தூரிகை காயத்ரியின் - நன்றி _/\_
➦➠ by:
காயத்ரி தூரிகைச்சிதறல்
அன்புத்தோழமைகளுக்கு, மனமார்ந்த மாலை வணக்கம்.
இன்றுடன் வலைச்சரத்தில் எமது பொறுப்பாசி ரியர் காலம் முடிவடைவதால் நன்றி கூறித் தங்களிடமிருந்து விடைபெறுகிறேன். எழுத்துலகில் எழுத்தாணியை சரிவரப் பிடிக்கக்கூட கற்காத என்னையும் அழைத்து இந்த மலர்த்தோட்டத்தில் இளைப்பாற இடமளித்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், இத்துனை நாளும் எமது அரட்டைகளைப் பொறுமையாகப் படித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் எனதன்புத் தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வலைச்சரத்தில், ஆங்காங்கே பூத்திருக்கும் எண்ணற்ற மலர்கள் அனைத்தையும் கோர்ப்பதற்கு இயலாது என்பதை அனைவரும் அறிவோம். விடுபட்ட மலர்கள் எமது கண்களுக்கும், எம் காலத்திற்கும் சிக்காது போனதுதான் காரணமே தவிர மலர்களின் மணத்திலோ, அழகிலோ எந்தக்குறையுமில்லை.
வலைச்சரத்தில் கோர்க்கப்படாது விடுபட்டு, எமது தோழமைகளால் சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் அனைத்து மலர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள். அந்த மலர்களைக் கொண்டு வலைச்சரத்தை அலங்கரிக்கக் காத்திருக்கும் தோழமைகளுக்கு பாராட்டுக்கள்.
இந்த வாரம் தூரிகை கண்டெடுத்த முத்துக்கள் அனைத்தும் தொடர்ந்து ஒளிவீசிக்கொண்டிருக்க இறைவேண்டி வாழ்த்துகிறேன்.
தன் சிந்தனைச் சிதறல்களால் இந்த வலைச்சரத்தை அலங்கரிக்கவிருக்கு ம் அடுத்த பொறுப்பாசிரியரை மனமார வாழ்த்தி வரவேற்கிறேன். தங்கள் அனைவருடைய அன்பிற்கும் நன்றி. அன்பை அரிதாரமாய்ப் பூசாமல் அன்பை உணர்ந்து உணர்த்துவோம். எங்கும் அன்பு தழைக்கட்டும். வாழ்க வளமுடன்._/\_
|
|
வாழ்த்துகள்.....
ReplyDeleteதொடர்ந்து உங்களது தளத்தில் சந்திப்போம்......
@வெங்கட் நாகராஜ்..மிக்க நன்றி தோழர்..சந்திப்போம். தங்களுடைய வாழ்த்தும் தொடர் ஊக்கமும் எமது எழுத்தை செம்மை படுத்தட்டும்..:)
ReplyDelete//அன்பை அரிதாரமாய்ப் பூசாமல் அன்பை உணர்ந்து உணர்த்துவோம். எங்கும் அன்பு தழைக்கட்டும். வாழ்க வளமுடன்._/\_//
ReplyDeleteஅழகாகச்சொல்லி அருமையாக முடித்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் அக்கா...
ReplyDeleteபண்பட்ட சொற்களால் செதுக்கப்பட்ட நன்றியுரை என்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கும்!.. அன்பின் கவிக்காயத்ரி அவர்கள் வாழ்க பல்லாண்டு!..
ReplyDelete@வை.கோபாலகிருஷ்ணன்...தங்கள் வாழ்த்து எம்மை வளப்படுத்தட்டும் ஐயா..நன்றி.._/\_
ReplyDelete@சே.குமார். நன்றி தம்பி..:)
ReplyDelete@துரை செல்வராஜு....தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி தோழரே.:)
ReplyDeleteஒருவாரமாக தூரிகையின் பொறுப்பாசிரியையாக பணியாற்றிய கவி. காயத்ரி அவர்கள்
ReplyDeleteமாலை தொடுக்க தூரிகைத்தோட்டத்து மலர்களிள் மணமிகு மலர்களை கண்டெடுத்து
வித்தியாசமான விதத்தில் அரட்டையுடன்கூடி அறிமுகம் செய்து வைத்தது மலர்களை உற்ச்சாகப்படுத்திய விதம் மிக அருமை.
தூரிகையில் மணமிகு மலர்களாக அறிமுகமான அனைத்து மலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொருப்புடன் சீரும் சிறப்புமாக அனைவரும் ரசிக்கும்படியான விதத்தில் மலர்களை அறிமுகம் செய்துவைத்த கவிதாயினி காயத்ரி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்,
ஆனந்த்
@anandsweetkani...மிக்க மகிழ்ச்சி ஆனந்த்..தங்கள் தொடர்ந்த வருகைக்கும், வாழ்த்திற்கும்.:)
ReplyDelete