07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 20, 2013

கோவையிலிருந்து அகிலா – 2

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை...

நீலம் மாறிய காலை வானம்...
மழையின் தூவல்களில் மரங்களின் ஆர்ப்பரிப்பு...

நட்டு வைத்த ரோஜா மட்டும்
என் கைப்படாத நீரில்
நனைந்து கொண்டிருப்பதாய்க்
கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது

எழுத்தும் அதன் அழகும் : கற்பனை
நம் எழுத்துக்கள் அனைத்தும் வாழ்க்கையின் பதிவுதான். என்ன, கூடவே கொஞ்சமாய் கற்பனையை மையில் தொட்டிருப்போம். கற்பனைவாதம் கலந்த அந்த எழுத்துக்கள் உணர்வுகளை அதிகமாக மொழியின் மேல் உடுத்தி அழகுப் பார்க்கும். அவற்றின் வடிவங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்துவதில்லை. இருந்தும் நமக்கு அவையே மிகவும் பிடித்தவைகளாகிப் போகின்றன.

இன்றைய அறிமுகத்தில் எனக்கு பிடித்த 
சில பதிவர்களும் அவர்களின் வலைப்பூக்களும்   

பதிவர் : இரத்தின புகழேந்தி

பதிவு 1 : இரத்தின புகழேந்தி

முதுகலை ஆசிரியர் தேர்வு விடை - 2013,
கருத்தரங்கம், கதை என்று
களமிறங்கி கலக்கியிருக்கிறார்

பதிவு 2 : மண்கவுச்சி
வே சபாநாயகம் பற்றிய குறிப்பு,
சடுகுடு விளையாட்டு, நாட்டுப்புறக் கதைகள்
தெருக்கூத்து என்று தமிழின் பண்பாட்டின் வேர்களைத் தொட்டிருக்கிறார்
பழமையான நிறையக் கருத்துக்களை நம்முள் பதிக்கிறார்....

பதிவு 3 : நாட்டுப்புறம்

மழவருது மழவருது
நெல்லு அள்ளுங்க
முக்காப்படி அரிசி எடுத்து
முறுக்கு சுடுங்க
ஏரு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையுங்க
சும்மா இருக்குற மாமனுக்கு
சூடு வையுங்க..

இப்படி அழகான நாட்டுப்புற பாடல்களை
அள்ளித் தெளித்திருக்கிறார்...
இப்படி எழுதிக் கொண்டேயிருக்க
நேரத்தை அவரிடம் கடன் வாங்க எண்ணியிருக்கிறேன்...


பதிவர் : கௌசல்யா ராஜ்

பதிவு 1 : மனதோடு மட்டும்

காதல், கல்யாணம். சமூகம் என்று கலக்கலாய்
வலம் வந்திருக்கும் கௌசல்யா ராஜ்
நெல்லைத் தமிழை சுத்தமாக வாசித்திருக்கிறார்...


பதிவர் : மாதேவி

பதிவு 1 : சின்னு ரேஸ்ரி

வித்தியாசமான சமையல் குறிப்பு பதிவுகள்
கோழி சமையலுக்காக
கோழி முதல் கோழி குஞ்சு வரை
படம் பிடித்துப் போட்டு
சமைத்தும் காட்டிவிடுகிறார் அழகாக...

பதிவு 2 : ரம்யம்

கொலம்போவின் சுற்றுலா தளங்களை
நமக்கு சுற்றிக் காட்டிவிடுகிறார்...
கசுரீனா பீச், நுவரெலியா விக்டோரியா பார்க்
இன்னும் எத்தனையோ இடங்களை
அழகான புகைப்படங்களுடன்
அதிகமாக எழுத்துக்களை சிந்தாமல்
அளவாய் எழுதி நம்மை மகிழ்விக்கிறார்...


பதிவர் : ஜீவன்சுப்பு

பதிவு : வண்ணத்துப்பூச்சி

மாமியாரின் இறப்பு ஆகட்டும் காதல் கடிதம் ஆகட்டும்
அழகாக சொல்லிச் சென்றிருக்கிறார் வார்த்தைகளில்.
கவிதை எழுத வரவில்லை என்று சொல்லியே
எழுத்தையே கவிதையாக்கிவிட்டார்...


பதிவர் : எஸ் ஆர் சேகர்

பதிவு : சந்தனச் சிதறல்

அரசியல் அவ்வளவாய் என் விருப்பத்தில் இல்லை
வலைப்பூவின் தலைப்பு என்னை இழுத்ததேன்னவோ உண்மை
உள்ளே நுழைந்தால் அரசியல் அலசல்
தனக்கு சரியெனப்பட்டதை
வம்பில்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார்...நன்று...  



படிச்சுப் பார்த்து உங்க கருத்தைச் சொல்லுங்க...
சந்தோஷமா இருங்க...
நாளைக்கு வரேன்...

38 comments:

  1. இன்றும் ஒரு சிறு தவறை சுட்டிக்காட்டுவதற்கு மன்னிக்க... லேபிளில் தங்களது பெயரை சேர்க்கவேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. சரி செய்துவிடுகிறேன்...

      Delete
  2. அருமையான அறிமுகங்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  3. ரோஜாவின் கண்ணீர் ரசிக்க வைத்தது. கலவரக்காரனை அறிமுகம் செய்தது அருமை.. மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. அருமையான அறிமுகங்கள்...
    தொடரட்டும் தங்கள் சீரிய பணி...

    ReplyDelete
  5. வணக்கம்

    மனதை ஆர்ப்பரிக்கும் மிக அருமையான கவிதையுடன் இன்று வலைச்சரத்தை சிறப்பித்துவைத்த உங்களுக்கு எனது நன்றிகள் அத்தோடு வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நல்ல நல்ல பதிவர்களையும் அவர்களின் பதிவுகளையும் அறிமுகம் செய்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. இடம் பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சந்தனச் சிதறல் தளம் புதிது... அறிமுகத்திற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தற்செயலாய் பார்க்க நேர்ந்தது...அதிகம் பரிச்சயம் இல்லாத பதிவர்களை அறிமுகப்படுத்த எண்ணியிருக்கிறேன். இருந்தும் எங்காவது சிறிதே பதிவுகள் இட்டிருக்கும் பதிவர்களின் நண்பர்கள் பட்டியலில் தங்களின் பெயரும் இருக்க காண்கிறேன் தனபாலன்...உங்களின் பதிவுலக ஈடுபாடு என்னை வியக்க வைக்கிறது...நன்றி நண்பா...

      Delete
  8. மழைத் தூறலுடன் இனிய கவிதை!.. நல்ல தளங்கள்.. அதிலும் ராஜபுகழேந்தியின் வலைத்தளத்தில் மண் வாசம் கமழ்கின்றது!.. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. படிக்க நிறைய இருக்கிறது அவரின் வலைபூக்களில்...நன்றி

      Delete
  9. மனதோடு மட்டும் கௌசல்யா-வை தவிர அனைவரும் இன்று தான் எனக்கு அறிமுகம்..

    சிறந்த பகிர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் தேடுகிறேன்...நன்றி பிரகாஷ்...

      Delete
  10. அழகிய கவிதையுடன் தொடர்ந்த அறிமுகப்பதிவர்கள் பதிவு மிக சிறப்பு....

    மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
  11. அது கொலம்போ அல்ல கொழும்பு.அறிமுகங்கள் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .உங்கள் ஆசிரியர் பணி
    மேலும் சிறப்பாகத் தொடரட்டும் தோழி !

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களின் வாழ்த்துக்கு...

      Delete
  13. க்யூட் கவிதைக்கும் அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி மேடம்ஜி ...!

    ReplyDelete
  14. சந்தோசமாக இருக்கிறது...

    எனது தளத்தை அறிமுகபடுத்திய அன்புக்கு என் நன்றிகள் தோழி.

    தோழி கையால் அறிமுகமான பிற நட்புகளுக்கு என் பிரியமான வாழ்த்துகள் !!

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி கௌசல்யா...

      Delete
  15. இனிய கவிதையில் இன்றைய நாள் ஆரம்பம் வாழ்த்துக்கள்
    இன்று அறிமுகம் செய்த அனைத்து வலைபதிவர்களுக்கும்
    உளம் நிறைந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. எனக்கு ஒருவரைத் தவிர மற்றவர்கள் புதிய அறிமுகங்கள்தான் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  17. அழகாய் சுவைபட இன்றைய அறிமுகங்கள்; நன்றி!

    ReplyDelete
  18. இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    மழ மழ வருது என்ற நாட்டுப்புற பாடல் கேட்டு இருக்கிறேன். அவர் தளம் சென்று படிக்க ஆசை.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. படிங்க...நன்றி கோமதி அரசு..

      Delete
  19. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. சின்னுரேஸ்ரி, ரம்யம் இரண்டு தளங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் மகிழ்ச்கின்றேன். நன்றி.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது