஸாதிகா said...
    அறுசுவை அருமை என்ற வார்த்தையால் மகிழ்வித்த தங்கைக்கு என் இதய நன்றி.

    @ தமிழ்வாசி பிரகாஷ் said...
    டியர் பிரகாஷ். உங்களுக்கு இது பிடிச்சிருந்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    @ சசிகலா said...
    உங்களுக்கு ஆவல் கூடுது தென்றல்... எனக்கு பயம் கூடுது இந்த எதிர்பார்ப்பை சரியா நிறைவேத்தணுமேன்னு. மிக்க நன்றி.

    @ வரலாற்று சுவடுகள் said...
    என நண்பர் ரா.கு,வின் பாத்திரங்களுக்கு நீங்கள் விசிறி என்பதில் மனமகிழ்வுடன் என நன்றி.

    @ Seeni said...
    ரசிததுப் படித்த உஙகளுக்கு ஒரு ட்ரீட் கொடுத்திட வேண்டியதுதான். நன்றி சீனி.

    ReplyDelete
  25. @ ஸ்ரீராம். said...
    ஹுக்கும்... இங்கேயும் அதே கதைததான். செஞ்சு தர ஆளில்லாததால பதிவாவது போட்டு மனசைத் தேத்திக்கறேன். பரத்-சுசி, விவேக்-ரூபலா படிக்காட்டியும் அவங்க கேரக்டர் ஸ்டைலை புரிஞ்சுட்டிருப்பீங்களே... அது போதும். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி தோழரே...

    ReplyDelete
  26. இன்று சமையல் கும்பமேளாவா! மாலையில் எல்லாம் வாசிக்கும் எண்ணம். அறிமுகம், - தங்களிற்கும் வாழ்த்துகள். கணேஷ் சார்!...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  27. மிக்க நன்றி கணேஷ்..என் பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு...

    வித்தியாசமான பாணியில் வலைச்சரத்தில் அசத்துறீங்க..பாராட்டுகள்

    ReplyDelete
  28. அப்பப்பா ..
    கதாபாத்திரங்களை வைத்து அதரகளம்
    செய்கிறீர்கள் போங்கள்...
    வலைச்சரம் மணக்கிறது நண்பரே..

    ReplyDelete
  29. அடடே!

    அண்ணே, இன்னைக்கு ‘நம்ம’எதுக்காக உயிர் வாழறமோ (சிலர் உயிர் வாழறதுக்காக சாப்பிடறவங்க பலர் இருக்காங்க) அதைப் பத்தின பதிவுகளா தேடி போட்டிருக்கீங்களே!

    ரொம்ப நன்னாயிருக்கு!

    ReplyDelete
  30. நல்ல
    அறிமுகங்கள் சார்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. குக்கர் கேக் யை அறிமுகம் செய்ததற்கு நன்றி அனைவருக்கும் பாராட்டுக்கள்.ரொம்ப சந்தோஷமா இருக்கு. நா ப்ளாக் எழுதவே இப்போ தான் ஆரம்பிச்சேன். என்னை மேலும் ஊக்க படுத்தியமைக்கு மிக்க மிக்க நன்றி.

    ReplyDelete
  32. வணக்கம் தோழர் மன்னிக்கவும் தாமதாமாகிடுச்சு.இன்னைக்கு காலையில இருந்து பவர்கட் அதனால வலையுலகப் பக்கமே வரமுடியல..
    ராஜேஷ்குமாரோட கதாபாத்திரங்களான விவேக் ரூபலா மற்றும் விஷ்ணு பாத்திரங்களை வைத்து இன்றைய அறிமுகங்கள் சுவை.நான் விவேக் ரூபாலாவின் காதலையும் அவர்களின் ஊடலையும் வெவகுவாக ரசிப்பவன்..இப்போதும் ரசித்தேன்..உங்களின் அறிமுகப் பதிவுகள் வலைச்சரத்திற்கு புதுமையாக இருக்கும் என நினைக்கிறேன்..நாளை என்னவென்று யூகித்துக் கொண்டிருக்கிறேன்..வாழ்த்துகள்..

    ReplyDelete
  33. சமையல் வாசனை....அதுசரி அசைவம் குறைவா இருக்கு.இண்டைக்கு என்ன விரதமோ ஃப்ரெண்ட்.நாளைக்குத்தானே வெள்ளிக்கிழமை !

    எப்பிடி....எப்பிடி ”ஒரு டப்பா நிறைய மோகினிப் பிசாசுகள்....”என்னா ஒரு தைரியம் !

    ReplyDelete
  34. எங்க ஊர்க்காரரான ராஜேஷ்குமார் அவர்களின் கதாபாத்திரங்கள் மூலம் எனக்கு அறிமுகம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
  35. @ kovaikkavi said...
    உங்களுக்கு சமயம் கிடைக்கும் போது சமையல் விஷயங்களை வாசிக்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் என் இதய ந்ன்றி.

    @ பாச மலர் / Paasa Malar said...
    வித்தியாசமான பாணி என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    @ சத்ரியன் said...
    ஹா... ஹா... நன்னாச் சொன்னேள் தம்பி. ரசித்துக் கருத்திட்டதில் மகிழ்வோடு கூடிய என் நன்றி.

    @ மகேந்திரன் said...
    மணக்கும் வலைச்சரத்தின் வாசத்தை முகர்ந்து ரசித்த தங்களுக்கு என இதயம் நிறை நன்றி மகேன்.

    ReplyDelete
  36. @ செய்தாலி said...
    ரசித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் இதய நன்றி.

    @ savitha said...
    ஆரம்ப நாட்களில் வலைச்சர அறிமுகம் எனக்குத தந்த மகிழ்வு இன்றும் என் மனதில் என்பதால் உங்கள் மகிழ்வை அறிய முடிகிறது ஸவிதா. தங்களுக்கு என் மனமார்ந்த ந்ன்றி.

    @ arul said...
    Thank you verymuch Arul!

    @ மதுமதி said...
    ரசித்துப் படித்து கருத்திட்டு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி கவிஞரே...

    @ ஹேமா said...
    நான் சுத்த சைவமல்லோ... அதான் அசைவம் வரலை. ஹய்யோ... அது நான் சொல்லலை ஃப்ரெண்ட். கோவிக்காதீங்கோ.. அது விஷ்ணு சென்னது.

    @ கோவை2தில்லி said...
    ஆதிமேடம்... உங்க ஊர்க்கார எழுத்தாளர் எனக்கு நல்ல நண்பர், அதனாலயும் நீங்க சந்தோஷப்பட்டதுல எனக்கு சந்தோஷம், மிக்க நன்றி.

    ReplyDelete
  37. சுவையான உரையாடல்களுடன் அசத்தல் அறிமுகங்கள்...நன்றிகளும்,வாழ்த்துக்களும் சார்!!

    ReplyDelete
  38. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    சின்னுரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்கநன்றி.

    ReplyDelete
  39. இன்று அறிமுகப்படுத்திய அனைத்துத் தளங்களும் அருமை. நல்ல ரசிப்புத்திறன் உங்களுக்கு கணேஷ். பிரமாதப்படுத்திட்டீங்க. பாராட்டுகள்.

    ReplyDelete
  40. வித்தியாசமான பாணியில் பதிவை எழுதி அசத்துறீங்க..நன்றி கணேஷ் சார்..என் பதிவையும் அறிமுகப்படுத்தியமைக்கு...

    //ஒரு டப்பா நிறைய மோகினிப் பிசாசுகள்.// நல்ல காமெடி

    ReplyDelete
  41. @ S.Menaga said...

    ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

    @ மாதேவி said...

    வருகையால் எனக்கு மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

    @ கீதமஞ்சரி said...

    என் ரசிப்புத் திறனைப் பாராட்டி என்னை மகிழ்ச்சியில் துள்ளச் செய்த தோழிக்கு என் மனம் நிறைந்த நன்றி!

    @ Priya said...

    வித்தியாசமான பாணி என்று சொல்லியும், ரசித்துச் சிரித்தும் எனக்கு ஊக்கமளித்த ப்ரியாவிற்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  42. வணக்கம்  கணேஸ் அண்ணா!
    இராஜேஸ்குமாரின் சாஸ்திரத்தையும் இந்த    சமையல் குறிப்புக்களையும் விஸ்ணு மூலம் கண்டதில் மகிழ்ச்சி ஆனால் சைவம் அதிகமே இன்று ! 

    ReplyDelete
  43. @ தனிமரம் said...

    வாங்க நேசன்... உங்களுக்குப் பிடிச்சிருந்ததுல மகிழ்ச்சி. அசைவம் அடுத்த முறை நிறைய்க் குடுத்திடலாம்... நன்றி!

    ReplyDelete
  44. லேடீஸ் ஸ்பெஷல் பதிவுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். சமையல் பற்றிய நல்ல பதிவுகளின் அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  45. ஆஹா!குக்கரி ஸ்பெஷலா...நான் ரூபலாவை விட பரிதாபமா முழிச்சேன்... !! எப்பொவானும் எட்டி பார்க்கணம் நீங்க சொன்ன தளங்களை

    ReplyDelete
  46. @ RAMVI said...

    படித்து, ரசித்து, வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

    @ Shakthiprabha said...

    ம்ம்ம்... முடியறப்ப எட்டிப பாருங்க. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது