07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 18, 2012

நதி எங்கே போகிறது ...?

தமிழக ஆறுகளின் பட்டியல்  
        அடையாறு
    * அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு
    * அரசலாறு
    * பவானி ஆறு - காவிரியின் துணையாறு
    * சிற்றாறு
    * செஞ்சி ஆறு
    * கோமுகி ஆறு
    * கபினி ஆறு
    * கல்லாறு
    * காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு
    * கெடிலம் ஆறு
    * கொள்ளிடம் ஆறு
    * குடமுருட்டி ஆறு
    * குண்டாறு
    * குந்தா ஆறு
    * குதிரையாறு
    * மலட்டாறு
    * மஞ்சளாறு
    * மணிமுத்தாறு - தாமிரபரணியின் துணையாறு
    * மணிமுக்தா ஆறு
    * மோயாறு
    * முல்லை ஆறு
    * நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு
    * பச்சை ஆறு - தாமிரபரணியின் துணையாறு
    * பரளி ஆறு
    * பாலாறு
    * பரம்பிக்குளம் ஆறு
    * பைக்காரா ஆறு
    * சங்கரபரணி ஆறு
    * சண்முகா நதி
    * சிறுவாணி ஆறு
    * தென்பெண்ணை ஆறு (400 கி.மீ)
    * தாமிரபரணி ஆறு
    * உப்பாறு
    * வைகை ஆறு (190 கி.மீ)
    * வெண்ணாறு

அடையாறு
சென்னை நகரில் ஓடும் ஆறுகளில் ஒன்று. இந்த ஆறு செம்பரம்பாக்கம் ஏரியில் துவங்கி சென்னை நகர் வழியாகச் சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது. சென்னையில் ஓடும் கூவம் அளவிற்கு இல்லாவிடினும், இந்த ஆறு மாசு மிகுந்து காணப்படுகிறது. ஆதலால் முன்பு நடைபெற்ற மீன்பிடி இப்பொழுது சாத்தியமற்றதாகி விட்டது.

அமராவதி
ஆறு காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக தாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது.

அரசலாறு
காவிரி ஆற்றின் ஐந்து கிளையாறுகளுள் ஒன்று. காவிரி ஆறு தஞ்சை மாவட்டதினுள் நுழையும் பொது ஐந்து கிளைகளாகப் பிரிகிறது. இவற்றுள் அரசலாறு ஒன்று.

பவானி ஆறு
காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது.

சிற்றாறு
 தென்காசி நகராட்சியிலுள்ள குற்றால மலையில் உற்பத்தியாகும் ஆறாகும் இது தாமிரபரணி ஆற்றின் முக்கிய இணையாறு.

செஞ்சி
 ஆறு விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி போன்ற வட தமிழகப் பகுதிகளில் பாயும் சங்கராபரணி ஆற்றின் கிளையாறு ஆகும். புதுச்சேரி காரைக்கால் பகுதியில் வடமேற்கிலிருந்து தென்கிழக்காக இந்த ஆறு பாய்கிறது. காரைக்காலின் குடிநீர் ஆதாரங்களுள் ஒன்றாகும்.

கபினி அல்லது கபனி ஆறு தென்னிந்தியாவில் உள்ள 230 கிமீ நீளமுடைய ஆறு ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி ஓடும் இந்த ஆறானது கர்நாடக மாநிலத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிப்பூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் கலந்து பின் வங்காள விரிகுடாவில் முடிவடைகிறது.

கல்லாறு
 வேலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் போன்ற வட தமிழகத்தில் ஓடும் ஒரு சிறு ஆறாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உற்பத்தியாகி, சுவேதா ஆற்றில் கலக்கிறது

காவிரி ஆறு (Cauvery river) இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.



முல்லை ஆறு, தேனி மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறாகும். தேனி மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கும், மாவட்டத்தின் பெரும்பான்மையான குடிநீர்த் தேவைக்கும் இந்த முல்லை ஆற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர்தான் பயன்படுத்தப்படுகிறது.

நொய்யல் ஆறு தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகிறது. இது கோயமுத்தூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக பாய்ந்து நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. ஆகவேதான் நொய்யல் ஆறு என்று பெயர்பெற்றது.

பாலாறு தென்னிந்தியாவில் உள்ள ஆறு ஆகும். இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. தற்கு மொத்தமாக ஏழு துணையாறுகள் உள்ளன அவற்றில் செய்யாறு முதன்மையானதாகும். வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், ஆற்காடு, வாலாஜாபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்துள்ளன.


தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 391 கிமீ தூரம் பாய்ந்து இறுதியில் தமி்ழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீர் பிடிப்பு பகுதிகள் சுமார் 14,449 கி.மீ2 ஆகும். மார்கண்டநதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.


தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இந்நதி நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.

வைகை அல்லது வைகையாறு அல்லது வைகை நதி என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பெரியார் பீடபூமியில் தோன்றி வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே பழனி குன்றுகளாலும் தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.


கோடை வெயிலில் வீடு தேடி வந்து யாராவது தண்ணீர் கேட்டா கூட கொடுக்க மறுக்கும் சமூகம் யாரையும் குற்றமும் சொல்ல முடியாதுங்க தாகம் என்று தண்ணீர் கொடுக்க போய் நகை திருட்டும் நடக்கும் காலம் இது சரி அதனால இளஞ்செழியன் என்ன சொல்றார் நம் வீட்டைத் தேடி வரும் பறவைகளுக்காவது தண்ணீர் தர சொல்றார் அதைச் செய்வோமே .


எப்படி இருந்த நாம இப்படி ஆகிட்டோம் என வருந்தும் மதி வயலுக்குச் செல்லும் விவசாயி முதற்கொண்டு மினரல்வாட்டர்  பாட்டில் சகிதம்தான் புறப்படுகிறார்கள். சிந்திக்க வைக்கிறார் .
நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. காரணம் என்ன? விளக்குகிறார் தங்கம்பழனி பயனுள்ள பதிவுகள் தருவதில் சிறப்பானவர் .

பதினெட்டு வகை நீரில் இருக்காங்க நம்பவேமுடியல இல்ல தோழி சொல்றாங்க தெரிஞ்சிக்கலாம் வாங்க .

 நதியின் ஓரத்தில் உட்கார்ந்தபடி, இளைப்பாறிக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருக்கும் வரையில்…- அதன் வெள்ளத்தில் மிதந்து பிழைக்கத் தேவையில்லாத வரையில்- நதியின் காட்சி பார்வைக்கு அழகானதுதான்… என்று அழகாக சொல்லும் எம் ஏ சுசீலா மேடம் .

தண்ணீரில் கூடவா ஆபத்து?ஆமாம் என்று சொல்கிறார் கோகுல் .

உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்றும் இன்னும் பல அறிய செய்திகளை அறிவியல் ரீதியாக விளக்குகிறார் அபூவஸ்மீ (நெய்னா முஹம்மது) .

நமக்கெல்லாம் தாகம் என்றால் தண்ணீர் குடிப்போம் இங்கே தண்ணீருக்கே தாகமாம் என்ன செய்வது சொல்லுங்க .

என் இனிய நட்புக்களே குற்றம் குறை இருப்பின் மெதுவா குட்டுங்க   நாளை சந்திப்போம் .

26 comments:

  1. தண்ணீர் சம்பந்தப்பட்ட பதிவுகளை அறிமுகப்படுத்தும்போது, தமிழ்நாட்டிலுள்ள அனேகமாக எல்லா ஆறுகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள் ஒரு சில ஆறுகளைத்தவிர.

    அறியாத ஆறுகளையும், பதிவுகளையும் அறிய வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஆசிரியர் பணியில் ஒவ்வொரு பதிவிலும்
    தங்கள் உழைப்பு பிரமிக்கவைக்கிறது
    அனைவரும அறிந்திருக்கிற த்கவலை
    மிகச் சிறப்பாகத் தருவதுடனும் பதிவர்கள் அறிமுகமும்
    ,மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆறுகளின் பட்டியல் கோடையில்!
    ஆறு மனமே ஆறு! அருமை

    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  4. பிரம்மிக்கதக்கவகையில் ஓர் அறிமுகம் எப்போதும் போலவே புதுமை, அறிமுகப்பதிவர்களுக்கும், ஆசிரியருக்கும் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நல்ல தொகுப்பு ! வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
  7. ஒவ்வொரு நாளும் நீங்கள் இடும் பதிவு இதுவரை யாரும் வெளியிடா வண்ணம் வந்து நாளுக்கு நாள் அதிசயப்பட வைக்கிறது. உங்களின் இந்த புதுமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் புதுமை.

    ReplyDelete
  8. ஆறுகளை வரிசைப்படுத்தி அமர்க்களப்படுத்திட்டீங்க போங்க....
    அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ஆறுகளைப் பட்டியல் இட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை நிலை நிறுத்தும் பதிவுகளையும் அழகாகத் தொகுத்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. செந்தமிழ் நாட்டினிலே எத்தனை ஆறு
    சிறப்பாக ஓடுதுன்னு நீயே பாரு.

    ஆறு அத்தனைஓடினாலும் ஆத்தாளே நீ சொல்லு
    அன்பு வெள்ளம் ஓடல்லையே
    நெஞ்சு நனையலயே !!
    தாகமுமே தீரலையே

    ஆறு பல ஓடினாலும் ஆத்தாளே நீ சொல்லு

    அன்பு மணம் பரவலையே
    பண்பு இங்கே வளரலயே !!


    அம்புட்டு ஆத்தையுமே ஒண்ணு சேத்து
    அழகான நாடு ஒண்ணு காணவேணும்

    சுப்பு ரத்தினம்.
    பி.கு: அத்தனி ஆறுகளையும் சேத்த்து ஒரு பாட்டா பாடி இருக்கேன்.
    கேளுங்க.
    http://vazhvuneri.blogspot.com
    after one hour or so

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. அருமையான தொகுப்பு..! நமது தங்கம்பழனி தளத்திலுள்ள பதிவையும் சேர்த்து தொகுத்தமைக்கு மிக்க நன்றி..!!!

    ReplyDelete
  13. ஆறுகளின் புகழ் பாடிய பதிவு அருமை தென்றலே... இந்த ஆறுகள் பலவற்றில் இன்று தண்ணீர் வரத்து குறைவாகவும் சிலவற்றில் அறவே இன்றியும் இருப்பது பெரும் சோகம். பொருத்தமாக தண்ணீர் சம்பந்தப்பட்ட பதிவுகள் மேலும் அழகு. பிடியுங்க இந்த ஸ்பெஷல் கேக். அருமை. அறிமுகம் பெற்ற அனைவருக்கும நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. ஆற்றொழுக்காய் அருமையாய் அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. இவ்வளவு ஆறுகள் இருக்கா? நிறையத் தெரிஞ்சுக்கிட்டேன்க்கா. போகிற போக்கில என்னையும் அறிவாளியாக்கிடுவீங்க போலருக்கே... அருமையான கலெக்ஷன். சிறப்பா அறிமுகம் செய்த தென்றல் அக்காவுக்கும அறிமுகம் பெற்ற அனைவருக்கும என் நல்வாழ்த்துக்கள். (ஓகேவாக்கா)

    ReplyDelete
  16. வே.நடனசபாபதி ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    Ramani ...
    ஐயா தங்கள் வருகையும் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெற்றமைக்கு மகிழ்கிறேன் நன்றி ஐயா .

    Seshadri e.s.
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ரேவா...
    வருகை தந்து வாழ்த்திய சகோவிற்கு நன்றி .

    திண்டுக்கல் தனபாலன்...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    Avargal Unmaigal...
    அதிசயப்பட எதுவும் இல்லங்க எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது கோர்க்கின்ற வேலையே என்னுடையது தங்கள் அனைவரது வாழ்த்துக்களுமே பரவசமாய் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி .


    சே. குமார் ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    ReplyDelete
  17. மாதேவி ...
    வருகை தந்து வாழ்த்திய சகோவிற்கு நன்றி .

    sury
    அசத்தலான பதிவாக இருக்குமே கண்டிப்பாக பார்க்கிறேன் .

    Lakshmi ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    palani vel ...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    கணேஷ் ...
    தங்கள் வருகையும் வளமை சேர்க்கும் வார்த்தைகளும் கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .

    இராஜராஜேஸ்வரி
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .


    நிரஞ்சனா....
    நிரூ மா பார்த்தியா ஓகே என்று சொல்லி கிண்டல் பண்ற சரி சரி வந்து பார்த்துக்குறேன் .

    ReplyDelete
  18. நதிகளும்
    அறிமுகங்களும் அருமை சகோ

    ReplyDelete
  19. ஒவ்வொரு பதிவிற்கும் அதிக உழைப்பு செய்கின்றிர்கள் .. வாழ்த்துகள் .. தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  20. உங்களைப்பாராட்ட வார்த்தைகளே இல்லை. அசுர உழைப்பு. மிகவும் கஷ்டப்பட்டு திரட்டியிருக்கிறீர்கள். மிகச் சிறப்பான கலெக்‌ஷன். ஒவ்வொரு பதிவாக பார்வையிடவேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. "என் ராஜபாட்டை"- ராஜா...
    தங்கள் வாழ்த்துக்களே என் உற்சாகத்திற்கு காரணம் நன்றிங்க .

    விச்சு....
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது நன்றிங்க .

    ReplyDelete
  22. வியக்க வைக்கும் உழைப்பு,பாராட்டுகள்.

    ReplyDelete
  23. வலைச்சரம் என்ற பெயருக்கு ஏற்ப நதிகளைப் பற்றிய தகவல்களை அழகாக கோர்த்துள்ளீர்கள்.
    அத்துடன் தண்ணீர் சம்பந்தப் பட்ட மற்ற பதிவர்களின் பதிப்பையும் இணைத்திருப்பது மிகவும் அருமை.
    தகவல்களைத் திரட்ட தாங்கள் கடினமாக உழைத்திருப்பது புரிகிறது.
    தொடரட்டும் தங்கள்து சேவை.

    ReplyDelete
  24. http://youtu.be/C64P-xZjUEM

    inge vaanga, paattai padinga
    neengalum paadunga..

    ethanai aaru paaru, nam naattile
    ethanai aaru paaru.

    aarethanai odinaalum, aathaale nee sollu,
    nenju nanayallaye
    thaakam theerallaye

    subbu thatha
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  25. சங்கராபரணி ஆற்றங்கரையோரமே
    எங்கள் ஊர் அமைந்துள்ளது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது