சாய்ராம், ஆசிரியர் பொறுப்பை பிச்சைக்காரனுக்கு தருகிறார்!
➦➠ by:
* அறிமுகம்
வணக்கம் வலை நண்பர்களே....
இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த சாய்ராம் அவர்கள் தமது பணியை மிகுந்த ஆர்வமுடனும், ஈடுபாடுடனும், சிறப்பாக முடித்து, நம்மிடமிருந்து மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
சாய்ராம் இந்த வாரத்தில், அறிமுகம் - சாய் ராம், கொஞ்சம் சீரியஸான பெண் வலைப்பதிவர்கள், பிரபஞ்சம் தோன்றியது எப்படி?, சங்கப்பாடல்களில் நுணுக்கமாய் வெளிபடும் காதல் உணர்வ..., வீடியோ கேம்ஸ் - புதையலைத் தேடி..., குழந்தைகளும் பெற்றோர்களும், கிரிக்கெட்டும் ஐபிஎல்லும் ஸ்ரீசாந்தும், ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?, வலைப்பதிவு உலகம், நிறைவு - சாய் ராம். என மொத்தம் பத்து இடுகைகளில் பல பதிவர்களை அறிமுகம் செய்து சுமார் எழுபது மறுமொழிகள் வரை பெற்றுள்ளார்.
சிறப்பாக ஆசிரியர் பொறுப்பை முடித்த சாய்ராமை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "பிச்சைக்காரன்" என்ற வலைப்பூவில் எழுதி வரும் பிச்சைக்காரன் (இப்பெயரில் தான் அவர் அழைக்கப்படுகிறார்) அவர்களை அழைக்கின்றேன். தற்பொழுது சென்னையில் வசித்து வரும் இவர் கடந்த மூன்றாண்டுகளாக பதிவுலகில் இருக்கிறார். இயந்திரவியல் துறையில் பணியாற்றி வரும் இவர் பதிவுலகில் பல்வேறு விஷயங்களை கற்பதற்காகவும், பல நல்லுள்ளங்களை நட்பாக பெறவுமே வலைப்பூவில் எழுதி வருவதாக சொல்கிறார்.
பல நல்லோரைப் பற்றி குறிப்பிடத்தக்க தளமாக வலைச்சரம் உள்ளது என்பதால், ஆசிரியர் பொறுப்பை மிக ஆர்வமுடன் ஏற்றுக் கொண்டதாக சொல்லும் இவரை ஆசிரியர் பொறுப்பேற்க வாழ்த்தி வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
நல்வாழ்த்துக்கள் சாய்ராம்...
நல்வாழ்த்துக்கள் பிச்சைக்காரன்....
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.......
|
|
சோதனை மறுமொழி...
ReplyDeleteபிச்சைக்காரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteபிச்சைக்காரன் அவர்களை வரவேற்கிறேன்...
ReplyDeleteநன்றி பிரகாஷ்! பிச்சைக்காரனுக்கு என்னுடைய வாழ்த்துகள்!
ReplyDeleteவருக வருக பிச்சைக்காரன் சிறப்பாக பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபிச்சைக்காரன்
உங்களை வலைச்சரஆசிரியர் பணிக்கு வருக வருக என்று வரவேற்கிறேன் இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரூபன் ,ஸ்கூல் பையன் , திண்டுக்கல் தனபால், சாய் ராம், தனிமரம் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் பிச்சைக்காரன் அவர்களே.உங்களுக்கும் வலைசரத்துக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதோழர் பிச்சைக்காரன் அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்
ReplyDelete