07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 11, 2012

பயனுள்ள தொழில்நுட்பப் பதிவுகள்

நீங்கள் இந்த பதிவை படிக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக நீங்கள் இணையத்தைப்  பயன்படுத்துபவராகத் தான் இருக்க வேண்டும் (என்னவொரு கண்டுபிடிப்பு?). மேலும் நம்மில் அதிகமானோர் கூகுள், பேஸ்புக் போன்ற சமூக தளங்களை பயன்படுத்து வருகிறோம். நம் அனைவருக்குமான பயனுள்ள தொழில்நுட்பப் பதிவுகளை இங்கே பார்ப்போம்.

நம்முடைய வலைப்பதிவுகளில் வைத்திருக்கும் திரட்டிகளை சீராக வைப்பது பற்றி பகிர்கிறார் "பன்முகப் பதிவர்" அன்புத் தம்பி பிரபு கிருஷ்ணா அவர்கள்.

தொழில்நுட்ப பதிவர்களில் முதலிடத்தில் இருக்கும் நண்பர் சசிகுமார் அவர்கள் ஹேக் செய்யப்பட பேஸ்புக் கணக்கை மீளப்பெறுவது பற்றி எளிமையாக விளக்குகிறார்.

நீங்கள் வலைப்பூ வைத்துள்ளீர்கள் என்றால் சமீபத்திய ப்ளாக்கர் பிரச்சனையை சரி செய்ய சகோதரி பொன்மலர் அவர்களின் பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுப்பது பதிவை படியுங்கள்.

 ப்ளாக்கர் பற்றிய தகவல்களைப் பகிர்கிறார் நண்பர் ஸ்டாலின் அவர்கள்.

பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்படுவதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் வழிகளை சொல்கிறார் நண்பர் அன்பு அவர்கள். 

தொடர்ந்து கணினி முன் பணிபுரிபவர்களுக்காக பயனுள்ள வீடியோவை பகிர்கிறார் நண்பர் மஹான் தமேஷ் அவர்கள்.

நமது மொபைல்களுக்கான தீம்களை நாமே உருவாக்குவது பற்றி கூறுகிறார் சகோதரர் வைரை சதீஷ் அவர்கள்.

தட்டச்சு பயில்வதற்கான மென்பொருளை அறிமுகம் செய்யும் நண்பர் வேலன் அவர்கள் மேலும் பல மென்பொருள்களை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

BSNL இணைய வேகத்தை அறிந்துக் கொள்ளும் வழிகளை சொல்கிறார் நண்பர் வடிவேலன் அவர்கள்.

Cloud Computing எனப்படும் மேகக் கணிமை பற்றி எளிமையாக விளக்குகிறார் நண்பர் கிரி அவர்கள்.

போடோஷாப்பில் தமிழில் டைப் செய்வது பற்றி கூறும் நண்பர் கான் அவர்கள் தளம் முழுவதிலும் போடோஷாப் பாடங்களை பகிர்கிறார்.

பற்றி கூறும் நண்பர் சரவணன் அவர்கள் மேலும் பல லினக்ஸ் தகவல்களை பகிர்கிறார்.

பேஸ்புக்கின் புதிய பாதுகாப்பு வசதி பற்றி கூறுகிறார் நண்பர் விக்னேஷ் அவர்கள்.

பதினோராயிரம் தமிழ்த் தளங்களை பட்டியலிடுகிறார் நண்பர் நீச்சல்காரன் அவர்கள்.

குழந்தைகளை இணையத்தில் இருந்து காப்பாற்றுவது பற்றி விளக்குகிறார் நண்பர் சுடுதண்ணி அவர்கள்.

நல்ல தூக்கத்திற்கு லேப்டாப் மொபைலை தவிர்க்க சொல்கிறார் நண்பர் தங்கம்பழனி அவர்கள்.

இன்னும் பலர் தொழில்நுட்பம் பற்றி அழகாக எழுதி வருகிறார்கள். வருடம் முழுவதும் படித்த....... (மீதி டயலாக்கை படிக்க கடந்த பதிவை படியுங்கள்)

அடுத்த பதிவிற்கான ட்ரைலர்:

சமூகம் + அறிவியல் = சமூக அறிவியல்???

இறைவன்  நாடினால் அடுத்த பதிவில் சந்திப்போம்!

- ப்ளாக்கர் நண்பன் (எ) அப்துல் பாஸித்

19 comments:

 1. வணக்கம் சகோ..

  எங்களை போன்ற புதியவர்களுக்கு இவர்களின் தளங்கள் நிச்சயம் உதவும்..

  தொகுத்தளித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 2. பெரிய பெரிய அப்பாடெக்கர்களா இருக்காங்களே. நிறைய பேர் புதுசா இருக்காங்க சகோ.

  அதிலும் முதல் ஆளு பதிவை இதுவரை நான் படிக்கவே இல்லை :P

  ReplyDelete
 3. அருமையான அறிமுகங்கள் .. வாழ்த்துகள் தொடருங்கள்

  ReplyDelete
 4. //நீங்கள் இந்த பதிவை படிக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துபவராகத் தான் இருக்க வேண்டும் //

  இதைப் பிரிண்ட் எடுத்து ஒருவரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லலாமே. அங்கே இணையம் இல்லையே!! ஹி..ஹி.. நாங்களும் கண்டுபிடிப்போம்ல!!

  ReplyDelete
 5. தொகுப்புகளுக்கு நன்றி

  ReplyDelete
 6. பயனுள்ள “தொழில்நுட்பப் பதிவுகள்”.

  இதை தொட‌ங்கி 'த‌மிழ்ம‌ண‌ம்' திர‌ட்டியில் கொடி க‌ட்டி ப‌ற‌ந்த‌ முன்னோடி சிறுவ‌ய‌தில் க‌ட‌லை மிட்டாய் விற்க‌ ஆசைப்ப‌ட்டேன் என‌ கூறிய‌ ப‌திவ‌ர் சூர்யா க‌ண்ணன்.

  ப‌திவ‌ர் சூர்யா கண்ணனை என் போன்ற‌ வ‌யோதிக‌ ப‌திவ‌ர்க‌ள் ம‌ற‌க்க‌முடியாது.

  இப்பொழுது ஏனோ த‌மிழ்ம‌ண‌த்தில் இவ‌ர‌து ப‌திவுக‌ளை காண‌முடிவ‌தில்லை.

  இன்றும் செயல்படும் த‌ள‌ம் சூர்யா க‌ண்ணன்

  .

  ReplyDelete
 7. என்னோடு சேர்ந்து அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள். அறிமுக படுத்திய நண்பர் அப்துல் பாஸித் அவர்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள். மிகவும் தேவையான பதிவும்கூட...நன்றி

  ReplyDelete
 9. மிக மிக உபயோகமான பதிவு! மிக்க நன்றி! :)

  ReplyDelete
 10. நமது ப்ளாக்கை சிறப்பாய் வடிவமைக்க உதவும் 'மெக்கானிக்குகள்' நம்முடைய தொழில்நுட்ப பதிவர்கள், சிறப்பான தொகுப்பு நண்பா ..!

  ReplyDelete
 11. அருமையான அறிமுகங்கள்...
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. vaazhthukkal!
  nalla arimukan!

  ReplyDelete
 13. அனைத்தும் பயனுள்ளவை நண்பா அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. அருமையான அறிமுகங்கள் .. வாழ்த்துகள் தொடருங்கள்

  ReplyDelete
 15. அருமையான பதிவு!...

  ReplyDelete
 16. கணிணி தகவல்கள் நிறைந்த வலைப்பூக்கள்..
  நன்றி!

  ReplyDelete
 17. என்னுடைய தளம் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி அப்துல் பாஸித்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது