புதிர் பக்கங்கள்
மூளை தன்னை
முடங்க விடாதே
முயற்சித்துப் பார்ப்போம்
முனைப்பாய் புதிர்களையே !
புதிர்கள் நமக்கு நல்ல பொழுதுபோக்காகவும், நல்ல சிந்திக்கும் திறனை வளர்க்கவும் பேருதவி புரிகின்றன. இன்று நம்முடன் புதிர்களை பகிர்ந்து கொண்டு, நம்மையும் சற்று சிந்திக்க செய்யும் சில பதிவுலக நண்பர்களை காணலாம்.
1. திரு. முத்து சுப்ரமணியம் ஐயா அவர்கள் தனது முத்துவின் புதிர்கள் பக்கத்தில் பலவிதமான புதிர்களை வழங்கி வருகிறார்.
குறுக்கெழுத்துப் புதிர் , கலைமொழி புதிர், சொல்கலை புதிர் என்ற பலவகையான புதிர்களை இவர் வழங்குகிறார். புதிர்களை விடுவித்து மகிழ்வோமே !
2. திரு. யோசிப்பவர் அவர்கள் தனது யோசிங்க தளத்தில், வார்த்தை விளையாட்டு, புதிர்கள், குறுக்கெழுத்து புதிர்கள், வார்த்தை தேடல் விளையாட்டு, கலைமொழி புதிர் என்று பலவகையான புதிர்களை வழங்குகிறார். இவையனைத்தும் நம் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
3. திரு. நாகராஜன் அவர்களது புதிய வலைப்பூ தமிழ் புதிர்கள்.
குறுக்கெழுத்து புதிர்கள் வழங்கி வருகிறார்.
4. திரு. இராம் மலர் அவர்கள் தனது வலைப்பூவில் பொது அறிவுப் புதிர் கேள்வி பதில்களை பகிர்ந்து வருகிறார்.
5. திரு. இராமராவ் அவர்கள் தனது திரைக்கதம்பம் வலைப்பூவில் திரைக் கதம்பம் மலர் மற்றும் திரை குறுக்கெழுத்து புதிர்களை வழங்கி வருகிறார்.
6. திரு. பார்த்தசாரதி அவர்கள் தமிழ் குறுக்கெழுத்து புதிர்கள் மற்றும் சொல்கலை, சொல்லடுக்கு புதிர்களை வழங்கி வருகிறார்.
7. மூங்கில்காற்று தளத்தில் எழுதி வரும் திரு. டி. என். முரளிதரன் அவர்களின் இந்தப் புதிர்களையும் பாருங்களேன்.
8. சீனுவாசன் பக்கங்கள் தளத்தில் திரு. கு. சீனுவாசன் அவர்கள் எந்த
வருடமாயினும், அந்த வருடத்தின் எந்தத் தேதியாயினும், அதற்கான கிழமையைக் கண்டறிய மிக எளிமையான வழி ஒன்றை சொல்கிறார் பாருங்கள்.
9. ஒரு பக்கம் தளத்தில் ஸ்ரீதர் நாராயணன் அவர்கள் ரீபஸ் புதிர் மற்றும் சொற்சித்திரப் புதிர்கள் வழங்கி இருக்கிறார். புதிர்களை விடுவிப்போம் வாருங்கள்.
10. தினேஷ் குமார் அவர்கள் தனது முகிலனின் பிதற்றல்கள் தளத்தில் குறுக்கெழுத்து, சொல்கலை, ரீபஸ் புதிர்களை வழங்கியுள்ளார்.
நண்பர்களே, இன்றைய அறிமுகங்களின் பதிவுகளை வாசித்து ஊக்கம் அளிப்போம்.
நல்லதொரு வாய்ப்பினை அளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கடந்த ஒருவார காலமாக, எனக்கு தங்களது மேலான ஆதரவை அளித்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அறிமுகமான நண்பர்களுக்கு தகவலை உடனுக்குடன் தெரிவித்து பேருதவி புரிந்த திரு. திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள்,
திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், நண்பர் திரு. ரூபன் அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நல்லதொரு வாய்ப்பினை அளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கடந்த ஒருவார காலமாக, எனக்கு தங்களது மேலான ஆதரவை அளித்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அறிமுகமான நண்பர்களுக்கு தகவலை உடனுக்குடன் தெரிவித்து பேருதவி புரிந்த திரு. திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்கள்,
திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், நண்பர் திரு. ரூபன் அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



.jpg)








