செல்லமே ! இவை மனதுக்கு அமைதி தரும் செல்லங்கள் !
➦➠ by:
Angelin
வணக்கம் அன்பு நண்பர்களே :)
இன்றைய பதிவில் நாம் பார்க்கபோவது இனிமையான ,நமது
மனதுக்கு அமைதி தரும் செல்லங்கள் . நம் அனைவருக்குமே
அன்றாட வேலை ,அலுப்பு ,வீட்டில் வெளியிடத்தில் என பற்பல
சமயங்களில் படபடப்பு எரிச்சல் ,மன அழுத்தம் எல்லாம்
ஏற்படும் .இங்கே வெளிநாடுகளில் மருத்துவரிடம் சென்றால்
உடனே அவர்கள் ..//உங்க வீட்ல ஒரு நாய் ,பூனை ,பறவை ,மீன்
இவற்றில் ஏதேனும் வளருங்கள் ,காலையும் மாலையும்
அவற்றுடன் நேரத்தை செலவிடுங்கள் ,அல்லது தோட்டத்திலாவது
உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழியுங்களேன் //
என்பார்கள் ..அதற்கேற்றார்போல இங்கே அனைவரும் ஏதேனும்
ஒன்றை வளர்ப்பார்கள் மேலும் கோடைகாலத்தில்தோட்டத்தில்
நேரத்தை செலவழிப்பார்கள் .
இங்கு வீட்டில் நாய் வளர்க்க இயலாதோருக்கு வாரம் ஒருநாள்
அவற்றை வாடகைக்கு பணம் செலுத்தி எடுத்து செல்லவும் வசதி
உண்டு :)
அதேபோல வீட்டில் தோட்டம் போட இடமில்லாதோருக்கும்
Allotment எனப்படும் சமூக தோட்டங்களில் வருடாந்திரம் ஒரு
குறிப்பிட்ட தொகை வாடகை செலுத்தி அந்த இடத்தில
தோட்டம் செய்யவும் வசதி உண்டு .
இன்றைய பதிவு நாலுகால் செல்லங்கள் மற்றும் உடலுக்கும்
உள்ளத்துக்கும் புத்துணர்வூட்டும் வீட்டுத் தோட்டம் பற்றியது .
செடிகளுக்கும் உணர்வு உண்டாம் !! அவற்றுடன் பேசினாலோ
அல்லது இனிய இசையை செடிகளின் அருகே ஒலிக்கும்படி
செய்தாலோ ,அவை நன்கு செழித்து வளருமாம் .அப்போ
செடிகளும் செல்லங்கள் தானே :)
முதலில் நம் பிரபல பதிவர்களின் சில செல்லங்கள் :)
நம்ம துளசி அக்காவின் பதிவுகளை வாசிக்கும்போது
அவர்களின் உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும் ,அவங்க
நிறைய நேரத்தை செல்லங்களோட செலவழிக்கறாங்க
என்று நினைக்கிறேன் :)
அக்காவின் செல்லம் ரஜ்ஜூ இங்கே
அக்கா வீட்டுக்கு அழையா விருந்தாளியா வருகை தந்த
விருந்தினர் இங்கே .
கூண்டு செல்லங்கள் பற்றிய கவிதை
இது மோகன்குமார் அவரின் வீட்டு செல்லம் :)
கூகிள் பண்ணி பார்த்தாலும் இவர் போல அழகன்
யாருமில்லையாம் இவர் செல்லம் :)
இவர் வீட்டு செல்லம் :) ரொம்பத்தான் பீட்டர் விடறார்
இது ரத்னவேல் ஐயா அவர்களின் உறவினர் வீட்டுக்கு வரும்
செல்லங்கள் .உண்மையில் மனம் நெகிழ்ந்தது படிச்சபோது
காக்கை குருவி எங்கள் ஜாதி !
இளமதி வீட்டு செல்லம் !!
இது மதுரை தமிழன் வீட்டு செல்லம்
இது எங்க இமா அவர்களின் வீட்டு செல்லம்
இமா இங்கே டெரேரியம்,கண்ணாடி சாடியில் காக்டஸ் வளர்ப்பது
பற்றியும் சொல்லியிருக்காங்க ..சிலந்தியைகூட செல்லம் என்று
சொல்ல இவங்களால் மட்டுமே முடியும் !
இவர்கள் ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் வீட்டு செல்லங்கள் .
.......................................................................................................................................
இப்போது பச்சை பசுமையான செல்லம்கள் :) செடிகள்
இது பத்திரிகை செய்தி ..மன அழுத்தம் குறைக்கும் மாடிதோட்டம்
வித்யா சுப்ரமணியம் அம்மா அவர்கள் எழுத்தாளர் !!
இங்கே மாடித்தோட்டம் மூலிகை செடிகள் பற்றி அழகா
சொல்லியிருக்காங்க .
சித்ரா சுந்தர் மீள்சுழற்சி முறையில் கொத்தமல்லி வளர்ப்பு
பற்றி சொல்லி தராங்க இங்கே
மாடித்தோட்டம் மற்றும் அதற்கான வழிமுறைகளை
பற்பல தகவல்களை இங்கே காணலாம் .இது தோட்டம்
வலைப்பூ .
வீட்டுத்தோட்டம் தயார் செய்யும் முறைகள் இங்கே
http://denaldrobert.blogspot.co.uk/2013/01/blog-post_1529.html
தொட்டியில் காரட் வளர்ப்பு இது மஹியின் குறிப்பு .
இயற்கைக்கு திரும்புங்கள் ...வீட்டுத்தோட்டம் மீள்சுழற்சி
மீள்பயன்பாடு பற்றிய அருமையான தகவல்கள் இங்கே .
நீர் நிலம் மனிதன் வலைப்பூவில் ..
வீட்டில் கீரை வளர்ப்பு இது K.R.P.செந்தில் அவர்களின்
தளத்தில் இன்னும் பற்பல வீட்டுத் தோட்ட குறிப்புகளும்
இங்குண்டு .
இவர்களின் இந்த தளத்தில் தண்டுக்கீரை ,பொன்னாங்கன்னி
கீரை வளர்ப்பு பற்றி சொல்கிறார்கள் நான்கு பெண்மணிகள் .
வீட்டில் நாலுகால் செல்லங்களை வளர்த்தாலும் அல்லது
பசுமையான செடிகொடிகளை வளர்த்தாலும் அவற்றுக்கும்
முறையான கவனிப்பு தேவை .
இன்றைய பதிவு பலருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்
என நினைக்கிறேன் .
நாளை மீண்டும் சந்திப்போம் .
அன்புடன் ஏஞ்சலின் .
|
|
ஏஞ்சலின்,
ReplyDeleteபொரி உருண்டையுடன் இன்றைய பதிவா! :))
என்னுடைய பதிவையும் இங்கே அறிமுகம் செய்து வைத்து, தெரியபடுத்தியதற்கு நன்றிங்க. நிறைய பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கீங்க. எல்லாவற்றையும் பொறுமையாக சென்று படிக்கிறேன். இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க சித்ரா ..முதல் பொ(றி)ரி உருண்டை உங்களுக்கே :)
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அட! ராஜலக்ஷ்மியை நினைவு வச்சுருக்கீங்களா!!!! ஆஹா.... இனி உங்களுக்கு ராஜபோகம்தான்:-))))
ReplyDeleteநன்றீஸ்ப்பா.
நம் புலம்பல்களையெல்லாம் கூடச் செல்லங்களிடம் சொல்லிக்கலாம். ரகசியம் காப்பாற்றப்படும், கேட்டோ:-))) சுருக்கமாச் சொன்னா இவை சாமிகள்!
ஆமாம் அக்கா எங்க வீட்லயும் ஒரு மியாவ் இருக்கு :) ரஜ்ஜுக்கு ஹை ஃபை சொல்ல சொல்லிச்சு ஜெஸி
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
பச்சைப்பசுமைமையான நிறைவளிக்கும் தளங்களின் அணிவகுப்பு அறிமுகங்கள் அருமை..பாராட்டுக்கள்..!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராஜேஸ்வரி அக்கா
Deleteபொறி உருண்டைகள் இன்னைக்கா.... லபக்... லபக்.... லபக்......க்கிட்டேன்....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் உருண்டைகளை லபக்கியதர்க்கும் மிக்க நன்றி பிரகாஷ் :)
Deleteஅனைவரும் அறிந்த பதிவர்கள், சிறந்த பதிவர்கள்... வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅன்புள்ள நிர்மலா,
ReplyDeleteகாலை வணக்கங்கள்.
அருமையான அறிமுகங்கள்.
நம் ’யங்க் மூன்’ திருமதி இளமதி அவர்களை இங்காவது இன்று கண்டதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி ! ;)
அந்தக் குறிப்பிட்ட பதிவுக்கும் மீண்டும் இப்போது சென்று வந்தேன். அங்குள்ள 70 பின்னூட்டங்களின் 10 என்னுடையதாக இருக்கக்கண்டேன்.
அந்த நாள் ........ ஞாபகம் ........ நெஞ்சிலே வந்ததே !
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
பிரியமுள்ள கோபு
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா !
Deleteஅன்பின் நிர்மலா,
ReplyDeleteதாங்கள் காட்டியுள்ள பொரி உருண்டை சுவாரஸ்யம் இல்லாதது. அதன் பெயர் முட்டைப்பொரி என்பார்கள். அதை நமுத்துப்போகாமல் கரகரப்பாக அப்படியே சாப்பிட வேண்டும். அதில் உருண்டை பிடித்தால் சுத்தப்படாது.
நெல் பொரி + அவல் பொரி ஆகியவை மட்டுமே, பொரி உருண்டை செய்ய ஏற்றவைகளாகும். அதிலும் அவல் பொரியை விட நெல்பொரி உருண்டைதான் அதிக சுவையாக இருக்கும்.
நெல்லைப்பொரித்த பிறகு அதிலிருந்து நெல்லை சுத்தமாக நீக்கிவிட வேண்டும். [நடுவில் ஒரு நெல் இருந்தாலும் சாப்பிடும் போது கடுப்பேற்றிவிடும்]
நெல் நீக்கப்பட்ட சுத்தமான நெல்பொரியில் தித்திப்பான வெல்லப்பாகு, ஏலக்காய்ப்பொடி, தேங்காயின் சிறுசிறு பற்கள் ஆகியவை கலந்து, உருண்டையாகப் பிடித்து சுடச்சுட சாப்பிட வேண்டும்.
சுவர்க்க லோக சுகமாக இருக்கும். கார்த்திகை தீபத்திருநாள் அன்று செய்வோம். இதோ இந்த என் பதிவுகளில் அவை படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
http://gopu1949.blogspot.in/2013/11/82.html
பிரியமுள்ள கோபு
பொரி உருண்டையுடன் இன்றைய பொழுது பசுமையாக விடிந்திருக்கின்றது..
ReplyDeleteமிக சமீப காலம் வரை - கிராமங்களில் வீடு எனில் -
அங்கே நாலு மாடு, ஆடு, கோழி, குருவி, நாய், பூனை , எட்டுக்கால் பூச்சி - என சில அன்பான செல்லங்களும்,
கூரை மேல் சுரை, பீர்க்கு, தோட்டம் எங்கும் பூசணி, பரங்கி, அவரை, புடல், கத்தரி - என பலவகை பச்சைப் பசேல் பயிர் வகைகளும் காணக் கிடைக்கும்.
ஆனால் - இன்றைக்கு கிராமத்தில் ஏர் கலப்பையைக் காண்பதே அரிது!..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா ..உண்மைதான் பசுமையான கிராமத்து காட்சிகள் அவை !
Deleteஐ பொரி உருண்டை.... எனக்கும் ஒண்ணு எடுத்துக்கொண்டேன்....
ReplyDeleteஇன்றைக்கு பல அறிமுகங்கள். நேரம் கிடைக்கும்போது அனைத்து பதிவுகளையும் வாசிக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... தொடருகிறேன் பதிவுகனை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteவீட்டில் வளர்ப்புச்செல்லங்கள் இருந்தால் உண்மையில் மனதுக்கு சந்தோஷமா இருக்கும். வீட்டுத்தோட்டமும் அதுபோல்தான். நாங்கள் பயிரிட்டு வளர்த்த செடி, பயன் தரும்போது அளவில்லா ஆனந்தமாக இருக்கும்.
ReplyDeleteஅழகாக எழுதி, சிறப்பாக பல தளங்களை அறிமுகப்படுத்தியிருக் கிறீங்க அஞ்சு. பாராட்டுக்கள். நன்றி.
அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எனக்கு மிகவும் பிடிக்கும் பொரிஉருண்டை. ஆனா பாருங்க தட்டு காலி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Priya :) my tamil teacher :)
Deleteநம் அனைவருக்குமே
ReplyDeleteஅன்றாட வேலை ,அலுப்பு ,வீட்டில் வெளியிடத்தில் என பற்பல
சமயங்களில் படபடப்பு எரிச்சல் ,மன அழுத்தம் எல்லாம்
ஏற்படும்//////////////\
ஆமா அக்கா இந்த வாரம் முழுக்கா அப்படிதான் எனக்கு இருக்கு ....(உங்க பதிவ படிச்ச effect )
garrrr:) யாருக்கும் கொடுக்காம சாக்லேட்டை தன்னதனியா லபக்கினா இப்படிதான் :)
Deleteமுதலில் நம் பிரபல பதிவர்களின் சில செல்லங்கள் :)////////////////////////////
ReplyDeleteஅவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ....
:))
Deleteஅனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..!!!!
Deletethappichen :)
செல்லப் பதிவா?செல்லப் பகிர்வா?பொரி உருண்டை அழகோ,அழகு!(டேஸ்ட் பத்தி சொல்லல,ஏன்னா நான் அத இன்னும் சாப்புடல!)இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்,தங்கச்சிக்கு 'வெறும்'நன்றிகள்!,ஹ!ஹ!!ஹா!!
ReplyDeleteஉங்க தங்கச்சி செய்தத சாப்பிட உங்களுக்கே அவ்ளோ பயமா
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா :) எனக்கு செல்லங்கள்னா ரொம்ப பாசம் :)
Deletegarrrr for kalai :)
வித்தியாசமான தொகுப்பு, இது மாதிரியான செல்லத் தொகுப்பு வலைச்ச்ரத்திற்கே புதிது தான் என்று நினைக்கிறேன்.எல்லோர் பகிர்வையும் மேலோட்டமாக ஒரு பார்வையிட்டேன். சூப்பர்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா :) எனக்கு செல்லங்கள்னா ரொம்ப பாசம் :)
Deleteவலை உலக (தொலைகாட்சிகளில் முதல்முறையாக ):) நான்தான் இப்படி செஞ்சேனோ !!
தங்கள் அறிமுகங்களை வரவேற்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteஎல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விசயங்கள் !!!! அனைத்து செல்லங்களும் எங்கள் வீட்டிலும் உண்டு என்பதில் எனக்கு ஒரு தனி குஷி :-)
ReplyDeleteஎல்லா லிங்கும் ஒரு சுத்து சுத்தி புக்மார்க் பண்ணி வச்சாச்சு......தோன்றப்போ எல்லாம் மறுபடி எடுத்து படிக்கணும் :-)
தேங்க்ஸ் ஏஞ்சல் !! ஒவ்வொரு நாளும் புதுவிதமா அசத்தலா போயிட்டு இருக்கு.......கலக்குங்க !!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கௌசி :) எனக்கும் செல்லங்கள்னா ரொம்ப பாசம் :)
Deleteஅனைத்து அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteநல் அறிமுகங்கள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteபொரிக்கு முதலில் நன்றி!
ReplyDeleteஅறிமுக பதிவாளருக்கு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
Deleteகலை பாரு இங்கே உங்க அண்ணா பொரி எடுத்துக்கிட்டார் :)
ReplyDeleteநன்றி அக்கா! :) பகிர்ந்த மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் THANKS MAHI :)
Delete
ReplyDeleteவணக்கம்!
செல்லமே என்று செதுக்கிய மின்வலைகள்
வெல்லமே என்று விளைந்தனவே! - வெல்லுமே
என்றும் இதயத்தை! ஏஞ்சல் வரவேற்றாார்
இன்று பொரியுண்டை ஈந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஅன்பின் ஏஞ்சலின் - அருமையான அறிமுகங்கள் - இத்த்னை அறிமுகங்களா ? பலே பலே ! அத்தனையும் சென்று பார்க்க வேண்டும் - செல்லங்களைக் கண்டு மகிழ வெண்டும் - செய்கிறேன் - நேரம் ஒதுக்கிய உழைப்பிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீனா ஐயா :)
Deleteபின் தொடர்வதற்காக
ReplyDeleteஏஞ்சலின் செல்லங்கள் பகிர்வு மிக அருமை. துளசி அவர்களின் செல்லத்திற்கு முதலிடம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteவளர்ப்பு செல்லங்கள் , பசுமைதோட்ட செல்லங்கள் எல்லாமே மனதையும் உடலையும் நலமாக வைத்து இருக்கும் என்பது உண்மைதான்.
பதிவு வெகு அருமை.
இடம் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
:) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
Deleteபொரி உருண்டை எடுத்துக் கொண்டேன். நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா ..சிறு வயது முதல் செல்லங்கள் எனக்கு மிக்க விருப்பம் :)
Deleteமிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. எனது பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு. எல்லா பதிவுகளையும் படித்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
Deleteதோட்டம் பற்றி ஏன் வலைத்தளம் அறிமுகத்திற்கு நன்றி. தோட்டம் பற்றி மற்ற வலைத்தளங்களின் அறிமுகமும் கிடைத்தது. நன்றி - 'தோட்டம்' சிவா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteஇது வரை யாரும் வீட்டு செல்லங்களை அறிமுக ப்படுத்தியதில்லை.. வித்தியாசமான பதிவு. சில செல்லங்களை தெரியும் மீதி செல்லங்களை நேரம் கிடைக்கும் போது போய் பார்க்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலா :)
Delete