07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 17, 2012

மாவட்டங்களும் பதிவர்களும் ..!

  1. அரியலூர் மாவட்டம்
  2. இராமநாதபுரம் மாவட்டம்
  3. ஈரோடு மாவட்டம்
  4. கடலூர் மாவட்டம்
  5. கரூர் மாவட்டம்
  6. கன்னியாகுமரி மாவட்டம்
  7. காஞ்சிபுரம் மாவட்டம்
  8. கிருஷ்ணகிரி மாவட்டம்
  9. கோயம்புத்தூர் மாவட்டம்
  10. சிவகங்கை மாவட்டம்
  11. சென்னை மாவட்டம்
  12. சேலம் மாவட்டம்
  13. தஞ்சாவூர் மாவட்டம்
  14. தர்மபுரி மாவட்டம்
  15. திண்டுக்கல் மாவட்டம்
  16. திருச்சிராப்பள்ளி மாவட்டம்
  17. திருநெல்வேலி மாவட்டம்
  18. திருப்பூர் மாவட்டம்
  19. திருவண்ணாமலை மாவட்டம்
  20. திருவள்ளூர் மாவட்டம்
  21. திருவாரூர் மாவட்டம்
  22. தூத்துக்குடி மாவட்டம்
  23. தேனி மாவட்டம்
  24. நாகப்பட்டினம் மாவட்டம்
  25. நாமக்கல் மாவட்டம்
  26. நீலகிரி மாவட்டம்
  27. புதுக்கோட்டை மாவட்டம்
  28. பெரம்பலூர் மாவட்டம்
  29. மதுரை மாவட்டம்
  30. விருதுநகர் மாவட்டம்
  31. விழுப்புரம் மாவட்டம்
  32. வேலூர் மாவட்டம்

 கழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தில் என தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் அரசன் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனது  ஊரின்  அழகை  புகைப்படங்களாக வரிசைப்படுத்துகிறார் .

ஈரோடு மாவட்டம்
பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர்.
இந்த மாவட்டப் பதிவர்களைப் பார்ப்போம் ...
யுவராணி தமிழரசன்
    நிழலுலகில் நிஜத்தை தேடும் சராசரிப்பெண். என்று அறிமுகப் படுத்திக்கொள்கிறார் .

  மதுமதி இவரும்  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவிதை வடிவில் பெரியாரியல் , திருக்குறள் மற்றும் கதை , கட்டுரை என பலவகைகளில் அசத்தும்  சகோதரர்.

அடுத்து நண்பர் சங்கவி இவரும் ஈரோடு   மாவட்டம்  இந்தப் பதிவெழுத பெரிதும் உதவியது அவரது நானும் எனது ஊரும்  என்ற தொடர் பதிவே .

திருநெல்வேலி மாவட்டம்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்
"திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும்.

பொதுவா பெண்கள் தான் அம்மாவீடு நினைவிலேயே இருப்பாங்க ஆனா இங்க பாருங்க நண்பர் தமிழ் மீரான் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் தனது வீட்டின் பெருமையை கவிதையாக சொல்கிறார் .

   சீனு அவர்களும் திருநெல்வேலி மாவட்டத்தையே சேர்ந்தவர் நெடுந்தொலைவில் இருந்து என் ஊரை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் காட்சிகளை உங்கள் கண்களுக்கும் தருகிறேன் படித்து ரசித்து விட்டுச்செல்லுங்கள் என்கிறார் .

திருநெல்வேலி மாவட்டம் கௌசல்யா மெல்ல மெல்ல மாறிவரும் கலாச்சாரம் பற்றி எச்சரிக்கிறார் .


திருநெல்வேலி பொண்ணு தான் நான்... எனக் கூறுகிறார் கலை அவரும் ஊரின் அழகை தொடர் பதிவில் பகிர்ந்துள்ளார் .


திருச்சிராப்பள்ளி  மாவட்டம்
திருச்சி என்றால் உச்சி பிள்ளையார் கோவில் தான் எனக்குத் தெரியும் .மற்ற விவரங்களை சொந்த ஊர் பதிவெழுதிய கீதமஞ்சரியை கேட்கலாம் .


விருது நகர் மாவட்டம்
காமராசர் பிறந்த ஊரு. தமிழ்நாடு அரசு சின்னத்தில் திருவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது.


விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விமலன் அவர்களிடம் மற்ற விபரம் கேட்கலாம் வாங்க .
விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விச்சு கிராமத்து நினைவுகளை நினைத்துப் பார்க்க வைக்கிறார் .

தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சை என்றாலே நினைவுக்கு வருவது ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவில் . நெற்களஞ்சியம் . இன்னும் அந்த ஊரைப்பற்றி தெரியவேண்டுமா அந்த ஊர்ல பிறந்தவங்கள கேட்போம் .

வல்லம் எனும் சிறு நகரம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது... என் சிறு வயதில் வெளியூர்களுக்கு செல்லும்போது என் பெயரைவிட என் ஊர் பெயரே எனக்கான அடையாளமாக இருந்தது, இப்பொழுதும் கூட அந்த விழிப்புகளின் நினைவுகள் என்னுள்ளே பசுமையாய் இருக்கிறது...என்று தன்னை அறிமுகம் செய்கிறார் வல்லத்தான் .

திண்டுக்கல் மாவட்டம்
காரணப் பெயர் கொண்ட ஊர்களில், திண்டுக்கல்லும் ஒன்று. ஊரின் நடுவே திண்டைப் போல் பெரிய மலை இருந்ததால் ‘திண்டுக்கல்’ என்று பெயர் வந்ததாக கருதலாம். இம்மாவட்டத்தில் திப்பு சுல்தான் கோட்டை உள்ளது .

திண்டுக்கல் தனபாலன் பெயரை வைத்தே எளிதில் கண்டுபிடித்துவிட்டேன் . பாராட்டுக்கு மயங்காத மனிதர்கள் உண்டா அதனாலதானோ என்னவோ இவர் பாராட்டுங்கள் பாராட்டப்படுவீங்க என்று சொல்றார் .

புதுச்சேரியைச் சேர்ந்த   சொ.ஞானசம்பந்தன்  இலக்கிய சாரலில் இலக்கியங்களைப் பற்றி மழையாகப் பொழிகிறார் .

தூத்துக்குடி மாவட்டம்
அன்றோர் காலத்தில் பாண்டிய மன்னர்களுக்கு தூதுவர்களாய்
வருபவர்கள் தங்கி இருந்து செல்லுமிடமாய் இருந்ததால்.... தூதுக்குடி என்றும் பின்னர் அது திரிந்து தூத்துக்குடி ஆனதென்றும் கூறுவார்...
ஊர்ப்பெருமை பேசுவது பொதுவாகவே மனதிற்கு குதூகலிப்பை கொடுக்கும். என்று சொல்கிறார் அண்ணன் வசந்தமண்டபம் மகேந்திரன் அவர்கள் .


திருப்பூர் மாவட்டம்
தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நகரம் திருப்பூர் . லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வளித்த , வாழ்வளிக்கும் நகரம் திருப்பூர் . தென்மாவட்டத்தை சேர்ந்த ஆயிரகணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள் . ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டி தருகிறது.

சுந்தரவடிவேலு  எழுதுவதென்பது பேரானந்தம்...என்ன ஒரு அற்புதமா சொல்றார் . இவர்  திருப்பூரைச் சேர்ந்தவர் .

திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் சோழ அரசின் புராதன தலைநகர். பசுவின் கன்றை அறியாமல் கொன்றதற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற மனுநீதிசோழன் தலைநகராக ஆண்ட ஊர் இது. இன்றும் அந்த சம்பவம் நடந்த இடத்தில் நினைவுச்சின்னம் இருக்கிறது.  என்று தனது ஊரின் பெருமை பேசுகிறார் ஆரூர் மூனா செந்தில் .

திருவண்ணாமலை மாவட்டம்
சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.
தீபம் என்றாலே அது  திருவண்ணாமலைக்கு பெயர் போன கார்த்திகை தீபம் அந்த மாவட்டத்தில் பிறந்தவள் தான் நானும் .

காஞ்சிபுரம் மாவட்டம்
பட்டுக்குப் பேர் போன காஞ்சி மாவட்டத்தில் பிறந்தவர் டி.என்.முரளிதரன் உழைக்கும் வர்க்கத்தை நினைத்துப் பார்க்கச் சொல்கிறார் .

 மதுரை மாவட்டம்
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நினைவுக்கு வராங்க .மத்த விவரம் அந்த ஊர் பதிவர்களைக் கேட்ப்போம் ...
தமிழ் வாசி பிரகாஷ் சகோதரர் அங்க கோடை வெப்பம் தாங்க  முடியல என்று கூறுகிறார் .

 கோயம்புத்தூர் மாவட்டம்
பழமை வாய்ந்த கொங்கு நாட்டின் ஒரு பகுதியாய் திகழ்ந்த இம்மாவட்டத்தில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இவர்களில் 'கோசர்' எனும் பழங்குடியினரின் தலைநகரமான 'கோசம்பத்தூர்' என்பதே பிற்காலத்தில் 'கோயம்புத்தூர்' என மருகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

 எந்த ஊரோ? எந்த மாவட்டமோ ? எங்க பிறந்து வளர்ந்தாலும்  நாம் எதையெதையோ தேடி போயிட்டே இருக்கோம் வழியில சாலையில் அனாதைகள் , பார்வை இழந்தவர்கள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இப்படி நிறைய பேரை நாம் சந்திக்கிறோம் ஆனா ஒரு நிமிடம் நின்று அவங்க பசியை போக்கி இருக்கோமா ? இல்ல அவங்களுக்காக நாம எதாவது செய்கிறோமா ? அப்படி உதவி செய்யும் நண்பர் ஈரம் மகி அவர் கோயம்புத்தூர் மாவட்டம் .

 நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்க மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் இஸ்லாமியர்களுடைய பிரசித்தி பெற்ற நாகூர் மற்றும் பாப்பாவூர் தர்காவும், கிருஸ்த்துவர்களுடைய பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலும் உள்ளது. , சிக்கல் சிங்காரவேலர் கோவிலும், எட்டுக்குடி முருகன் கோவிலும் இம்மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த புண்ணிய தலங்களுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரிப்பூம்பட்டிணம் என்று இலக்கியப் புகழ்பெற்ற பூம்புகார் சோழர்களின் துறைமுக நகரமாய் விளங்கியது.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் "என் ராஜபாட்டை"- ராஜா யார் தெய்வம் என்று கேட்கிறார் .

வேலூர் மாவட்டம்
இந்தியாவின் சுதந்திரப்போர் துவங்கிய கோட்டை தான் நினைவுக்கு வரும் .
இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் என குரல் கொடுக்கும் ராமன் அவர்கள் .

கன்னியாகுமரி மாவட்டம்
இந்துமகா சமுத்திரம் ,பசுபிக் பெருங்கடல் , வங்காள விரிகுடா என்ற முக்கடலும் சங்கமித்து, சூரிய உதயத்தையும் ,அஸ்தமனத்தையும் ஒரே இடத்தில காணுமிடம் .

தமிழ்தோட்டம் என்னும் வலைப்பூவைச் சேர்ந்தவர் கன்னியாகுமரி மாவட்டம் .

திருவள்ளூர் மாவட்டம்
வரலாற்றில் பல்லவர் ,மொகலாயர் ,பிரஞ்சு , டச்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது .

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்  என்று கூறுகிறார் திருவள்ளூர்  மாவட்டத்தைச் சேர்ந்த கவிதை வீதி... சௌந்தர் .

நாமக்கல் மாவட்டம்
அர்த்தநாரீஸ்வரர் கோயில்: தமிழகத்தில் சிவபெருமான் அர்த்தநீஸ்வரராகக் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுதான்.  இக்கோயில் மூலவரின் உயரம் ஐந்து அடி.  மூலவர் சிலையை சித்தர்கள் மூலிகைகளால் வடித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

ஆராரோ ஆரிராரோ....
என் கண்ணே உறங்கு..யாரும் தூங்கிடாதிங்க தாலாட்டு பாட தெரியுமா ? என்று கேட்கிறார் குணா தமிழ் .

மாவட்டங்களின் சிறப்பைச் சொல்லி அழகாய் தொடுக்க இருந்த  சரம் இன்று நேரமின்மை காரணமாக சில மாவட்டங்களின் அறிமுகத்தோடு முடிந்து விட்டது .  நாளை சந்திப்போம் .

61 comments:

  1. மாவட்டங்களும்
    அதன் நினைவுகளை சுமக்கும்
    மண்வாசனை பதிவர்களும்
    அருமை

    எனக்கும் (நெலை) திருநெல்வேலி மாவட்டம்தான் தான்

    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  2. நமக்கு தூத்துக்குடி..,

    அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  3. அடேங்கப்பா....... மாவட்டங்களின் விளக்கங்கள் மற்றும் பதிவர்கள் அசத்தல்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. செய்தாலி ,வரலாற்று சுவடுகள் ஆமாங்க இப்ப வந்து சொல்லுங்க எல்லார் மாவட்டமும் தேடி தேடி எவ்வளவு சிரமப்பட்டேன் . எல்லாரும் முகவரியில் சொல்லி இருக்கலாம் . வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிங்க .

    ReplyDelete
  5. மனசாட்சி™ ...
    வருக வருக வருகை தந்து ரசித்து பாராட்டியதற்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  6. கடின உழைப்பு சசி. இதற்கு நிச்சயம் எல்லோரிடமிருந்தும் வரும் பாராட்டு மலர்கள் உங்களை மகிழ்விக்கும், பட்ட கஷ்டம்லாம் பறந்துடும். பிடியுங்க என்னோட அன்பான பூங்கொத்தை. அனைத்து மாவட்டத்து நண்பர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. புதுமுறையான வகைப்படுத்துதல்!! ஆச்சர்யம்.

    ‘உக்காந்து ரூம் போட்டு யோசிப்பீங்களோ’ன்னுதான் கேக்கத் தோணுது!! ஜமாய்ங்க!!

    ReplyDelete
  8. எல்லா மாவட்டத்துக் காரங்களையும் சொல்லிட்டு திருவண்ணாமலை தென்றலோட பதிவுக்கும் ஒரு லிங்க் கொடுத்திருக்கலாமேக்கா... தன்னடக்கம் தடுத்திடுச்சோஓஓ... அருமையான அறிமுகங்கள். அனைவருக்கும் என்னோட நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. கணேஷ்...
    ஆமாங்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நேற்றைய எனது கவிதை வரிகளைப் போல உங்கள் வாழ்த்துரைகளில் மீண்டும் உற்சாகம் வந்து விடுகிறது .

    ஹுஸைனம்மா ...
    எனக்கு முந்தைய ஆசிரியர்களைப் போல எனக்கு சிறப்பா செய்யத்தெரியாதுங்க அதான் இப்படி .... கோவிக்காதிங்க .

    ReplyDelete
  10. நிரஞ்சனா...
    நிரூ மா எல்லாருக்கும் வாழ்த்து சொல்லி தென்றலை மறந்தாச்சா ..பார்த்தியா நேத்து உதவிக்கு வரசொன்னேன் என்று கோபமா ..?

    ReplyDelete
  11. ஆஹா.. பிரமாதம். அசத்திட்டீங்க போங்க ;-))

    மாவட்ட வாரியாக அறிமுகப்படுத்தியிருக்கறது அருமை.

    ReplyDelete
  12. தமிழ் நாட்டு மாவட்டங்கள் மட்டும்தானா.? நான் பெங்களூர்.

    ReplyDelete
  13. அமைதிச்சாரல் ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றி .

    G.M Balasubramaniam...
    எல்லோரையும் சரத்தில் கோர்க்க ஆசைதான் ஆனால் நேரமின்மையே காரணம் மன்னிக்கவும் இந்த மாவட்டங்களிலேயே நிறைய மாவட்டப் பதிவர்களை தேடித் பிடிக்க முடியவில்லை . தங்கள் வருகையும் உரிமையோடு விசாரித்த விதமும் பிடித்தது .எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  14. {)))))):_)))

    சூப்பர் ஆனா எனக்கு புரியமாட்டாது..

    ReplyDelete
  15. சசி கலக்கிட்டீங்க. அனைத்து மாவட்டங்களையும் தொகுக்க மிகவும் கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். விமலனையும் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  16. யாரும் யோசிக்காத விதத்தில் யோசித்து, பதிவர்களை புதுமையாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. என்னையும் அறிமுகப் படுத்தியதுக்கு மிக்க நன்றிங்க அக்கா ...அக்கா எங்க ஊருக்கு வாங்கள் ஒருக்கா ...

    ReplyDelete
  18. முதலில் மனமார்ந்த வாழ்த்துகள் சசி உங்களுக்கு, ஒவ்வொரு அறிமுகபடுத்தலும் உங்களின் தனித்தன்மையும் அதன் பின்னான உங்கள் அயராத உழைப்பையும் காட்டுகிறது.... இந்த வார ஆசிரியர் பணியை இன்றே காணக்கிடைக்கும் வாய்ப்பு பெற்றேன்... மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் உழைப்புக்கும், உழைப்பில் வேர்விட்ட அறிமுகங்களுக்கும்........... என்னையும் இதற்கு முந்தைய பதிவினூடே அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தோழி..........

    ReplyDelete
  19. வித்தியாசமான அறிமுகப்பதிவுகளுக்கு பாராட்டுகள் சசிகலா. பதிவர்களின் ஊர்களின் அறிமுகமும் அழகாய்த் தொகுத்தளித்த விதமும் சிறப்பு. உங்கள் உழைப்பைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் பற்றி முழுமையான பதிவிட்டிருப்பவர் நம் வை.கோபாலகிருஷ்ணன் ஐயாதான்.நான் அதிலொரு சிற்றூரான பொன்மலை பற்றி எழுதியுள்ளேன். என் பதிவையும் குறிப்பிட்டமைக்கு மிகவும் நன்றி சசி.

    ReplyDelete
  20. வித்தியாசமான சிந்தனை ! வாழ்த்துகள் 1

    ReplyDelete
  21. கலை மேடம்,

    உண்மையிலேயே இது தாங்க வித்தியாசமான தொகுப்பு.

    ReplyDelete
  22. ///செய்தாலி ,வரலாற்று சுவடுகள் ஆமாங்க இப்ப வந்து சொல்லுங்க எல்லார் மாவட்டமும் தேட எவ்வளவு சிரமப்பட்டேன்///

    அந்த உழைப்பிற்கான பலனைத்தான் பாராட்டுகளால் அள்ளிக்கொண்டிருக்கிறீர்களே அக்கா ..!

    ReplyDelete
  23. வித்தியாசமான அறிமுகங்கள்....

    அழகிய பதிவு

    தங்களுக்கு என் நன்றிகள்

    ReplyDelete
  24. அப்பப்பா!! தேனீயாக உழைத்து தேன் தமிழ்நாட்டையே கட்டிவிட்டீர்கள்! என்னையும் அடையாளம் காட்டியதில் இன்ப அதிர்ச்சி! மிக்க நன்றி சகோ.!

    ReplyDelete
  25. மாவட்டப் பதிவர் மலர்!
    அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. அழகாய் ஊர் சுற்றிக்காட்டிய தொகுப்பு!

    ReplyDelete
  27. என் ராஜபாட்டை"- ராஜா வுக்கு நம்ம ஊரு தானா.. அறிமுகப்படுத்திய தோழி சசிகலா வின் கடின உழைப்புக்கு நன்றிகள்..

    ReplyDelete
  28. வித்யாசமான அழகிய சரம் .
    அட்டகாசமான சிந்தனை ,வாழ்த்துக்கள் சசிகலா .

    ReplyDelete
  29. அடேங்கப்பா....... மாவட்டங்களின் விளக்கங்கள் மற்றும் பதிவர்கள் அசத்தல்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. மாவட்டங்கள் பற்றிய தலைப்பில் பதிவர்களை பகிர்ந்திருகிங்க...

    வித்தியாசமான பகிர்வு...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. ரொம்ப ரொம்ப கஷ்டம் ! இருந்தாலும் அருமையா தொகுத்து, வித்தியாசமா இருக்கு ! நன்றி சகோதரி !

    ReplyDelete
  32. வித்தியாசமான தொகுப்பு...
    அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. ஆகா!...என்ன ஒரு சிந்தனை! வலை திறந்ததும் ஓகோ என்னமோ புதுசா பண்ணியிருக்காங்க என்று தெரிந்தது. நல்வாழ்த்து. அத்தனை அமிமுகங்களிற்கும் மறுபடியும் தங்களிற்கும் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  34. அனைத்து மாவட்டங்களையும் , அதன் பிரமுகர்களான வலைப்பூவின் உறவினர்களைப்பற்றி அறிந்து கொள்ளவைத்த அக்கா சசிகலாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் , நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  35. புதுமையான முறையில் சரம் தொடுத்திருக்கீங்க! hats off!

    ReplyDelete
  36. நல்லதொரு முயற்சி.புதுமையாக இருந்தது.எனனையும் எனது மாவட்டத்தையும் குறிப்பிட்டமைக்கு நன்றி வாழ்த்துகள்..

    ReplyDelete
  37. சிட்டுக்குருவி..
    என்ன புரியவில்லை கேளுங்கள் . பதிவர்கள் எந்த மாவட்டத்தில் பிறந்தார்கள் என்பதை சொல்லும் பதிவு .

    விச்சு ...
    ஆமாங்க சரியான முகவரி தந்தவங்க வரிசையில் நீங்களும் எனவே நன்றி நான் தான் சொல்லணும் .

    வே.நடனசபாபதி....
    ஊர்ல ஒரு பழக்கம் இருக்குங்க பேசுறத வச்சே எந்த ஊர் என்று கண்டுபிடிப்பாங்க அது மாதிரி இவங்க எழுதுக்கள வச்சி கண்டுபிடிக்க முடியுமோன்னு யோசிச்சேன் முடியல .

    கலை...
    சகோ அலைச்சல் காரணமாக பூவையர் பதிவில் தங்களை பகிர முடியவில்லை மன்னிக்கவும் .

    ReplyDelete
  38. ரேவா...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

    கீதமஞ்சரி ....
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .
    இராஜராஜேஸ்வரி ...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .
    சத்ரியன்...
    தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .

    வரலாற்று சுவடுகள் ...
    நீங்க சொன்ன சரிங்க சகோ .

    கவிதை வீதி... // சௌந்தர் //
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

    தமிழ் மீரான்...
    தங்கள் வருகையும் உற்சாகமளிக்கும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க .

    புலவர் சா இராமாநுசம்...
    ஐயாவிற்கு நன்றி கலந்த வணக்கம் .

    தனிமரம் ...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

    ReplyDelete
  39. sathish prabu..
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

    angelin...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

    Lakshmi ..
    வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    தமிழ்வாசி பிரகாஷ்...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

    திண்டுக்கல் தனபாலன்..
    வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    சே. குமார் ...
    வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .
    kovaikkavi ....
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

    ReplyDelete
  40. VijiParthiban...
    வருகை தந்து வாழ்த்திய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    சென்னை பித்தன்....
    ஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா .

    மதுமதி...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க .

    ReplyDelete
  41. பிரம்மிக்க வைக்கும் உங்களின் "மாவட்ட" பதிவின் உழைப்பு கண்டு என் தலை ஒரு "வட்டம்" அடித்து விட்டது,

    வாழ்த்துகள்!.

    ReplyDelete
  42. கலை...
    சகோ அலைச்சல் காரணமாக பூவையர் பதிவில் தங்களை பகிர முடியவில்லை மன்னிக்கவும் ///

    மன்னிப்புலாம் சொல்லாதீங்கோ அக்கா...
    நோ பூவயர்ஸ்
    மீ குட்டிஸ் தான் அக்கா ...அடுத்ததா பதிவுலகில்குழந்தைகள் ன்னு போடுற ஐடியா இருந்தால் என்னை மறந்துடாதிங்கோ ....

    ReplyDelete
  43. வணக்கம் தங்கை சசி...
    வலைச்சரம் தொடுக்கும் உங்கள் உழைப்பு
    பதிவுகள் தெரிகிறது...
    என்னையும் இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு
    மிகுந்த நன்றிகள் பா...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  44. கலை ....
    அப்போ நிரூ ,எஸ்தர் சபி மாதிரி நீங்களும் எனக்கு சரியா ? சரிமா நாம இங்க கொஞ்சிக்க வேண்டாம் வலைச்சரம் வேலை முடிஞ்சி தென்றல்ல சந்திக்கலாம் .

    மகேந்திரன் ...
    அண்ணா நன்றியெல்லாம் எதுக்கு அண்ணா தங்கைக்கு . வழிகாட்டுதல் போதுமே . அண்ணாவோட தங்கை என்று சொல்கிற மாதிரி நடந்துகிறேனா அதுவே போதும் .

    ReplyDelete
  45. புதுமையான உத்தியை கடைபிடித்து ஆசிரியர் பணியினை கலக்குகின்றீர்கள் சசிகலா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  46. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு,எல்லா மாவட்டத்திலும் பதிவர்கள் இருப்பது தனிச்சிறப்பு,
    அதை தொகுத்து பதிவிட்டது சிறப்பிலும் சிறப்பு,வாழ்த்துகள்.

    ReplyDelete
  47. மாவட்ட வாரியாக பதிவர்களை அறிமுகப்படுத்தியது அருமை சசிகலா!

    ReplyDelete
  48. அன்பான தோழி,

    எனது வலைப்பக்கம் குறித்த தங்களின்
    அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    உங்களின் அபாரமான உழைப்பிற்கு
    பாராட்டுக்கள்,

    தொடரட்டும் உங்கள் பணி

    தோழமையுடன்
    சு.ராமன், வேலூர்

    ReplyDelete
  49. Syed Ibramsha ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ஸாதிகா...
    வெளில சொல்லாதிங்க ஒரு ஆசிரியரா எப்படி சொல்லணும் என்று தெரியல அதான் என் ஸ்டைல் எப்படிங்க .

    கோகுல்...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    கவிப்ரியன் ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    S.Raman,Vellore
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  50. நானும் மதுரைக்காரன் தான் ....................

    ReplyDelete
  51. வலைச்சரத்தில் என்னுடைய திரட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  52. தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

    இணையத் தமிழன்,விஜய்
    (நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு)

    http://inaya-tamilan.blogspot.in

    ReplyDelete
  53. அருமையான பதிவுங்க சசிகலா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. வித்தியாசமான அறிமுகப்பதிவுகளுக்கு பாராட்டுகள் பதிவர்களை மாவட்டவாரியாக அழகாய்த் தொகுத்தளித்த விதமும் சிறப்பு. உங்களின் கடும் உழைப்பைப் மிகவும் பாராட்டுகிறேன்

    அப்புறம் எனக்கு ஒரு டவூட்டு?

    நெல்லைமாவட்டத்தில் உள்ள செங்கோட்டை என்னும் ஊரில் பிறந்து, படித்தது எல்லாம் மதுரை மாவட்டத்திலும், வேலை பார்த்தது சென்னையிலும் இப்போது குப்பை அமெரிக்காவில் கொட்டி கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பீர்கள்??

    ReplyDelete
  55. nadi narayanan...
    நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .

    விமலன்...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .

    Vijay Periasamy ...
    நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .

    AROUNA SELVAME...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .

    Avargal Unmaigal...
    எங்கே இருந்தா என்னங்க பிறந்த ஊர் பெருமை சொல்ல செங்கோட்டையன் என்று சொல்லுங்கள் .

    ReplyDelete
  56. nadi narayanan...
    நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .

    விமலன்...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .

    Vijay Periasamy ...
    நீங்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும் இந்த பதிவு .

    AROUNA SELVAME...
    வருகை தந்து சிறப்பித்தமைக்கு நன்றிங்க .

    Avargal Unmaigal...
    எங்கே இருந்தா என்னங்க பிறந்த ஊர் பெருமை சொல்ல செங்கோட்டையன் என்று சொல்லுங்கள் .

    ReplyDelete
  57. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  58. மாவட்டமும் பதிவர்களும் என தந்திருப்பது சிறப்பு.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  59. பதிவில் உங்களுடைய உழைப்பு பளிச்சிடுகிறது. மாவட்ட வாரியாக கண்டறிவது சாதாரண விஷயமல்ல. வாழ்த்துக்கள் சசிகலா.

    ReplyDelete
  60. அருமையான பதிவுங்க! என்னைப்பற்றியும் எனது மாவட்டத்தை பற்றியும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  61. எப்படிங்க இப்படி கண்டுபிடிச்சீங்க! எவ்வளோ வேலை இருந்திருக்கும்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது