07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 13, 2013

ஸ்கூல் பையன் - எனது தேடல்கள்

நண்பர்களே, சகோதர சகோதரிகளே !


அனைவருக்கும் வணக்கம்.  இன்றைய வலைச்சரத்தைத தொடங்கும் முன்னர் ஒரு முக்கியமான நண்பருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.  அவர் நம் எல்லோருக்கும் அறிமுகமான திண்டுக்கல் தனபாலன் அவர்கள். இன்னார் என்றில்லாமல் அனைவரது தளத்துக்கும் சென்று தனது கருத்துக்களைக் கூறி ஊக்கமளித்து வருகிறார். வலைச்சரத்தின் ஒவ்வொரு அறிமுகத்தையும் அறிமுகப்படுத்தப்பட்டவரிடம் கொண்டுபோய் சேர்ப்பிக்கிறார். ஒவ்வொரு சுட்டியையும் ஆராய்ந்து தவறு இருப்பின் சுட்டிக்காட்டுகிறார்.  தொடர்பதிவு எழுதினால் அதையும் சம்பந்தப்பட்டவர்களிடம் அறிவிக்கிறார்.  இவர் இல்லை என்றால் பல தொடர்பதிவுகள் எழுதப்படாமல் போயிருக்கும்.  இவர் கடந்த சில நாட்களாக அதிகம் இணையத்துக்கு வரமுடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.  நேற்று இவரிடம் தொலைபேசியதில் இன்னும் ஒரு வாரத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்றிருக்கிறார்.  அதனால் நான் தங்கள் அனைவரிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் அறிமுகப்படுத்தப்படும் தளங்கள் அனைத்துக்கும் சென்று பின்னூட்டம் ஒன்றை இட்டு வாருங்கள்.  உற்சாக டானிக் வழங்குங்கள்.

===============

இந்த இரண்டாம் நாளில் இணையத்தில் நான் தேடியவற்றைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.  கணினி வாங்கியதோ கேம்ஸ் விளையாடுவதற்காகவும் பாடல்கள் தரவிறக்கி கேட்பதற்காகவும் மட்டுமே.  விடிய விடிய Prince of Persia 3D என்ற விளையாட்டை விளையாடியிருக்கிறேன். சில நாட்களில் இவை அலுக்கவே என்னுடைய தேடல்கள் தொடங்கின.  சினிமா, நகைச்சுவை, கதை, கட்டுரை என்று பலவற்றையும் படித்தாலும் ஒரு திருப்தியின்மை இருந்துவந்தது.  அப்போது எனக்கு அறிமுகமானது தான் ஜோதிடம்.


ஜோதிடம் பற்றி இணையத்தில் தேடியதில் வகுப்பறை என்ற வலைப்பூ அறிமுகம் ஆனது.  திரு. சுப்பையா என்பவர் இந்தத் தளத்தை நடத்தி வருகிறார்.  பெயருக்கு ஏற்றவகையில் இந்தத் தளத்தில் ஜோதிடத்தைப் பாடமாக நடத்தி வருகிறார்.  ஜோதிடம் என்பது பெருங்கடல், ஜோதிட நூல்களை அப்படியே படிப்பதென்பது மிகச்சிலருக்கே சாத்தியம்.  அவை கடினமான தமிழால் எழுதப்பட்டிருக்கும்.  ஆனால் வாத்தியார் அவர்கள் எளிய நடையில் பாமரனுக்கும் புரியும் வண்ணம் பாடங்களை நடத்தி வருகிறார்.  கடந்த ஆறு வருடங்களாக எழுதி வரும் இவர் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட பாடங்களை நடத்தியிருக்கிறார்.  அதுமட்டுமல்ல, இவரது தளத்தைத் தொடர்பவர்கள் மொத்தம் எத்தனை தெரியுமா? நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர்.  தமிழ் வலைப்பூக்களில் இத்தனை பின் தொடர்பவர்கள் கொண்ட ஒரே தளம் இதுதான் என்று நினைக்கிறேன்.


கவிஞர் கண்ணதாசனின் ஜாதகத்தை அலசியிருக்கிறார் பாருங்கள்.




ஜோதிடர்கள் எப்படி ஜாதகத்தை ஆராய வேண்டும் என்று சொல்லித்தருகிறார் பாருங்கள்.




பண்டித ஜவஹர்லால் நேருவின் ஜாதகத்தை அலசியிருக்கிறார் பாருங்கள்.



தனது பதிவுகளை காப்பியடித்து யாரோ சிலர் காப்பியடித்து தங்களது தளத்தில் வெளியிட, அதனால் கொஞ்சம் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.  பின்னர் இணையத் திருட்டுகளை தடுக்க முடியாது என்று விட்டுவிட்டார்.





அடுத்தபடியாக சித்தூர் முருகேசன். இவர் அனுபவ ஜோதிடம் என்ற தலைப்பில் வேர்ட்பிரெசிலும் சொந்த தளத்திலும் எழுதி வருகிறார்.  கடந்த ஆண்டு பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.  இவர் எழுதிய சில பதிவுகள் கீழே..






அடுத்ததாக நல்ல நேரம் என்ற தளத்தை நடத்தி வரும் திரு. சதீஷ்குமார் அவர்கள். இவர் தற்போது அதிகம் எழுதுவதில்லை.  முகநூல் பக்கம் சாய்ந்திருக்கிறார்.  மீண்டும் பழையபடி தினம் ஒரு பதிவு எழுத வேண்டும்.








அடுத்ததாக ஜாதக கதம்பம் என்ற பெயரில் வலைப்பூ நடத்திவரும் திரு.ராஜேஷ் சுப்பு அவர்கள்.  இவர் முழு நேரமாக ஜாதகம் பார்ப்பதையே தொழிலாக நடத்திவருகிறார், இவரது அலுவலகம் சென்னை அடையாரில் இருக்கிறது.  இதுவரை சுமார் 800 க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியுள்ளார்.  ஜாதகம், ஜோதிடம், ஆன்மிகம் என பலவகைகளில் எழுதி வருகிறார். இவரது பதிவுகளில் எனக்குப் பிடித்தவை சில.








ஜோதிடர் முருகு பாலமுருகன். http://www.muruguastrology.com என்ற தளத்தில் நிறைய எழுதியிருக்கிறார்.  இவர் எழுதியதில் எனக்குப் பிடித்தவை சில.






அடுத்ததாக எ.கே.ஆனந்த் என்பவர்.  மலேஷியாவில் வசிக்கும் இவர்  http://ananth-classroom.blogspot.in என்ற தளத்தை நடத்திவருகிறார்.  இவரது தளத்தில் எனக்குப் பிடித்தவை கீழே







அடுத்ததாக பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள்.  http://kuppuastro.blogspot.in/ என்ற பெயரில் வலைப்பூ நடத்தி வருகிறார்.  இவர் சாப்ட்வேர் இஞ்சினியராக சென்னை அம்பத்தூரில் பணிபுரிகிறார்.  முறையாக ஜாதகம் கற்றிருக்கும் இவர் பரிகாரங்கள் செய்வதில் வல்லவர்.  இவருக்கு என்னையும் என்னை இவருக்கும் தனிப்பட்ட முறையில் தெரியும்.  ஆனால் நான் ஸ்கூல் பையன் என்ற பெயரில் எழுதுவது என்று இவருக்குத் தெரியாது.  இவரது வலைப்பூவில் சில.




அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகளில் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.  நன்றி.

இன்று என் தளத்தில் "ரத்தம் பார்க்கின் - 2"

நாளை: சொல்லாடல் வித்தகர்கள்


60 comments:

  1. ஸ்கூல் பையங்கிறதை நிருபீத்து விட்டீர்கள் ...முதலில் வகுப்பறையை அறிமுகம் செய்து !

    ReplyDelete
    Replies
    1. அட ஆமா சார்... முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

      Delete
  2. எடுத்த எடுப்பிலேயே திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களையும் வாத்தியார் திரு. சுப்பையா அவர்களையும் அடையாளங் காட்டியமைக்கு மகிழ்ச்சி. மற்ற தளங்களும் பாராட்டுதல்களுக்கு உரியவையே!..வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளைப் படித்து ஊக்குவிப்பதில் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நிகர் அவரே...

      கனிவுடன் பாடம் நடத்துவதில் வாத்தியார் அவர்களுக்கு நிகர் அவரே...

      Delete
  3. இத்தன பேர் ஜாதகம் ஜோசியம் பற்றி எழுதுறாங்களா.. எனக்கு வகுப்பறை மட்டும் தான் தெரியும் அதுவும் உங்கள் மூலமாக... ஜோசியம் ஜாதகம் பற்றிய துறைகளில் ஆர்வம் இருக்கும் பதிவர்களுக்கு ஏற்ற அறிமுகங்கள்... தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஓ, வகுப்பறை ஞாபகம் இருக்கா... கூகிள் பற்றி நீங்க எழுதினதை வாத்தியார் ஒரு பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்....

      Delete
  4. வகுப்பறை முதல் சுட்டி வேலை செய்ய வில்லை கவனிக்கவும் எனக்கு அனைவரும் புதிது நன்றி

    ReplyDelete
    Replies
    1. வேலை செய்கிறதே.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம்....

      Delete
  5. எனக்கு மிகவும் விருப்பமான தளங்களை வலைச்சரத்தில்
    குறிப்பிட்டமைக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. அருமையான பதிவர்களை
    அருமையாக அறிமுகம் செய்தமைக்கும்
    திண்டுக்கல் தனபாலன் அவர்களைச் சிறப்பாக
    அறிமுகம் செய்தமைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  7. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. ஜோசியம் பக்கம் போகணும்.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. போய்ப்பாருங்க... அது ஒரு கடல்...

      Delete
  9. திரு DD இல்லாமல் ஒரு வலைச்சர தொகுப்பு இருந்ததே இல்லை என்று சொல்ல வேண்டும். இன்றைக்கு ஜோதிட சிறப்பு சரமா?
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா, தி.த. இல்லாமல் வெறிச்சோடிப் போயுள்ளது.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா...

      Delete
  10. உண்மைதான். டிடின்னு செல்லமா அழைக்கப்படுற திண்டுக்கல் தனபாலன் பதிவு பக்கம் வரலையேன்னு பார்த்தேன். உங்க பதிவு பார்த்து இன்னும் ஒருவாரத்துக்கு வரமாட்டார்னு தெரிஞ்சுகிட்டேன். என் சார்பா ஒரு ஹாய் சொல்லிடுங்க நண்பருக்கு.

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...

      Delete
  11. வித்தியாசமான அறிமுகங்கள்.நன்று

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா குட்டன்?

      Delete
  12. ஜோதிடம்-
    மூளையில்லாதவர் கைகளில்
    மூட நம்பிக்கையின் விளைச்சல்...
    ஆனாலும் சிலநேரங்களில்
    ஜாதகம்...
    பார்ப்பவர் நம்பிக்கு ஏற்ப
    சாதகமாக சொல்லப்படுவதால்..
    தன்னம்பிக்கையும் விதைக்கிறது
    வெற்றியும் மலர்கிறது
    என் சொந்தக் கருத்து...
    தங்கள் அறிமுகப்படுத்திய
    ஜோதிட நண்பர்களைச் சொல்லவில்லை
    நல்ல அறிமுகம்....
    வகுப்பறை...யில்
    நானும் ஒரு மாணவன்...நன்றி

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்து அண்ணே.... நன்றி..

      Delete
  13. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களை அவரவர் தளங்களில் சொல்லுங்களேன்....

      Delete
  14. கலக்குறீங்க சகோ!

    ReplyDelete
  15. அனைவருக்கும் வாழ்த்துகள்... நல்ல தேடல்... உங்களுக்கும் பாராட்டுகள்...

    ReplyDelete
  16. பின்னூட்ட பிதாமகர் திண்டுகல்லார் தற்போது ஓய்வு எடுப்பது கொஞ்சம் வருத்தம்தான்... பதிவுலகில் பின்னூட்டம் என்பது மூச்சுக் காத்து போன்றது. பின்னோட்டம் இல்லா பதிவு,உப்பிலா பண்டம் மாதிரி... சில சொந்த பிரச்சனைகளால் ஒதுங்கி இருக்கிறார் என நினைக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணே.... சீக்கிரம் வரவேண்டும்...

      Delete
  17. நமக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் ஜோதிட நம்பிக்கை உள்ள பல பேருக்கு நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவுகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்,

    ReplyDelete
  18. வணக்கம்

    இன்று அறிமுகங்கள் சிறப்பாக உள்ளது அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்...

      Delete
  19. கலக்கல் அறிமுகங்கள்...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. சோதிடங்கள் பற்றி இவ்வளவு பேர்கள் எழுதுகிறார்கள் என்பதை உங்கள் மூலம் தான் அறிய முடிகிறது அண்ணே ... தேடல் பெரியதுதான் ...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் நிறைய பேர் எழுதுகிறார்கள்... அவர்களில் அசலையும் நகலையும் இனங்காண்பதில் சிரமம் இருக்கிறது.... கருத்துக்கு நன்றி அரசன்....

      Delete
  21. இன்றைய அறிமுகங்களில் பெரும்பாலானவர்கள் எனக்குப் புதியவர்கள்..... படிக்கிறேன்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. படியுங்கள்... தொடருங்கள்... நன்றி வெங்கட் அண்ணே..

      Delete
  22. அழகாய் அறிமுகங்கள். பதிவுகளைச் சென்று பார்க்கிறேன். நன்றி!

    ;பாட்டு ஒற்றுமை (1)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கலையன்பன்...

      Delete
  23. வாழ்த்துக்கள் சகோ சிறப்பான அறிமுங்களுக்கும் ,உங்கள் ஆசிரியர் பதவி
    சிறப்புறவும் .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு நன்றி சகொதரி...

      Delete
  24. வாழ்த்துகள் ஸ்கூல் பையன்! கலக்குங்க! சிறப்பான அறிமுகங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கு நன்றி சகொதரி...

      Delete
  25. என்னுடைய தளத்தைப் பற்றிக் குறிபிட்டு எழுதிய மேன்மைக்கு மிக்க நன்றி நண்பரே!
    அன்புடன்
    SP.VR.சுப்பையா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா... தங்களை சிறப்பித்ததில் எனக்கு மகிழ்ச்சி....

      Delete
  26. அருமையான பதிவர்கள்
    அருமையான அறிமுகம்

    ReplyDelete
  27. எனது தளத்தையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு அறிமுகப் படுத்திய மேன்மைக்கு நன்றி. புகழனைத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கே உரியது.

    ReplyDelete
  28. அருமையான பதிவுகள்...

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அஷோக் குமார்...

      Delete
  29. வணக்கம் சார் என்னுடைய பதிவையும் எடுத்து அனைவருக்கும் தெரியப்படுத்தியமைக்கு நன்றி சார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது