07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 10, 2014

மனம் மயக்கும் தமிழிசை பாடல்கள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !



இசைக்கு மயங்காதோர்  எவரும் உண்டோ ? நமது வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை பெரும்பங்கு வகிக்கிறது.  இன்று நமக்கு  இசை  விருந்தளிக்கும் பதிவர்கள் சிலரை பார்ப்போம்.

 1. கிணற்றுத் தவளை தளத்தில், அசோகராஜ் ஆனந்தராஜ் என்ற பதிவர், பல திரைப்பாடல்களை,பாடல் வரிகள் மற்றும் அவற்றின் காணொளிகளுடன் பகிர்ந்து வருகிறார்.  தண்ணீரிலே மீன் அழுதால் என்ற இப்பாடலை காணொளியுடன் பகிர்ந்துள்ளார். பார்த்து இரசிப்போமே.

2. இனிய தமிழ்ப் பாடல்கள் தளத்தில், மோகனன் அவர்கள்,  கிராமியப் பாடல்கள், திரைப் பாடல்கள் என்று பல பாடல்களை அவற்றின் பாடல் வரிகளுடன் பகிர்ந்துள்ளார். ஒத்தையடிப் பாதையிலே என்ற விஜயலஷ்மி நவநீதகிருஷ்ணன் பாடலில் தான் கண்ட சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் பாருங்களேன்.


பரவை முனியம்மா அவர்களின் சில கிராமியப் பாடல்களை இங்கு பாருங்களேன்.

3. பதிவர் தம்பதியர் வெங்கட் நாகராஜ் - ஆதி வெங்கட் அவர்கள் தாங்கள் இரசித்த பாடல்கள் பலவற்றை ரசித்த பாடல் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் இந்த அற்புதமான பாடலை பார்த்தும் கேட்டும் இரசியுங்களேன்.

பஞ்சவர்ணக் கிளி படத்தில் வரும் இந்த அருமையான தாலாட்டுப் பாடலையும் பாருங்கள்.

4. தமிழ் பாடல் வரிகள் தளத்தில், பல தமிழ்  பாடல்கள், தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.

சந்தோஷத்தைப் பற்றிய இந்த பாடலை கேட்டு  இரசித்து மகிழ்வோமே.

தாயின் அருமை சொல்லும் இந்த பாடலை, குறிப்பாக பாடலின் வரிகளை வாசித்து  மகிழ்வோமே !

5. தேன்கிண்ணம்  வலைப்பூவில், பல பாடல்கள் பாடல் வரிகள் மற்றும் காணொளிகளுடன்  தொகுக்கப்பட்டு வழங்கப் படுகின்றன.

நாட்டியமும் இசையும் போட்டி போடும் இந்த அற்புதப் பாடலுக்கு இணை ஏது ?

கருத்தாழம் மிக்க இந்த பாடலை கேட்டு இரசிப்போமே.

6. தமிழ் என்னும் தேனை இசை மூலம் பருக இச்சை கொள்ளும் பதிவர்கள் தமிழ், ஓஜஸ், பாணி, குழலினி , பாலு  இவர்கள் அனைவரும் இணைந்து நடத்தும் வலைப்பூ  தமிழ் இசை.  

மனம் கவர்ந்த கண்ணனை பற்றி காற்றில் வரும் இசையிடம் மங்கை ஒருத்தி கேட்பதாய் வரும் இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது.

தந்தைகளுக்கு மகள்கள் எந்நாளும் தேவதைகள் தாம் என்று சொல்லும் அழகான கவிதை வரிகள் கொண்ட அற்புத பாடல்.

7. செவிக்கினிய பாடல்கள் தளத்தில் அற்புதமான பாடல்கள், குறிப்பாக பல பழைய திரையிசைப் பாடல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார் திண்டுக்கல்லை சேர்ந்த திரு. ஞான வெட்டியான் அவர்கள்.

8. பாடும் நிலா பாலு தளத்தில் திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் பாடல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார் கோவை இரவி அவர்கள்.

9. திரு. எம்.ஜி. ராமசந்திரன் அவர்களது பாடல்களை தொகுத்து எம்.ஜி.ஆர். திரைப்பாடல்கள் தளத்தில் தொகுத்து வழங்கி வருகிறார்  பதிவர் பூங்குழலி அவர்கள்.

இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற கருத்தை வலியுறுத்தும் இப்பாடலை கேளுங்கள்.

10. இன்னிசை வேந்தர்கள் "சங்கர்-கணேஷ்" இசையில் தமிழ் திரைப்பாடல்கள் தொகுப்பு 
என்ற வலைப்பூவில் சகோதரர் திரு.நூஹூ  லெப்பை அவர்கள் இசை இரட்டையர்கள் என்றழைக்கப்படும் இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ் இவர்களது இசையில் உருவான பாடல்களை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

பாடல், பாடலைப் பாடியவர், பாடலை தரவிறக்க சுட்டி என்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.

என்ன நண்பர்களே இன்றைய அறிமுகங்கள் அனைவரையும் கண்டீர்களா ? மீண்டும் நாளை வேறு சில பதிவர்கள், அவர்தம் பதிவுகளுடன் மீண்டும் சந்திப்போம்.


31 comments:


  1. வணக்கம்!

    தமிழ்மணம் 1

    தமிழிசை பொங்கும் தளங்களை இங்கே
    அமுதென அள்ளி அளித்தீா்! - தமிழ்முகிலே!
    பாட்டிசை கேட்பேன்! பசிமறந்து கைத்தாளம்
    போட்டிசை கேட்பேன் பொலிந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. தேனினும் இனிய பாவிற்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. வணக்கம்

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள் சென்று வருகிறேன் பதிவின் பக்கம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

      Delete
  3. வணக்கம்

    என்பக்கம் கவிதையாக.

    அன்று ஒருநாள்.
    வாருங்கள் அன்புடன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. விரைவில் வருகிறேன் சகோதரரே !

      Delete
  4. எனக்கு மிகவும் உதவும் பிடித்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  5. இசையால் வசமாகா இதயம் எது - தமிழ்
    இசையால் வசமாகா இதயம் எது!..

    இனிய பாடல்கள் நிறைந்த தளங்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  6. //இசைக்கு மயங்காதோர் எவரும் உண்டோ ? நமது வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை இசை பெரும்பங்கு வகிக்கிறது. இன்று நமக்கு இசை விருந்தளிக்கும் பதிவர்கள் சிலரை பார்ப்போம்.//

    மிகவும் அசத்தலான விருந்துகளை ஓடிப்போய்த் தேடிப்பிடித்து பரிமாறியுள்ளீர்கள். உண்மையில் மனம் மயங்கி சொக்கித்தான் போகிறது. அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இவற்றை ஒருங்கிணைத்து முழு விருந்தாக்கித் தந்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான உற்சாகமூட்டும் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. இனிமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி.

      Delete
  8. தமிழ்முகில்,

    மனதை மயக்கும் தமிழ்ப் பாடல்கள் இருக்கும் பதிவுகளாகத் தேடிப் பிடித்து பதிவிட்டது நன்று. நேரம் கிடைக்கும்போது இத்தளங்களுக்கு சென்று வருகிறேன்.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், அறிமுகம் செய்துவைத்த தமிழ்முகிலுக்குப் பாராட்டுகளும் !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் பாருங்கள் சகோதரி.

      தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  9. என் மனதிற்கு மிக நெருக்கமானவை எம் ஜி ஆர் பாடல்கள் .அறிமுகத்திற்கு மிக்க நன்றி ரூபன் .

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  10. எனக்கும் பாடல்கள் மீது இன்னும் காதல்! இனித்தான் இன்றைய அறிமுகத்தளங்களில் தேன்கிண்ணம் தவிர மற்றவைபக்கம் போய்வர வேண்டும் பகிர்வு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

      Delete
  11. அறிமுகங்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சிறந்த பதிவு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  13. இவ்வளவு பாடல்களைத் தாங்கள் தொகுக்க எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  14. எங்களது ரசித்த பாடல் தளத்தினையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே .

      Delete
  15. வலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  16. நன்றி தோழர்களே...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது