07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 30, 2013

சுவைச்சரம் – சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்


சமையல்னாலே எல்லோருக்குமே பிடிக்கும்!

அதாவது சிலருக்கு சமையல் செய்யப் பிடிக்கும்; சிலருக்கு செய்த சமையலைச் சாப்பிடப் பிடிக்கும்! ஆக மொத்தம் சமையல்னா எல்லாருக்குமே பிடிக்குது தானே?

என்னைப் பொறுத்த வரை சமையல் செய்யறதை விட, “இன்னிக்கு என்ன சமைக்கிறது?” என்கிற கேள்விக்குப் பதில் சொல்லி, அதைத் திட்டமிடறதுதான் ரொம்பவே கஷ்டமான வேலைங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கு உதவி செய்யறதுக்குன்னே நிறைய சமையல் அரசிகளும், அரசர்களும், வலையுலகில் ஆட்சி செய்துக்கிட்டிருக்காங்க! அவங்களுடைய பணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!

கீதா ஆச்சல் அவர்களின் சமையல் அறையில சமைக்கப் படாத உணவே இல்லைன்னு சொல்லலாம். ஒவ்வொரு படிக்குமான படங்களோட, அளவுகளோட, இவர் சமையல் முறைகளைச் சொல்ற விதமே என்னை ‘சமைச்சுப் பாரேன்’னு சொல்லும்! நீங்களும் இவரோட திராமிசுவைச் செய்து பாருங்க.

சின்னு ரேஸ்ரி, இவருடைய ஒவ்வொரு சமையல் குறிப்பும் வெறுமன வெட்டி, அடுப்பில் ஏற்றி, இறக்குகிற பதிவா இருக்காது! இவர் சொல்ல வந்ததைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள், ஆரோக்கியத் தகவல்கள், ஆதார பூர்வத் தகவல்கள், அழகிய படங்கள், எல்லாம் தந்து, அதுக்கப்புறம் தான் சமையல் குறிப்பே சொல்லி இருப்பார். உதாரணத்துக்கு, இவரோட வெங்காயத் தாள் பற்றிய சமையல் குறிப்பு.

விவரமான குறிப்புகளோடு, தெளிவான படங்களோடு, இன்னும் கொஞ்சம் என்று சாப்பிடத் தூண்டற வகையில் நிறைய சமையல் குறிப்புகளை தர்றவங்க, ஜலீலா கமால். இவங்களோட மாங்காய் ராஜ்மா சாலடைப் பார்த்தாலே சாப்பிட ஆசையா இருக்கில்ல?

தேனம்மை இலக்ஷ்மணன், இவங்களைத் தெரியாதவங்க குறைவாதான் இருப்பாங்க. எழுத்துலகில் அசத்தற இவங்க, சமையல் குறிப்புகளும் எழுதறாங்க. இவங்க, சமையல் குறிப்புகளை ஆங்கிலம், தமிழ், இரண்டிலும் தர்ற விதம் நல்லாருக்கு! இவங்களோட சிக்கன் துக்கடாவை நீங்களும் உங்க குழந்தைங்களுக்குச் செய்து கொடுங்களேன்…

கீதாம்மா ஆன்மீகம் எழுதுவாங்க, நகைச்சுவையான நிகழ்வுகளும், பயனுள்ள சமூகச் சிந்தனையுடனான பதிவுகளும் எழுதுவாங்க, ஆனா அவங்க சமையல் குறிப்பும் எழுதறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? பல பாரம்பரிய சமையல் குறிப்புகளை, பண்டிகைகளுக்கு என்னென்ன செய்யணும், அப்படிங்கிற குறிப்புகளை எல்லாம் இளைய தலைமுறைக்கு இனிமையா சொல்லித் தருவாங்க, நம்ம ‘பாப்பா’வாகிய கீதாம்மா :)

கீதாம்மா மட்டுமில்ல, நம்ம துளசி அம்மாவும் (நிறைய பேருக்கு டீச்சர் :) அவங்க சூப்பர் பயணக் கட்டுரைகளுக்கு நடுவில் அப்பப்ப சமையல் குறிப்பும் எழுதுவாங்க. நோகாமல் வடை ‘சுடுவது’ எப்படி?ன்னு நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

பலப்பல நவீன சமையல் குறிப்புகளோடு நமக்குத் தேவையான ஆரோக்கியத்துக்குகந்த பழங்காலக் குறிப்புகளையும், அழகான படங்களோட தர்றாங்க, சித்ரா சுந்தர்.

இப்போதான் அடுப்படிக்கு அறிமுகமானவர்களுக்காக, ஜி.எம்.பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள், தன் மனைவியின் துணையோட ‘பூவையின் எண்ணங்கள்’ அப்படிங்கிற வலைப்பூ ஆரம்பிச்சிருக்கார்.  இவர் சொல்லித் தர்ற படி சன்னா பட்டூரா செய்து பாருங்களேன்…

சமையல்னாலே செட்டி நாடு சமையல்தாங்க. அவங்க சமையல்ல பல வித்தியாசமான பண்டங்கள் இருக்கும்; தனி ருசியோட இருக்கும். இதெல்லாம் பற்றி நமக்குச் சொல்லித் தர்றவர் (தந்தவர்? – ரொம்ப நாளா சமைக்கலை போல இவரு!), சதங்கா. செட்டி நாட்டுக்கே உரிய வாழைப்பூ வடையை இவர் சொல்ற மாதிரி செய்து பாருங்க!

சமையல் செய்ய ஆரம்பிச்சு ரெண்டு வருஷம்தான் ஆகுதுன்னு இவர் சொன்னாலும் (2010-க்குப் பிறகு இவரும் சமைக்கலை போல…), அம்முவோட பதிவுகள்லாம் பழுத்த அனுபவஸ்தரோட குறிப்புகள் மாதிரிதான் இருக்கு. அம்முவோட அமுங்காத பூரியை நீங்களும் செய்து பாருங்க!

அன்புடன்
கவிநயா

32 comments:

  1. சதங்கா (Sathanga) அவர்களின் தளம் எனக்கு புதிது... முடிவில் உள்ள தளம் (அம்மு அவர்களின் தளம்) கொடுத்துள்ள இணைப்பை மாற்ற வேண்டும்...

    இணைப்பு இந்த தளத்திற்கே (http://thulasidhalam.blogspot.com/) செல்கிறது...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. சுவையும் சுவை சார்ந்த பதிவுகளும்... ஆஹா, தலைப்பே அசத்தல்... எனக்கும் சமையலுக்கும் ரொம்ப தூரம் என்பதால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்... டி டி அண்ணே, நீங்க ரொம்ப கிரேட்....

    ReplyDelete
  3. அன்பின் கவிநயா - அருமையான அறிமுகம் - சமையல் அரசர்கள் அரசிகள் அறிமுகம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. உடனே மாற்றியமைக்கு நன்றி...

    ReplyDelete
  5. வாங்க தனபாலன். தவறான சுட்டியை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. நன்றி ஸ்கூல் பையன்!

    ReplyDelete
  7. நன்றி சீனா ஐயா!

    ReplyDelete
  8. சித்ரா சுந்தர், சின்னு ரேஸ்ரி ஆகியோரைத் தெரியாது. :)))) அறிமுகத்துக்கு நன்னி ஹை. மத்தவங்க பதிவுகள் அப்போப்போ படிச்சிருக்கேன். :)))) அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அன்பின் கவிநயா - அறிமுகப் படுத்தப் பட்ட அனைவரது பதிவுகளும் அருமை - பத்து சுட்டிகளையும் சுட்டி - சென்று - பார்த்து - படித்து - இரசித்து - மகிழ்ந்து - மற்மொழிகளூம் அங்கேயே இட்டு வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. கவிநயா,

    இன்று அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள். என்னுடையை வலைதளத்தையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  11. கவிநயா,

    இன்று அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள். என்னுடையை வலைதளத்தையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றிங்க.

    ReplyDelete
  12. சுவைச்சரம் - அழகான சொல்லாடல்.

    கீதா ஆச்சல், ஜலீலா கமால், கீதா சாம்பசிவம், சித்ரா சுந்தர் - இவங்க தயவுல நிறைய ருசியா சாப்பிடக் கிடைச்சிருக்கு.

    ReplyDelete
  13. சுவைச்சரம் தொடுத்த வலைச்சரங்களுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete

  14. AFter being introduced in valaicharam I will get more readers. And I feel I should take more interest and use my wife's culinary expertise for more useful posts.Thanks.

    ReplyDelete
  15. சுவைச்சரத்தில் இடம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. சூப்பர் அறிமுகம்... சுவைச்சரத்தில் நிறையத் தளங்கள் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் போதுமா!!(படித்து, செய்து சுவைப்பதற்குத்தான்) என்று பாடத் தோன்றுகிறது. மிக மிக நன்றி கவிநயா!!

    ReplyDelete
  17. சூப்பர் அறிமுகம்... சுவைச்சரத்தில் நிறையத் தளங்கள் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் போதுமா!!(படித்து, செய்து சுவைப்பதற்குத்தான்) என்று பாடத் தோன்றுகிறது. மிக மிக நன்றி கவிநயா!!

    ReplyDelete
  18. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    சின்னுரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்கநன்றி.

    அறியத்தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்கட்கு நன்றிகள்.

    ReplyDelete
  19. வணக்கம்
    இன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  20. ஆஹா... இன்று சமையல் சுவை! மணம் இங்கு வரை.....

    ReplyDelete
  21. நன்றி கீதாம்மா! மாதேவியை உங்களுக்குத் தெரியும்தானே? அவங்களோடதுதான் சின்னு ரேஸ்ரி :)

    ReplyDelete
  22. நன்றி கரந்தை ஜெயக்குமார்!

    ReplyDelete
  23. எல்லாத் தளங்களுக்கும் சென்று பின்னூட்டங்களும் பதிந்தமைக்கு மிக்க நன்றி சீனா ஐயா!

    ReplyDelete
  24. நன்றி சித்ரா சுந்தர்!

    ReplyDelete
  25. //சுவைச்சரம் - அழகான சொல்லாடல்.//

    ரசித்தமைக்கு நன்றி அப்பாதுரை!

    //கீதா ஆச்சல், ஜலீலா கமால், கீதா சாம்பசிவம், சித்ரா சுந்தர் - இவங்க தயவுல நிறைய ருசியா சாப்பிடக் கிடைச்சிருக்கு.//

    இப்போ உங்களுக்கு இன்னும் நெறய்ய்யக் கெடைக்கப் போகுது :)

    ReplyDelete
  26. நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா!

    நன்றி அருள்!

    ReplyDelete
  27. //AFter being introduced in valaicharam I will get more readers. And I feel I should take more interest and use my wife's culinary expertise for more useful posts.//

    மிக்க நன்றி ஜி.எம்.பாலசுப்ரமணியம் ஐயா! கண்டிப்பாகச் செய்யுங்கள்.

    ReplyDelete
  28. மிக்க நன்றி அமைதிச்சாரல்!

    //ஒரு நாள் போதுமா!!(படித்து, செய்து சுவைப்பதற்குத்தான்) என்று பாடத் தோன்றுகிறது.//

    நிறைய்ய்ய நாள் எடுத்து தினம் ஒண்ணாச் செய்ங்க :) மிக்க நன்றி பார்வதி!

    ReplyDelete
  29. மிக்க நன்றி மாதேவி!

    மிக்க நன்றி ரூபன்!

    மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது