07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 27, 2012

அகம் தொட்ட க(வி)தைகள்



ஆசிரியர் 
மேடை ஏறியதில் காணமுடிந்தது 
நிறைய வலை உறவுகளின் அடையாளங்களை 
உணர முடிந்தது அவர்களின் அன்பை 

ஆசிரியர் 
மேடையேற்றி பெருமைப் பருத்திய 
வலைச்சர உறவுகளுக்கு அகம் கனிந்த 
 நன்றி... நன்றி.. நன்றி... 

நாளைமுதல் 
வலைச்சர வகுப்பில் 
மீண்டும் மாணவனாக  தொடர்வேன் 


 உறவுகளின்  
வருகைக்கும் கருத்திற்கும் 
மாசற்ற நல் அன்பிற்கும் 
என் பிராத்தனைகள் 


 மனதை 
இளக்கி புருவத்தை உயர்த்திய 
அழகிய ஆழமான கவிதை ,கதைகள் 


தமிழ் 
மரபு வழியே 
ஐயா ராமானுசம் இசைக்கும் பாடல்கள் 
தரமான வாழ்வை சொல்கிறது


ரமணி சாரின் 
அதன் அடினாதத்தின் வெளிப்பாடும் 

நம் 
விலை நிலங்கள் தரிசாக 
மனம் கனக்கும் வேதனையை உடைக்கிறார் 


 நெஞ்சை 
உறுத்தும் நவ பள்ளி வாழ்க்கை 
மழலை கேட்கும் மயிலிறகில் விச்சு சார் 


சத்ரியனின் 
மனவிழியில் மனதை இளக்கிய

ஹாசிமின் 
சிந்தனை சிதறலில் 


சொகுசு கைதிகளான 
அக்கரை வாசிகளின் வாழ்கையை 
சொல்கிறார் சகோ யாசர் அரபாத் 


தான் 
வரிகளில் நமக்கு காட்டுகிறார் 
தோழர் பிரேம் 


விளை நிலத்தின் 
மனமுருகி சொல்கிறார் தோழர் அரசன் சே 


முதியோர்  இல்லத்தில் 
அனாதையாகும் பெற்றோர்கள்
வலிகளை உணர்த்துகிறார் தோழர் சீனி 


தமிழ் மீரானின் 
வாழ உதவாத உறவுகளின் 
மரணச் சடங்கு 


என் 
தங்கை கலை கருவாச்சியின் 
முதல் கவிதை நேசிக்கிறேன் 


தன் 
சொல்லிலும் பொருளிலும் 
நம்மை வியக்கவைக்கும் தோழி ஹேமாவின் 
 தன் 
எழுத்தொளியில் வெளிச்சமிடுகிறார் 
சகோ ரேவா 


 களை 
பிடுங்கப் போனவனின் மனசாட்சியோடு 
களையின் வினவல் தென்றலின் வருடலில் 
தோழி சசிகலா 




கீத மஞ்சரியில் 
ஒரு தாய் பறவையின் 



கணேஷ் சாரின் 
மின்னல் வரிகளில் 


தோழர் 
சே குமாரின் மனசில் 
எல்லா உறவுகளுக்கும் என் அகம் கனிந்த நன்றிகள்
சுபம் .

28 comments:

  1. வணக்கம் சார். நான்தான் முதலில் என்பதில் எனக்குப் பெருமை.அகம் தொட்ட கவிதைகள் என்பதில் என்னை அறிமுகப்படுத்தி என் அகத்தினை நீங்கள் தொட்டுவிட்டீர்கள்.ஏனைய சிறப்பான பதிவர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு அசத்தலான பதிவை தந்து தங்கள் ஆசிரியர் பணியை செவ்வனே நிறைவு செய்தீர்கள் சகோ உளமார்ந்த வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  3. வாழ்க்கைப் பாதையில் அழுத்தும் பணிச் சுமைகள் காரணமாக ஓரிரு நாட்கள் உங்களைப் பின்தொடர இயலவில்லை வலைச்சரத்தில். மன்னிக்கவும். ஆனால் நீங்கள் என்னை மனதில் வைத்து இன்றும் நான் எழுதிய நல்ல சிறுகதைகளில் ஒன்றைக் குறிப்பிட்டிருப்பதில் மிக மிக மகிழ்கிறேன் நான். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி நண்பரே! அறிமுகம் பெற்றிருக்கும் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சகோ கோடை விடுமுறைக்காக ஊருக்கு சென்றதால் முந்தைய பதிவுகளுக்கு வருகை தர இயலவில்லை தென்றலையும் அறிமுகப்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ .

    ReplyDelete
  5. சகோதரரே..!

    கடலுகிடையில்!
    கடுகு நானுமா!?

    மிக்க நன்றி!

    நீங்கள் தரும் கருத்துக்களும்-
    ஆதரவும் எளியவன் என்னை -
    எழுதிட தூண்டும்!

    இறைவன் நல்லாசி-
    நம் அனைவர் மீதும் நல்குபானாக!

    ReplyDelete
  6. வணக்கம் தோழரே...
    சுவைபட கவியேற்றி
    அழகுற வலைச்சரம்
    தொடுத்திருக்கிறீர்கள்..
    அங்கே..
    என்னையும் ஒரு பூவாய் அலங்கரித்திறீர்கள்...
    நன்றிகளும்..
    செவ்வனே வலைச்சரப் பணி செய்தமைக்கு
    வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  7. இந்த எளியவனின் எளிய கவிதையையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி சகோ.செய்தாலி!

    ReplyDelete
  8. இனிமையும் எளிமையும் கலந்த
    அறிமுகப் பதிவு! அருமை!
    இன்று என்னையும் அறிமுகம் செய்தீர்!நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி

    வலையகம்

    ReplyDelete
  10. எனது பதிவையும் பரிந்துரைத்தமைக்கு மிக்க நன்றி அன்பரே

    ReplyDelete
  11. மீண்டும் மீண்டும் மகிழவைக்கிறீர்கள் தோழரே.புலவர் ஐயா,ரமணி ஐயா நாடுவில் நானுமா என வெட்கித்தாலும் என் பொறுப்பை உணர்த்தும் உங்களுக்கு என் அன்பான நன்றி.எல்லோருமே நான் உலவும் என் உறவுகள்.சிறப்பான படைபாளிகள்.வாழ்த்துகள் அவர்களுக்கும் !

    ReplyDelete
  12. அறிமுகம் செய்த அன்புச் சகோதரனுக்கு மனமார்ந்த நன்றிகள் உங்கள் பணி சிறந்திட என் பிரார்த்தனைகள்

    ReplyDelete
  13. அண்ணா,

    என்னையும் அன்பாய் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி ...

    ReplyDelete
  14. மீண்டும் மீண்டும் மகிழவைக்கிறீர்கள் தோழரே.புலவர் ஐயா,ரமணி ஐயா நாடுவில் நானுமா என வெட்கித்தாலும் என் பொறுப்பை உணர்த்தும் உங்களுக்கு என் அன்பான நன்றி.எல்லோருமே நான் உலவும் என் உறவுகள்.சிறப்பான படைபாளிகள்.வாழ்த்துகள் அவர்களுக்கும் !///



    அண்ணா ஹேமா அக்காள் கூட ஒருப் பெரியக் கவிதாயினி தான் ,,,ஆனால் நான் ஒருக கடுகு ...

    என்கோ எப்போவோ எழுதிய கவிதையா பிடித்து எனக்கும் ஒரு அங்கீகாரம் ....

    ஹேமா அக்காளின்ர அன்பில அங்கீகாரத்தில மீள முடியாமல் மிதக்கிறேன் அண்ணா ....

    உங்களின்ர அன்பில் இப்போ பறக்கிறேன் ....

    ReplyDelete
  15. @விச்சு

    @வரலாற்று சுவடுகள்

    @கணேஷ்

    @சசிகலா

    @Seeni

    @மகேந்திரன்

    @தமிழ் மீரான்

    @புலவர் சா இராமாநுசம்

    @PREM.S

    @ஹேமா

    @haseem hafe

    @கலை

    வருகை தந்து
    கருத்திட்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் அகம் கனிந்த நன்றிகள்

    ReplyDelete
  16. எல்லா அறிமுகங்களுமே நல்லா இருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அருமையான தொகுப்புகள்

    ReplyDelete
  18. அனைவருக்கும் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  19. @Lakshmi

    @"என் ராஜபாட்டை"- ராஜா

    @திண்டுக்கல் தனபாலன்

    வருகை தந்து
    கருத்திட்ட அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் அகம் கனிந்த நன்றிகள்

    ReplyDelete
  20. மலைகளுடன் கூழாங்கல்லை
    ஒப்பிட்டது போல என்னையும் வலைச்சரத்தில்
    சிறந்த பதிவர்களுடன் அறிமுகப்படுத்தி
    அங்கீகரித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  21. பெரிய படைப்பாளிகளுக்கு மத்தியில் எனது கதையும் உங்களது அகம் தொட்டதில் மகிழ்ச்சியே...

    ஒரே வாரத்தில் இருமுறை வலைச்சரத்தில் என் பதிவு... அதற்காக உங்களுக்கு எனது நன்றிகள்.

    வலைச்சரத்தில் தொடர்ந்து அறிமுகமாகும் பாக்கியம் கிட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி...

    இருமுறை அறிமுகத்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

    ReplyDelete
  22. சிறப்பான அறிமுகம் கலை கணேஸ்,ஹேமா ,சீனி  புலவர்,ரமனி ,என பலரின் பதிவை பின் தொடர்வதில் அகம் மகிழ்கின்றேன் செய்தாலி!

    ReplyDelete
  23. தென்றல் வீசும் சசிகலா வசந்தமண்டபத்தின் வாசம் எல்லாம் வலையில் வரும் சுவாசம் அவர்களையும் அறிமுகம் செய்ததுக்கு வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete
  24. மிகுந்த பணிச்சுமைக்கிடையிலும், பல வலைப்பக்கங்களைத் தேடிப்படித்து நல்ல பதிவுகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்தளித்து இருக்கிறாய் நண்பா.

    (எனக்கும் வேலை கொஞ்சம் அதிகம் தான்)

    ReplyDelete
  25. இரண்டு நாட்களாக இணையம் வரமுடியவில்லை நண்பரே ..
    அன்பின் அங்கீகாரத்துக்கு என் நன்றிகள் மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  26. அகம் தொட்ட கவிதைகள் கண்டேன் அனைவருக்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து. என் கவிதைப்பாகம் பாருங்கள் உங்கள் அகம் தொடுகிறதாவென்று. மறுபடியும் வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  27. தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
    அனைத்தும் ஒரே இணையத்தில்....
    www.tamilkadal.com

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது