07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 12, 2014

ஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை.....அதிதி போஜனம்


எங்க (நம்ம) ஆசார்ய சுவாமிகளான ஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை......1910 இல் காஞ்சி மஹா ஸ்வாமிகள்  கும்பகோணத்தில் முகாமிட்டிருக்கையில், அங்கு ஒரு செட்டியார் தம்பதியினர் நித்யமா மகாமக குலத்தில் நீராடி மடத்துக்கு வந்து பெரியவாள சேவிச்சுட்டு அப்டியே திருக்குடந்தையில் எழுந்தருளி இருக்கும் மங்களாம்பிகை (மந்தர பீடேச்வரி) சமேத ஆதிகும்பேசரை  சேவிப்பது வழக்கம். அந்த திவ்ய தம்பதியினர்  சிவனடியார்களுக்கு திருவமுது கண்டருளப்பண்ணிய  பின்பே  அவர்கள் அமுது செய்வதாக ஒரு உறுதி  பூண்டிருந்தனர். அரனடியார்களை இல்லத்திற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை அவர்களிடமே கேட்டு அதையே தளிகை செய்து அவர்களை திருவமுது கண்டருளப்  பண்ணுவார்கள். ஒருநாள் காலை நல்ல மழை நேரம், அரனடியவர்கள் யாரும் அந்த வழி வராதமையால், அந்த செட்டியார் ஐயா, ஆச்சியிடம், மகாமக  குளத்திற்குச்  சென்று யாரேனும் அடியார் எழுந்தருளி உள்ளாரா என்று பார்த்து அழைத்து வருவதாகக் கூறி புறப்பட்டார். இறைவன் திருவருளால் அன்று குளக்கரையில் ஒரு சிவனடியார் வீற்றிருந்தார். செட்டியாரும் அவர் அருகில் சென்று தண்டன் சமர்பித்து, அடியவரை தனது இல்லத்திற்கு எழுந்தருளி திருவமுது செய்தருள வேண்டுமாய் பிராத்தித்தார். அடியவரும் செட்டியாரின் வேண்டுதலுக்கு தலை சாய்த்தவராய் அவருடன் புறப்பட்டார்.

அடியவர் வருகையை எதிர் பார்த்திருந்த ஆச்சியும், அவருக்கு தண்டன் சமர்பித்து, அவருக்கு என்ன கறியமுது பிடிக்கும் என்று கேட்டார். அரனடியாருக்கோ மிகுந்த பசி, ஆதலால், இல்லத்தில் இருக்கும் கீரை வகைகளை சமைத்தாலே போதும் என்று கூறினார். உடனே செட்டியார் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு இல்லத்திற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் உள்ள கீரைகளை ஆய புறப்பட்டார், அடியவரும் தானும் உதவி செய்தாள் சீக்கிரம் தளிகை ஆகும் என்பதால் செட்டியாருடன் அவரும் சென்றார். அவர்கள் இருவரும் கீரை பறிப்பதை ஆச்சி வேடிக்கை பார்த்த வண்ணம் தளிகைக்கு தேவையான சாமான்களை சேகரித்தார்.

பின்பு அவர்கள் பறித்து வந்த கீரையை தனித்தனியே தளிகை செய்ய ஆரம்பித்தார், இதனைக் கண்ட சிவனடியாருக்கு குழப்பமாய் இருந்தது. தளிகை தயாரானதும், சிவனடியார் பறித்து வந்த கீரையை இல்லத்தில் இருக்கும் மூர்த்திக்கு திருவமுது செய்ய எடுத்து வைத்துவிட்டு, தன் மணாளன் பறித்து வந்த கீரையை சிவனடியாருக்கு திருவமுது செய்விக்க எடுத்து வந்தார். இதனைக் கண்ட சிவனடியாருக்கு பெருமை தாங்கவில்லை, தனக்கு அந்த ஆச்சி அவ்வளவு மரியாதை குடுத்திருக்கிறார் என்று தனக்குள் நினைதுக்க் கொண்டார். இருப்பினும் இது பற்றி அம்மையாரிடம் சாப்பிடும் போது கேட்டுடனும் என்றும் நினைத்தார். திருவமுது செய்கையில் அவர் எண்ணிய படியே ஆச்சியிடம், கீரைகளை ஏன் தனியாக தளிகை செய்தீர்கள் என்று கேட்டார். அதற்கு ஆச்சி தந்த பதிலோ அவருக்கு மிகுந்த நாணத்தை அளித்து விட்டது.

ஆச்சி...கூறிய பதில்.....

சுவாமி, நீங்களும் எனது சுவாமியும்  கீரைகளை பறிக்கும் போது....எனது மணாளரோ  சிவ நாமத்தை உச்சரித்த படியே பறித்தார். ஆகையால் அவர் பறிக்கும் போதே அந்தக் கீரைகள் ஈஸ்வரார்பணம் ஆகி விட்டது, அதனால் அந்த கீரை நிர்மால்ய பிரசாதம் அதனை மறு முறை அம்சை பண்ணுவது முறை அல்ல என்பதால், தாங்கள் பறித்த கீரையை இறைவனுக்கும், எனது சுவாமி பறித்த கீரையை தங்களுக்கும் அர்பணித்தேன் என்றார்.

இத்தகைய தலை சிறந்த தொண்டினை இடை விடாது செய்து வந்த அந்த திவ்ய தம்பதியினருக்கு இறைவன் திரு அருள் செய்யும் திரு நாள் வந்தது. அன்று மாசி மாத மஹா சிவராத்ரி, செட்டியார் தம்பதியினர் இருவரும் திருக் குடந்தை, திருக் கோயிலுக்கு முதல் ஜாம பூஜைக்குச்  சென்றிருந்தனர், இரண்டாம் ஜாம பூஜை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பினர், இல்லத்திற்குள் நுழைந்ததும், ஆச்சி தனக்கு தலை சுற்றுவது போல் இருக்கிறது என்று செட்டியாரிடம் சொல்லிக் கொண்டு திருக்கோயில் பிரசாதங்களை பூஜை அறையில் வைத்து தண்டன் சமர்பித்த வாரே மூன்றாம் ஜாம பூஜை வேளையில் இறைவன் திருவடியில் கலந்தார். ஆச்சி தன்னை அழைப்பது போல் தோன்ற, செட்டியாரும் பூஜை அறைக்கு வந்து ஆச்சி திருநாடு எழுந்தருளியதைக்  கண்டு அவரும் ஆச்சியின் பெயரை சொல்லிக்கொண்டே இறைவனின் திருவடியில் கலந்தார்.

இந்த கதையை ஸ்ரீமத் மஹா பெரியவாள் சொல்றச்ச கேட்டுண்டு இருந்தவா கண்களிலெல்லாம் கண்ணீர் வந்துடுச்சாம்.....அதிதி போஜனம் சிறந்த மோக்ஷ சாதனம் என்று ஸ்ரீமத் மஹா பெரியவாள் கதை சொல்லி முடிச்சார்.


- ராஜா 




12 comments:

  1. அன்புடையீர்.. வணக்கம்!..

    செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும்
    நல்விருந்து வானவர்க்கு!..

    அதிதி போஜனத்தின் மகத்துவத்தை உணர்த்தியது தங்களின் பதிவு..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  2. மெய் சிலிர்க்கிறது. காஞ்சி மஹா பெரியவாளின் அசாத்திய சக்தியை, திரு.சோ அவர்கள் எடுத்துரைக்கும் காணொளி, யூடியூப் தளத்தில் "Supernatural powers of kanchi maha periyavaa" என்னும் பெயரில் உள்ளது. . . பாருங்கள்.
    ஹர ஹர சங்கர. ஜெய ஜெய சங்கர.

    ReplyDelete
  3. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகள் சொல்லியுள்ள அழகான கதையை இங்கு வலைச்சரத்தில் பகிர்ந்துகொண்டுள்ளதற்கு நன்றிகள். இதைப்பற்றி அடியேன் கூட என் பதிவினில் வெளியிட்டுள்ளது நினைவுக்கு வந்தது. அதற்கான இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2013/12/100-1-2-3-of-3.html

    ReplyDelete

  4. வணக்கம்!

    சின்ன கதையில் பொியநற் றத்துவம்!
    தின்னத் திகட்டாத தேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  5. விருந்தாய் அமைந்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  6. தமிழ்மணம் சேர்க்க தமிழ்வாசி ??? அல்லது சீனா ஐயா சொல்லித் தரவில்லையா...?

    ReplyDelete
  7. உங்களின் உண்மை பெயர் என்ன....?

    ReplyDelete
  8. ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

    ReplyDelete
  9. அருமையான பகிர்வு நன்றி.

    ReplyDelete
  10. அருமையான கதை... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது