வீடியோ கேம்ஸ் - புதையலைத் தேடி...
➦➠ by:
சாய் ராம்
"ஓடியாடுற வயசுல சின்ன பசங்க வீட்டுக்குள்ளே முடங்கி டிவி, வீடியோ கேம்ஸ் இப்படி நேரத்தை வீணாக்கி உடம்பைக் கெடுத்துகிறாங்க."
"வீடியோ கேம்ஸ் விளையாடிட்டே இருந்தா மனசு கெட்டு போயிடும். உடம்பு தளர்ந்துடும்."
"சின்ன பசங்க மாதிரி பெரிய ஆளுங்களும் வீடியோ கேம்ஸ் விளையாடிட்டு இருக்காங்க."
"எங்க பத்து நிமிஷம் கிடைச்சாலும் மொபைல்ல வீடியோ கேம்ஸ் விளையாட ஆரம்பிச்சிடறாங்க."
வீடியோ கேம்ஸ் குறித்து நம் சமூகத்தில் நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால் நிறைய பேர் அதை விரும்பி விளையாடி கொண்டு தான் இருக்கிறோம். மொபைல் சின்ன திரையில் கீச் கீச் ஆங்கிரி பேர்ட்ஸ் தொடங்கி வீட்டில் கேம் ஸ்டேஷனில் சினிமா மாதிரி அனிமேசன் செய்யபட்ட strategy games வரை நம்மை வீடியோ கேம்ஸ் கவர்ந்துள்ளன.
ஹாலிவுட் ரசிகன்
பேருக்கு ஏற்றார் போல ஹாலிவுட் ரசிகன் தான் என்றாலும் வீடியோ கேம்ஸும் ரசித்து விளையாடும் வலைப்பதிவர். வீடியோ கேம்ஸ் விளையாடும் சிறுவர்களைத் துரத்தி விட்டு கேடிவிக்கு சானல் மாற்றும் பெரியவர்கள், இளைஞனாக இருக்கும் போது ஒரு குழுவாய் நண்பர்கள் கூடி ஒரு விளையாட்டை விளையாடும் சுகம், இப்போது பெரிய ஆள் ஆனதும் அதனை மறக்காமல் தனியே அந்த வீடியோ கேம்ஸை விளையாடுவது இப்படி தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார் FIFA 12 - வீடியோ கேம் பதிவில். கேம்ஸை மிகவும் ரசித்து விளையாடுவதோடு மிக நுணுக்கமாய் அதனை விவரிப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. Elder Scrolls V : Skyrim கேம் பற்றிய பதிவு மிகவும் ரசித்து எழுதபட்டு இருக்கிறது.கேம்ஸ்களுக்கே உரிய சுவாரஸ்யமாய் கதைக்கும் தன்மை, அதனுள் தொழில்நுட்ப அறிவு, நம்முடைய விரல்களின் வேகம், மனம் அதனுள் அமிழ்ந்து போதல், கேம்கள் நமக்கு தரும் சுதந்திரம் இப்படியான விஷயங்கள் ரசிக்கும்விதமாய் பதிவாகி இருக்கின்றன.
வடகரை தாரிக்
பெரும்பாலும் மொபைல் போன்களுக்கான கேம்ஸ் பற்றி சொல்கிறார். அதிகமாய் விவரிப்புகள் இல்லையெனினும் கேம்ஸ் பற்றிய தகவல்கள் வேண்டுவோர் இவரது வலைப்பதிவினை வாசிக்கலாம்.

- ஆண்ராய்டு போனில் புதிய கிரிக்கெட் கேம்ஸ்கள்
- விளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு
- Angry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக!
ராஜ்
ராஜ் ஒரு இன்ஜீனியர். சிறு வயதில் சூப்பர் மரியோ கேம் விளையாடி ஒரு வழியாய் எட்டாவது வகுப்பு முழு பரீட்சை லீவு காலத்தில் முழுமையாய் எல்லா லெவல்களையும் தாண்டியதை சுவாரஸ்யமாய் விவரிக்கிறார். சம்பாதிக்க தொடங்கியவுடன் தனக்காக முதலில் வாங்கியது x-box தான். Call of Juarez-(PC/Xbox360) -சபிக்க பட்ட புதையலை தேடி ஒரு பயணம் பதிவில் அந்த கௌ பாய் கேம் பற்றி சுவாரஸ்யமாக சொல்கிறார். The Saboteur- (2009) புரட்சிக்காரன் ஆவது எப்படி.. ??-17+ பதிவில் (இதன் முதல் பாராவை தவிர்த்து விடவும்) உலகப் போர் கேம் பற்றி ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார்.
ராஜேஷ் டா ஸ்கார்ப்
கருந்தேள் என்கிற பெயரில் வலைப்பதிவு நடத்தும் ராஜேஷ் சினிமா, புத்தகம் என நிறைய எழுதுகிறார். வீடியோ கேம்ஸ் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். முதலில் இவரது தளத்தினைச் சுற்றும் போது ஆங்கில தளம் போல தோன்றும். ஆனாலும் வீடியோ கேம்ஸ் பதிவுகள் தனியாக திறக்கும் போது ஒவ்வொன்றும் விரிவாக தமிழில் ரசித்து எழுதபட்ட பதிவுகள்.
மேலே குறிப்பிட்ட அனைவரும் வீடியோ கேம்ஸ் பற்றி எழுதியிருக்கிறார்கள் தவிர வீடியோ கேம்ஸிற்கான தனி வலைப்பதிவு என்று ஒன்று தமிழில் இது வரை பார்க்கவில்லை. அப்படி எதுவும் இருந்தால் நண்பர்கள் மறுமொழியில் பகிருங்கள்.
...மேலும் பேசுவோம்...
...மேலும் பேசுவோம்...
|
|
அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
எல்லாம் புதிய தளங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திண்டுக்கல் தனபாலன், வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் ரூபன் ஆகியோருக்கு நன்றி!
ReplyDelete