07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, May 22, 2014

சிறுகதை எழுத்தாள பதிவர்கள்

இன்றைக்கும் நேற்றுபோல, நான் விரும்பிப் படிக்கும் சில புதிய பதிவர்களையும், பிரபல பதிவர்கள் சிலரையும் பற்றிப் பார்க்கலாம்.

1.மயக்கும் வரிகள் - கார்த்திக் மணி

இவரை முகநூலில் இங்கே சந்திக்கலாம். சிறுகதைகள், மொழிமாற்றக்கதைகள், கவிதைகள், தொடர்கதைகள், நெடுங்கதைகள் என இவரது தளத்தில் பல வகையான படைப்புகள் சிதறிக்கிடக்கின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய உறுப்பினராகவும் இருக்கிறார். ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் மின்னிக்கொண்டிருக்கிறார். பழகிய ஒரே நாளில் நெருங்கிய நண்பனாகிவிடும் அளவுக்கு மிக இனிமையானவர். கூடிய சீக்கிரத்தில் ஒரு பதிப்பகம் ஆரம்பித்து நல்ல படைப்புகளைப் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும் என்ற தீராத கலைத்தாகத்தில் இருப்பவர். இவரது டூத்பேஸ்ட் என்ற அறிவியல் புனைவுக் கதையைப் படித்து உண்மையிலேயே இவரது தீவிர வாசகராகிவிட்டேன். அதுதவிர தொடர்கதைகளும் ஒரு அத்தியாயம் படித்தால் அடுத்தடுத்து தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் இருக்கும். கடந்த ஒரு வருடமாகத்தான் வலைப்பூவில் எழுதிவருகிறார். தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தால் பெரிய ஆளாக வருவார்.

தொடர்கதைகள்:

மொழிமாற்றச்சிறுகதைகள்:
காதை கூறும் ஹிருதயம் - எட்கர் ஆலன் போவின் உலகப்புகழ்பெற்ற  The Tell Tale Heart என்ற சிறுகதையின் தமிழாக்கம்
கடைசி இலை - ஓ.ஹென்றியின் சிறுகதையின் தமிழாக்கம்

மற்ற சிறுகதைகளை வலைப்பூவிலிருந்து தூக்கிவிட்டார் போலிருக்கிறது. காணக்கிடைக்கவில்லை.

2.சும்மா ஒரு கதை - மதுரை கார்த்திக்

இவரை முகநூலில் இங்கே சந்திக்கலாம். மிக மிக எளிமையான சொற்களை வைத்துக் கதை சொல்லுகிறார். அறிவியல், புனைவு என வித்தியாசமான கற்பனைக்கதைகளை அள்ளித் தெளித்து நம்மை மகிழ்விக்கிறார். குழந்தைகளுக்கும் பிடித்தமான கதைகளை எழுதுகிறார். சிறுகதைகள் மட்டுமின்றி பல அறிவியல் கருத்துக்களையும் முகநூலில் பகிர்ந்து வருகிறார். அவரது அனுபவங்களையும் சிலாகித்து எழுது வருகிறார். பழகிய சில நாட்களிலேயே "மச்சி அப்றம் என்ன ஆச்சின்னா" என்று அன்னியோன்யமாகிவிடுகிற, மற்றவர்களை மதிக்கிற அக்கறையுள்ள நண்பர்.

அவரது சிறுகதைகளில் சில இதோ,

3.மாயவண்டு - சரண்குமார்

நான் நேற்றே அறிமுகப்படுத்திய அதே சரண்குமார் தான் இவர். இந்த வலைப்பூவில் சிறுகதைகள் எழுதுகிறார். தற்போது தான் ஆரம்பித்துள்ளதால் ஒரு சிறுகதை மற்றும் ஒரு தொடர்கதையின் இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே பதிவேற்றியுள்ளார். இனிமேல் அருமையான சிறுகதைகளை எழுதுவார் என்று நம்புகிறேன்.

ஆதவனின் தேர் - குழந்தைகளுக்கான அம்புலிமாமா வகைக்கதை

இவரை நிறைய பேருக்கு முன்பே தெரிந்திருக்கலாம். முகநூலில் இங்கே பட்டையைக் கிளப்பி வருகிறார். கிண்டல் மற்றும் நக்கலுக்கு மறுபெயர் ஒன்று உண்டென்றால் அது கண்டிப்பாக இவரது பெயராகத்தான் இருக்கும். அரசியல், இலக்கியம், நாட்டு நடப்பு என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து முகநூலில் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். நான் தவறாமல் குறித்து வைத்து படிக்கும் வெகுசில முகநூல் நண்பர்களில் ஒருவர். ஆனால் ஒரு விடயம். அடிக்கடி இம்மாதிரி பதிவு போட்டு மனைவியிடம் சரியான வெகுமதி பெறுகிறார் போல. அவ்வப்போது அடிவாங்கிய பதிவுகளும் வரும். :)

இவரது வலைப்பூவிலிருந்து என்னைக்கவர்ந்த சில பதிவுகள்,

5.பேபி ஆனந்தன் - ப்ரதீப் பாண்டியன் செல்லதுரை

இவரையும் கண்டிப்பாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒரு பிரபலமான சினிமா விமர்சனப் பதிவராக மட்டுமில்லாமல் சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இவரை முகநூலில் இங்கே சந்திக்கலாம். மிக மிக அறிவார்ந்த கருத்துக்களுடனும், தெளிவான பார்வையுடனும் இவர் எழுதுகிற விமர்சனங்களைப் படித்துவிட்டு, நானெல்லாம் இனிமேல் விமர்சனம் என்ற பெயரில் தத்துப்பித்துக்களை எழுதமாட்டேன் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். அப்படியான திறமையும் ஈர்க்க வைக்கும் மொழிநடையும் கொண்டவர். இவர் தான் என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதால் இத்துடன் முடித்துக்கொண்டு என்னைக்கவர்ந்த இவரது சில பதிவுகளைக் காண்போம்.

காதல் பயணம் - சிறுகதை
என் தமிழ் சினிமா இன்று - தொடர்கட்டுரை

நாளை வேறு சில வலைப்பூக்களுடன் மீண்டும் சந்திப்போம்.

நன்றி.
ஆண்டிச்சாமி.

10 comments:

  1. மேற்குறிப்பிட்ட எல்லோரையும் தொடருகிறேன் வாசிப்பில் என்பதில் மிகுந்த சந்தோசமே

    ReplyDelete
  2. இப்போதும் செவ்வாய் கிரக வாசி தான் நான்!

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.இனித்தொடர்கின்றேன் இவர்களை!

    ReplyDelete
  4. வணக்கம்
    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. No words to express...! Simply ஐ டாவ் யூ ஆண்டிச்சாமி and வலைச்சரம்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது