07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 31, 2013

பகவற்சரம் – இறையும் இறை சார்ந்த பதிவுகளும்

நம்மை, நம் ஆன்மாவை அறிந்து கொள்ள விழையும் பயணம்தான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பதும், மதம் என்பதும் இரு வேறு விஷயங்கள். நம் ஆன்மாவை நமக்குக் காட்டும் வழியைக் காண்பிப்பதுன்னு வேணும்னா மதத்தைச் சொல்லலாம். வழிகள் வேற வேறன்னாலும் எல்லாரும் போய்ச் சேருகிற இடம் ஒண்ணுதான்.

இப்பேற்பட்ட உயர்ந்த விஷயத்தைப் பற்றி, அதன் தொடர்பான அனுபவங்கள் பற்றி, எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. அதில் சிலரைப் பார்க்கலாம்…

முதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின், படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கயிலாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்!

‘ஆலோசனை’ அப்படிங்கிற பெயரில் பார்வதி ராமச்சந்திரன் பல பயனுள்ள ஆன்மீகப் பதிவுகளை தந்துக்கிட்டிருக்காங்க. கொலு வெக்கிறது எப்படி, இன்னின்ன விரதங்களை எப்படி யெப்படி இருக்கணும், ஒவ்வொரு பண்டிகையும் குறித்துத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள், இப்படி எக்கச்சக்கமான உபயோகமான செய்திகளை அழகா தொகுத்து தர்றாங்க. அவங்க வலைப்பூ 100-வது பதிவை எட்டியிருக்கும் இந்த சமயத்தில் நீங்களும் போய் வாழ்த்தினால் சந்தோஷப்படுவாங்க! ஆன்மீகம் மட்டுமின்றி இவங்க கதை, கவிதைகளிலும் கலக்கறாங்க.

மிக அழகான ரசனையுடன் இறைப் பாடல்களைத் ரசித்துப் பகிர்பவர் ஜீவா. பாடல்கள் மட்டுமில்லாம, மிகுந்த மனப் பக்குவத்துடன், தெளிவுடன் இவர் எழுதுகிற ஆன்மீகப் பதிவுகள் மனதைக் கவர்ந்து இழுக்கும். கவிதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் எழுதிய ஒரு கவிதையை இவர் மொழியாக்கம் செய்திருக்கும் அழகை நீங்களும் ரசியுங்களேன்!

‘உம்மாச்சி காப்பாத்து’ அப்படிங்கிற பெயரில் பல நல்ல தகவல்ளோடு, கதைகளோடு, சின்னச் சின்ன அழகான ஸ்லோகங்களை அமிர்தமான தமிழில் விளக்கிச் சொல்லித் தர்றவர், தக்குடு. இவர் சொல்லித் தந்த குருவின் மீதான ஸ்லோகம் இங்கே. இப்ப கொஞ்ச நாளா ரொம்ப பிசியாயிட்டார் போல. ஆளைக் காணும்!

நடராஜ தீக்ஷிதர்  அவர்கள் முக்கியமான பண்டிகைகள், விரதங்கள், இவைகளைப் பற்றி, எப்போது, எப்படி, போன்ற பல விவரங்களைத் தருகிறார். அதோடு மட்டுமின்றி, விபூதியின் பெருமை போன்ற அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களையும் பதிவாக்கித் தருகிறார்.

சித்தர்களைப் பற்றிச் சொல்லி, சித்தர் பாடல்களையும் அழகாகத் தொகுத்துத் தந்துகிட்டிருந்த தேவன் அவர்களை ரொம்ப நாளா காணும். மஹா அவதார் பாபாஜி அவர்களைப் பற்றியும் இவர் எழுதி இருக்கார்.

ஆன்மீகம்னா என்ன அப்படின்னு இந்தக் கால இளைஞர்களுக்குப் புரியும்படி எளிமையான ஆங்கிலத்தில் இங்கே சொல்பவர், திவாஜி அவர்கள். ஏனோ இப்ப ரொம்ப நாளாத் தொடரக் காணும். தொடருங்களேன், திவாஜி!

கூடல் குமரனைப் பற்றித் தெரியாதவங்க குறைவு. சமஸ்கிருத அறிவும், தமிழறிவும் நிறைந்த சௌராஷ்டிரர்! ஸ்தோத்திரமாலா அப்படிங்கிற வலைப் பூவில், சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு தனக்கே உரிய எளிமையான நடையில் எல்லோருக்கும் புரியும்படி பொருள் தருகிறார். இவரின் பஜகோவிந்தம் பொருள் விளக்கம் இதற்கு நல்ல உதாரணம்.

பல ஆலய வரலாறுகளையும், தல புராணங்களையும், புராணக் கதைகளையும், மனதைச் சுண்டி இழுக்கும் அற்புதமான வண்ணப் படங்களோடு பகிர்பவர், இராஜராஜேஸ்வரி அம்மா. இவருடைய  ஸ்ரீ அபய ஆஞ்சநேயரைக் கண்டு நீங்களும் அருள் பெறுங்கள்.

பக்தி ரசம் சொட்டச் சொட்ட இனிய தமிழில் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல் புனைகின்ற ஆற்றல் பெற்றவர், லலிதாம்மா. சாயி இருக்க பயமேன்? என்னும் பாடலை நீங்களும் பாடி மகிழுங்கள்.

ஆன்மீகம் சம்பந்தமான தன் சொந்த அனுபவங்களையும், திருவிழாக்கள் பற்றிய கட்டுரைகளையும், ஸ்ரீ மஹா பெரியவா சம்பந்தமான கட்டுரைகளையும், வித்தியாசமான, வாசிக்கத் தூண்டும் தலைப்புகளுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருகிறார், வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

கவிதைப் பக்கத்தில் குறிப்பிட்ட சிவகுமாரன் அவர்கள்தான், அருட்கவி. பெயருக்குத் தகுந்தாற் போல் இவருக்கு பக்திப் பாடல்கள் அருவியெனக் கொட்டுவது இறையருளால்தான் என்பதில் சந்தேகமில்லை. உதாரணம், இவர் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருக்கும், தாயுமானவா. எழுதுவது மட்டுமின்றி பல சமயங்களில் ஒலி வடிவையும் சேர்த்துத் தருவது சிறப்பு.

சித்த வித்யா ஞானம் என்ற பெயரில், பலரும் எளிதாகப் பேசத் தயங்குகிற பல அரிதான நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி, விளக்கமும் அளிக்கிறார், சுமனன் என்பவர். இவர் சொல்லுகிற அனைவரும் தினசரி செய்யக் கூடிய எளிய யோகப் பயிற்சி என்னன்னு பாத்து நீங்களும் அதைப் பண்ணுங்க!

என்னைப் பிரமிக்க வைக்கிற இன்னொரு எழுத்தாளர், சுந்தர்ஜி பிரகாஷ். இவரோட வாசிப்பனுபவத்தின், எழுத்தனுபவத்தின் நீள அகலம், மற்றும் ஆழத்தை, சிந்தனையின் தெளிவை, கற்பனை செய்து பார்க்கும் திறன் கூட எனக்கு இல்லை. எந்த விஷயத்தை அவர் எடுத்தாண்டாலும், கதையோ, கவிதையோ, கட்டுரையோ, ஆன்மீகமோ, இலக்கியமோ, இசையோ, இதனை உள்ளங்கை நெல்லி போல உணரலாம்.

ரொம்ப நாளா எழுதாம இருக்கிற பதிவர்களில் அம்பாள் உபாசகரான மதுரையம்பதி என்கிற மௌலியும் ஒருத்தர். சௌந்தர்ய லஹரி இவருடைய மிகச் சிறந்த (நிறைவடைந்த) வலைப்பூக்களில் ஒண்ணு. பக்தி என்றால் எப்படி இருக்கணும் அப்படின்னு அவர் சொல்ற இந்தப் பதிவு எனக்குப் பிடித்த பதிவு!

கீதாம்மான்னா ஆன்மீகம், ஆன்மீகம்னா கீதாம்மா என்பது எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்ததால் குறிப்பிடலை! ஆனா இப்ப அப்பாதுரையின் பின்னூட்டம் பார்த்ததும் எதுக்கு அந்தக் குறையும், அப்படின்னு... :) ஆன்மீக பயணம் அப்படிங்கிற வலைப்பூவில் நம்ம கீதம்மா கோவில்கள் பற்றியும் அவற்றின் தல வரலாறு, தொடர்புடைய புராணக் கதைகள் பற்றியும் விவரமா பகிர்ந்துக்கறாங்க!

மாதவி பந்தல் போட்டிருக்கும் கேயாரெஸ்ஸையும் எல்லோருக்கும் தெரியும். அப்படின்னு நினைச்சு முதலில் சேர்க்காம இருந்த அவரையும் இப்போ சேர்த்துடறேன் :) கலகலப்பா அட்டகாசமா மருந்தை தேனில் குழைச்சு தராப்ல ஆன்மீகத்தை எல்லோருமே ஆனந்தமா வாசிக்கிற அளவிற்கு தர்றவர். இவர் நாத்திகராய் இருந்து ஆத்திகராய் மாறினது பற்றி இங்கே சொல்றார், கேளுங்க! இவரும் பரம முருக பக்தர். ரொம்ப நாளா எழுதாம இருந்துட்டு இப்போதான் மறுபடி வந்திருக்கார். அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க பார்க்கலாம்! 

சித்தர்கள் பற்றி எழுதுகிற தோழி பற்றி கீதாம்மா சொன்னாங்க. அவங்களை ஏற்கனவே 5500-க்கு மேலான நண்பர்கள் பின் தொடர்றாங்க. அதனாலதான் முதலில் குறிப்பிடலை! :) அவங்க சித்தர்கள், சித்தர்களின் மருத்துவம், இப்படி சித்தர்கள் தொடர்பான பலவற்றையும் எழுதிக்கிட்டு வர்றாங்க. எடுத்துக்காட்டா, புலிப்பாணி சித்தர் அருளிய விஷக்கடி வைத்தியம்...

இங்கே சொல்லியிருக்கிற பலரும் ஆன்மீகம் மட்டுமே எழுதறதில்லை. எல்லாமே எழுதறாங்க. இருந்தாலும் அவர்களோட ஆன்மீகப் பதிவுகளை வெச்சு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

என்னங்க, இது வரை சொன்ன பதிவுகள்ல, ஒரே ஒருத்தரையாச்சும் உங்களுக்குத் தெரியாதவங்களைச் சொல்லி இருக்கேனா? :) கீதாம்மா, தனபாலன், இந்தக் கேள்வி உங்களுக்கில்லை! :P



அன்புடன்
கவிநயா

41 comments:

  1. அனைவருமே புதியவர்கள் எனக்கு..
    அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  2. ஆன்மீகப் பதிவுகளை அறிமுகப்படுத்திய விதம் அருமை... நன்றி...

    ReplyDelete
  3. பல ஆலய வரலாறுகளையும், தல புராணங்களையும், புராணக் கதைகளையும், மனதைச் சுண்டி இழுக்கும் அற்புதமான வண்ணப் படங்களோடு பகிர்பவர், இராஜராஜேஸ்வரி அம்மா. இவருடைய ஸ்ரீ அபய ஆஞ்சநேயரைக் கண்டு நீங்களும் அருள் பெறுங்கள்.

    எமது தளத்தினை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete
  4. அறிமுகத்தை வைத்துப் பார்க்கையில், அனேகமாக எல்லாருமே ஆத்திகம் தான் ஆன்மிகத்துக்கு வழியென்றப் பாதையிலே போகிறவர்கள் போல் தோன்றுகிறது. சிலரைப் படித்திருக்கிறேன். மற்ற அறிமுகங்களுக்கு நன்றி.

    கீதா சாம்பசிவம் ஆத்திக/ஆன்மிக அரசியாச்சே?

    ReplyDelete
  5. நன்றி ஆத்மா!

    நன்றி ஸ்கூல் பையன்!

    ReplyDelete
  6. உங்கள் தளத்திற்கு அறிமுகம் தேவையில்லை அம்மா. அதைப் பற்றி இங்கே குறிப்பிட்டதில் எனக்கு மகிழ்ச்சி :) நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

    ReplyDelete
  7. //அறிமுகத்தை வைத்துப் பார்க்கையில், அனேகமாக எல்லாருமே ஆத்திகம் தான் ஆன்மிகத்துக்கு வழியென்றப் பாதையிலே போகிறவர்கள் போல் தோன்றுகிறது. சிலரைப் படித்திருக்கிறேன். மற்ற அறிமுகங்களுக்கு நன்றி.//

    நீங்கள் சொல்வது சரியே, அப்பாதுரை :)

    //கீதா சாம்பசிவம் ஆத்திக/ஆன்மிக அரசியாச்சே?//

    ஆமாம், அரசிக்கு அறிமுகம் தேவையான்னுதான் முதலில் விட்டு விட்டேன். இப்ப நீங்க சொன்னதும் சேர்த்துட்டேன் :)

    மதுரையம்பதி என்பவரின் தளமும் சேர்த்திருக்கேன்.

    நன்றி!

    ReplyDelete
  8. மிக்க நன்றி கவிநயா,

    KRS அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா?

    அறிமுகப்படுத்தபட்டுள்ள அனைத்து அன்பர்களுக்கும் மனதார வாழ்த்துக்கள்.

    கைலாஷி

    ReplyDelete
  9. என்ன... இப்படி சொல்லிட்டீங்க...! ஒவ்வொரு தளமும் வாசித்து வர இவ்வளவு தாமதம்... அதிலும் எட்டு தளங்கள் புதிது...! மிக்க மிக்க நன்றி... அந்த (சில) தளங்கள் எல்லாம் தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. ஆன்மிகம் எழுதும் அனைவரையும் பாரட்டியமை நன்று

    ReplyDelete
  11. இன்று தங்களால் வலைச்சரத்தில் அடையாளம் காணப்பட்டு சிறப்பிகப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும், என் மனமார்ந்த இனிய பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    >>>>>>

    ReplyDelete
  12. //ஆன்மீகம் சம்பந்தமான தன் சொந்த அனுபவங்களையும், திருவிழாக்கள் பற்றிய கட்டுரைகளையும், ஸ்ரீ மஹா பெரியவா சம்பந்தமான கட்டுரைகளையும், வித்தியாசமான, வாசிக்கத் தூண்டும் தலைப்புகளுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருகிறார், வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.//

    அடியேனின் தளத்தினை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    ReplyDelete
  13. இன்று என்னை வலைச்சரத்தில் அறிமுக செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தகவல் கொடுத்து,வாழ்த்தியுள்ள

    [1] திருமதி இராஜராஜேஸ்வரி அம்பாள் அவர்களுக்கும்,

    [2] திரு திண்டுக்கல் தனபாலன் Sir அவர்களுக்கும்

    என் மனமார்ந்த் இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  14. 'ஆலோசனையை' வலைச்சரத்தில் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். நிறைய புதிய தளங்கள் தெரிந்து கொண்டேன். அதற்காகவும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    பகவற்சரத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. தேவன் லலிதாம்மா, அருட்கவி, சுமனன், சுந்தர்ஜி பிரகாஷ்//

    ஆகியோரின் அறிமுகத்துக்கு நன்றி. இவங்களை எல்லாம் தெரியாது. சித்தர்கள் குறித்த அறிமுகம் எனில் "தோழி, தோழி" யும் மிகவும் அருமையாக எழுதுகிறார்.http://www.siththarkal.com/2013/05/blog-post.html

    ReplyDelete
  16. Thanks a lot.
    http://natarajadeekshidhar.blogspot.in

    ReplyDelete
  17. நன்றி கவிநயா,

    திரு திண்டுக்கல் தனபாலன் மூலம் எமது வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது அறிதேன். அவருக்கும் மிக்க நன்றிகள்.

    மிகுந்த வேலப்பளுவிற்கு மத்தியில் கடந்த இரு வாரங்களாக எழுதுவதை நிறுத்தியுள்ள நிலையில் இவ்வாறன செய்திகள் மீண்டும் எழுத ஊக்குவிக்கின்றது.

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. நன்றி கவிநயா அவர்களுக்கு,

    திரு.திண்டுக்கல் தனபாலன் மூலம் எமது வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தேன். அவருக்கு நன்றிகள் பல.

    வெகு நாட்களாக எழுதுவதை நிறுத்தியுள்ள நிலையில் இவ்வாறன தகவல்கள் மீண்டும் எழுத ஊக்குவிக்கின்றது, முடிந்தவரை முயற்சிக்கிறேன்.

    என்றும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

    என்றும் பேரன்புடன்
    தேவன்

    ReplyDelete
  19. கேயாரெஸ், தோழி, பற்றிய தகவல்களையும் சேர்த்திருக்கிறேன். அவர்கள் வலைத்தளத்திற்கும் சென்று பார்வையிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    பிற பின்னூட்டங்களுக்கு பதில் எழுத பிறகு வருகிறேன் :)

    ReplyDelete
  20. அறிமுகப்படுத்திய விதம் அருமை.

    அறிமுகங்களில் சிலர் புதியவர்கள் சென்றுபார்கின்றேன்.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. நான் அதிகம் அறியாத அறிமுகங்கள்..

    வாழ்த்துகள்

    ReplyDelete
  22. ஆன்மிகம் பற்றி விளக்கும் தளங்களை அறிந்து கொண்டேன்.. நன்றி

    ReplyDelete
  23. பக்தி ரசம் சொட்டும் பதிவுகள் இன்றைய அறிமுகங்களில்..... மிகவும் ரசித்தேன். தெரியாதவர்களை தெரிந்து கொண்டேன் உங்கள் மூலம் - மிக்க நன்றி.

    ReplyDelete
  24. கேயாரெஸ் என்னும் இரவிசங்கர் தொடர்ந்து எழுத என் சார்பில் ஒரு பெரிய ஓஓஓஓஓஓ!

    ReplyDelete
  25. // இவரும் பரம முருக பக்தர். ரொம்ப நாளா எழுதாம இருந்துட்டு இப்போதான் மறுபடி வந்திருக்கார். அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க பார்க்கலாம்!//

    மீண்டும் KRS அவர்கள் எழுத வந்தது குறித்து அறிந்து மிக்கமகிழ்ச்சி.

    அடியேனும் குமரனுடன் சேர்ந்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓப் போட்கிறேன்.

    ReplyDelete
  26. //KRS அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா?//

    சேர்த்துட்டேன் :) நன்றி திரு.கைலாஷி!

    ReplyDelete
  27. //அதிலும் எட்டு தளங்கள் புதிது...! //

    அட, பரவாயில்லையே! எனக்கு நானே தட்டிக் குடுத்துக்கறேன் :) நன்றி தனபாலன்!

    ReplyDelete
  28. //ஆன்மிகம் எழுதும் அனைவரையும் பாரட்டியமை நன்று //

    நன்றி கவியாழி கண்ணதாசன்!

    ReplyDelete
  29. //அடியேனின் தளத்தினை சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள். //

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், வை.கோபாலகிருஷ்ணன் ஐயா!

    ReplyDelete
  30. //'ஆலோசனையை' வலைச்சரத்தில் சிறப்பாக அறிமுகம் செய்தமைக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். நிறைய புதிய தளங்கள் தெரிந்து கொண்டேன். //

    நன்றி பார்வதி! உங்களது 100-வது பதிவிற்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  31. //தேவன் லலிதாம்மா, அருட்கவி, சுமனன், சுந்தர்ஜி பிரகாஷ்//

    ஆகியோரின் அறிமுகத்துக்கு நன்றி. இவங்களை எல்லாம் தெரியாது.//

    அப்படியா. ரொம்ப சந்தோஷம் கீதாம்மா :) நீங்க சொன்னபடி தோழியுடைய வலைப்பூவையும் சேர்த்துட்டேன். நன்றி அம்மா!

    ReplyDelete
  32. //Thanks a lot.//

    வருகைக்கு நன்றி திரு.நடராஜ தீக்ஷிதர்!

    ReplyDelete
  33. //மிகுந்த வேலப்பளுவிற்கு மத்தியில் கடந்த இரு வாரங்களாக எழுதுவதை நிறுத்தியுள்ள நிலையில் இவ்வாறன செய்திகள் மீண்டும் எழுத ஊக்குவிக்கின்றது.//

    மிக்க மகிழ்ச்சி சுமனன். அவசியம் தொடருங்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  34. //வெகு நாட்களாக எழுதுவதை நிறுத்தியுள்ள நிலையில் இவ்வாறன தகவல்கள் மீண்டும் எழுத ஊக்குவிக்கின்றது, முடிந்தவரை முயற்சிக்கிறேன்.//

    உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மிக்க நன்றி திரு.தேவன்!

    ReplyDelete
  35. நன்றி மாதேவி!

    நன்றி நிகழ்காலத்தில் சிவா!

    நன்றி சமுத்ரா!

    நன்றி வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  36. //கேயாரெஸ் என்னும் இரவிசங்கர் தொடர்ந்து எழுத என் சார்பில் ஒரு பெரிய ஓஓஓஓஓஓ!//

    வருகைக்கும் 'ஓ' போட்டதுக்கும் நன்றி குமரன்! கேயாரெஸ் காதில் விழுந்திருக்கும்தானே? :)

    //அடியேனும் குமரனுடன் சேர்ந்து ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓப் போட்கிறேன்.//

    'ஓ' போட்டதுக்கு உங்களுக்கும் நன்றி திரு.கைலாஷி!

    ReplyDelete
  37. வணக்கம் கவிநயா!
    ஊரில் இல்லாததால் வலைச்சரம் படிக்க முடியவில்லை. இப்போதுதான் ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன். உங்கள் அறிமுகங்கள் பலர் பதிவு உலகில் பிரபலாமானவர்கள். நானும் அவர்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன் என்பது மகிழ்ச்சியான விஷயம்.
    கேயாரஸ் தொடர்ந்து எழுத என் சார்பிலும் வேண்டுகோள்! என் வலைச்சர வாரத்தில் நானும் இவரை அறிமுகப் படுத்தி பெருமை அடைந்தேன்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  38. பெரிய பெரிய ஆட்களுக்கு நடுல இந்த பொடியனையும் நினைவு வச்சு சொன்னது என்னோட பாக்யம்! நன்றி! :)

    ReplyDelete
  39. தம்பி தக்குடு சொன்னது போல சிறுவன் என்னை நினைவில் வைத்து எழுதியமைக்கு நன்றிகள் பல கவிக்கா .

    இதில் சௌந்தர்யலஹரி பதிவு பற்றி வந்ததே எனக்கு தனபாலன் சார் மெயில் மூலமாகத்தான் தெரிந்தது அவருக்கும் எனது நன்றிகள்

    ReplyDelete
  40. //Ranjani Narayanan said...

    வணக்கம் கவிநயா!
    ஊரில் இல்லாததால் வலைச்சரம் படிக்க முடியவில்லை. இப்போதுதான் ஒவ்வொன்றாகப் படித்து வருகிறேன். //

    நீங்கள் வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி அம்மா! மிக்க நன்றி.

    ReplyDelete
  41. //பெரிய பெரிய ஆட்களுக்கு நடுல இந்த பொடியனையும் நினைவு வச்சு//

    அட, தக்குடு! வாங்க... வாங்க! திவாஜி சொன்னாரு - ஆன்மீகத்தில் பெரிசு, சிறுசுன்னு கிடையாதாம் :)

    //தம்பி தக்குடு சொன்னது போல சிறுவன் என்னை நினைவில் வைத்து எழுதியமைக்கு//

    அட, மௌலி! ஒரே ஆனந்த அதிர்ச்சியா இருக்கு... :) அடடடடா! நீங்க சிறுவனா? அப்டின்னா நான் குழந்தை :)

    உங்க ரெண்டு பேருக்கும் என் ஞாபகம் இல்லைங்கிறதுக்காக என்னையும் அப்படியே நினைச்சிட்டீங்க பார்த்தீங்களா? :)

    வலைச்சரம் வரை வந்ததுக்கு நன்றிப்பா!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது