கதைச்சரம் - கதையும் கதை சார்ந்த பதிவுகளும்
➦➠ by:
கவிநயா
யாராவது கற்பனையா ஒரு செய்தி
சொன்னா, நல்லா கதை கட்டுறியேன்னு சொல்லுவோம். அந்த மாதிரி அரட்டைக்காக அல்லது வம்புக்காக
கதை கட்டுறது வேற, உண்மையாவே கதை எழுதறது வேற… கதை எழுதறது அப்படி ஒண்ணும் சுலபமே இல்லீங்க!
அதுவும் சுவாரஸ்யமா, வாசகர்களைக் கட்டிப் போடற மாதிரி எழுதறதுங்கிறது எல்லாருக்கும்
வராது. பொதுவாகவே எந்தக் காரியத்தையும் விமர்சிக்கிறது சுலபம், செய்யறதுதான் கஷ்டம்.
என் அனுபவத்தில் நான் தெரிஞ்சிக்கிட்டது
என்னன்னா, கதை எழுதறதுக்கு சுற்றி நடப்பவைகளைக் கவனிச்சு மனசில் வாங்கிக்கிற திறன்
வேணும். மனுஷங்களையும் வாழ்க்கையையும் வேடிக்கை பார்க்கத் தெரிஞ்சிருக்கணும். பல சமயங்களில்
சுலபமா சூப்பரா ஒரு கதையை ஆரம்பிச்சிடலாம், ஆனா அதை அதே அளவு அழகோட முடிக்கிறது கஷ்டம்.
அதை அழகா வடிவமைச்சு செதுக்கறதுக்கு நிச்சயமா நேரமும், நிறைய பொறுமையும், சிரத்தையும்
வேணும்.
சரி இப்ப நான் கதை விடறதை நிறுத்திட்டு,
நெஜமாவே கதை எழுதறதவங்களைப் பற்றிச் சொல்றேன்! :)
ஒரு சீரியஸான விஷயத்தை எடுத்துக்கிட்டு
அதை நகைச்சுவையாகவும் அதே சமயம் மனசைத் தொடும் வகையிலும் அழகா சொல்றவங்க, அப்பாவி
தங்கமணி. அவங்களோட
உனக்கும் எனக்கும் என்கிற கதை ஒரு நல்ல உதாரணம்.
தொடர்கதைகளும் நிறைய எழுதறாங்க.
இவங்க சீரியஸாகவும், நகைச்சுவையாகவும்,
ஆன்மீகமாகவும், கவிதையாகவும், நிறைய எழுதற, ஓவியம், பாட்டு, போன்ற மற்ற கலைகளிலும்
அசத்தற சகலகலகலாவல்லி. ஷைலஜா அக்கா. சமீபத்தில் ஆராதனா அப்படின்னு ஒரு கதை எழுதினாங்க
பாருங்க… யாருமே தொடத் தயங்கற ஒரு விஷயத்தை ரொம்ப அழகா, சொல்லியிருக்காங்க.
ஜீவி
ஐயா ஒரு மூத்த
எழுத்தாளர். ரொம்ப அனுபவமுள்ளவர். இவருடைய பின்னூட்டங்களே விவரமாகவும், வித்தியாசமாகவும்,
சுவாரஸ்யமாகவும் இருக்கும். என்னை மாதிரி கத்துக் குட்டி எழுத்தாளர்களையும் பாராட்டற
அளவு பெருந்தன்மையானவர். இவரோட இயல்பான கதை சொல்லும் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம்,
கனவும் காட்சியும் என்கிற இவரோட சிறுகதை. இப்போ
இவரோட வலைப்பூவில் ‘கனவில் நனைந்த நினைவுகள்’ அப்படின்னு ஒரு தொடர்கதை எழுதிக்கிட்டிருக்கார். பேரே அழகா இருக்குல்ல!
என்னை மிகவும் பிரமிக்க வைக்கிற
எழுத்தாளர், அப்பாதுரை. அவருடைய அனுபவங்களின் ஆழம்
அவருடைய எழுத்தில் பளீரிடும். அவருடைய சிந்தனைகளும் சரி, நடையும் சரி, கற்பனையும் சரி,
வித்தியாசமா இருக்கும், தெளிந்த நீரோடை போல இருக்கும். நிஜம் போலவே, நம் பக்கத்தில் இருந்துகிட்டு அவர் கதை
சொல்ற மாதிரியே இருக்கும். அவர் எழுத்தை வாசிப்பதே தனி அனுபவம். மிகச் சுலபமா வேற ஒரு
உலகத்துக்கு கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டு போயிடுவார்… தேனில் ஒரு துளி போல அவரோட
ரங்க தோஷத்தைப் படிச்சா உங்களுக்கே தெரியும்….
அமெரிக்காவில் வாசம்னாலும், கிராமத்தானாகவே
மண்வாசனையோடு அறியப்பட விரும்புகிறவர், பழமைபேசி. பெரும்பாலும் தினசரி வாழ்வை
வைத்து எழுதப்படுகிற இவருடைய எழுத்தும், நடையும் வாசிக்கவே ரொம்ப சுகமாக இருக்கும்.
நிஜ சம்பவத்தை நம்மோடு அவர் பகிர்ந்துக்கறாப் போலவே இருக்கிற இவருடைய சமீபத்திய சிறுகதைகளில்
ஒண்ணு, நகைச்சுவைத் திருவிழா. கவிதைகளும் நிறைய எழுதறார்.
மாணிக்க
மாதுளை முத்துகள்
என்கிற அழகான இவரோட வலைப்பூவின் பெயரே இவருக்குத் தமிழில் இருக்கிற ஆர்வத்தைச் சொல்லும்.
நண்பர்கள் இவரை உரிமையுடன் அழைப்பது ஜிரா என்று. புராண நிகழ்வுகளை சுவாரஸ்யமான கதைகளாக்கித் தரும்
திறமை இவரிடம் இருக்கு. அதைத் தவிர கட்டுரைகளும், மாயாஜாலக் கதைகளும், விமர்சனங்களும்
எழுதற இவர், ஒரு முருக பக்தர், மற்றும் சமையல் கலைஞர்!
நிறைய சிறுகதைகளும் கவிதைகளும்
எழுதிக்கிட்டிருந்த சதங்கா, இப்போ நிறைய ஆன்மீகமும் யோகமும்
பொது நலக் கட்டுரைகளும் எழுத ஆரம்பிச்சிருக்கார். இளமை விகடனில் இவருடைய படைப்புகள்
வராத இதழே இல்லைங்கிற அளவு அங்கே பயங்கரமா ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இன்னும் அங்கே
எழுதறாரான்னு தெரியல. நான் ரொம்ப நாளா அந்தப் பக்கம் போகலை! இவரோட வட்டக் கரிய விழி என்கிற அழகான காதல் கதை அங்கே
வெளியானதுதான்!
மிக எளிமையாகவும், இனிமையாகவும்,
சுலபமாக மனதைக் கவரும் விதத்தில் எழுதறவர், ரிஷபன். கவிதைகள், கதைகள் அப்படின்னு
எல்லாத்திலயும் கலக்கறார். இவருடைய நிறத்திற்கு ஒரே நிறம் என்கிற கதையைப் படிச்சாலே போதும்,
இவர் எழுத்தின் அருமை பளிச்சுன்னு தெரிஞ்சிடும்.
பூ சலம்பு என்கிற வித்தியாசமான வலைப் பூவுக்கு சொந்தக் காரர்,
சுவர்ணரேக்கா. சிறுகதைகளும் கட்டுரைகளும் நிறைய எழுதிக்கிட்டிருந்தார். இப்ப கொஞ்ச
நாளா காணும். இவருடைய வித்தியாசம் என்கிற கதையை படிச்சா சுருக்கமா
சொன்னாலும் சொல்ற விஷயத்தை சுருக்குன்னு சொல்ற இவரோட திறமை தெரியும்.
கதைச்சரத்தை அனுபவிச்சுக்கிட்டே….
இருங்க… நாளைக்கு இன்னொரு சரத்தோட சந்திக்கலாம்!
டிஸ்கி: நான் சொன்ன, சொல்ல இருக்கும்
பதிவுகளைப் பற்றிப் பொதுவா ஒரு வார்த்தை. பதிவுகளில் நான் குறிப்பிடறவங்களுக்கெல்லாம்
அறிமுகம் தேவையில்லாட்டாலும், இதை ஒரு நன்றி சொல்கிற வாய்ப்பா கருதி, அவங்களை இங்கே
குறிப்பிடறேன்… இவங்க எல்லாம் பெரும்பாலும் நான் வாசிக்கிறவங்க. நிறைய புதிய பதிவர்களை
அறிமுகப்படுத்தலையே அப்படின்னு தோணுச்சுன்னா, புதிய பதிவுகளை explore செய்ய இயலாத என்னோட
நேரமின்மையே காரணம். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கறேன்.
அன்புடன்
கவிநயா
|
|
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .
ReplyDeleteஅனைவருமே தெரிந்தவர்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி அம்பாளடியாள்!
ReplyDeleteகீதாம்மா, உங்களுக்குப் புதுசா சொல்லும்படி எனக்கு ஒண்ணுமே தெரியாதே...:) வருகைக்கு நன்றி கீதாம்மா.
கீதாம்மா, உங்களுக்குப் புதுசா சொல்லும்படி எனக்கு ஒண்ணுமே தெரியாதே...:) //
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))
அனைத்து தளங்களும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteகனிமொழிக்கு நன்றி, கவிநயா!
ReplyDeleteநீங்க குறிப்பிட்டிருக்கும் பதிவர்களை நானும் ரசித்துப் படிப்பவன்.
கீதா சாம்பசிவம் அவர்களுக்குத் தெரியாத ஏதாவது சொலவதென்றால் மிகவும் சிரமம் தான்.
அருமையான வலைச்சரம் .. குறிப்பிட்டவர்களுக்குப் பாராட்டுக்கள்...
ReplyDeleteஅனைவரும் தெரிந்த பதிவர்கள்...... தொடரந்து பல பதிவர்களை அறிமுகம் செய்திட வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஜிரா அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி கவிநயா..அப்பாதுரை போன்ற மிக நல்ல படைப்பாளிகள் நடுவே நானும் பூவோடு நாராக இருப்பதில் மகிழ்ச்சி! வலைச்சர அறிமுகம் செய்த கலையரசி கவிநயாவிற்கு மனம் கனிந்த நன்றி பல.
ReplyDeleteஅறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteஎன்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி.. பிற பதிவர்களுக்கு என் வாழ்த்துகள்.
ReplyDelete//சுவர்ணரேக்கா. சிறுகதைகளும் கட்டுரைகளும் நிறைய எழுதிக்கிட்டிருந்தார். இப்ப கொஞ்ச நாளா காணும். //
ReplyDeletePlease come back again ...
//அப்பாதுரை எழுத்தை வாசிப்பதே தனி அனுபவம். மிகச் சுலபமா வேற ஒரு உலகத்துக்கு கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டு போயிடுவார்… //
ReplyDeleteWell said :)
சிறப்பான பகிர்வு கவிநயா. அனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஆற்றுப்படுத்தி வந்து பார்த்துத் தெரிந்து கொண்டேன். மனசில் இருப்பதை பெயர்த்து எழுதிய தங்கள் வரிகளுக்கு மிக்க நன்றி, கவிநயா!
ReplyDeleteசிறப்பானதளங்களையும் பதிவர்களையும் அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றியும்!
ReplyDeletegood introductions
ReplyDeleteவாழ்த்தும் நன்றியும்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//அனைத்து தளங்களும் தொடரும் தளங்கள்//
ReplyDeleteநன்றி தனபாலன். கீதாம்மாக்கு சொன்னதேதான் உங்களுக்கும் :P
//கனிமொழிக்கு நன்றி, கவிநயா!//
ரசித்தேன் :) நன்றி அப்பாதுரை.
//அருமையான வலைச்சரம் .. குறிப்பிட்டவர்களுக்குப் பாராட்டுக்கள்... //
ReplyDeleteநன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
நன்றி வெங்கட் நாகராஜ்.
நன்றி ஸ்கூல் பையன்.
நன்றி சமுத்ரா.
//அப்பாதுரை போன்ற மிக நல்ல படைப்பாளிகள் நடுவே நானும் பூவோடு நாராக//
ReplyDeleteஉங்களுக்கு ரொம்ப தன்னடக்கம் ஷைலஜாக்கா :) நன்றி.
//என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றி..//
ReplyDeleteஉங்களுக்கும் இங்கே சொல்லியிருக்கும் யாருக்குமே அறிமுகம் தேவையில்லை என்று அறிவேன் ரிஷபன் :) இப்போதுதான் உங்களுடைய வலைச்சரப் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தேன். 'சப்தப்ராகாரம்' என்ற அழகான தலைப்பிட்டு என்ன அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி.
நன்றி ராமலக்ஷ்மி!
ReplyDeleteமிக்க நன்றி ஜீவி ஐயா!
நன்றி s.suresh!
நன்றி arul!
நன்றி பழமைபேசி!
நன்றி mazhai.net!
நன்றி ரூபன்!
அறிமுகத்திலிருந்து எல்லா வலைச்சரமும் பார்த்தேன் இனிய வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
//அறிமுகத்திலிருந்து எல்லா வலைச்சரமும் பார்த்தேன் இனிய வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.//
மிக்க நன்றி, வேதா.இலங்காதிலகம்!
அனைவருக்கும் வாழ்ததுகள்
ReplyDeleteநன்றி திகழ்!
ReplyDeletehttp://kavimanam.blogspot.in/2013/05/56.html
ReplyDeleteகதைச் சரத்தில் இவங்களையும் சேர்க்கச் சொல்லி இருக்கணும், எப்படியோ மறந்திருக்கேன். இப்போ இங்கே கொடுக்கிறேன். அருமையாகக் கதையை ஒரு நிகழ்வு போலவே எழுதறாங்க. ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் தென்பட்டாலும் கதைப் போக்கு அவற்றை மறக்கடிக்கிறது. எல்லாரும் போய் ஆதரவு கொடுங்கப்பா! :))))))
தெரிந்த அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete//கதைச் சரத்தில் இவங்களையும் சேர்க்கச் சொல்லி இருக்கணும், எப்படியோ மறந்திருக்கேன். இப்போ இங்கே கொடுக்கிறேன். அருமையாகக் கதையை ஒரு நிகழ்வு போலவே எழுதறாங்க.//
ReplyDeleteபுதிய அறிமுகத்துக்கு நன்றி கீதாம்மா!
நன்றி மாதேவி!
ReplyDelete