07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 25, 2013

பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் கொடுத்த இன்ப அதிர்ச்சி !!


     என்னுடைய ஓட்டை மோட்டார் சைக்கிளில் கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகே ( அது பெண்கள் கல்லூரி என்பது இங்கு தேவையில்லாத தகவல் ) வெட்டியாக சுற்றிக்கொண்டிருந்தபோது பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமாரிடம் இருந்து ஓர் அலைபேசி அழைப்பு.

  “ தி நகர் பேருந்து நிலையம் அருகே புத்தக கண்காட்சி போட்டு இருக்காங்க. நல்ல நல்ல புக்ஸ் வந்து இருக்கு. நான் நேத்து போய் வாங்கினேன். நீங்களும் போய் பாருங்க. பயன்படும் “ என்றார்.

புத்தக கண்காட்சி நடந்தால் சொல்லுங்கள் என நான் சொல்லி வைக்கவில்லை. அவராகவே என்னை நினைவு வைத்து அழைத்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் , அவ்வளவு தூரம் தனியாக போக தயக்கமாக இருந்தது.

“ நானும் அங்கே உங்களுக்காக வறேன்,.மீட் செய்தது போலவும் இருக்கும் “ என்றார்.

சரி என அவருக்காக அங்கே சென்றேன். அவரும் வந்து விட்டார். உண்மையில்யே நிறைய புத்தகங்கள் பயனுள்ளதாக இருந்தன. தேர்ந்தெடுத்தேன். அவரும் தேர்ந்தெடுத்து கொண்டு இருந்தார். அவர்தான் முதல் நாளே வாங்கி விட்டதாக சொன்னாரே... கேட்டதற்கு அம்மாவுக்கும் , நண்பர்களுக்கும் வாங்குகிறாராம்.

திடீரென என்னை அழைத்தார்.

“ நண்பர்களுக்கு வாங்கி விட்டேன், என் அலுவலகத்தில் ஒரு நண்பருக்கு கொஞ்சம் ஸ்பெஷலாக வாங்க வேண்டும்.உங்க டேஸ்ட்டுக்கு செலகட் செஞ்சு கொடுங்க” என்றார் .

எனக்கு கொஞ்சம் டிஸ்டர்ப் ஆக இருந்தாலும், அவருக்காக கொஞ்சம் காஸ்ட்லியான , நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்தேன் . என்னால்தான் காஸ்ட்லியான புத்தகங்கள் வாங்க முடியாது. யாரோ ஒரு முகம் தெரியாத நண்பர் படித்து விட்டு போகட்டுமே என நினைத்தேன்.

பில் போட்டு விட்டு , புத்தக பொதிகள் கைக்கு வந்தன.

“ நீங்க தேர்ந்தெடுத்த புத்தகங்கள் உங்களுக்குத்தான் ,, என் கிஃப்ட் .வச்சுக்கோங்க” என்னிடம் கொடுத்தார்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பிறந்த நாள் போன்ற எதுவும் இல்லாமல் திடீரென இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

இவரை முதன் முதலில் சந்தித்தது சென்னை புத்தக கண்காட்சியில்தான், எனக்கு அப்போது அவரை அவ்வளவு தெரியாது .பதிவர் பிலாசபி பிரபாகரனை சந்திக்கத்தான் சென்று இருந்தேன்.

இந்த பிரபாகரனுக்கு சமீபத்தில் திருமணம் அரசியல் கட்சி விழா போல நடந்தது. தி க தலைவர் கி வீரமணி உட்பட பல பிரமுகர்கள் , வட சென்னை பெரும்புள்ளிகள் கலந்து கொண்டனர். வட சென்னை தாதா போலிருக்கே,,, சாதரணமாக பழகி விட்டொமே என நினைத்து கொண்டேன்.

அந்த புத்தக கண்காட்சியில் முதல் சந்திப்பிலேயே மிக நெருக்கமானவராக ஆகி விட்டார் சிவகுமார். பல விஷ்யங்கள் குறித்தும் பேசினார். அவர் குடும்ப பின்னணி அசர வைத்தது. அவர் சொன்னதில் இருந்து அவர் தாயை பார்த்து ஆசி பெற வேண்டும் என நினைத்து வந்தேன்.

இப்போது எனக்கு புத்தகம் கொடுத்தவுடன், “ வீடு பக்கம்தான்.. வாங்க “என அழைத்து சென்றார்.
எனக்கு தயக்கம். சில வீடுகளில் எழுதுவதையே அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். அதிலும் எழுத்து சார்ந்த நட்பு என்றால் கொஞ்சம் எரிச்சலாகவே அணுகுவார்கள். தவிர, வீட்டில் அவர்கள் வேறு பணியில் இருப்பார்கள். நாம் திடீரென போனால் அவர்களுக்கு சங்கடமாக இருக்கும்.

ஆனால் சிவாவின் மிக மிக அன்புடன் வரவேற்று பேசினார்.  போட்டோ ஆல்பங்கள் காட்டினார். பல் வேறு குடும்ப விஷ்யங்களை ஒரு குடும்ப உறுப்பினரிடம் பேசுவது போல சொன்னார். சிவாவுடன் பேசுவதை விட அந்த அன்னையுடன் பேசுவதே சுவையாக இருந்தது,  நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த சிவா ஒரு கட்டத்தில் போரடித்து போய் டிவியை ஆன் செய்து பார்க்க ஆரம்பித்து விட்டார்.

எந்த சிவா எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். கொள்கை சார்ந்து வாழ்பவர். உதாரணமாக ஏதாவது ஒரு படம் காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருந்தால் , யார் கூப்பிட்டாலும் அந்த படத்துக்கு வர மாட்டார். கிரிக்கெட் பார்க்க மாட்டார். தவறாக பேச மாட்டார் . எழுத மாட்டார்.

அவர் கெட்ட பழக்கங்களை ஏன் அவ்வளவு வெறுக்கிறார் என்பதற்கு ஒரு கண்ணீர் ப்ளேஷ் பேக் உள்ளது.  அதை நான் சொல்வது சரிப்படாது. அவரே பல சம்யங்களில் எழுதி இருக்கிறார்.


கடைசியில் அந்த அன்னையிடம் சொன்னேன், “ அம்மா ,,உங்க பையனை மிக அருமையாக வளர்த்து இருக்கிறீர்கள்.. உங்களை பாராட்ட வார்த்தைகளும் இல்லை, வயதும் இல்லை என்றேன்.

“ நாம் என்னதான் வளர்த்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வேண்டும். என் பையனை நினைத்து நான் பெருமை படுறேன்பா...  கடவுள் கொடுத்த பரிசாகவே நினைக்கிறேன் “ என்றார்.

அம்மாவை தெய்வமாக நினைக்கும் மகன், மகனை மதிக்கும் , நேசிக்கும் தாய் என மனதுக்கு மிக நிறைவாக இருந்தது.


அவரது பதிவுகளில் ஸ்பெஷல் மீல்ஸ் சூப்பராக இருக்கும்


ஸ்பெஷல் மீல்ஸ்

சினிமா விமர்சனம் படித்து பழக்கப்பட்டு போன நமக்கு இவர் நாடக விமர்சனம் நல் விருந்து

நாடக விமர்சனம்

***********************

பிரபாகரன் உங்க்ளுக்கு  நன்கு தெரிந்த ஒருவர்தான், வலைச்சர ஆசிரியராக இருந்தவர் என்றாலும் இந்த பதிவு மிக முக்கியமானது என்பதால் பகிர்கிறேன்.

பதிவுலகின் முக்கியமான பதிவுகளில் ஒன்று


***************************************************

இந்த வலைத்தளத்தில் தரமான பதிவுகள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக இந்த புத்தக மதிப்புரை மிகவும் பிடித்து இருந்தது

மாற்றுப்பார்வை வலைப்பூ

*****************************************************************

வலைப்பூக்களின் பேசு பொருள்கள் சில சமயம் ஆச்சர்ப்படுத்து விடும். சுப்புதாத்தா வலைத்தளம் ரசிக்க வைக்கும், காரணம் அவை ரசித்து எழுதப்படுபவை.

இதை தவிர பத்திரிக்கையில் பிரசுரிக்கப்படும் தரத்துடம் ஆழந்த பொருட்செறிவுடன் சில கட்டுரைகளும் வெளிவருவதுண்டு.

உங்களுக்குள் ஒருவன், உங்களுக்கு தெரியாமல்

*************************************************************


அரபுத்தமிழன்,

யாரையும் புண்படுத்தாமல் தன் கருத்துகளை முன் வைத்த சீனியர் பதிவர்..

என் வேண்டுகோளுக்காக ஒரு போஸ்ட் போட்டார்

தர்க்கா வழிபாடு குறித்து

திடீரென ஒரு நாள் இனி நான் எழுத மாட்டேன் என சொல்லி விட்டு போய் விட்டார்.. மீண்டும் எழுத வருமாறு வலைச்சரம் மூலம் அழைக்கிறேன்

**********************************************************

சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம்

இந்த வரிகள் நமக்கு தெரியும்.. தமிழை ஏதோ பாராட்டுகிறார்கள் போல என நினைக்கிறோம், ஆனால் யோசித்து பார்த்தால் , தமிழை சற்று மட்டம் தட்டுவது போல இருக்கிறது என தமிழாராய்ச்சி நடத்தும் இந்த சீனியர் பதிவரை அனைவரும் அறிவீர்கள் என்றாலும் , இந்த் மாற்று பார்வை உங்கள் பார்வைக்கு தமிழை கொஞ்சம் மட்டம் தட்டும் தமிழ் பாடல்?!!

************************************************

முழுக்க முழுக்க கதைகள், கவிதைகளால் அமைக்கப்பட்டிருக்கும் தளம் இது. இந்த கதைகள் ஃபேண்டசி கதைகள் அல்ல. வாழ்க்கை..அதன் வலி..அதன் சந்தோஷம் , மகிழ்ச்சி , ஏமாற்றம் எல்லாம் வீரியத்துடன் உள்ளது.

ஒரு சாம்பிள்

ரூபன் வலைப்பூ

********************************************

மேலும் சில பதிவுகளை நாளை பார்க்கலாம்.
( பயணம் தொடரும் )


19 comments:

  1. அரபுத்தமிழன் தவிர மற்ற அனைவரும் அறிந்தவர்களே... சிவகுமாரை எனக்கும் தெரியும், ஆனால் இந்த அளவுக்கு உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்பது தெரியாது.... அந்த ப்ளாஷ்பேக் என்னவென்றுதேடிப்பார்க்கிறேன்.... நன்றி...

    ReplyDelete
  2. இன்ப அதிர்ச்சி எங்களுக்கும்... நட்புக்கு பாராட்டுக்கள்... அரபுத்தமிழன் தளம் இன்று தான் தெரியும்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி ஸ்கூல் பையன்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. சிவா அருமையான மனிதர். என் நண்பர் என சொல்லிக்கொள்ளவே பெருமையா இருக்கும்..

    அவரிடமே சொல்லியிருக்கேன். உங்கம்மா உங்கள நல்லா வளத்திருக்காங்கன்னு... இன்னும் அவங்கள பாக்கும் வாய்ப்பு வரல. இன்ஷா அல்லாஹ் சென்னை செல்லும் போது வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கணும் :-)

    அருமையான சந்திப்பு...
    நட்பு தொடரட்டும்... (தொடரட்டும் நட்புன்னு போட்டேன். டி.ஆர் ரேன்ச்க்கு இருந்துச்சு..அதான் வரியை மாத்திட்டேன் :-)

    வாழ்த்துகள்

    ReplyDelete
  6. இப்படியெல்லாம் இந்த காலத்தில் வாழமுடியுமா? என்று கேட்பவர்கள் நிச்சயம் சிவாவை பார்க்க வேண்டும். பழக வேண்டும். தீராத ஆச்சரிய தம்பி.

    பிரபாரகன் அழைப்பிதழ் அனுப்புகின்றேன் என்று சொல்ல இன்று வரை காத்திருக்கின்றேன்.

    வந்தபாடில்லை.

    ReplyDelete
  7. வணக்கம்

    இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் அத்தோடு என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
    தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. மெட்ராஸ்பவன் சிவகுமார் உடனான நட்பு பற்றிய பகிர்வு நெகிழ்ச்சி அளித்தது! பதிவர்கள் அறிமுகம் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  9. தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  10. சிவகுமாரை இன்னும் தெரிந்து கொள்ளவில்லையே என்று ஏங்க வைத்தது.

    ReplyDelete
  11. பழகி பாருங்க அப்பாதுரை

    ReplyDelete
  12. ஜோதி சார்.. பிரபா அப்படித்தான் ,,,மறந்து இருப்பார் :)

    ReplyDelete
  13. வழி மொழியிறேன் ஆமினா

    ReplyDelete
  14. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  15. நன்றி ரூபன்

    ReplyDelete
  16. அண்ணன் சிவகுமாருடன் உங்கள் அனுபவம் படித்து ரசித்தேன்

    ReplyDelete
  17. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. சுவைபட எழுதியவர் அரபுத்தமிழன். எழுதுவதை நிறுத்தியது வருத்தமே.

    இதனிடையில் என் பதிவும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி. (”சீனியர்”னு சொன்னதுதான்... :-)) )

    பதிவர் சிவகுமார் பற்றி சொல்லியிருப்பது நெகிழ்ச்சி. அவர் அன்னை சொன்னது - “நாம் என்னதான் வளர்த்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வேண்டும்” - மிக உண்மை.

    நலல்தொரு வலைச்சர வாரத்திற்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது