சுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்
கொஞ்சும் மழலையர் தம்
சொல்லும் செயலுமே
கொண்டு வருமே
மனதிற்கு அளவிலா
உற்சாகம் தனையே !
அன்பு நண்பர்களே,
வணக்கம் !
சுட்டிக்
குழந்தைகளின் ஒவ்வொரு சிறு நடவடிக்கையும், குறும்பையும் இரசிக்காத
பெற்றோர் உண்டோ ? குழந்தைகளின் குறும்புகள், அவர்தம் அறிவும், துடுக்குத்
தனமும் நிறைந்த செயல்கள், அவர்களது திறன்களை பெற்றோர் பலரும்
பகிர்ந்துள்ளனர். குழந்தைகளுக்கான நீதிக் கதைகள், சிறுவர் பாடல்கள்
பலவற்றையும் பதிவர்கள் பகிர்ந்துள்ளனர். அவற்றுள் சில வலைப்பூக்களையும்,
சின்னஞ்சிறு பிள்ளைகளின் கைவண்ணங்களையும் இன்று காணலாம்.
1. சிறு கிள்ளை தனது தந்தைக்கு எழுதிய இரகசிய பிறந்தநாள் வாழ்த்து அட்டையை இங்கு பாருங்கள்.
சிறு குழந்தைகட்கு சீட்டுக் கட்டின் உதவியுடன் கணிதம் கற்றுக் கொடுக்கும் உபாயத்தையும் நமக்கு விளக்குகிறார் பூந்தளிர் தளத்தில் சகோதரி தியானா அவர்கள்.
2. நாற்றாங்கால் தளத்தில் சிறுவர்களுக்கான பாடல்கள் , நீதிக் கதைகள், தாலாட்டு பாடல்கள் , குழந்தைகளுக்கான போட்டித் தேர்வுகள் போன்ற பலவிதமான தகவல்களை தொகுத்து வழங்குகிரார் வலைப்பூவின் ஆசிரியர் விதூஷ் அவர்கள். பார்த்து பயன் பெறுவோமே.
3. வெளிச்சக் கீற்றுகள்
தளத்தில் சகோதரர். வெங்கட் நாகராஜ் அவர்கள், தனது மகள் ரோஷ்ணி வெங்கட்
அவர்கள் வரைந்த கணினி ஓவியங்கள் மற்றும் வண்ண ஓவியங்களை பகிர்ந்துள்ளார்.
பாடப் புத்தகத்தில் உள்ள ஓர் காட்சியை எவ்வளவு அழகாய் கணினியில் வடித்துள்ளார் பாருங்களேன்.
4. தமிழ் அறிவுக் கதைகள் தளத்தில், சிறுவர்களுக்கான அறிவுக் கதைகள், திருக்குறள் கதைகள், தன்னம்பிக்கை கதைகள் போன்ற சிறுவர்களுக்கான பல கதைகளை பகிர்ந்து வருகிறார் திரு. மாணிக்கம் நடேசன் அவர்கள்.
5. பாட்டி சொல்லும் கதைகள் வலைப்பூவில் திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள் தெனாலிராமன் கதைகள், நீதிக் கதைகள், பக்தி கதைகள், மகான்களின் கதைகள், திருக்குறள் கதைகள் பலவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.
6. அம்மாக்களின் பகிர்வுகள் தளத்தில், சிறு குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் ஓர் குழுமமாக இணைந்து, தங்களது அனுபவங்கள், குழந்தைகளின் உணவு பழக்க முறைகள், கல்வி முறைகள், ஆரோக்கியம் என பலதரப்பட்ட பயனுள்ள செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.
7.
பிள்ளைகள் அதிகநேரம் தொலைக்காட்சியின் முன் அமர்ந்துள்ளனரா ?
அப்படியானால் இந்தப் பதிவை அவசியம் படிக்கவும். பேரன்ட்ஸ் கிளப்
வலைப்பூவில் பெற்றோர்களுக்கு ஓர் எச்சரிக்கை பதிவில் நண்பர் புதுகைத் தென்றல் அவர்கள் சொல்வதை பாருங்களேன்.
என்ன நண்பர்களே, இன்றைய பகிர்வுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தனவா ?
மீண்டும் நாளை சந்திப்போம்.
நன்றி !!!!
|
|
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரரே.
Deleteசிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழி.
Delete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 2
கொஞ்சும் குழந்தைகளின் கோல எழில்காட்டி
நெஞ்சம் முழுதும் நிறைந்தமிழ்! - பஞ்சாய்ப்
பறக்கின்றேன்! இங்குப் படைத்த வலைகள்
திறக்கின்றேன் ஆசை திரண்டு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteதமிழ்முகில்,
ReplyDeleteசுட்டிக் குழந்தைகளுக்கான இன்றைய பதிவுகள் அருமை & பாராட்டுக்கள். பதிவுகளுக்கு இனிதான் சென்று படிக்க வேண்டும்.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க தோழி.
Deleteஅனைத்தும் தொடரும் அருமையான தளங்கள்... தொகுப்பிற்கு பாராட்டிக்கள்... நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஎன் மகளின் வலைப்பூவினை இன்று அறிமுகம் செய்தமைக்கு நன்றி. வழமை போலவே எல்லா தளத்திலும் சென்று தகவல் தரும் தோழர் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !
Deleteஅருமையான தளங்கள் அறிமுகம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுழந்தைகளையும் அவர்கள் குறும்புகளையும் ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
உண்மை தான் சகோதரி.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் !
அறிமுகங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
கொஞ்சும் மழலையர் மகிழும் பகிர்வுகள் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!
ReplyDeleteதங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மிக்க நன்றிகள் சகோதரி.
Deleteஇனிய அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
தங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான தளங்கள் அறிமுகம்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கொஞ்சும் மழலையர் பற்றிய பயனுள்ள பகிர்வுகள்.
பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!
தங்களது அன்பான பாராட்டுதல்கட்கும் வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteஅத்தனையும் எனக்கு புதிய அறிமுகங்கள். அறிமுகப்படுத்தியதற்க்கு எனது நன்றி கலந்த வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !
Deleteஅனைவருக்கும் பயனுள்ள தளங்களை அறிமமுகப்படுத்தி உள்ளீர்கள் . வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி சகோதரி.
Deleteஅனைத்துமே அருமையான பயனுள்ள தளங்கள் .அறிமுகமானோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோதரி.
Deleteஅறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !
Deleteஇன்றைய அறிமுக தளங்களுக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !
Deleteதங்களின் வலைதளத்தில் என்னையும் அறிமுகப் படுத்தியுள்ளதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா...
Deleteஅறிமுகத்திற்கு நன்றிகள் முகில்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.
Delete