07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 9, 2013

பன்முகக்கலைஞர்கள்!



புகைப்படக்கலை, கவிதைகள், வெண்பா ன்னு பதிவுகள் போட்டு அசத்துகிற ஒருவர்
ஜீவ்ஸ் என்றும் ஆசான் என்றும் அழைக்கப்படுகிற ஐயப்பன் க்ருஷ்ணன். பெங்களூரில் யாஹூவில் பணி. இணையப்பத்திரிகைகளில் இவர் கைவண்ணம் நிறைய இருப்பதாகவும் சிலதுக்கு இவரே ஓனர் என்றும் பட்சிகள் சொல்கின்றன. இவர் பன்முகக்கலைஞர். பொதுவான சமாசாரங்கள் http://kaladi.blogspot.in/2013/02/blog-post_17.html
கவிதைகள் http://payananggal.blogspot.in/
புகைப்படக்கலை http://photography-in-tamil.blogspot.com/
சினிமா பாடல்களின் வரி வடிவம் 
இப்படி பலத்துறைகளிலும் புகுந்து விளையாடும் கலைஞன்!

போட்டோக்களையும் கவிதைகளையும் முக்கியமா வைத்துக்கொண்டு பின்னி எடுக்கும் பதிவர் பெங்களூரை சேர்ந்த ராம லக்ஷ்மி. http://tamilamudam.blogspot.com/


"நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்" ன்னு சொல்லி குழந்தைகள், பெற்றோர்கள், கல்வி குடும்பம் சார்ந்த விஷயங்களை அலசுறது இந்த வலைப்பூ: http://parentsclub08.blogspot.in/ இது ஒரு கூட்டு முயற்சி. பல பேரும் பங்களிக்கறாங்க.

அன்பு ஒன்றே உருவெடுத்தா மாதிரி குணத்தோட கரிசனமா பல வித பதிவுகள் போடுகிற வல்லி சிம்மன் ஆச்சரியமான மனுஷி! பசங்களை வெளிநாட்டிலே பார்க்க போனால் அங்கே இருக்கிற விஷயங்களை படமெடுத்து போடுவார். தன் குறைகளை மறைக்காம சிரிச்சுகிட்டே தானே விமர்சனம் செய்வார்! அவசியம் பார்வை இட வேண்டிய பதிவுகள்! http://naachiyaar.blogspot.com/2013/04/blog-post_20.html

ஆச்சரியப்பட வைக்கிற இன்னொரு வித்தியாசமான பெண்மணி விதூஷ் என்கிற ஸ்ரீவித்யா. மடிப்பாக்கத்தில் குழந்தைகளுக்காக பள்ளி  நடத்தி வரும் இவர் பல விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர்.  சிறுவர்களுக்கான பாடல்கள், கதைகள் தொகுப்பு இங்கே
தன் ப்ளாகில் கவிதைகள், கதைகள், பழம்பஞ்சாங்கம்  என்ற பெயரில் பல பாரம்பரிய சமாசாரங்கள் என்று தொகுத்து வருகிறார். இவருடைய சயனைடு கவிதைகள் பெயரைக்கேட்டாலே ஓடும் அளவுக்கு வலை உலகில் பெயர் பெற்று இருக்கின்றன!
இவரது சமையலறையில் பிரசவ லேகியம் முதல் மசாலா மோர் வரை பார்க்கலாம்!


தமிழ் பாடல்களையும் வாழும் முறைகளையும் முடிச்சு போடுவது நம்ம சுப்பு தாத்தா! கணினின்னு ஒண்ணு இந்தியாவுக்கு வந்த முதலே அதில வேலை செய்ய ஆரம்பித்தவர். ஆரம்ப காலம் என்பதால் அது குறித்து பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர். இப்ப ரிடயர் ஆனாலும் இன்னும் கணிணி அறிவை அப்டேட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்! வாழ்வு குறித்த அவரது பதிவுகளை படிச்சுப்பாருங்க!

சமீப கால அறிமுகம் கோபி ராம மூர்த்தி. http://ramamoorthygopi.blogspot.in/2013/03/blog-post_1.html
இலக்கியம் இலக்கியம் ன்னு கேள்விப்பட்டு இருக்கலாம். எனக்கு அது கிலோ என்ன விலைன்னு தெரிஞ்சு ஆகணும்! இந்த கோபியை இலக்கியவாதின்னு இலக்கிய உலகம் ஒத்துக்கிடுச்சு! ரயில்வே டைம் டேபிளை கொடுத்தாக்கூட அதை எண்ட் டு எண்ட் படிச்சுட்டு அது பத்தி விமர்சனம் எழுதுவார் ன்னு சொல்கிறாங்க! இவரை சந்திக்கும் போதுதான் இலக்கியம் என்ன விலைன்னு கேட்கணும்ன்னு இருக்கேன். வாசிப்பு, சினிமா, பயணம், பரிந்துரை, நகைச்சுவை, நிகழ்வுகள்ன்னு பலதர பட்ட பதிவுகளையும் போட்டு இருக்கார்.

இன்னொரு சமீபத்திய அறிமுகம் ரஞ்சனி அக்கா. இப்ப பங்களூர் வாசம் போலிருக்கு. அழகு குறிப்புகள் முதல் நடப்பு சமாசாரங்கள் வரை பரவலான டாபிக்ல சுவாரசியமா எழுதறாங்க.


12 comments:

  1. அனைத்தும் நான் தொடரும் சிறப்பான தளங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. நானும் அறிந்த, சிறப்பான, நல்ல தளங்கள்.

    ReplyDelete
  3. எல்லாருமே தெரிஞ்சவங்க தான், படிக்கிறவங்க தான். :)))))))

    ReplyDelete
  4. டிடிக்கு ட்ரம்மர் ஆஃப் வலைச்சரம்னு பெயர் கொடுக்கப் போகிறேன். அவர் சொல்லி இராவிட்டால் தம்பி வாசுதேவன் நாச்சியார் பதிவைப் பற்றி எழுதியது தெரிந்திருக்காது.
    அதிக அளவில் படிப்பதைக் குறைத்துக் கொண்டதால் வலைச்சரம் வரவில்லை. மன்னிக்கணும் தம்பி வாசுதேவன்.

    இவ்வளவு அன்பான வார்த்தைகளுக்கு நான் ரொம்பக் கடமைப் பட்டிருக்கேன்.

    வலையில் எழுதும் அனைவரும் ஏதோ ஒரு நல்ல பகிர்வை அளிக்கிறார்கள்.
    இங்கே குறிப்பிட்டு இருக்கும் பதிவர்கள் மிக நல்ல சமூக அக்கறை கொண்டவர்கள் கூட(என்னைச் சொல்லவில்லை:) )
    நன்றி மா.

    ReplyDelete
  5. அவசியமான பதிவுகள். சுப்பு தாத்தா பதிவுக்கு இணைப்பு கொடுங்க.

    ReplyDelete
  6. பேரண்ட்ஸ் கிளப் அறிமுகத்துக்கு மிக்க நன்றி. லிங்கிற்கு நன்றி தனபாலன்

    ReplyDelete
  7. தங்கள் வலைச்சரத் தொகுப்பில் இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி, திவாஜி. மற்றவருக்கும் வாழ்த்துகள்!

    தகவலுக்கு நன்றி தனபாலன்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி திவாஜி. தகவலுக்கு நன்றி தனபாலன் ஜி.

    ReplyDelete
  9. வணக்கம் வாசுதேவன் தம்பிக்கு!
    முதலில் என்னை அக்கா என்றதற்கு, இரண்டாவதாக எனது தளங்களை வலைச் சரத்தில் அறிமுகம் செய்ததற்காக!
    திரு டிடி அவர்களுக்கு திருமதி வல்லி கொடுத்திருக்கும் பட்டப் பெயரை வழி மொழிகிறேன்.
    ஊரில் இல்லாததால் சிறிது தாமதமான பதில். மன்னிக்க வேண்டும் தம்பி!

    ReplyDelete
  10. @DD நன்றி!
    @ஸ்ரீராம் நன்றி.
    @ கீதா அக்கா, உங்களுக்குத்தான் எல்லாரையுமே தெரியுமே!
    @ வல்லிக்கா :-))
    @ ஜோதிஜி சரி செய்தேன். நன்றி.
    @ தென்றல், பெருமை என்னுடையது!
    @ ரா.ல, :-)
    @ கோபி - பன்முகக்கலைஞர் வாழ்க!
    @ ரஞ்சனி அக்கா, :-)

    ReplyDelete
  11. இனிய அறிமுகங்கள்..

    டிடிக்கு வல்லிம்மா கொடுத்த பட்டப்பெயரை முன்மொழியறேன் :-))

    ReplyDelete
  12. i just saw this. I am not BUN faced artist :))) Thanks DiVaji for kind words.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது