தேடித் தரும் தேன்சிட்டு -6
➦➠ by:
கபீரன்பன்,
தேன்சிட்டு
இன்றைக்கு நாம் திரட்டப்போகும் தேனுக்குப் பெயர் திண்மைத் தேன். அதற்கெனவே சில வலைப்பூக்கள் அவ்வப்போது சிற்சில மிக அரிய விஷயங்களைத் திரட்டி வைத்துள்ளன. அவற்றைப் பிரித்தெடுத்து படிப்பதால் நமது மனத்திண்மை கூடும். வாழ்க்கையின் சாரம் புரியும்.
-----------------------------------------------------------------
Inspire Minds to change Lives என்கிற வலைத்தளத்தின் தமிழ் வடிவில் பல இளம் சாதனையாளர்களின் உழைப்பும் வெற்றியையும் விரிவாக எடுத்து சொல்கிறது.
பக்கத்து ஊரான திசையன்விளை வரை சைக்கிளில் போய் டைப்ரைட்டிங் படிக்க ஆரம்பித்தவர், ஊர்க் காரர்களுக்கு உதவ, விறகு வாங்கித் தருவதையே ஒரு தொழிலாக ஆரம்பித்தார். “அடிக்கடி சைக்கிள் பஞ்சரானதால் பஞ்சர் ஒட்ட கற்றுக்கொள்ள, சாத்தான் குளத்தில் முதல் முதலாக ஒரு பஞ்சர் ஒட்டும் கடை போர்டுடன் உருவானது. கடை வைத்திருந்தால் கூட அக்ரி படிப்பின்மீது ஆசை போகவில்லை. அடுத்த ஆண்டும் அட்மிஷன் கிடைககவில்லை. மனம் வெறுத்துப் போன சங்கரலிங்கத்திடம், கடையைக் கவனத்துடன் கவனித்துப் பெரிதுபடுத்தும் யோசனையைச் சொல்லி ஆறுதல்படுத்தினார் தந்தை. ஆனாலும் அந்த இளைஞனின் மனத்தில் சாதிக்க வேண்டும் என்று கனன்று கொண்டிருந்த கனல் மெல்ல அனலாகி, உயரங்களைத் தொட நமக்கு வேண்டியது இந்தக் கிராமத்தில் இல்லை என்ற முடிவோடு கையில் முந்நூறு ரூபாயுடன் கோவைக்குப் பயணமானார்.........என்று போகிறது சங்கரலிங்கத்தின் பாதையில் பூக்களில்லை முட்கள் மட்டுமே என்கிற கட்டுரை. இவருடைய போராட்டத்தைப் போலவே இன்னும் சிலருடைய வெற்றிகளும் இந்த வலைத்தளத்தில் காணலாம் 1) டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி 2) எட்டாம் வகுப்புத் தேர்வை எழுதும் 60 வயதுப் பெண்
இப்படி பல தமிழ் நாட்டு சாதனையாளர்களை அவர்கள் வலைத்தளத்தில் காண முடிகிறது. மிக அருமையான தளம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
-------------------------------------------------------------------------------------
இன்னொரு அதிசயமான மனிதரைப் பற்றி ரைட் மந்த்ரா என்கிற வலைதளத்தில் ஒரு நேர்காணல் வெளி வந்திருக்கிறது.
அண்ணல் காந்தியை பற்றி ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னபோது, “இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக பூமியில் வாழ்ந்தார் என்பதையே வருங்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்” என்றார்.
அதே வார்த்தைகள் இவருக்கும் 100% பொருந்தும். என்ன ஒரு சின்ன திருத்தம். இவரை பற்றி கூறினால் இப்படி ஒரு மனிதர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று நிகழ் காலத்திலேயே நம்ப மறுப்பார்கள்இவர் 35 ஆண்டு காலம் நூலகராகப் பணியாற்றியவர். இந்தியாவின் தலைசிறந்த நூலகராகவும் உலகத்தின் பத்து சிறந்த நூலகர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர். ஐக்கிய நாட்டு சபை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் என்று போற்றி பாராட்டியது. பில் கிளிண்டனின் இந்திய விஜயத்தின் போது சந்திக்க விழைந்த இருவரில் இவரும் ஒருவர். அவர் பெயர் பாலம் கலியாண சுந்தரம். அவருடைய அபூர்வமான சாதனைத்தான் என்ன ? இந்த இணைப்பை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடாமல் உடனே படித்து முடியுங்கள்
right mantra வலைத்தளம் மேலும் பல அபூர்வ சாதனையாளர்ளை நேர் காணல் செய்து அவர்களின் சாதனைகளை உலகுக்கு அறிவிக்கிறது.வாழ்க அவர்கள் நற்பணி. இந்த வலைத்தளத்தை நடத்திவரும் சுந்தர் அவர்கள் தன்னைப் பற்றியும் தன் குறிக்கோள் பற்றியும் சொல்லியிருப்பதே பல இளைஞர்களுக்கு உற்சாகம் தர வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.
-----------------------------------------------------------------------------------
ஒன்பதாம் வகுப்பு வரையில் மட்டுமே படிக்க முடிந்த திரு அ. முருகானந்ததின் வாழ்க்கைப் பாதை எவ்வளவு கடினமாயிருந்தது என்பதையும் மகளிருக்கான மலிவு விலை சானிடரி நாப்கின்ஸ் தயாரிப்பு முயற்சியில் அவர் பட்ட கஷ்டங்களையும் சொல்லி முடியாது. அவரது பயணத்தை தொடுவானம் சற்றே தொட்டுப்பார்க்கிறது. நம்பிக்கை நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் அவருடைய சாதனையைப் பற்றிய கட்டுரை, காணொளி யாவற்றையும் காணலாம்.
அவர் நகைச்சுவையாய் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது பார்த்து ரசிக்க வேண்டியதொன்று. இதோ உங்களுக்கான காணொளி. TED TALKS
[ TED Talks என்பது மிக உயர்ந்த சாதனையாளர்களின் வெற்றியை பறைசாற்றும் வகையில் அவர்களை அழைத்து பேசச் சொல்லும் உலகளாவிய ஒரு முயற்சி. அதில் பேச அழைக்கப்பட்டு திரு முருகானந்தம் கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பதே மிகப் பெரிய விஷயம். இந்த கருத்தரங்கில் பார்வையாளராக அமர்வதற்கே பல நூறு டாலர்கள் வசூலிக்கப்படுகிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்]
இவருடைய சிறப்பான குணம் தன் உழைப்பின் வெற்றியை சுய வேலை வாய்ப்பு மகளிருக்கான முன்னேற்றத்திற்காகவே அர்ப்பணித்திருக்கிறார்.
தொடுவானத்தின் ஆசிரியர் காளிதாஸ் முருகய்யா. இவர் முருகானந்தத்தை பற்றி மட்டுமல்லாது வாழ்க்கை கோலங்கள் என்கிற தொடரில் சாதனைப் படைத்தலைப் பற்றி நிறைய எழுதி வருகிறார். அழகான கோலங்கள் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டியவை
------------------------------------------------------------------------
ஏற்கனவே நாம் இருவரின் உதாரணத்தில் இதைக் கண்டிருக்கிறோம்.
முதல் நாள் தூப்புக்காரி நாவலாசிரியர் மலர்வதி அவர்களைப் பற்றிய சந்திப்பு உரையாடல். எப்படி பள்ளிக்கூடப் படிப்பைக்கூட முடிக்க முடியாத ஒருவர் தம் விடாமுயற்சியாலும் திறமையாலும் தனக்கென சமூகத்தில் ஒரு அடையாளம் காட்டிக் கொள்ள இயலும் என்பதை அவருடைய வெற்றி சொல்லித் தருகிறது.
அடுத்து நாம் கண்டவர் ஜனா. எவ்வளவு பேர் அந்த ஆலிலைக் கிருஷ்ணனின் இணைப்பைச் சுட்டி ஜனாவின் வரலாற்றைத் தெரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை. கைகளை இழந்த பாலகன் தன் வாயினாலேயே எழுதுவதும் ஓவியம் வரைவதும் செய்து காட்டி தன்னம்பிக்கை உள்ளவர்களால் முடியாதது கிடையாது என்பதை உறுதி செய்திருக்கிறார்.
----------------------------------------------------------------------------------------
இச்சாதனையாளர்களின் முன் நான் ஒரு துரும்பு போல் உணர்கிறேன். என்னால் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா என்பது போன்ற எண்ணங்கள் அவ்வப்போது வருகிறது. இறைவன் அவர்களைப் பற்றி உங்களிடமெல்லாம் பேச வைத்திருப்பதே இந்த கணத்தில் என்னால் முடியக் கூடிய தொண்டு. அதற்காக வலைச்சரத்திற்கு நன்றி
இன்றோடு ஆறாவது நாள் பணி நிறைவடைகிறது. என்னோடு இவ்வளவு தூரம் பொறுமையுடன் வந்து கொண்டிருப்பவர்களுக்கு நன்றி. இந்த நாள் இனிய நாளாகட்டும்.
|
|
சாதனையாளர்களின் வலைப்பூக்களைத்தேடித்தந்த
ReplyDeleteதேன் சிட்டுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் ..!
பாராட்டுகளுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி
Deleteதாங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவுகளைத் தவறாமல் இன்றே படிப்பேன்.
ReplyDeleteமிக்க நன்றி.
கண்டிப்பாகப் படியுங்கள் காமக்கிழத்தன்,
Deleteநன்றி
மகத்தான சாதனையாளர்களை நம் முன் அறிமுகப்படுத்திய - தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteநன்றி துரை செல்வராஜு அவர்களே. அவர்களின் சாதனைகள் திரும்பத் திரும்ப படித்து நினைவில் வைக்கத் தக்கவை.பாராட்டுக்கு நன்றி
Deleteதிரு பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றி பேட்டி படித்தவுடன் இப்படியும் எளிமையான மற்றவ்ர்களுக்கும் உதவும் மனிதரா! என்று வியக்காமலிருக்க முடியவில்லை. அற்புத, உன்னத மனிதர் அவருக்கு முதலில் என் அன்பான வண்க்கங்கள்.
ReplyDeleteநல்லபதிவர்களை தேடி தரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இன்று பதிவில் இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
///திரு பாலம் கல்யாணசுந்தரம் அவர்களைப்பற்றி பேட்டி படித்தவுடன் இப்படியும் எளிமையான மற்றவ்ர்களுக்கும் உதவும் மனிதரா! என்று வியக்காமலிருக்க முடியவில்லை///
Deleteஅவர்களைப் போன்றவர் மனித வடிவில் நடமாடும் தெய்வங்கள் என்று போற்றப்பட வேண்டும். நானும் அவருக்கு என் ஆத்மார்த்தமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
இறைவன் அவர்களைப் பற்றி உங்களிடமெல்லாம் பேச வைத்திருப்பதே இந்த கணத்தில் என்னால் முடியக் கூடிய தொண்டு. அதற்காக வலைச்சரத்திற்கு நன்றி//
ReplyDeleteஅருமையான தொண்டு. தொண்டுகள் தொடரட்டும்.
உங்கள் தளத்தில் ஒவ்வொன்றாய் நல்லவைகளை அடிக்கடி பகிர்ந்து கொண்டால் நல்லது.
வலைச்சர ஆசிரியர் குழுவிற்கு நாங்களும் நன்றி சொல்கிறோம்.
///உங்கள் தளத்தில் ஒவ்வொன்றாய் நல்லவைகளை அடிக்கடி பகிர்ந்து கொண்டால் நல்லது.///
Deleteகண்டிப்பாக முயலுகிறேன். அதற்கான நேரத்தை இறைவன் அளிக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
பின்னூட்ட ஆதரவுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி
சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நல்வரவு குமார், வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
Deleteஜனாவைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறேன். மனம் வேதனைப் படவைக்கும் நிகழ்வு. :( மற்ற அறிமுகங்கள் புதியவர்கள். அருமையான செம்பவளச் சரம். அனைத்தும் சேர்ந்த நவரத்தினச் சரத்தைத் தொடுத்தளித்த உங்களுக்குப் பாராட்டுகள். இணையத்தின் பலன் உங்கள் ஆழ்ந்த படிப்பில் இருந்து நன்கு தெரிய வருகிறது. நன்றே செய்க அதையும் அன்றே செய்க என்பதனை நிகழ்த்திக்காட்டி வருகிறீர்கள். மீண்டும் வாழ்த்துகள்.
ReplyDelete