07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label கவிநயா. Show all posts
Showing posts with label கவிநயா. Show all posts

Sunday, June 2, 2013

நன்றிச்சரம் - நன்றி...நன்றி...நன்றி!


நலந்தானே நண்பர்களே? ஒரு வாரம் ஓடினதே தெரியல... எனக்கு! அது சரி… ஏன் இப்போ போய் நலம் விசாரிக்கிறேன்னு பார்க்கறீங்களா? என் கூட வலைச்சரத்தில் இத்தனை நாள் செலவழிச்ச பிறகும் நல்லாதான் இருக்கீங்களான்னு தெரிஞ்சுக்கத்தான்! :)

முன்னரே சொன்னபடி நிறைய புதிய பதிவர்களை என்னால் அறிமுகப்படுத்த முடியாததற்கு மன்னிக்கணும். நான் சொன்ன பெரும்பாலான பதிவர்கள் ஏற்கனவே பிரபலமானவங்கதான். சிலரைச் சந்திச்சிருக்கேன், சிலரை இணையம் வழி பழக்கம், சிலர் எனக்குமே புதுசு…

நேரத்தின் மேலதான் பழி போடணும். இதுக்கே அலுவலகத்தில் இங்க கொஞ்சம், அங்க கொஞ்சம்னு நேரம் திருடி (போட்டுக் குடுத்துடாதீங்கப்பா!), இராத்திரி கண்ணு முழிச்சு (இன்னும் தூங்காம என்ன பண்ணிக்கிட்டிருக்க? நாளைக்கு ஆபீஸ் போக வேண்டாமா?), இப்படித்தான் நிறைய எழுதினேன். போன திங்கட்கிழமை எங்களுக்கு விடுமுறையா இருந்தது ரொம்ப உதவியா இருந்தது. அன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் எழுதறதுக்கு செலவழிச்சிருப்பேன். ஆசை இருந்தாலும், நேரமின்மை காரணமாகத்தான் அனைவருடைய பதிவுகளுக்கும் தொடர்ந்து வர முடியறதில்லை. அப்பப்ப வர்றதோட சரி. அதனால தயவு செய்து மன்னிச்சுக்கோங்க!

அதே போல, ஒவ்வொருவரையும் பற்றி, ஒவ்வொருவரின் எழுத்தையும் பற்றி சிந்திக்கிறதுக்கு சாதாரணமா வாய்ப்போ நேரமோ கிடைக்கிறதில்லை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கும், என்னையும் நம்பி அதனை ஒப்படைத்த சீனா ஐயா அவர்களுக்கும் மிகவும் நன்றி!

ஒவ்வொரு நாளும் பதிவிட்ட பிறகு தமிழ் மணத்தில் சேர்த்து (பெரும்பாலும் மறந்துடும் எனக்கு), பிறகு சரத்தில் தொடுத்த ஒவ்வொரு பூவிற்கும் வண்டாய்ப் பறந்து சென்று சளைக்காமல் சேதி சொன்ன திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றிகள் பல!

இந்த ஏழு நாட்களும் என்னோடு இருந்து, பொறுமையாக வாசித்து, ஊக்கமூட்டிய அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 

‘நினைவின் விளிம்பில்…’ வலைப்பூவைத் தொடர ஆரம்பித்திருக்கிற புதிய வாசக நண்பர்களுக்கும் மிகவும் நன்றி.

உலகம் சிறியதுன்னு சொல்வாங்க. வலை உலகமும் சிறியதுதான்… நேரம் இருப்பவர்களுக்கு! எப்படியும் எங்கேனும் சந்தித்துக் கொண்டேதான் இருப்போம்... அப்படி மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன்!

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

வாழ்க வளமுடன்!


அன்புடன்
கவிநயா

மேலும் வாசிக்க...

Saturday, June 1, 2013

கதம்பச்சரம் – இது, அது, எது?

இன்றைக்கு இதுவா அதுவான்னு இல்லாம பலவற்றையும் பதிவாக்கிப் பகிர்ந்து கொள்கிற சிலரைப் பற்றிப் பார்க்கலாம்…

தன் அனுபவங்களிலிருந்து எளிமையாகவும் இனிமையாகவும் நகைச்சுவையாகவும் பலப் பல விஷயங்களைப் பகிர்ந்துக்கிறவர், சுப்பு தாத்தா. இவரோட இசையார்வத்துக்கு அளவே கிடையாது, பாகுபாடும் கிடையாது. ஒருவருடைய கவிதையை, பாடலை ரசிச்சா, உடனடியா மெட்டு போட்டுப் பாடி வலையேற்றி விடுவார்! சின்ன, இளைய, குட்டிப் பதிவர்களா இருந்தாலும் தட்டிக் கொடுத்து தாராளமா பாராட்டுவார்! தமிழ்த் தாத்தா போல, இவரை நம்மளோட அன்பான வலையுலகத் தாத்தான்னு சொல்லலாமா? :) தமிழர் மறை தமிழ் நெறி என்பது இவருடைய பல வலைப்பூக்களில் ஒண்ணு. ஒரு சோற்றுப் பதம் போல இந்தப் பதிவை நீங்களும் வாசிச்சுப் பாருங்க.

நான் சந்தித்த மிக அன்பானவர்களில் ஒருத்தர், வல்லிம்மா. இவர் பேசுவதே அவ்வளவு இனிமையாக இதமாக குளுமையாக இருக்கும். இவர் பதிவுகளும் அப்படியே. அனுபவங்கள், கதைகள், ஆன்மீகச் செய்திகள், இப்படிப் பலவற்றையும், அழகான படங்களுடன் அன்பாகப் பகிர்ந்து கொள்கிறார். புகைப்படக் கலையிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். ‘ஆதவனின் கிரணங்கள் வளர்த்த உயிர்களை’ இவருடைய சொந்தப் புகைப்படங்களுடன் இங்கே பார்க்கலாம்.

என்.கணேசன் அவர்களைப் பற்றித் தெரியாதவர்கள் அரிதாகத்தான் இருப்பார்கள். இவர் எழுதுவது எல்லாமே, விதிவிலக்கே இல்லாமல், பயனுள்ள விஷயங்கள்தான்! இவருடைய சமீபத்திய உபவாசம் எதற்காக என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். இவருடைய வாசிப்பனுபவம் மிகவும் விரிவானது. கருத்துக்களை எழுத்தில் கொண்டு வரும் நேர்த்தி வியக்க வைப்பது. சமீபமாக ‘பரம(ன்) ரகசியம்’ என்ற பரபரப்பான, ஆன்மீகம் கலந்த மர்மத் தொடரை எழுதி வருகிறார்.

அரவிந்த அன்னை மீது அபாரமான பக்தி கொண்ட திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஸ்ரீ அன்னையைப் பற்றி நிறைய சிந்தனைகளையும், அவர் சொன்ன கருத்துகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அரசியல் சம்பந்தமான பதிவுகள் நிறைய இடும் பதிவர்.

‘அச்சோ என் பதிவை இன்றைக்கு யாருமே படிக்கல, யாருமே பின்னூட்டல’, அப்படின்னு யாரும் வருத்தப்படாத அளவுக்கு ஒவ்வொருவர் பதிவிலும் போய் தவறாமல், அதுவும் முதல் ஆளா பின்னூட்டம் இடுவதில் திண்டுக்கல் தனபாலனுக்கு நிகர் அவரேதான்! இதைத் தவிர சீனா ஐயா சொன்னது போல வலைச்சரத்தில் வரும் பதிவுகளுக்கெல்லாம் இவரே சென்று தகவல் தெரிவித்து விடுகிறார். இதையும் தவிர, மிகவும் பயனுள்ள, தகவல் செறிவுள்ள, சிந்திக்க வைக்கும் பதிவுகளையும் இவர் எழுதுகிறார். இவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் இருக்குமோ என்று எனக்கு ஒரு குட்டி டவுட்!

தேவையான விஷயங்களை, சுவையாகவும், சிந்திக்கத் தூண்டும் வகையிலும் எழுதக் கூடிய எழுத்து நடைக்குச் சொந்தக்காரர், ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள். இவருடைய இந்தக் காலக் குழந்தைகள் பற்றிய ஆதங்கத்தை இவர் பகிர்ந்து கொண்டிருக்கும் விதத்தை வாசித்தால், நீங்களும் ரசிப்பீர்கள், சிந்திப்பீர்கள்!

பிரபலமான கவிஞரான யெஸ்.பாலபாரதி, மக்களுக்குத் தேவையான ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளை வழங்கி வருகிறார். வாசித்து, வேண்டியவர்களுக்கு அறிமுகப்படுத்திப் பயன் பெறுங்கள்.

வல்லமை மின்னிதழின் ஆசிரியரான பவள சங்கரி அவர்கள் வலைப்பூவும் வெச்சிருக்காங்கன்னு தாமதமாத்தான் கண்டு பிடிச்சேன்! கவிதை, கதை, சுய முன்னேற்றக் கட்டுரை, பொது நலக் கட்டுரைன்னு பலவிதமா கலக்கறவங்க.

ராமலக்ஷ்மிக்கு அறிமுகமே தேவையில்லை… ஆனாலும் அவங்க இவ்ளோ புகழ் பெறும் முன்பிருந்தே நல்ல தோழி என்பதாலும், இவ்வளவு புகழ் பெற்ற பின்பும் இன்னும் அதே போல இருக்கும் அன்பிற்காகவும் அவரைக் குறிப்பிடறேன். அவரும் ஒரு மிகச் சிறந்த பன்முகக் கலைஞர், (அதில் புகைப்படக் கலையும் அடக்கம்) என்பது எல்லோருக்கும் தெரியும்.

கே.பி.ஜனா, இன்னொரு அருமையான எளிமையான எழுத்தாளர். அன்புடன் ஒரு நிமிடம் என்று இவர் எழுதியிருக்கும் கதைகள் குடும்ப வாழ்வைப் பற்றிப் பல விஷயங்களை மனசுக்கு இதமாக எடுத்துச் சொல்கின்றன.  இதைத் தவிர, நல்லதா நாலு வார்த்தை அப்படினு பல பெரியோர்களுடைய பல நல்ல வார்த்தைகளை நல்ல தமிழில் கவிதை போல மொழி பெயர்த்துத் தருகிறார்.

நிலா மகள் என்ற அழகான பெயர் கொண்ட இவர் பலப்பல விஷயங்களையும் பற்றிய தன் கருத்துகளைத் தெளிவாகப் பகிர்ந்து கொள்கிறார். இவருடைய ஞிமிறென இன்புறு பதிவைப் படித்தால் நீங்களும் இன்புறுவீர்கள்!

திருமதி பக்கங்கள் என்ற வலைப்பூவில் தன்னுடைய இனிமையான எண்ணங்களையும், அனுபவங்களையும் அருமையான படங்களுடன் பகிர்ந்து கொள்கிறார், கோமதி அரசு அம்மா.

சுவாரஸ்யமான பலப்பல பதிவுகளுக்குச் சொந்தக் காரர், அபி அப்பா. சண்டை, சச்சரவு, சமாதானம், சமரசம், பின்னே சமதர்மம் என்ற பதிவில் வித்தியாசமான பெயர்களால் ஏற்பட்ட அனுபவங்களை வேடிக்கையாகப் பகிர்ந்திருக்கிறார் :)

நல்ல தமிழில், பல படைப்புகளின், புத்தகங்களின் விமர்சனங்களை அழகாகப் பகிர்ந்து வருகிறார், கிரி ராமசுப்ரமண்யன். விரிவான வாசிப்பனுபவம் உள்ள இவர், வாசித்தவைகளை தன் பார்வையில் பகிர்ந்து கொள்கிற நேர்மையும், சிரத்தையும் பாராட்டுக்குரியவை.

ஸ்கூல் பையன் என்று இவர் சொல்லிக்கிட்டாலும் எழுத்தைப் பார்த்தா அப்படித் தெரியல. பயணக் கட்டுரைகள், சொந்த அனுபவங்கள், விமர்சனங்கள்னு பலவும் எழுதித் தள்ளிக்கிட்டிருக்கார்.

பண்டிகை மாதிரி வருஷத்துக்கு ஓரிரு முறைகளே பதிவிடறார் தம்பி கோபிநாத். முன்னெல்லாம் பிறர் பதிவுகளைப் படிக்கவாச்சும் வருவார், இப்ப ரொம்ப நாளாச்சு பார்த்து. இசைஞானியின் பக்தர் என்பதால் அவர் பிறந்த நாளுக்கு கண்டிப்பா ஒரு பதிவு இருக்கும்!

வயிறு வலிக்கச் சிரிக்கணும்னா நீங்க கண்டிப்பா தக்குடுவோட பதிவுகளைப் படிக்கணும்! ரொம்ப இயல்பான நகைச் சுவையோட சொந்த அனுபவங்களை சிரிக்கச் சிரிக்கப் பகிர்ந்துக்கறவர். உதாரணத்துக்கு இவரோட சமையலும் சங்கீதமும். வலையுலகில் பல பேருடைய செல்லப் பிள்ளை. சீக்கிரமே திரும்ப எழுத வாங்க தம்பீ! We miss you!

இன்னொரு சிரிசிரி பதிவர், எங்க ஊருக்காரர், நல்ல பாட்டுக்காரர். மீனா சங்கரன் என்பது இவர் பேரு. ரொம்ப அருமையா பாடுவார். இன்னொரு முருக பக்தை. எங்க ஊர்ல இலவசமா திருப்புகழ் வகுப்புகள் எடுக்கறார். இவரோட Stand up comedy எங்கூர்ல ரொம்ப பிரபலம் :) அலிபாபாவுக்கும் அம்புஜம் மாமிக்கும் என்ன தொடர்புன்னு அவர் இங்கே சொல்றார். படி(சிரி)ச்சுப் பாருங்க! இவரும் ரொம்ப நாளா எழுதலை :(

அப்பாடி! இன்னும் ஒரே ஒரு நாள்தான்! அப்புறம் விடுதலை… உங்களுக்கு!

அன்புடன்
கவிநயா

மேலும் வாசிக்க...

Friday, May 31, 2013

பகவற்சரம் – இறையும் இறை சார்ந்த பதிவுகளும்

நம்மை, நம் ஆன்மாவை அறிந்து கொள்ள விழையும் பயணம்தான் ஆன்மீகம். ஆன்மீகம் என்பதும், மதம் என்பதும் இரு வேறு விஷயங்கள். நம் ஆன்மாவை நமக்குக் காட்டும் வழியைக் காண்பிப்பதுன்னு வேணும்னா மதத்தைச் சொல்லலாம். வழிகள் வேற வேறன்னாலும் எல்லாரும் போய்ச் சேருகிற இடம் ஒண்ணுதான்.

இப்பேற்பட்ட உயர்ந்த விஷயத்தைப் பற்றி, அதன் தொடர்பான அனுபவங்கள் பற்றி, எழுதறவங்க நிறைய பேர் இருக்காங்க. அதில் சிலரைப் பார்க்கலாம்…

முதலில் கைலாஷி அவர்கள். இவர் சேகரித்துப் பகிர்ந்து கொள்ளும், பலப்பல திருத்தலங்களின், பல்வேறு அலங்காரங்களுடனான பலப் பல உற்சவ மூர்த்திகளின், படங்களுக்கு அளவே இல்லை. நாம ஒரு தரம் போறதுக்கே அவனருள் வேணும் என்கிற திருக்கயிலாயத்துக்கு இவர் சில முறைகள் போயிருக்கார். அற்புதமான திருக்கயிலாய புகைப்படங்களோடான பதிவை நீங்களும் பாருங்களேன்!

‘ஆலோசனை’ அப்படிங்கிற பெயரில் பார்வதி ராமச்சந்திரன் பல பயனுள்ள ஆன்மீகப் பதிவுகளை தந்துக்கிட்டிருக்காங்க. கொலு வெக்கிறது எப்படி, இன்னின்ன விரதங்களை எப்படி யெப்படி இருக்கணும், ஒவ்வொரு பண்டிகையும் குறித்துத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள், இப்படி எக்கச்சக்கமான உபயோகமான செய்திகளை அழகா தொகுத்து தர்றாங்க. அவங்க வலைப்பூ 100-வது பதிவை எட்டியிருக்கும் இந்த சமயத்தில் நீங்களும் போய் வாழ்த்தினால் சந்தோஷப்படுவாங்க! ஆன்மீகம் மட்டுமின்றி இவங்க கதை, கவிதைகளிலும் கலக்கறாங்க.

மிக அழகான ரசனையுடன் இறைப் பாடல்களைத் ரசித்துப் பகிர்பவர் ஜீவா. பாடல்கள் மட்டுமில்லாம, மிகுந்த மனப் பக்குவத்துடன், தெளிவுடன் இவர் எழுதுகிற ஆன்மீகப் பதிவுகள் மனதைக் கவர்ந்து இழுக்கும். கவிதைகளும் நிறைய எழுதியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் எழுதிய ஒரு கவிதையை இவர் மொழியாக்கம் செய்திருக்கும் அழகை நீங்களும் ரசியுங்களேன்!

‘உம்மாச்சி காப்பாத்து’ அப்படிங்கிற பெயரில் பல நல்ல தகவல்ளோடு, கதைகளோடு, சின்னச் சின்ன அழகான ஸ்லோகங்களை அமிர்தமான தமிழில் விளக்கிச் சொல்லித் தர்றவர், தக்குடு. இவர் சொல்லித் தந்த குருவின் மீதான ஸ்லோகம் இங்கே. இப்ப கொஞ்ச நாளா ரொம்ப பிசியாயிட்டார் போல. ஆளைக் காணும்!

நடராஜ தீக்ஷிதர்  அவர்கள் முக்கியமான பண்டிகைகள், விரதங்கள், இவைகளைப் பற்றி, எப்போது, எப்படி, போன்ற பல விவரங்களைத் தருகிறார். அதோடு மட்டுமின்றி, விபூதியின் பெருமை போன்ற அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களையும் பதிவாக்கித் தருகிறார்.

சித்தர்களைப் பற்றிச் சொல்லி, சித்தர் பாடல்களையும் அழகாகத் தொகுத்துத் தந்துகிட்டிருந்த தேவன் அவர்களை ரொம்ப நாளா காணும். மஹா அவதார் பாபாஜி அவர்களைப் பற்றியும் இவர் எழுதி இருக்கார்.

ஆன்மீகம்னா என்ன அப்படின்னு இந்தக் கால இளைஞர்களுக்குப் புரியும்படி எளிமையான ஆங்கிலத்தில் இங்கே சொல்பவர், திவாஜி அவர்கள். ஏனோ இப்ப ரொம்ப நாளாத் தொடரக் காணும். தொடருங்களேன், திவாஜி!

கூடல் குமரனைப் பற்றித் தெரியாதவங்க குறைவு. சமஸ்கிருத அறிவும், தமிழறிவும் நிறைந்த சௌராஷ்டிரர்! ஸ்தோத்திரமாலா அப்படிங்கிற வலைப் பூவில், சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு தனக்கே உரிய எளிமையான நடையில் எல்லோருக்கும் புரியும்படி பொருள் தருகிறார். இவரின் பஜகோவிந்தம் பொருள் விளக்கம் இதற்கு நல்ல உதாரணம்.

பல ஆலய வரலாறுகளையும், தல புராணங்களையும், புராணக் கதைகளையும், மனதைச் சுண்டி இழுக்கும் அற்புதமான வண்ணப் படங்களோடு பகிர்பவர், இராஜராஜேஸ்வரி அம்மா. இவருடைய  ஸ்ரீ அபய ஆஞ்சநேயரைக் கண்டு நீங்களும் அருள் பெறுங்கள்.

பக்தி ரசம் சொட்டச் சொட்ட இனிய தமிழில் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் பாடல் புனைகின்ற ஆற்றல் பெற்றவர், லலிதாம்மா. சாயி இருக்க பயமேன்? என்னும் பாடலை நீங்களும் பாடி மகிழுங்கள்.

ஆன்மீகம் சம்பந்தமான தன் சொந்த அனுபவங்களையும், திருவிழாக்கள் பற்றிய கட்டுரைகளையும், ஸ்ரீ மஹா பெரியவா சம்பந்தமான கட்டுரைகளையும், வித்தியாசமான, வாசிக்கத் தூண்டும் தலைப்புகளுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருகிறார், வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.

கவிதைப் பக்கத்தில் குறிப்பிட்ட சிவகுமாரன் அவர்கள்தான், அருட்கவி. பெயருக்குத் தகுந்தாற் போல் இவருக்கு பக்திப் பாடல்கள் அருவியெனக் கொட்டுவது இறையருளால்தான் என்பதில் சந்தேகமில்லை. உதாரணம், இவர் சிவபெருமானைப் போற்றிப் பாடியிருக்கும், தாயுமானவா. எழுதுவது மட்டுமின்றி பல சமயங்களில் ஒலி வடிவையும் சேர்த்துத் தருவது சிறப்பு.

சித்த வித்யா ஞானம் என்ற பெயரில், பலரும் எளிதாகப் பேசத் தயங்குகிற பல அரிதான நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசி, விளக்கமும் அளிக்கிறார், சுமனன் என்பவர். இவர் சொல்லுகிற அனைவரும் தினசரி செய்யக் கூடிய எளிய யோகப் பயிற்சி என்னன்னு பாத்து நீங்களும் அதைப் பண்ணுங்க!

என்னைப் பிரமிக்க வைக்கிற இன்னொரு எழுத்தாளர், சுந்தர்ஜி பிரகாஷ். இவரோட வாசிப்பனுபவத்தின், எழுத்தனுபவத்தின் நீள அகலம், மற்றும் ஆழத்தை, சிந்தனையின் தெளிவை, கற்பனை செய்து பார்க்கும் திறன் கூட எனக்கு இல்லை. எந்த விஷயத்தை அவர் எடுத்தாண்டாலும், கதையோ, கவிதையோ, கட்டுரையோ, ஆன்மீகமோ, இலக்கியமோ, இசையோ, இதனை உள்ளங்கை நெல்லி போல உணரலாம்.

ரொம்ப நாளா எழுதாம இருக்கிற பதிவர்களில் அம்பாள் உபாசகரான மதுரையம்பதி என்கிற மௌலியும் ஒருத்தர். சௌந்தர்ய லஹரி இவருடைய மிகச் சிறந்த (நிறைவடைந்த) வலைப்பூக்களில் ஒண்ணு. பக்தி என்றால் எப்படி இருக்கணும் அப்படின்னு அவர் சொல்ற இந்தப் பதிவு எனக்குப் பிடித்த பதிவு!

கீதாம்மான்னா ஆன்மீகம், ஆன்மீகம்னா கீதாம்மா என்பது எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்ததால் குறிப்பிடலை! ஆனா இப்ப அப்பாதுரையின் பின்னூட்டம் பார்த்ததும் எதுக்கு அந்தக் குறையும், அப்படின்னு... :) ஆன்மீக பயணம் அப்படிங்கிற வலைப்பூவில் நம்ம கீதம்மா கோவில்கள் பற்றியும் அவற்றின் தல வரலாறு, தொடர்புடைய புராணக் கதைகள் பற்றியும் விவரமா பகிர்ந்துக்கறாங்க!

மாதவி பந்தல் போட்டிருக்கும் கேயாரெஸ்ஸையும் எல்லோருக்கும் தெரியும். அப்படின்னு நினைச்சு முதலில் சேர்க்காம இருந்த அவரையும் இப்போ சேர்த்துடறேன் :) கலகலப்பா அட்டகாசமா மருந்தை தேனில் குழைச்சு தராப்ல ஆன்மீகத்தை எல்லோருமே ஆனந்தமா வாசிக்கிற அளவிற்கு தர்றவர். இவர் நாத்திகராய் இருந்து ஆத்திகராய் மாறினது பற்றி இங்கே சொல்றார், கேளுங்க! இவரும் பரம முருக பக்தர். ரொம்ப நாளா எழுதாம இருந்துட்டு இப்போதான் மறுபடி வந்திருக்கார். அவரைத் தொடர்ந்து எழுதச் சொல்லி அவருக்கு எல்லோரும் சேர்ந்து ஒரு 'ஓ' போடுங்க பார்க்கலாம்! 

சித்தர்கள் பற்றி எழுதுகிற தோழி பற்றி கீதாம்மா சொன்னாங்க. அவங்களை ஏற்கனவே 5500-க்கு மேலான நண்பர்கள் பின் தொடர்றாங்க. அதனாலதான் முதலில் குறிப்பிடலை! :) அவங்க சித்தர்கள், சித்தர்களின் மருத்துவம், இப்படி சித்தர்கள் தொடர்பான பலவற்றையும் எழுதிக்கிட்டு வர்றாங்க. எடுத்துக்காட்டா, புலிப்பாணி சித்தர் அருளிய விஷக்கடி வைத்தியம்...

இங்கே சொல்லியிருக்கிற பலரும் ஆன்மீகம் மட்டுமே எழுதறதில்லை. எல்லாமே எழுதறாங்க. இருந்தாலும் அவர்களோட ஆன்மீகப் பதிவுகளை வெச்சு இங்கே பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

என்னங்க, இது வரை சொன்ன பதிவுகள்ல, ஒரே ஒருத்தரையாச்சும் உங்களுக்குத் தெரியாதவங்களைச் சொல்லி இருக்கேனா? :) கீதாம்மா, தனபாலன், இந்தக் கேள்வி உங்களுக்கில்லை! :P



அன்புடன்
கவிநயா

மேலும் வாசிக்க...

Thursday, May 30, 2013

சுவைச்சரம் – சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்


சமையல்னாலே எல்லோருக்குமே பிடிக்கும்!

அதாவது சிலருக்கு சமையல் செய்யப் பிடிக்கும்; சிலருக்கு செய்த சமையலைச் சாப்பிடப் பிடிக்கும்! ஆக மொத்தம் சமையல்னா எல்லாருக்குமே பிடிக்குது தானே?

என்னைப் பொறுத்த வரை சமையல் செய்யறதை விட, “இன்னிக்கு என்ன சமைக்கிறது?” என்கிற கேள்விக்குப் பதில் சொல்லி, அதைத் திட்டமிடறதுதான் ரொம்பவே கஷ்டமான வேலைங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யறதுக்குன்னே நிறைய சமையல் அரசிகளும், அரசர்களும், வலையுலகில் ஆட்சி செய்துக்கிட்டிருக்காங்க! அவங்களுடைய பணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!

கீதா ஆச்சல் அவர்களின் சமையல் அறையில சமைக்கப் படாத உணவே இல்லைன்னு சொல்லலாம். ஒவ்வொரு படிக்குமான படங்களோட, அளவுகளோட, இவர் சமையல் முறைகளைச் சொல்ற விதமே என்னை ‘சமைச்சுப் பாரேன்’னு சொல்லும்! நீங்களும் இவரோட திராமிசுவைச் செய்து பாருங்க.

சின்னு ரேஸ்ரி, இவருடைய ஒவ்வொரு சமையல் குறிப்பும் வெறுமன வெட்டி, அடுப்பில் ஏற்றி, இறக்குகிற பதிவா இருக்காது! இவர் சொல்ல வந்ததைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ஆரோக்கியத் தகவல்கள், ஆதார பூர்வத் தகவல்கள், அழகிய படங்கள், எல்லாம் தந்து, அதுக்கப்புறம் தான் சமையல் குறிப்பே சொல்லி இருப்பார். உதாரணத்துக்கு, இவரோட வெங்காயத் தாள் பற்றிய சமையல் குறிப்பு.

விவரமான குறிப்புகளோடு, தெளிவான படங்களோடு, இன்னும் கொஞ்சம் என்று சாப்பிடத் தூண்டற வகையில் நிறைய சமையல் குறிப்புகளை தர்றவங்க, ஜலீலா கமால். இவங்களோட மாங்காய் ராஜ்மா சாலடைப் பார்த்தாலே சாப்பிட ஆசையா இருக்கில்ல?

தேனம்மை இலக்ஷ்மணன், இவங்களைத் தெரியாதவங்க குறைவாதான் இருப்பாங்க. எழுத்துலகில் அசத்தற இவங்க, சமையல் குறிப்புகளும் எழுதறாங்க. இவங்க, சமையல் குறிப்புகளை ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் தர்ற விதம் நல்லாருக்கு! இவங்களோட சிக்கன் துக்கடாவை நீங்களும் உங்க குழந்தைங்களுக்குச் செய்து கொடுங்களேன்…

கீதாம்மா ஆன்மீகம் எழுதுவாங்க, நகைச்சுவையான நிகழ்வுகளும், பயனுள்ள சமூகச் சிந்தனையுடனான பதிவுகளும் எழுதுவாங்க, ஆனா அவங்க சமையல் குறிப்பும் எழுதறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? பல பாரம்பரிய சமையல் குறிப்புகளை, பண்டிகைகளுக்கு என்னென்ன செய்யணும், அப்படிங்கிற குறிப்புகளை எல்லாம் இளைய தலைமுறைக்கு இனிமையா சொல்லித் தருவாங்க, நம்ம ‘பாப்பா’வாகிய கீதாம்மா :)

கீதாம்மா மட்டுமில்ல, நம்ம துளசி அம்மாவும் (நிறைய பேருக்கு டீச்சர் :) அவங்க சூப்பர் பயணக் கட்டுரைகளுக்கு நடுவில் அப்பப்ப சமையல் குறிப்பும் எழுதுவாங்க. நோகாமல் வடை ‘சுடுவது’ எப்படி?ன்னு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

பலப்பல நவீன சமையல் குறிப்புகளோடு நமக்குத் தேவையான ஆரோக்கியத்துக்குகந்த பழங்காலக் குறிப்புகளையும், அழகான படங்களோட தர்றாங்க, சித்ரா சுந்தர்.

இப்போதான் அடுப்படிக்கு அறிமுகமானவர்களுக்காக, ஜி.எம்.பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள், தன் மனைவியின் துணையோட ‘பூவையின் எண்ணங்கள்’ அப்படிங்கிற வலைப்பூ ஆரம்பிச்சிருக்கார்.  இவர் சொல்லித் தர்ற படி சன்னா பட்டூரா செய்து பாருங்களேன்…

சமையல்னாலே செட்டி நாடு சமையல்தாங்க. அவங்க சமையல்ல பல வித்தியாசமான பண்டங்கள் இருக்கும்; தனி ருசியோட இருக்கும். இதெல்லாம் பற்றி நமக்குச் சொல்லித் தர்றவர் (தந்தவர்? – ரொம்ப நாளா சமைக்கலை போல இவரு!), சதங்கா. செட்டி நாட்டுக்கே உரிய வாழைப்பூ வடையை இவர் சொல்ற மாதிரி செய்து பாருங்க!

சமையல் செய்ய ஆரம்பிச்சு ரெண்டு வருஷம்தான் ஆகுதுன்னு இவர் சொன்னாலும் (2010-க்குப் பிறகு இவரும் சமைக்கலை போல…), அம்முவோட பதிவுகள்லாம் பழுத்த அனுபவஸ்தரோட குறிப்புகள் மாதிரிதான் இருக்கு. அம்முவோட அமுங்காத பூரியை நீங்களும் செய்து பாருங்க!

அன்புடன்
கவிநயா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது