07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 15, 2012

உலகத்து அற்புத அதிசயங்கள்!


உலகத்து அற்புத அதிசயங்கள்

சின்சென் இட்சா சுற்றுலா பயணிகளின் கோட்டையாய், மாயன் நாகரீக காலத்தை உள்ளடக்கி , முக்கிய நகரமாய் ...உலகின் முதல் அதிசயமாய் .மெக்சிகோவில் உள்ளது .



மீட்பரான கிறிஸ்துவின் சிலை

 பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும்.  மலை மீது கிற்ஸ்துவ மார்க்கத்தின் சின்னமாய் , உலகிலேயே நான்காவது மிகப்பெரிய சிலையாக அமைந்துள்ளது .





கொலோசியம், ரோம்
போர்வீரர்கள் தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும்.





சீனப் பெருஞ் சுவர்
மஞ்சூரிய மன்னர்கள் படையெடுப்புகளிலிருந்து நாடுகாக்கக் கட்டப்பட்டது சீனப் பெருஞ்சுவர் .  ஆறாயிரத்து நானூறு கிலோமீட்டர் நீளத்தில் ,கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்டு நாடு காத்த பெரும் சுவராய் .






மச்சு பிக்ச்சு
தொலைந்த நகரமான இது 1450 இல் கட்டப்பட்டு இன்றும் இன்கா பேரரசின் சின்னமாய் விளங்குகிறது .







பெட்ரா
ஜோர்டான் நாட்டின் தேசிய கருவூலம் .



தாஜ் மஹால்
 ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




நான் கண்டு வியந்த அதிசய வலைப்பூக்களையும் வரிசைப்படுத்துகிறேன் .

மரபின் வழியே கவி பாட வரமே தருவாய் என் தாயே .. என தம் வரிகளால் மகத்தான கவிகளைத் தரும் புலவர் சா இராமாநுசம் ஐயா .
ஐயாவின் சீர்மிகு தமிழின் அழகு .

வாழ்வியல் நுட்பங்களை, தம் வாழ்நாளில் கடந்து சென்ற பயண நாட்களின் அனுபவங்களை நம் வாழ்விற்கு வழிகாட்டியாக கவிதை வரிகளில் சொல்லும் ரமணி ஐயா .

சிறிது ஆன்மிகம் ,சிறிது இலக்கியம் எனக்குறிப்பிட்டு ,கொலையை மறுதளிப்பவன் வாழ்வாங்கு வாழ்வான் எனவும் சொல்கிறார் ஐயா மதுரை சொக்கன் அவர்கள் அது என்ன கொலை என்று பார்ப்போம் வாருங்கள் .

தலைப்பை வைத்தே தம் பக்கம் இழுக்கும் வல்லவர் , சிரிக்கவும் சிந்திக்கவும் நமக்கு பதிவுகளை வழங்கும் சென்னைப் பித்தன் ஐயா .

தமது எண்ணங்களையும் , அனுபவங்களையும் எழுத்துக்களில் கொடுக்கத் தவறாத G.M Balasubramaniam  ஐயா அவர்கள் அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன பாருங்கள் .

அவர்கள் என்னை மயக்கிய சிங்காரியே... இப்படி காதல் ததும்பும் வரிகளால் யாரைக் கொஞ்சுகிறார் என்று பார்ப்போம் வாருங்கள் .

நாம் பயணிக்கும் வாழ் நாட்களில் வாழ்வே போராட்டமாய் என்று முக்காலத்தையும் உணர்த்திச் சொல்கிறார் தி.தமிழ் இளங்கோ அவர்கள் .

'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்' மனுசங்களை வதைப்பதையே பெரிசா நினைக்காத இந்த காலத்துல இப்படியும் ஒருவரா பார்க்கத்  தோணுது இல்ல வாங்க வே.நடனசபாபதி  அவர்களின் வலைப்பக்கம் . நம்பிக்கை தான் வாழ்க்கை என்கிறார் .



31 comments:

  1. எக்ஸலண்ட். அதிசயங்களைப் பகிர்ந்ததோடு அதிசயமான அரிய பதிவுகளையும் பகிர்ந்திருக்கிறீர்கள் தென்றல். நன்று. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உலக
    அதிசயங்களும்
    மூத்த தமிழ் குழந்தைகளின்
    நல் அறிமுகளும்

    அருமை பாரட்டுக்கள் சகோ

    ReplyDelete
  3. அறிய பதிவுகள் தான் சிலவற்றை நான் இன்றுதான் பார்கிறேன் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளும்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. என்னையும் அறிமுகப்படுதினீர் மிக்க நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  6. வலைச்சரத்தில் எனது பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே!

    ReplyDelete
  7. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்... வலைச்சரத்தில் சசியின் அதிசயம்.நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  8. பலே பலே.. என்று சொல்லும் அளவிற்கு இன்றைய பதிவு இருக்கிறது. செய்தி சேகரிப்பும் படங்கள் சேகரிப்பும் அருமை.இன்றைய அறிமுகங்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  9. வணக்கம்! வலைச்சரத்தினில் “எனது எண்ணங்கள்” என்ற எனது பதிவினை அறிமுகம் செய்த சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  10. கணேஷ் ...
    உடன் வருகை தந்து உற்சாகமளித்த தோழருக்கு எனது மனமார்ந்த நன்றி .

    arul....
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

    செய்தாலி...
    தங்கள் வருகையும் நான் சற்று சோர்ந்து அமரும் நேரம் உற்சாகமாய் எழுப்பிவிடும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

    கோவை மு.சரளா
    மகிழ்ந்து வாழ்த்தியமை கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

    புலவர் சா இராமாநுசம்
    ஐயா தங்கள் வருகையும் ஆசியும் என்றென்றும் வேண்டுகிறேன் . நன்றி ஐயா .

    வே.நடனசபாபதி ..
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    விச்சு
    பாடலோடு வந்து பாராட்டிய விதம் அருமை . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  11. மதுமதி ..
    சகோ தங்கள் வருகையும் ரசித்து பாராட்டியது கண்டும் மகிழ்ந்தேன் நன்றி சகோ .

    தி.தமிழ் இளங்கோ
    தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  12. உலக அதிசயங்களை கண்டு மகிழ்ந்தேன். எனக்கு இன்றைய பதிவுகளில் நிறையப் பேர் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள். சூப்பராப் பண்றீங்கக்கா... தொடரட்டும், அனைவருக்கும நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. உலக அதிசயங்கள் பற்றிய தகவல் கலக்கல், தொடர்ந்து கலக்குங்க ..!

    ReplyDelete
  14. வாழ்த்துகள் சசி.அறிமுகங்கள் புதிது.நன்றி !

    ReplyDelete
  15. அதிசயம் நானும் பார்க்கின்றேன்,
    ஆகா! படைப்பாய்க் காண்கின்றேன்,
    இனிய வலைச்சர அறிமுகங்கள்,
    ஈடில்லா பெரும் படைப்பாளிகளை,
    உலக அதிசயத்தோடு ஒப்பிட்டு,
    ஊருக்கு அறிமுகம் தனிச்சிறப்பு!
    எழுந்து ஆர்பரிப்பீர்,''அலைகடலாய்"

    ReplyDelete
  16. நிரஞ்சனா...
    சூப்பர் எனச் சொல்லி கைகுலுக்கிய சகோதரிக்கு நன்றி .
    வரலாற்று சுவடுகள்..
    கலக்கல் என வாழ்த்தி உற்சாகமளிக்கும் நட்பிற்கு நன்றி .
    ஹேமா..
    வாழ்த்துக்களோடு வருகை தந்த சகோதரிக்கு நன்றி .
    d.g.v.p சேகர்
    வரிகளால் உற்சாகப்படுத்தும் தங்களுக்கு நன்றி .

    ReplyDelete
  17. அன்பின் சசிகலா

    உலக அதிசயங்கள் - வலைப்பூக்களின் மூத்த பதிவர்களீன் பதிவுகள் - இவை எல்லாவற்றையும் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தியமி நன்று. வாழ்க வளமுடன். நட்புடன் சீனா

    ReplyDelete
  18. இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரத்தடை.இப்போதுதான் வலைப் பக்காமே வர முடிந்தது.
    என் வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி!
    அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  19. இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரத்தடை.இப்போதுதான் வலைப் பக்காமே வர முடிந்தது.
    என் வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி!
    அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  20. பயணங்களில் இருந்து நேற்றுதான் வந்தேன். வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. அதிசயங்களை அருமையாகப் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  22. வித்தியாசமான முறையில் தகவல் + அறிமுகங்கள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  23. வலையிலே நல்லா பின்னுறீங்க சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  25. சிறப்பான அறிமுகம்......

    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  26. புதிய அதிசயங்களின் பட்டியலையும் இணைக்கலாமே!

    ReplyDelete
  27. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  28. ஏற்கனவெ அறிந்த விடயெமென்றாலும் புதிதாய் அறிவதில் இன்னும் கொஞ்சம் ஞாபகத்தில் இருக்கிறது...நன்றி

    ReplyDelete
  29. சாதாரண பதிவு முக்கிய பதிவாக மாறும் விந்தையிது. அதிசயங்கள், அறபுதங்களோடு தங்கள் அவசியமான பதிவினைக் கண்டேன் நன்றி. நல்வாழ்த்து. அறிமுகமானவர்களிற்கும் நல்வாழ்த்து. தொடருங்கள் தொடருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  30. அதிசயங்களை படத்துடன் வழங்கி மகிழ்ச்சி அடையச் செய்துள்ளீர்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது