கோவையிலிருந்து அகிலா – 6
➦➠ by:
அகிலா
இனிய வணக்கம் நண்பர்களே...
குட்டிக்
கவிதை
தொட்டு செல் காற்றே
உரசினால் பற்றிக் கொள்வேன்
நான் பெண்....
எழுத்தும் அதன் அழகும் : வரலாறு
கடந்தகால நிகழ்வுகளைக் குறிக்கும்
இலக்கியமே வரலாறு என்றாலும் அதிலும் புனைவுகள் அதிகமே. அதன் எழுத்துக்களில் தான்
சமுகத்தில் நிகழும் பொருளியல் மற்றும் மனித இனத்தின் பண்பாடு முதலியவை
அறியப்படுகின்றன. வளரவும் செய்கின்றன. நம் கருத்துக்களை வலியுறுத்தவும் வரலாற்று
வாதமே பயன்படுகிறது... .
இன்று நான் விரும்பிப் படித்த பதிவுகளின் அறிமுகங்கள்
ஜெயராம் தினகரப்பாண்டியன்
மழை, கண்ணாடி, தளிர் என்று படிமங்களை கவிதையில்
வடித்திருக்கிறார் நல்லவன் என்னும் இவரது வலைப்பூவில். அனாதை எழுத்துக்கள் எண்ணும் பதிவில் வாசிக்கபடாத புத்தகங்களின் நிலையையும் அதன் எழுத்தாளர்களின் உணர்வையும் அருமையாக வடித்திருக்கிறார்.
வீழாதே என்னும் கவிதையில்,
பகலும் முடியும்
இரவும் விடியும்
தோல்வியும் உரமாகும்
வெற்றியின் விதைக்கு
வீழாதே என்னும் கவிதையில்,
பகலும் முடியும்
இரவும் விடியும்
தோல்வியும் உரமாகும்
வெற்றியின் விதைக்கு
என்று நம்பிக்கை ஊட்டுகிறார். நன்று...
சிதம்பரநாதன்
மிக யதார்த்தமான எழுத்துக்களில் பரிச்சை எழுத ஜீன்ஸ் பேன்ட் போட அனுமதியில்லாதது,
சென்னை அங்காடித் தெருவின் அடிமை விலங்குகள்
சென்னை அங்காடித் தெருவின் அடிமை விலங்குகள்
என்று அக்கறையுடன் தன் கண்முன் நடப்பவைகளை வாசித்துச் செல்கிறது
இவரது சிதம்பரநாதனின் வலைப்பூ... தொடருங்கள்...
அருள்செல்வ பேரரசன்
கணணி தொழில்நுட்ப வேலைகளை செய்வது எப்படி என்பதைக் குறித்த பதிவுகள் இவருடையது.
நல்ல போடோஷாப் டிசைனராக வர என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என தெளிவாகக் கூறியிருக்கிறார். பிளண்டிங், பில்டர் கேலரி போன்ற நுணுக்க வேலைகள் பற்றி எழுதியிருக்கிறார்.
தமிழ் கீபோர்ட்டை நாமே உருவாக்குவது பற்றியும் சொல்லிச் செல்கிறார் தன் அரசன் வரைகலை தளத்தில்...
ஒளவை
கவிதையும் அறிவியலும் கணிதமும் கலந்துகட்டி இருக்கிறது ஒளவையின் உளறல்கள் வலைப்பூவில். எழுதுபவர் கணிதப் பேராசிரியை அல்லவா.
பாறையின் வகைகள் பற்றி ஒரு பதிவில் தீப்பாறை, உருமாறியபாறை, படிவப்பாரை என்று எல்லாம் பிரித்து எழுதி அதை கவிதையிலேயே விளக்கி விட்டு முடிவில் கருத்தும் சொல்லியிருக்கிறார்.
கோடையை பற்றிய கவிதையொன்று...
எப்போதோ ஈரங்கண்ட கரிசக்காட்டுப் படிவு
பாய்போல் சுருண்டு பிளந்த வெடிப்பில்
நொடுக் வெடுக் கென்று கேட்ட சப்தம்
நடக்கையில் சுட்டபடி கோடையிது என்றது
பாறையின் வகைகள் பற்றி ஒரு பதிவில் தீப்பாறை, உருமாறியபாறை, படிவப்பாரை என்று எல்லாம் பிரித்து எழுதி அதை கவிதையிலேயே விளக்கி விட்டு முடிவில் கருத்தும் சொல்லியிருக்கிறார்.
கோடையை பற்றிய கவிதையொன்று...
எப்போதோ ஈரங்கண்ட கரிசக்காட்டுப் படிவு
பாய்போல் சுருண்டு பிளந்த வெடிப்பில்
நொடுக் வெடுக் கென்று கேட்ட சப்தம்
நடக்கையில் சுட்டபடி கோடையிது என்றது
படிக்கும் போதே சுடுகிறது. அருமை...
ஷாஜஹான்
எது தேசிய கீதம் என்னும் பதிவில் வந்தே மாதரம், ஜனகண மன போன்ற பாடல்கள் தோன்றிய வரலாறு, அவற்றின் சுதந்திர போராட்ட பின்னணி போன்றவற்றைத் தெளிவாய்ச் சொல்லி ஜன கண மன வே தேசியகீதம் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
எண்களின் வலைகளில் என்னும் கவிதை என்னை ஆச்சிரியப்படுத்தியது.
மதிப்பெண் வைத்தே மாணவர் திறமை
பிரதிகள் வைத்தே நாளிதழ் பெருமை
வண்ணங்களை வைத்தே இதழ்களின் பெருமை
பார்ப்பவர் எண்ணிக்கை சானலுக்குப் பெருமை
என்று அடுக்கிக் கொண்டே போகிறார். சுவாரசியமான அதே சமயம் கனமான எழுத்து.இந்த புதியவன் பக்கம் வலைப்பூவில்...
எண்களின் வலைகளில் என்னும் கவிதை என்னை ஆச்சிரியப்படுத்தியது.
மதிப்பெண் வைத்தே மாணவர் திறமை
பிரதிகள் வைத்தே நாளிதழ் பெருமை
வண்ணங்களை வைத்தே இதழ்களின் பெருமை
பார்ப்பவர் எண்ணிக்கை சானலுக்குப் பெருமை
என்று அடுக்கிக் கொண்டே போகிறார். சுவாரசியமான அதே சமயம் கனமான எழுத்து.இந்த புதியவன் பக்கம் வலைப்பூவில்...
என்றும் இனியவை இந்த பதிவுகள்
படித்து சந்தோஷமா இருங்க...
நாளைக்கு வரேன்...
|
|
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்...
Deleteமூன்று தளங்கள் எனக்குப் புதியவை...
ReplyDeleteநிச்சயம் சென்று பார்க்கிறேன் .சகோதரி..
வாழ்த்துகள் உங்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும்...
மகிழ்ச்சி மகேந்திரன்...
Deleteசிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் ...
Deleteஅறிமுகங்க பதிவர்ளுக்கு எனது வாழ்த்துக்கள்,
ReplyDelete''தொட்டு செல் காற்றே
உரசினால் பற்றிக் கொள்வேன்
நான் பெண்....''
அருமையான குட்டிக் கவிதை
கவிதையை பாராட்டுக்கு நன்றி...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteகுட்டிக் கவிதை கூறும்
ReplyDeleteபட்டுக் குட்டி பாட்டு
தொட்டுச் சென்ற தென்றல்
தட்டிச் சொல்லிச் சென்றதே!
அருமையான குட்டிக் கவிதை தோழி! என்னை கவர்ந்தது. வாழ்த்துக்கள்!
அறிமுகங்கள் அனைவரும் அருமை. எனக்கு அறிமுகமில்லாதவர்கள்.
என் கணினியில் கோளாறு எல்லோரிடமும் செல்ல முடியவில்லை.
ஒவ்வொருத்தராகச் சென்று பார்க்கின்றேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
உங்களின் கவிதையும் அருமை இளமதி...நன்றி
Deleteஅனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களது குட்டிக் கவிதை அருமை....
நன்றி குமார்...
Deleteநண்பரே http://graphics.arasan.info அரசன் வரைகலை என்ற எனது வலைப்பூவிற்கு உங்கள் வாசகர்களிடையே ஒரு அறிமுகம் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி...
Deleteதேர்தெடுக்கப்பட்ட விஷயங்கள் நிறைந்த வலைப் பதிவுகளின் அறிமுகம்.. காற்றைக் கூட தீயாய்ச் சுடும் கவிதை!..நன்று!..
ReplyDeleteநன்றி துரை செல்வராஜு அவர்களே...
Deleteவித்தியாசமான அறிமுகங்கள்- அறியாத பதிவர்கள்!!! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி உங்களுக்கு...
Deleteபல நல்ல தளங்களை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி!
ReplyDeleteபதிவர்களுக்கு பாராட்டுக்கள்!
குட்டிக் கவிதை அருமை!
பலரையும் அறிமுகம் தந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
ReplyDelete