கடேசியா
wit டுப்போனது!
இந்த
தக்குடுன்னு ஒரு குழந்தை
இருக்கே,
இத எங்கே வெக்கிறது
என்கிற டைலமால விட்டுட்டேன்.
இப்ப அதிகம்
எழுதறதில்லை என்கிறதால காணாமல்
போனவர்கள் கேட்டகரில வைக்கலாம்ன்னு
யோசனை இருந்தது.
இல்லை ஹ்யூமர்ல
போடலாமா ன்னு கொஞ்சம் சஞ்சலம்.
கடேசில ரெண்டுத்துலேயும்
இல்லாம இங்கே போட்டாச்சு.
அண்ட்ராய்டுக்கு
கொடி பிடிக்கிற ஒரு முக்கிய நண்பர் ஷங்கர்.
இவருக்கு
பபுச்சா,
பபாஷா,
பபாஷாஜி,
ஷங்கர்ஜி,
சேம் ப்ளட் பண்ணை
ன்னு பல பேர்கள் உண்டு.
அம்மா தயவுல
இவரோட ஜெனெரேட்டர் யாவாரம்
நல்லா போயிட்டு இருக்காம்!
இயற்கை ஆர்வலர்.
என் வீட்டுத்தோட்டத்தில்
ன்னு டாபிக்ல அடிக்கடி இவர்
வீட்டு தோட்டத்துல இருக்கற
பறவைகள்,
பூச்சிகள் ன்னு
போட்டா போடுவார்.
பயணக்கட்டுரை,
சினிமா விமர்சனம்
ன்னு பல சப்ஜெக்ட் எழுதறார்.
அதிகம் எழுதறதில்லை!
பின்ன பிசி
இல்லையா?
நண்பர்
சந்திர சேகர் தமிழில் லீனக்ஸ்
பத்தி பதிவுகள் எழுதி இருக்கார்.
இப்ப என்னமோ
காணலை.
இருந்தாலும்
இந்த மாதிரி பதிவுகள் காலத்தால
அதிகம் பாதிக்கப்படாதவை.
லீனக்ஸ் பத்தி
தெரிஞ்சுக்க படிச்சு பாருங்க.
விட்டுப்போனதுல இன்னொன்னு விட்டுப்போச்சு! கோவை நகரத்து தாதா விசாலாட்சி என்கிற விஜிராம். சாப்பாடுன்னா உடனே கம்பு எடுத்துகிட்டு வந்துடுவாங்க! இவங்க ரெசிப்பி எதுவுமே வழக்கமானதா இருக்காது. அதுக்குத்தான் நிறைய பேர் இருக்காங்களே, நாம எதுக்கு என்பாங்க. படித்து மகிழுங்க. இவங்க தன நண்பியோட சேந்து உணவகமே நடத்தறாங்க! லிங்க் வலைப்பதிவிலி இருக்கும்.
பாட்டியில
ஆரம்பிச்சு பாட்டியிலேயே முடிச்சாச்சு!
பொறுமையான
பார்வையிட்டவர்களுக்கு
நன்றி!
தினசரி குரியர் மாதிரி பதிவுல அறிமுகப்படுத்தினவங்களுக்கு தகவல் தெரிவிச்ச நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றி!
ரைட்டர்ஸ்
ப்லாக் ல இருந்தவனை இப்படி
திடீர்ன்னு ஒரு வாய்ப்பு
கொடுத்து திருப்பிவிட்ட
அன்பின் சீனாவுக்கு நன்றிகள்
பல!
மேலும் வாசிக்க...
சில விளையாட்டு
வீரர்கள் விடாப்பிடியா இடத்தை
பிடிச்சுகிட்டு நகரமாட்டேன்னு
இருப்பாங்க.
இதுக்கு ஆங்கிலத்தில
வொய் ன்னு கேட்கிறப்பவே ரிடயர்
ஆகிடணும்;
வொய் நாட் ன்னு
கேட்கிற காலம் வரை இருக்கக்கூடாதுன்னு
சொல்வாங்க!
அதே போலத்தான்
வொய் ன்னு கேட்கிறா மாதிரி
சிலர் வலை உலகத்திலேந்து
காணாமபோயிட்டாங்க.
ஆமாம்.
இப்ப எழுதப்போறது
காணாமல் போனோர் பட்டியல்!
என்ன
செய்யறது?
இயற்கையா பல
மாற்றங்கள் வரும்.
வேலை மாறும்,
வேலை செய்யும்
இடம் மாறும்,
சூழ்நிலை மாறும்;
திருமணம் ஆகும்,
குழந்தை பிறக்கும்.
இப்படி பல
மாறுதல்கள்.
அந்த சமயங்களில்
பதிவுகள் எழுத வாய்ப்பு இல்லாம
போய்,
அப்படியே
நின்னுபோயிடும்.
அப்பப்ப எங்கேயாவது
தலையை காட்டினாலும் இவங்க
இன்னும் எழுதக்கூடாதான்னு
மனசு ஏக்கத்தோட நினைக்கும்.
முன்னேயே
சொன்னபடி ஆன்மீகம் எழுதின
மதுரையம்பதி சந்த்ர மௌலி
ஒத்தர்.
மதுரைக்காரர்.
அப்புறமென்ன?
மீனாக்ஷி,
மீனாக்ஷி,
மீனாக்ஷிதான்.
குறிப்பா நவராத்ரி
குறித்து எழுதின பதிவுகள்
அருமை!
வேலை மாற்றங்கள்,
நேரமின்மைன்னு
விட்டுட்டார்.
புதிர்கள்
ஜோக்குகள்....
ஒவ்வொரு பதிவுக்கும்
2000
3000 ஹிட் கிடைச்சுகிட்டு
இருந்தது!
அவ்வளோ பாப்புலர்.
திடுதிப்புன்னு
2010 ல
நின்னுபோச்சு!
இவர் யாருன்னு
கூட தெரிஞ்சுக்க முடியலை!
இப்ப முத்துசார் புதிர்கள் எழுதறார்.
அனைவரும் ஆதரிக்க
வேணும்.
இவர் இன்னும்
இருக்கத்தானே இருக்கார்;
இன்னும் எழுதக்கூடாதான்னு
நினைக்க வைக்கிறவங்க பெனாத்தல்
சுரேஷ்,
இலவச கொத்தனார்.
பெனாத்தல்
சுரேஷோட வைபாலஜி பதிவுகள்
உலகப்புகழ் பெற்றவை.
இவர் சீரியஸா நாவல்கள் எழுத
ஆரம்பிச்சார்.சீவாக சிந்தாமணி எளிய தமிழ் நடையில் புத்தகமா வந்திருக்கு. அல்வா ன்னு தமிழ்பேப்பர்ல தொடர் கதையும் எழுதி இருக்கார்.
வித்தியாசமான
பெயருடன் எழுதிகிட்டு இருந்த
இலவச கொத்தனார் ஆங்கிலத்துல
வேற பார்மேட்ல எழுத ஆரம்பிச்சுட்டார்.
குறிப்பா இவர்
பதிவு செய்த குறுக்கெழுத்து
போட்டிகள் மிகவும் சுவையா
இருந்தன.
அப்பப்ப வெண்பா,
அது,
இதுன்னு வித்தியாசமா
ஏதாவது செஞ்சுகிட்டு இருப்பார்.
இந்த
பதிவுக்காக போய் ஆராய்ஞ்சா,
இப்பவும் ரெண்டு
பேரும் ஆடிக்கு ஒண்ணு அமாவாசைக்கு
ஒண்ணுன்னு பதிவு போடறாங்கன்னு
தெரியுது!
நல்லாயிருக்கட்டும்!
ஹ்யூமருக்கு
பேர் போன அம்பி என்கிற ரெங்கா
பாய் என்கிற ரங்கராஜன் கோவிந்தன்
அம்மாஞ்சி என்கிற வலைப்பூ
எழுதிகிட்டு இருந்தார்.
இள வயசுக்காரங்களுக்கு
பிடிக்கிற மாதிரி நகைச்சுவை
கலந்து எழுதுவார்.
வேலை மாறி
அமேரிக்கா போனதோட பதிவுகளும்
காணாம போச்சு.
ஊருக்கு போறப்ப
பெண்களூரே திரண்டு கண்ணீரும்
கம்பலையுமா வழி அனுப்பி
வெச்சதா கேள்வி!
இவங்க
பத்தியெல்லாம் ஏன் எழுதறேன்னு
கேட்கறீங்களா?
யாரேனும் இவங்க
ஏம்ப்பா திரும்ப எழுதக்கூடாதான்னு
கேட்டு,
அவங்களும்....
சரி சரி விடுங்க!
வரட்டா?
மேலும் வாசிக்க...
லோகத்தில
பல விஷயங்கள் நமக்கு பிடிக்காததா
நடந்துகிட்டு இருக்கு.
அதைப்பத்தி
எல்லாம் எப்பவும் பொங்கிகிட்டு
இருக்கிறதுல அர்த்தமில்லை.
வாழ்கையில ஒரு
சென்ஸ் ஆப் ஹ்யூமர் வேணும்.
அப்படி இருந்தா எப்படிப்பட்ட
கஷ்டமும் தாங்க எளிதா ஆயிடும்.
பின்ன வலைக்கு
எதுக்கு வரோம்?
அழுகறதுக்கா
வரோம்?
சாதாரணமா
ஒரு சென்ஸ் ஆப் ஹ்யூமர் இருந்தா
போதும்,
அவங்களோட ப்ரெண்ட்
ஆயிடலாம்.
ஹ்யூமர் பதிவுகளே
போட்டா?
ஹ்யூமர்
பதிவுகளில கலக்குற இளைஞிகள்
இட்லி மாமி என்று அன்புடன்
அழைக்கப்படும் ஏடிஎம் என்கிற
அப்பாவி தங்கமணி என்கிற புவனி
கோவிந்த் உம் அனன்யா மஹாதேவனும்.
ஏடிஎம் இப்பத்தான்
சில நாட்களுக்கு முன்னே இந்த
வலைப்பதிவரா இருந்தாங்க.
அறிமுகம் தேவையில்லை.
அபுதாபி
சிங்கி அனன்யா இப்ப
சென்னைவாசியாயிட்டாங்க.
கொஞ்ச நாள் காணாமல்
போய் அப்புறம் போலீஸ் கம்ப்ளைண்ட்
கொடுத்து இப்ப ஒழுங்கா பதிவு
போட்டுக்கிட்டு இருக்காங்க.
இந்த இட்லி
மாமியும் அனன்யாவும் சேந்த்து
கொட்டம் அடிக்க ஆரம்பிச்சாச்சுன்னா
பஸ்ல வலையுலகே தாங்காது!
அதான் கூகுள்
பஸ்ஸை இழுத்து மூடிட்டாங்கன்னு
சிலர் அபிப்ராயம்!
இவங்க பண்ணற
ரவுசு இருக்கே.....!
'நல்ல'
காலமா ரெண்டு
பேரும் இடம் பெயர்ந்ததாலே
இப்ப கொஞ்சம் கொயட்டா இருக்கு!
கடுகு
கடுகு ன்னு கேள்விப்பட்டு
இருக்கீங்களா?
ஆமாம்,
பத்திரிகைகளில
நிறைய நகைச்சுவை கட்டுரை,
கதைகள் எழுதினவர்.
அவருக்கு வலைப்பூவும்
இருக்கறது எவ்வளோ பேருக்கு
தெரியுமோ?
சமீபத்திய
தொடர்பு தம்பி பாலாஜி.
ரயில்வேயில
'பெரிய'
உத்யோகம்.
இவர் கையெழுத்து
போட்டாத்தான் ரயில்வேல காசே
கிடைக்கும்ன்னா பாத்துக்குங்களேன்!
நல்ல மனுஷன்!
செம காமெடியா
பதிவு போடறதுலேயும் கெட்டிக்காரர்.
மேலும் வாசிக்க...
புகைப்படக்கலை,
கவிதைகள்,
வெண்பா ன்னு
பதிவுகள் போட்டு அசத்துகிற
ஒருவர்
ஜீவ்ஸ்
என்றும் ஆசான் என்றும்
அழைக்கப்படுகிற ஐயப்பன்
க்ருஷ்ணன்.
பெங்களூரில்
யாஹூவில் பணி.
இணையப்பத்திரிகைகளில்
இவர் கைவண்ணம் நிறைய இருப்பதாகவும்
சிலதுக்கு இவரே ஓனர் என்றும்
பட்சிகள் சொல்கின்றன.
இவர் பன்முகக்கலைஞர்.
பொதுவான சமாசாரங்கள்
http://kaladi.blogspot.in/2013/02/blog-post_17.html
இப்படி
பலத்துறைகளிலும் புகுந்து
விளையாடும் கலைஞன்!
"நமக்குள்ளே
கருத்துக்களை பகிர்ந்து
கொண்டு நல்ல பெற்றோராக,
அடுத்த தலைமுறையினருக்கு
உதவவே இந்த பிளாக்"
ன்னு சொல்லி
குழந்தைகள்,
பெற்றோர்கள்,
கல்வி குடும்பம்
சார்ந்த விஷயங்களை அலசுறது
இந்த வலைப்பூ:
http://parentsclub08.blogspot.in/
இது ஒரு கூட்டு
முயற்சி.
பல பேரும்
பங்களிக்கறாங்க.
அன்பு
ஒன்றே உருவெடுத்தா மாதிரி
குணத்தோட கரிசனமா பல வித
பதிவுகள் போடுகிற வல்லி
சிம்மன் ஆச்சரியமான மனுஷி!
பசங்களை வெளிநாட்டிலே
பார்க்க போனால் அங்கே இருக்கிற
விஷயங்களை படமெடுத்து போடுவார்.
தன் குறைகளை
மறைக்காம சிரிச்சுகிட்டே
தானே விமர்சனம் செய்வார்!
அவசியம் பார்வை
இட வேண்டிய பதிவுகள்!
http://naachiyaar.blogspot.com/2013/04/blog-post_20.html
ஆச்சரியப்பட
வைக்கிற இன்னொரு வித்தியாசமான
பெண்மணி விதூஷ் என்கிற
ஸ்ரீவித்யா.
மடிப்பாக்கத்தில்
குழந்தைகளுக்காக பள்ளி
நடத்தி வரும்
இவர் பல விஷயங்களில் ஆர்வம்
காட்டுபவர். சிறுவர்களுக்கான
பாடல்கள்,
கதைகள் தொகுப்பு
இங்கே.
தன் ப்ளாகில்
கவிதைகள்,
கதைகள்,
பழம்பஞ்சாங்கம் என்ற பெயரில்
பல பாரம்பரிய சமாசாரங்கள்
என்று தொகுத்து வருகிறார்.
இவருடைய சயனைடு
கவிதைகள் பெயரைக்கேட்டாலே
ஓடும் அளவுக்கு வலை உலகில்
பெயர் பெற்று இருக்கின்றன!
இவரது
சமையலறையில் பிரசவ லேகியம்
முதல்
மசாலா மோர் வரை பார்க்கலாம்!
தமிழ்
பாடல்களையும் வாழும் முறைகளையும்
முடிச்சு போடுவது நம்ம சுப்பு
தாத்தா!
கணினின்னு ஒண்ணு
இந்தியாவுக்கு வந்த முதலே
அதில வேலை செய்ய ஆரம்பித்தவர்.
ஆரம்ப காலம்
என்பதால் அது குறித்து
பலருக்கும் சொல்லிக்கொடுத்தவர்.
இப்ப ரிடயர்
ஆனாலும் இன்னும் கணிணி அறிவை
அப்டேட் பண்ணிக்கொண்டு
இருக்கிறார்!
வாழ்வு குறித்த
அவரது பதிவுகளை படிச்சுப்பாருங்க!
இலக்கியம்
இலக்கியம் ன்னு கேள்விப்பட்டு
இருக்கலாம்.
எனக்கு அது கிலோ
என்ன விலைன்னு தெரிஞ்சு
ஆகணும்!
இந்த கோபியை
இலக்கியவாதின்னு இலக்கிய
உலகம் ஒத்துக்கிடுச்சு!
ரயில்வே டைம்
டேபிளை கொடுத்தாக்கூட அதை
எண்ட் டு எண்ட் படிச்சுட்டு
அது பத்தி விமர்சனம் எழுதுவார்
ன்னு சொல்கிறாங்க!
இவரை சந்திக்கும்
போதுதான் இலக்கியம் என்ன
விலைன்னு கேட்கணும்ன்னு
இருக்கேன்.
வாசிப்பு,
சினிமா,
பயணம்,
பரிந்துரை,
நகைச்சுவை,
நிகழ்வுகள்ன்னு
பலதர பட்ட பதிவுகளையும் போட்டு
இருக்கார்.
இன்னொரு
சமீபத்திய அறிமுகம் ரஞ்சனி
அக்கா.
இப்ப பங்களூர்
வாசம் போலிருக்கு.
அழகு குறிப்புகள்
முதல் நடப்பு சமாசாரங்கள்
வரை பரவலான டாபிக்ல சுவாரசியமா
எழுதறாங்க.
மேலும் வாசிக்க...
டெக்
சமாசாரம் எழுதற பதிவர்களை
பிடிக்கும்.
கணினி சம்பந்தமா
நம்ம தொண்டு கிழத்தை அடிச்சுக்க
ஆள் இல்லைன்னாலும் (பின்ன
எப்படித்தான் வெளம்பரம்
செய்யுறது?)
மத்த ஃபீல்ட்
எல்லாம் இருக்கறதால போனாப்போறதுன்னு
...
ஜோசியம்
பத்தி பேராசிரியர் ...
அது கூட இல்லை...
பிஹெச்டின்னு
சொல்லலாமா?
அந்த லெவல்ல
இருந்து கொண்டு எழுதுவது
நம்ம வாத்தியார் சுப்பையா
அவர்கள்.
ஜோசியம் படிக்க
நல்ல நினைவாற்றலும் நல்ல
கூர்மையான புத்தியும் வேணும்.
கணக்கு போட
முடியணும்.
அப்படிப்பட்டவங்க
இவரோட வலைப்பூக்களை படிச்சு
ரொம்பவே உசரத்துக்கு போகலாம்!
இன்னொரு
ஜோசிய கரும்புலி ஸ்வாமி
ஓங்கார்.
இவரை இன்னார்ன்னு
கணிக்கறதே கஷ்டம்!
சாமியார் மாதிரி
இருப்பார்,
ஆனால் சாமியார்
இல்லே.
ஊர் அக்கப்போர்
எல்லாம் மேஞ்சுண்டு இருப்பார்!
அதே சமயம் மக்களை
வெள்ளியங்கிரி,
திருவண்ணாமலைன்னு
பயணம் அழைச்சுப்போவார்.
அதிகம்
எழுதறதில்லைன்னாலும் இவர்
பதிவுகளிலே ஆன்மீகமும்
இருக்கும்,
பகடியும் இருக்கும்!
இவரைவிட இவரோட
ஆல்டர் ஈகோ சுப்பாண்டி இன்னும்
பேமஸ்!
மொத்தத்தில்
சுவாரசியமா இருக்கும்.
'தமிழ்கம்ப்யூட்டர்'
குமரேசன் கொஞ்சம்
நடப்பு கால சமாசாரமா கணினி
சார் பதிவுகள் போடுகிறார்.
கட்டிடக்கலை
பத்தி பல பதிவுகள் நண்பர்
வடுவூர் குமார் போட்டிருக்கார்.
சிங்கப்பூர்,
வளைகுடான்னு பல
இடங்களிலும் வேலை பார்த்த
அனுபவம்!
சமீபத்தில்
நடந்த விபத்து பத்திய பதிவு
இங்கே.
செமத்தியான
சென்னை வெயிலில் இருந்து
தப்பிக்க இவர் செய்து
இருக்கறதைப் பாருங்க.
நமக்கு
பொலகேசி வம்சம்.
இசை பத்தி தெரியாது
என்கிறதால ரெபரன்ஸோட
நிறுத்திக்கறேன்!
கல்லிலும்
ஐம்பொன்னிலும் கலை வண்ணம்
காண்பது விஜய்.
பலரும்
கோவிலுக்குப்போகிறார்கள்,
சாமி கும்பிடுகிறார்கள்.
அங்கே இருக்கிற
அழகான சிலைகளை எவ்வளவு பேர்
நின்னு பார்க்கிறார்கள் ன்னு
நியாயமான கேள்வியை கேட்கிறார்.
தான் வல்லுனர்
இல்லை ரசிகன் என்றூ அடக்கத்தோட
சொல்லிக்கொள்ளும் இவர் பல
சிற்பங்கள்,
சிலைகள் பற்றி
சுவையான தகவல்களை தருகிறார்.
மேலும் வாசிக்க...
அனேகமா
எப்பவும் இன்பார்மலாவே
எழுதுவேன்.
சாதாரணமா 2
பேஜ் டவுன் க்கு
மேலே ஒரு பதிவை எழுதறதில்லை.
ரொம்ப மனசை
ஈர்க்கிற மாதிரி இல்லைன்னா
அதுக்கு மேலே யாரும்
படிப்பதில்லைன்னு ஒரு கணக்கு!
ரைட்!
இப்ப நான் படித்த,
படித்துக்கொண்டு
இருக்கிற சில வலைப்பூக்களை
அறிமுகப்படுத்தறேன்.
அதுதானே இந்த
பதிவுகளோட இலக்கு?
இந்த லிஸ்ட் எந்த
ஒரு ஆடர்லேயும் இல்லை.
ரேண்டமாத்தான்
இருக்கும்.
அத்தோட சில பல
பதிவர்களை மட்டுமே இங்கே
குறிப்பிடறேன்.
பலருதும்
விட்டுப்போகலாம்.
யாரும் கோபித்துக்கொள்ள
வேணாம்!
என்னை
போலவே...
சரி சரி,
என்னைவிட நல்லா...
ம்ம்ம் இதுவும்
சரி வரலை....
விடுங்க.
ஆன்மீகம் எழுதற
மற்ற வலைப்பதிவர்களில்
குறிப்பிட்டு சொல்ல வேண்டியது
சிலரை.
இதுல ஒத்தர்
பின்னாலே வேறு கேடகரில வருவார்.
ஆறேழு வருஷங்களா
அலுக்காம சளைக்காம ஆன்மீக
பதிவுகள் எழுதறது கீதா அக்கா.
இதுக்காகவே
ஆராய்ச்சி எல்லாம் பண்ணிகிட்டு,
தேவையானா பலரையும்
கன்சல்ட் செஞ்சு சீரியஸான
பதிவுகள் எழுதுவாங்க.
http://aanmiga-payanam.blogspot.com/
இப்போதைக்கு
ஸ்ரீரங்கம் மட்டையடித்திருவிழா
அமர்களப்படுது!
இவங்க
பொதுவான சமூக பிரச்சினை போன்ற
சமாசாரம் கூட நிறையவே எழுதுவாங்க.
அவங்க எண்ணங்களை
இங்கே பதிவு செய்கிறாங்க!
1534 எண்ணங்கள்
பதிவாயாச்சு!
இதே போல
கபீரன்பன் என்கிற உமேஷ்.
பெங்களூரில்
இருந்த இவர் வேலை மாறி குஜராத்
போன பிறகு எழுதறது நின்னு
போச்சு.
ஏதேனும் ஒரு
சிச்சுவேஷன் சொல்லி,
பெயருக்கு ஏத்தாபோல
பொருத்தமான கபீருடைய தோஹாக்களை
எழுதி,
அதை மொழிபெயர்ப்பும்
செய்து,
மிகப்பொருத்தமா
பல தமிழ் பாடல்களையும் மேற்கோள்
காட்டுவார்.
மிகவும்
ரசித்துப்படித்த பதிவுகள்.
இப்ப சமீப காலமா
மீண்டும் எழுத ஆரம்பிச்சு
இருக்கார்.
அவசியம் படிங்க.
பிஸியான
ஆடிட்டர்.
உங்க ஊருக்கே
வந்து இருந்தாலும் இதோ வரேன்னு
சொன்னாலும் நேரம் கிடைக்காது!
(பழி வாங்கிட்டேன்!)
அப்படிப்பட்டவர்
அப்பப்ப ஆன்மீக பதிவு போடுவார்.
தி.ர.ச
என்று அழைக்கப்படும் தி.ர.
சந்திரசேகரன்
பதிவுகளை படிச்சு ரசிங்க!
பலவருஷங்களாக
விசாகப்பட்டினத்தில் தமிழ்
வளர்த்து வருபவர் திவாகர்.
இவருக்கும்
எனக்கும் பெயர் குழப்பம்
ஏற்பட்டது!
திவா என்று நான்
சுருக்க கையெழுத்திட பலரும்
திவாகர் என்று நினைக்க.....
இதான் சாக்கு
என்று நான் திவாஜி ஆகிவிட்டேன்!
சரித்திர
ஆராய்ச்சியுடன் ஆன்மீகம்
உட்பட பல சப்ஜெக்ட்களையும்
நன்கு ஆராய்ச்சி செய்து
நூல்கள் எழுதுகிறார்.
வம்சதாரா என்ற
இவருடைய நாவல் பிரபலம்.
இவருடைய வலைப்பூவும்
சுவையானது!
மேலும் வாசிக்க...
எல்லாருக்கும்
வணக்கம்.
இந்த வாரம்
உங்களுடன் பொழுதை கழிக்கப்போறது
திவாண்ணா என்கிற திவாஜி என்கிற
திருமூர்த்தி வாசுதேவன்.
முதல்ல
அறிமுகப்படுத்திக்கொள்ளணும்ன்னு
சொல்லி இருக்காங்க.
சொல்லிக்க பெரிசா
ஒண்ணுமில்லைன்னாலும் அப்படி
சொல்லறதே ஒரு அறிமுகம்தானே?
:-)
2008
ஆம் வருஷத்திலேந்து
வலைப்பூக்களில உலாத்திகிட்டு
இருக்கேன்.
ஆரம்பத்தில
நல்ல சேதி ன்னு ஒரு வலைப்பூ
ஆரம்பிச்சேன்.
எது நல்லது
என்கிறது பத்தி நம்ம கற்பனையும்
மத்தவங்க கற்பனையும் ஒண்ணா
இருக்காதுன்னு சீக்கிரமே
புரிஞ்சது!
மேலும் அதுல
அனேகமா எல்லா பதிவுகளுமே
பேப்பர்களிலிருந்து காபி
பேஸ்ட் ஆ இருந்தது.
நாமா சொந்தமா
எழுதணும்ன்னு முடிவு செய்து
என்ன எழுதலாம்ன்னு யோசிச்சப்ப
ஆன்மீக விஷயங்களை கேட்டு
படித்து புரிந்து கொள்வதில
இறங்கி இருந்தேன்;
அது குறித்தே
எழுதலாம்ன்னு தோணித்து.
என்னைப்பொருத்த
வரை ஒரு விஷயம் புரிஞ்சாதான்
அதை என் நடையில எழுத முடியும்.
சரி,
விஷயம் புரிஞ்சுக்கவும்
புரிஞ்சுக்கலாம்.
பதிவு எழுதவும்
எழுதலாம் ன்னு இறங்கிட்டேன்!
மத்த விஷயங்களுக்கும்
வலைப்பூக்கள் ஆரம்பிச்சாலும்,
அதுதான் என்
"ஃப்லாக்
ஷிப்"
(flagship) ஆ இருக்கு!
ஆயிரம் பதிவுகளை
தாண்டியது இறைவன் செயல்தான்.
குறிப்பா கோளாறான
எண்ணங்கள்,
உரத்த சிந்தனைகள்
பகவான் கொடுத்த ஒரு இன்ஸ்பிரேஷன்ல
எழுதினவைதான்.
இதை ஆரம்பிச்ச போது டம்மீஸ் ன்னு ஒரு சீரீஸ் புத்தகங்கள் பிரபலம். முன்னால விஷயம் எதுவும் தெரிஞ்சிருக்க அவசியமில்லாம வெகு சுளுவா, சுவையா பேசிக் விஷயங்களிலேந்து சொல்லிக்கொண்டு போகிறது இவங்க உத்தி. அதே போல செய்யணும்ன்னு நினைச்சு பேர் வெச்சேன். அப்ப ஏதும் காப்பிரைட் ன்னு யாரும் ஆரம்பிக்கக்கூடாதேன்னு ஸ்பெல்லிங் ஐ மாத்தி வெச்சேன்!
அடுத்து
போட்டாக்ராபில இறங்கி இருந்தேன்.
பழைய புத்தகங்களை
கொஞ்சம் டிஜிட்டலா சேமிக்க
வழி வகைகளை கண்டு பிடிக்க
இங்கே அங்கே கன்சல்ட் செஞ்சப்ப
ஜீவ்ஸ் என்கிற ஒரு கலைஞரின்
தொடர்பும் பிட் என்கிற தமிழில்
போட்டாக்ராபி என்ற வலைத்தள
தொடர்பும் கிடைச்சது.
அப்ப நம்ம படங்களை
நம்ம ப்லாக்ல வலையேத்திட்டு
சுட்டி கொடுக்கணும்ன்னு
சொல்லி இருந்ததாலே ஆரம்பிச்சது
சித்திரம் பேசுதடி. உதாரணத்துக்கு http://chitirampesuthati.blogspot.com/2011/03/blog-post_6823.html
பின்னால சப்மிட்
செய்யற முறையை மாற்றிவிட்டாங்க.
அப்பப்ப நம்ம
'மகத்தான'
கலை படைப்புகளை
போஸ்ட் பண்ண இன்னும் இது
உபயோகமாகிறது.
என்
குடும்பத்திலேயே வயசானவங்க
ஒரு ஆர்வத்துல கணினி பயன்படுத்த
கத்துக்கொண்டாங்க.
வீட்டுல இருக்கிற
சின்ன பசங்க ஆனேகமா காலேஜ்
படிச்சுகொண்டு இருப்பாங்க.
ஆனா இந்த
வயசானவங்களுக்கு கணினி சார்ந்த
விஷயங்களை சந்தேகம் கேட்டாக்கூட
சொல்ல அவங்களுக்கு அலுப்பா
இருக்கும்.
புரியாத மாதிரி
ஏதாவது சொல்லுவாங்க.
இப்படிப்பட்ட
வயசானவங்களுக்காகவே உருவாக்கினது
தொண்டு கிழங்களுக்கு கணினி.
http://techforelders.blogspot.com/2010/11/blog-post_06.html
சமீபத்துல
ஆண்ட்ராய்ட் போன் ஒண்ணு வாங்கினப்ப
அது பத்தியும் எழுதத்தோணித்து.
எழுதினேன்.
தமிழ்ல
டைப் செய்யக்கத்துகிட்டு,
என்னத்தை டைப்
செய்யறதுன்னு யோசிச்சேன்.
தமிழ் கொஞ்ச்
கொஞ்ச் தெரியும் என்கிறதால
நிறைய தமிழாக்கம் செய்துகிட்டு
இருக்கேன்.
உபுண்டு
இயங்குதள ...
சரி சரி...
ஆபரேடிங்
சிஸ்டத்துக்காக ஆரம்பிச்சு
இப்ப க்னோம் இடைமுக தமிழாக்கம்
பல வருஷங்களா....
ரிலிவ் பண்ணிடுங்கன்னு
இப்பதான் ரிக்வெஸ்ட் வெச்சு
இருக்கேன்.
இப்ப இரண்டு
வருஷங்களா ஸ்போகன் டுடோரியல்ன்னு
மும்பய் ஐஐடி ப்ராஜக்ட்....
முன்னேயே சொன்னேன்
இல்லையா,
புரிஞ்சாத்தான்
எழுத முடியும்ன்னு?
இதுக்காக லேடக்
என்கிற சமாசாரத்தை கையில்
எடுக்க வேண்டி வந்தது.
அது டிடிபி (DTP)
சமாசாரம்.
தமிழ்ல அது வேலை
செய்யுமான்னு மூழ்கி ஆராய
வேண்டி இருந்தது.
கொஞ்சம் சிரமப்பட்டு
வழி வகைகளை கண்டு பிடிச்சேன்.
மத்த இந்திய
மொழிகளிலேயும் இதை செய்ய
முடியும்.
அதனால இது குறித்த
லிமிடெட் பதிவுகள் tecfromelder
என்கிற வலைப்பூவா
ஆங்கிலத்துல பதிஞ்சு வெச்சேன்.
http://tecfromelder.blogspot.com/2011/10/oomthis-is-test-postthis-is-entirely.html
அதே போல
ஆன்மீக பதிவுகளை ஆங்கிலத்தில்
-
Spirituality
for Youth
-
எழுத ஆரம்பிச்சு
அப்படியே நிக்குது!
நேரமில்லை!
என்னிக்கோ ஒரு
நாள் தொடர்வேனோ என்னமோ.
பகவான் விட்ட
வழி!
ம்ம்ம்ம் .... அப்புறம் சொந்த சமாசாரம் எனக்கு 90ம்ம்ம்.. ச்சீ, ச்சீ ... 60 வயசு நடக்குது. பொறி துயில் ஆழ்த்துனரா வேலை செய்யறேன். ஒரு பையன், பேரன், பேத்தி. என்
சுய புராணம் அவ்வளோதான்.
இதுவே அதிகமா போச்சு! அடுத்த பதிவில
சந்திப்போம்!
மேலும் வாசிக்க...