இவர்கள் பதிவுலக டாக்டர்கள்
➦➠ by:
அப்துல் பாஸித்
பதிவுலகை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இங்கே
இலக்கியம், அரசியல், சினிமா, தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளைப் பற்றி
பலரும் எழுதி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக "பதிவுலகில் இவ்வளவு டாக்டர்களா?" என்று வியக்கும் அளவு மருத்துவப் பதிவுகள் விரவிக் கிடக்கின்றன.
உங்களுக்கு சிரிக்க தெரியுமா? |
அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா... "வாய் விட்டு சிரிச்சா, நோய் விட்டு போகும்"னு பெரியவங்க சொல்லுவாங்க. அப்படி நம் நோய்களை விட்டு போகச் செய்யும் நகைச்சுவை பதிவுகளைத் தான் பார்க்க போகிறோம். அதை நீங்கள் மொக்கை என்று அழகிய வார்த்தையில் அழைத்தாலும் சரியே!
மொக்கை எனப்படுவது யாது?
மொக்கை எனப்படுவது இரண்டு வகைப்படும். பதிவை படிக்கும் போது "இதுவெல்லாம் ஒரு பதிவா?" எனத் தோன்ற வைப்பது முதல் வகை. ஆனால் பதிவை படிக்கும்போதே நம்மையும் அறியாமல் வாய்விட்டோ அல்லது மனம்விட்டோ சிரித்துவிட வைப்பது இரண்டாம் வகை. நாம் பார்க்கவிருப்பது இரண்டாம் வகை மொக்கை பதிவுகளைத் தான்.
"எனக்கு மொக்கை பிடிக்காது" என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் "எனக்கு சிரிக்க தெரியாது" என்று சொல்ல முடியாது. நீங்கள் கொஞ்ச நேரம் சிரிக்க வேண்டும் என நினைத்தால் அவசியம் இவைகளை படியுங்கள்.
மொக்கை என்பதற்கு அகராதியில் "செல்வா" என்று மாற்றலாம். அந்தளவு சிந்தனை செய்யும் "ட்விட்டர் #selvueffect" புகழ் நண்பர் செல்வா அவர்கள் நமக்கு வரும் ராங் நம்பரை கண்டுபிடிக்கும் வழியை கற்றுத் தருகிறார்.
கடந்த வருடம் ப்ளாக்கரில் பிரச்சனை ஏற்பட்ட போது அனைவரும் அமைதியாக இருக்க Google-க்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு..?!! என்று நண்பர் வெங்கட் அவர்கள் கூகுளுக்கு சற்று காட்டமாக எழுதிய கடிதத்தை நம்முடன் பகிர்கிறார்.
என் பொண்டாட்டி! என்னை அடிச்சுட்டா ! என சொல்லும் நண்பர் யானை குட்டி ஞானேந்திரன் அவர்களின் பதிவை படிக்கும் போது உங்களுக்கு குபீர் சிரிப்பு வரவில்லை என்றாலும் ஒரு மெல்லிய புன்னகையைத் தவழச் செய்யும்.
சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது என்று கேட்கும் நண்பர் மின்மலர் அவர்கள் கட்டிப்போட்டாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை படத்துடன் விளக்குகிறார்.
பதிவெழுத பத்துக் கட்டளைகளை இடுகிறார் நண்பர் கார்த்திக் அவர்கள். ஆக்சுவலி இது ஒரு தொழில்நுட்ப பதிவாகும். இங்கு ஏன் பகிர்கிறேன் என்பதை அந்த பதிவைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு வயதாகிவிட்டதா? என்பதை அறிய நண்பர் ராஜா அவர்கள் ஒரு டெஸ்ட் வைக்கிறார். [டெஸ்ட் முடித்தப் பின் என்னை அடிக்க வரக் கூடாது, சொல்லிட்டேன்]
நான் ஏன் பரிட்சையில் முட்டை வாங்கினேன்? என்று கேட்கும் நண்பர் தமிழ்வாசி ப்ரகாஷ் அவர்கள் அதற்கான காரணத்தையும் விவரிக்கிறார். படித்து விட்டு ஏன்? என்று நீங்களே சொல்லுங்கள்.
இந்த டாக்டர் ரொம்ப முக்கியமானவர்.... எனசொல்லும் நண்பர் கவிதை வீதி சௌந்தர் அவர்கள் சின்ன சின்ன நகைச்சுவைகளால் நம்மை சிரிக்க வைக்கிறார்.
ஒரு நாள் முதல்வர் போல ஒரு நாள் பதிவர் பற்றி சகோதரி ப்ரியா அவர்கள் பகிரும் பேட்டியையும் படியுங்கள்.
மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்??? என்று கேட்கிறார் நண்பர் ??????? [அதை சொல்லலியே?]
பிளாக் மற்றும் வெப் ஆகியவற்றை படங்களுடன் எளிமையாக விளக்குகிறார் நண்பர் விச்சு அவர்கள்.
தற்கொலைக்குச் சிறந்த வழி!! என்னவென்பதை படத்துடன் கூடிய கவிதையால் விவரிக்கிறார் ஐயா சென்னை பித்தன் அவர்கள்.
இது கிரிக்கெட் சீசன் என்பதால் நண்பர் நிலவன்பன் அவர்களின் ஐபிஎல் நகைச்சுவைகளை போட்டோக்களுடன் படித்து ரசியுங்கள்.
"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்று சொல்வார்கள். அதனால் இன்று இது போதும் என நினைக்கிறேன்.
அடுத்த பதிவிற்கான ட்ரைலர்:
நான் வீழ்வேன் என நினைத்தாயோ?
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்!
- ப்ளாக்கர் நண்பன் (எ) அப்துல் பாஸித்
|
|
சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் தானே...!! சிரிக்க...சிரிக்க.. பதிவுகளை தொகுத்தமைக்கு வாழ்த்துகள்..நன்றி அப்துல் பாசித் அவர்களே..!!
ReplyDeleteஎனது பதிவை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி நண்பரே! :)
ReplyDeleteமின்மலர் பதிவை அப்போதே படித்தேன். மற்றவற்றை விரைவில் படித்து மகிழ்கிறேன். :D
ReplyDeleteவாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும். சிரிச்சா என்ன செலவா ஆகும்னு ஒரு பாட்டே இருக்கு. சிரிச்சு ரசிச்சு இளமையா இருந்தா டாக்டரே வேணாம். இவ்வளவு டாக்டர்களின் அறிமுகங்களுக்கு உங்களுக்கு நன்றி மற்றும் டாக்டர்களுக்கு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான நகைச்சுவைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteThanks for sharing..
ReplyDeletePost Photo Perfect..
sambath
சிரிக்க சிந்திக்க வைக்கும் பதிவுகளை வரிசைப் படுத்தி தந்த விதம் அருமை .
ReplyDeleteமுன்பு பதிவுலக பதிவுகள் படிக்கும் போது இது போல நகைச்சுவை பதிவுகளை தேடி தேடி போய் படிப்பேன்.
ReplyDeleteசூப்பாரானா டாக்டர்ஸ்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Good
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே, அணைத்து பதிவுகளையும் படித்துவிட்டேன்.. நகைசுவை உணர்வு உள்ளவர்கள் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது.
ReplyDeleteநல்லது!!!
ReplyDeleteநல்லது!!!
ReplyDeleteநல்லது!!!
ReplyDeleteநல்லது!!!
ReplyDeleteபல அருமையான நகைச்சுவை பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். உங்களது கடின உழைப்பிற்கும் வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDeleteநல்ல முயற்சி...வாழ்த்துக்கள் தம்பி....
ReplyDeleteஅருமையான நகைச்சுவைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteநகைச்சுவை பதிவர் அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநோயை பறக்க வைக்கும் ப்ளாக்கர் டாக்டர்ஸ்களா ?? :-)
ReplyDeleteமொக்கை பிரிவில் சிராஜ் பதிவு வரும்னு ஆவலா எதிர்பார்த்தேன்! கடைசி வரைக்கும் வரல! அப்பதான் தெரிஞ்சது அவர் ப்ளாக் படுமொக்கைன்னு ஹி..ஹி..ஹி..
அருமையான தொகுப்பு பாசித்
வீழ்வேனென்று நினைத்தாயோ- அழகான வரி ஹி..ஹி..ஹி... (ப்ளாஸ்பேக் ஸ்டேடஸ் ஓடுது :-)
வாழ்த்துகள் சகோ
தொடர்ந்து கலக்குங்க!
தலைப்பு பர்பெக்ட் நண்பா.., சிரிச்சு சிரிச்சு வயிருவலிச்சு நாளைக்கு நான் ஆஸ்பத்திரி போகவேண்டியது வந்தா செலவை மணியார்டர் பண்ண சொல்லி நண்பா (பாசித்) உங்களுக்கு மெயில் அனுப்புவேன் ஆமா சொல்லிப்புட்டேன் ..!
ReplyDeletePADITHU VITTU EZHUTHUKIREN!
ReplyDeleteமனநல மருத்துவர் பட்டியல்
ReplyDeleteகண்டேன் அருமை!
வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
பதிவுலக டாக்டர்கள்-அருமையான தலைப்பு!
ReplyDeleteகலக்கல் அன்பரே பல தளங்கள் எனக்கு புதிது
ReplyDeleteஆபிஸ்ல இருந்து மூட் அவுட்டாகி வந்து, பின் இந்தப் பதிவுகளைப் படித்ததும் மீண்டும் ரிலாக்ஸ் ஆகிட்டேன். பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்...
ReplyDeleteஅழகான எழுத்து...
வாழ்த்துக்கள் நண்பா.
தொடருங்கள்... தொடர்கிறோம்...
நட்பின் இலக்கணம்...
ReplyDeleteஅருமையான கருத்துக்களை கொண்ட பதிவு
அறிமுகத்துக்கு நன்றி!அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பர் ராஜாவுடைய டெஸ்ட்டில் ஜஸ்டில் பாஸ் ஆனேன் (ஆன்ஸர் லீக் ஆனதால் பிழைத்தேன்!!)
ReplyDeleteஎல்லாமே ரொம்ப அருமையான அறிமுகங்கள்.. நன்றி!
அருமையான பதிவுகளை அள்ளி கொடுத்து இருக்கீங்க சிரித்து மகிழ்ந்தேன் நன்றி அப்துல்
ReplyDeleteஅருமையான அறிமுகம்.
ReplyDeleteவாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் நன்றி! நேரமின்மை காரணமாக தனித் தனியாக பதில் அளிக்க முடியவில்லை.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDelete