நினைவின் விளிம்பிலிருந்து வலைச்சரத்திற்கு…
➦➠ by:
கவிநயா
வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்.
நலந்தானே?
“எத்தனை நாள்தான் நினைவின் விளிம்பிலேயே
உலாத்திக்கிட்டு இருப்பே? இங்கிட்டுக் கொஞ்சம் வந்து பாரேன்”, அப்படின்னு எனக்கு வலை(ச்சரத்தை)
விரிச்சவர், சீனா ஐயா. அவருக்கு முதலில் என்னுடைய நன்றிகள்.
“அச்சோ! ஏழு நாளும் எழுதணுமா?!”
அப்படின்னு பயம்மாத்தான் இருந்தது. அட, எனக்காக இல்லீங்க, உங்களுக்காகத்தான்! பாவம்ல
நீங்க? ஆனா எவ்வளவோ பட்டுத் தெளிஞ்ச நீங்கல்லாம் என்னையும் சகிச்சுக்குவீங்க தானே? :)
கவிநயா, என்னோட புனை பெயர். பெயர்
சூட்டு விழாவெல்லாம் இல்லாம, நல்ல நாளெல்லாம் பார்க்காம, நானே ஒரு நாள் வெச்சுக்கிட்டேன்.
பெயர்க் காரணம் தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருந்தா, இங்கே வந்து பாருங்க! அமெரிக்காவில்
வாசம். கணினித் துறையில் வேலை. பரத நாட்டியம் ஆடுவேன், சொல்லியும் தர்றேன். எழுதறதில்
தனி விருப்பம். வாசிக்க ஆள் இருந்தாலும் இல்லேன்னாலும் ஏதாச்சும் எழுதிக்கிட்டே இருக்கணும்
எனக்கு. தமிழ்க் குழுமங்களில் எழுதி, பிறகு இணைய பத்திரிகைகளில் எழுதி, கடைசியா ‘நினைவின்
விளிம்பில்…” வந்து செட்டில் ஆயிட்டேன்! இப்போ வல்லமை மின்னிதழின் ஆசிரியர் குழுவுக்கு
என்னாலான சிறு சிறு உதவிகள் செய்யறேன். ஆன்மீகத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டு.
என்னுடைய எழுத்துப் பயணம் (குக்கிராம டூர் மாதிரி ரொம்பச் சின்னதுதானுங்க),
எழுத்தின் மீதான மயக்கம், இது ரெண்டையும் பற்றிய சுய
புராணங்களை என் வலைப்பூவில் பகிர்ந்திருக்கேன்.
கவிதை வடிவம் தான் முதலில் எழுத
ஆரம்பிச்சது. பிறகு சிறுகதை, குறுங்கதை, தொடர்கதை, கட்டுரை, மொழிபெயர்ப்புக் கவிதை, இப்படிப் பல வடிவங்கள்லயும்
கை வெச்சாச்சு! எனக்கே பிடிச்ச, கொஞ்சம் வித்தியாசமா இருக்கும், அப்படின்னு நினைக்கிற
படைப்புகளை இங்கே பகிர்ந்திருக்கேன்… நேரம் கிடைக்கும் போது வாசிச்சுப் பார்த்து, உங்க
கருத்துகளைப் பகிர்ந்துக்கிட்டா, நன்றியுடையவளா இருப்பேன்.
கவிதைகள் தான் நிறைய… மற்றதெல்லாம்
கொஞ்சம் கொஞ்சம்…
கவிதைகளில் சில -
சாமி பாட்டு – கணபதி தாள்கள் போற்றி!
பாப்பா பாட்டு – ஆனை பாரு! யானை பாரு!!
பரதக் கவிதை – தத்தோம் தகதோம் தரிகிட தத்தோம்!
காதல் கவிதை – ரகசியமாய்…
சிறுகதைகளில் சில -
குறுந்தொடர் (எழுதினதே இவ்ளோதான்!)
-
கட்டுரைகளில் சில –
போதும் போதும்னு நீங்க எழுந்து
ஓடறதுக்குள்ள நானே நிறுத்திக்கிறேன் :) நாளைக்கு மீண்டும் பார்க்கலாம்!
அன்புடன்
கவிநயா
|
|
ரசிக்க வைத்தது சுய அறிமுகம்... பாராட்டுக்கள்...
ReplyDeleteதொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்...
தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
இவ்வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்..தொடரட்டும் அறிமுக புதுமுகங்கள்...
ReplyDeleteசின்ன வேண்டுகோள் பதிவில் எழுத்துருவை கொஞ்சம் பெரிதாய் வைத்தால் வசதியாய் இருக்கும்..
முதன் முறையாக உங்கள் வலை தளத்திற்கு சென்றேன். ஒவ்வொன்றாக படிக்கிறேன். வலைசர ஆசிரியர் பனி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல அறிமுகம். உங்கள் வலைத்தளத்தில் எழுதியவற்றை மாலையில் படிக்கிறேன்.....
ReplyDeleteசிறப்பான வாரமாக அமைய வாழ்த்துகள்.
இனிய வாழ்த்துகள் கவிநயா..
ReplyDeleteஅருமையான
ReplyDeleteஅறிமுகப்பகிர்வுகள் ரசிக்க வைத்தன ..வாழ்த்துகள்...
இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். :))))
ReplyDeleteஉங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் சிறப்பான பணிக்கு
ReplyDeleteகவிநயாவின் அபிநயம் வலைச்சரத்தில் காணக் காத்திருக்கிறேன் !
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி தங்களின் இவ்வார ஆசிரியர் பொறுப்பு நன்முறையாகப் பயணிக்கட்டும் .இன்று அறிமுகமான
ReplyDeleteஅனைத்துத் தளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
மிக்க நன்றி பகிர்வுக்கு .
அன்பின் கவிநயா - திண்டுக்கல் தன பாலன் இருக்கும் வரை தமிழ் மண இணைப்பு பற்றி கவலைப் பட வேண்டாம். அது மட்டுமல்ல - அறிமுகப் படுத்தப் படும் பதிவர்களுக்கு அறிமுகம் பற்றிய செய்தி உடனுக்குடன் சென்று விடும். வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கத் தயங்குகிறாரே தவிர இவ்விரண்டு செயல்களையும் ஒவ்வொரு வலைச்சரப் பதிவினையும் தவறாமல் படித்து செய்து முடித்து விடுகிறார்.
ReplyDeleteநல்லதொரு செயலினை தினமும் செய்யும் நல்ல நண்பர்
நல்வாழ்த்துகள் தி.த - நட்புடன் சீனா
அறிமுகம் செய்து கொண்ட விதமே மிக அழகாய்.. அழுத்தமாய். வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்
ReplyDeleteவலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கத் தயங்குகிறாரே தவிர இவ்விரண்டு செயல்களையும் ஒவ்வொரு வலைச்சரப் பதிவினையும் தவறாமல் படித்து செய்து முடித்து விடுகிறார்.
ReplyDeleteநல்லதொரு செயலினை தினமும் செய்யும் நல்ல நண்பர்
சலிப்பே இல்லாமல் அவர் செய்யும் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. :)
தொடரட்டும் பணி வாழ்த்துக்களுடன்!
ReplyDeleteவாழ்த்துகள் கூறிய தனபாலன், ரேவா, முரளிதரன், வெங்கட் நாகராஜ், அமைதிச்சாரல், இராஜராஜேஸ்வரி, கீதாம்மா, கவியாழி கண்ணதாசன், சரளா, பகவான்ஜீ, அம்பாளடியாள், சீனா ஐயா, ரிஷபன், தனிமரம், அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteதனபாலன் அவர்களின் சிறப்பான பணிக்கு சிறப்பு நன்றிகள். நீங்கள்தான் அசத்துகிறீர்கள், தனபாலன். உங்கள் உதவிகளுக்கு மிகவும் நன்றி.
வலைச்சர வாரத்துக்கு இனிய வாழ்த்துகள் கவிநயா:)!
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஇந்ந வாரம்
இணைந்திருப்பவருக்கு
இனிக்கும் வரமாம்
அன்பினிய ரேவா, எழுத்துகளைப் பெரிதாக்கி வாசிப்பதற்குரிய உதவிக் குறிப்பு இங்கே... http://tamilblogging.blogspot.com/2009/06/blog-post.html
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி, திகழ் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் கவிநயா! கவிதைகளால் கலக்குங்கள்.
ReplyDeleteநன்றி திரு.கைலாஷி!
ReplyDeleteஅழகிய அறிமுகம். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி மாதேவி!
ReplyDelete