நலம் மற்றும் குழந்தை வளர்ப்பு !
➦➠ by:
Angelin
வணக்கம் நட்புக்களே :)
அனைவருக்கும் இனிய சனிக்கிழமை வணக்கம் !
நேற்று திருவிழா போய்வந்த களைப்பு இன்னும் இருக்கா ?
அப்படியென்றால் இந்தாங்க ஒரு கோப்பை நீராகாரம் !
(பட உதவி ..நன்றி மீரா ..mirashobbylounge.blogspot.com.)
சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!
"ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்"
இன்றைய தலைப்பு உடல் நலம் மற்றும் குழந்தை வளர்ப்பு !
மிக்சி ,கிரைண்டர் ,குளிர்சாதன பெட்டி ,ஹோட்டல் உணவு ,
துரித உணவு ,மைக்ரோவேவ் ,பதபடுத்தபட்ட உணவு , எந்த
தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லாத நாளிலும்
நமது தாத்தா பாட்டி,காலத்தில்அவர்களால் எப்படி நோய்
நொடியின்றி வாழ முடிந்தது ?
இப்போ இருப்பதுபோல ஜிம் ,ட்ரெட்மில் ,அட்கின்ஸ் உணவு
டயட் ஸ்பா :) நீராவி குளியல் எதுவுமே இல்லையே அப்போது .
ஆனால் அப்போதில்லாத எல்லா நோய்களும் இன்னும்
புதிய வகை நோய்களும் இப்போ நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமா கணக்கு வழக்கின்றி பெருகி
வருகின்றது (அதனாலோ என்னவோ மீண்டும் பலர் நமது
முன்னோர் வழியை பின்பற்ற ஆரம்பிச்சிருக்காங்க .
உண்மையில் இது மகிழ்ச்சியான விஷயமே !.
நம்மில் எத்தனை பேருக்கு சாமை ,தினை ,வரகு ,கவுணி அரிசி
இவை பற்றி தெரியும் ?
இவையெல்லாம் நமது உடலுக்கு நன்மை தரும்
தானியங்கள் .உடல் நலம் மட்டுமின்றி குழந்தை வளர்ப்பு
பற்றிய தகவல்கள் பகிரும் வலைப்பூக்கள் சிலவற்றை
இங்கு இணைத்துள்ளேன் .
தாஜுத்தீன் என்பவரது வலைப்பூ
கோணுழாம்பள்ளம் போஸ்ட் ... இதில் நீராகாரத்தின் அருமை
பெருமைகளை அழகாக விளக்கியிருக்கின்றார் .மற்றும் பற்பல
அறிய தகவல்களும் இங்குண்டு .
நீராகாரம் செய்முறை !இங்கே நம்ம ஆசியா தந்திருக்கின்றார் .
கவுணி அரிசியில் பிடி கொழுக்கட்டை இங்கே லலிதா
சண்முகம், அவர்கள் மங்கையர்மலர் ,அவள்விகடன்
ஆகிய பத்திரிக்கைகளுக்கு குறிப்பு எழுதுபவர் .
அவரது வலைப்பூ http://lalithasspecialrecipes.blogspot.co.uk/
கறுப்பு அரிசி /கவுணி அரிசி பாயசம் செய்முறை இங்கே
மேனகா அருமையாக செய்து காட்டியிருக்காங்க ..
அபார ருசி ..எங்க வீட்டில் அடிக்கடி செய்றோம் ..
ஹேமா மேனனின் வலைப்பூ ..நாம் மறந்தவற்றை
மீண்டும் நினைவுகூறுகிறார் ...இவர் தளம்
http://hemamenan.blogspot.co.uk/ இதில்
சனி நீராடு ..இதன் விளக்கங்கள் மற்றும் பற்பல
ஆரோக்கிய குறிப்புகள் வழங்குகிறார் ஹேமா மேனன் .
நாம் அனைவரும் ரோஸ் மில்க் குடிக்கிறோமே
அதில் எப்படி ரோஜா வர்ணம் வந்தது என்று நினைத்து
பார்த்திருக்கோமா ..செயற்கை நிறமூட்டிகள் சேர்ப்பதால்
உடலுக்கு பற்பல தீங்குகள் வரலாம் ..இங்கே இயற்கை
முறையில் ரோஸ்மில்க் தயாரிப்பது எப்படின்னு
சொல்கிறார் தாய்மை ஒரு இனிய பயணம் வலைப்பூவில்
http://thaaymai.blogspot.co.uk/ .
மண்பாண்ட மகிமை பற்றி விளக்குகிறார் ,பண்ணையார்
மருத்துவம் ,இயற்கை விவசாயம் ,பாரம்பரிய உணவு
என பற்பல தகவல்கள் இங்குண்டு .
எங்கு சென்றாலும் மனது விவசாயத்தை தேடும் .பார்க்கும்
இடம் எல்லாம் , கண்ணில் படுவதை எல்லாம் விவசாயத்துடன்
இணைத்து பார்க்கும் மனம்.என்கின்றார் தன்னைப்பற்றி
இவரது வலைத்தளம் http://www.pannaiyar.com/
குழந்தை வளர்ப்பு ,கர்ப்பிணி பெண்களுக்கு ,வளரும்பெண்களுக்கு
என பலருக்கும் பயன்படும் தகவல் பெட்டகம் ஜலீலாவின்
சமையல் அட்டகாசம் வலைப்பூ .
http://samaiyalattakaasam.blogspot.com/p/blog-page_1.html.
கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ் இங்கே
கேன்சர் நோயாளிகளுக்கு ,தர உகந்த உணவுகள் ,
விழிப்புணர்வு பக்கங்கள் என ஜலீலா நிறைய
குறிப்புகளை பகிர்கிறார் .
குழந்தை வளர்ப்பு நலம் பற்றிய வலைப்பூ சுபாவின் குறிப்பு
http://subawin.blogspot.co.uk/
குழந்தை நலம் பற்றிய இவரின் பதிவு
மலரினும் மெல்லிய மனம் படைத்த மழலைகள்
அவர்களின் குணங்களை ,அவர்களின் இயல்பை புரிந்து
நடக்க வேண்டியது பெற்றோர் கடமை ..
நல்லவற்றையே சொல்லிகொடுங்கள் .விளையாட்டுடன்
கல்வியை கற்றுகொடுங்கள் .நற்குணங்களை கற்று கொடுங்கள் .
பெற்றோரின் ஆசைகளை பிள்ளைகள் மேல் திணிக்காதிருத்தல்
மிக்க நலம் .
சமீபத்தைய செய்தி ..இந்த சுட்டியில் பார்க்கவும்
http://www.bbc.co.uk/tamil/science/2014/04/140424_undrawingslgirl.shtml
இலங்கையை சேர்ந்த சிறுமியின் ஓவியம் ஐ .நா .சுற்றுசூழல்
திட்டத்துக்கென தேர்வாகியிருக்கு .அவர்கள் கொடுத்த தலைப்பு
வீணாகும் உணவும் பூமியை பாதுகாப்பதும் .
ஒரு உண்டியலில் அனைத்து சிறாரும் காய்கறிகளை
சேமிப்பது போன்ற ஓவியத்தை அச்சிறுமி வரைந்து
பரிசை தட்டி சென்றுள்ளார் .
அவளின் பெற்றோர் சேமிக்கும் பழக்கத்தை அவளுக்கு
சொல்லி தந்ததால்தான் இந்த யோசனை உதித்திருக்கும் .
நல்லமுறையை நற்குணங்களை ஊட்டி வளருங்கள் .
குழந்தைகளின் குணம் அவர்களுக்கான வழிகாட்டல்
என பல செய்திகளடங்கிய பக்கம் .திரு .அன்பரசு
அவர்களின் வலைத்தளம் http://sjkt-keruh.blogspot.co.uk/
சகோதரர் கே .ஆர் .பி .செந்தில் அவர்களின் தளம் .
http://www.nalam.net/
குழந்தைகளிடம் அதிக எதிர்பார்ப்பு ஆபத்தில் முடியலாம்
இதைப்பற்றி மேலும் வாசிக்க இங்கே .
வாருங்கள் புரிந்துகொள்வோம் குழந்தையை என்று
அழைக்கிறார்கள் பேரன்ட்ஸ் க்ளப் வலைப்பூவில்
http://parentsclub08.blogspot.co.uk/
எப்படியெல்லாம் குழந்தைகளிடம் நடக்க வேணும்னு
மிக அழகா சொல்கிறார்கள் இங்கே .
குழந்தைகளை முதியோர் ஆக்காதீர்கள் என்கிறார்
ராஜசேகரன் அவர்கள் இங்கே http://nanduonorandu.blogspot.com/
அதிகப்படியான மன அழுத்தம் இக்கால குழந்தைகளுக்கு .
ஆற்று மணலிலும் கடற்கரை மணலிலும் பிள்ளைகளை
விளையாட வைக்க வேண்டும் என்கின்றார் வேதா அக்கா
இங்கே ..
பெண் குழந்தைகளின் உடல் நலம் பற்றி ரஞ்சனி அம்மா
இங்கே எழுதியிருக்காங்க ,பெற்றோர் கவனத்தில் கொள்ள
வேண்டியவை .
மகவே கேள் மிக அருமையாக தாய்க்கு செய்யும் சேவை பற்றி
அன்பாக அறிவுரை தருகிறார்கள் சமூக விழிப்புணர்வு
பக்கத்தில் ..http://nijampage.blogspot.co.uk/.
இது மழலைப்ரியனின் பக்கம் சாந்திவனத்துகதைகள் ,
அறிவமுது ,குழந்தைகளுக்கான படக்கதைகள் பல இங்குண்டு ...
மீண்டும் நாளை சந்திப்போம் .
அன்புடன் ஏஞ்சலின் ..
மகவே கேள் மிக அருமையாக தாய்க்கு செய்யும் சேவை பற்றி
அன்பாக அறிவுரை தருகிறார்கள் சமூக விழிப்புணர்வு
பக்கத்தில் ..http://nijampage.blogspot.co.uk/.
இது மழலைப்ரியனின் பக்கம் சாந்திவனத்துகதைகள் ,
அறிவமுது ,குழந்தைகளுக்கான படக்கதைகள் பல இங்குண்டு ...
மீண்டும் நாளை சந்திப்போம் .
அன்புடன் ஏஞ்சலின் ..
|
|
ReplyDeleteவணக்கம்!
சோற்றுநீா் தந்தீா்! சுவைத்தேன்! மிகஅருமை!
ஊற்றுநீா் போற்றே உளம்பொங்கும்! - போற்றுகிறேன்
சின்னக் குழந்தைகளைச் சீராட்டும் மீன்பூக்கள்!
என்னே இனிமை இவை!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி கவிஞர் ஐயா ..நீராகாரம் உங்களுக்கே முதல் கோப்பை :)
Deleteஅருமையான மோர் முதலில் குடித்தேன்::)))
ReplyDeleteமிக்க நன்றி நேசன் ..மறக்காம அந்த குட்டி சட்டியை வச்சிடணும் !!!
Deleteநேசன்,மோர், MORE குடிக்கப்புடாது.வவுத்தக் கலக்கும்,ஹி!ஹி!!ஹீ!!!
Deleteதொலைத்தவை பல இன்றைய சந்ததி காலத்தின் கோலம்:))
ReplyDeleteபலர் தளம் இன்று எனக்கு புதிது அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteநம்நாட்டுச்செய்தி நானும் அறியவில்லை பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி நேசன் ..இச்செய்தி சமீபத்தில் போன வாரம் படித்தேன் !!
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteபல வலைப்பூக்கள் எனக்குப் புதியவை. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி ஏஞ்சல்.
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி இமா !!
Deleteபல பயனுள்ள தளங்களின் அணிவகுப்பு...பாராட்டுக்கள்..!
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி அக்கா !!
Deleteயாவும் மிகவும் அற்புதமான தளங்கள்...இன்றைய நாளில் அனைவரும் தெரிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டியதுமான தளங்கள்...சமூகத்தின் மீதான அக்கறை ஒவ்வொரு பதிவிலும் பளிச்சிடுகிறது...பதிவுகள் எழுதிய அனைத்து அன்பு உள்ளங்களையும் பாராட்டுகிறேன்.
ReplyDeleteஇவற்றை இங்கே அறிமுகம் செய்த தோழி ஏஞ்சல் க்கு என் அன்பு வாழ்த்துகள் + நன்றிகள்
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி கௌசல்யா !!
Deleteஇந்த விஷயத்தில் என்னை (களிமண்ணாய் இருந்த ) தட்டி ஓரளவுக்கேனும் இப்படி எழுத வைத்த சிந்திக்க வைத்த பெருமை உங்களையே சேரும் ....:)
தவித்த வாய்க்கு தண்ணீர் என்பார்கள்.. தாங்கள் பழைமை மாறாமல் பாரம்பர்ய நீராகாரத்தினை இளங்காலைப் பொழுதில் வழங்கியமைக்கு மிக்க நன்றி..
ReplyDeleteஉடல் நலம் பற்றியும் குழந்தை வளர்ப்பு பற்றியும் தகவல்களை வழங்கும் வலைப்பூக்கள் சிலவற்றை எமக்கு அறிமுகம் செய்வித்த தங்களின் அன்பு கண்டு மிக்க மகிழ்ச்சி.. வாழ்க நலம்..
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஏஞ்சல் இன்றைய பகிர்வுகளும் மிக அருமை.அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். என்னுடைய பகிர்வையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி, மகிழ்ச்சி.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஆசியா
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோ
Deleteவெயிலுக்கு ஏற்ப மண் கலயத்தில் நீராகாரம் எடுத்துக் கொண்டேன் ஒருகலயம். நன்றி.
ReplyDeleteஅருமையான பகிர்வு. இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி கோமதி அம்மா
Deleteகுளுமையான நீர் ஆகாரத்துடன் குதூகலமான அறிமுகங்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா
Deleteஅருமையான தள அறிமுகங்கள் அஞ்சு. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள். நன்றி அஞ்சு.
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக நன்றி ப்ரியா !
Deleteஇன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும்,உங்களுக்கு நன்றிகளும்,முதற் கண்!///சட்டுன்னு "முட்டி"((நாங்க இத இப்புடித் தான் சொல்லுவோம்){குட்டி சட்டி?}கண்ணுல பட்ட ஒடனே,என்னடா இது 'கள்ளு' மாதிரி இருக்கே ன்னு பாத்தேன்,படிச்சப்புறம் தான் தெரிஞ்சுது,நீராகாரம்னு,ஹ!ஹ!!ஹா!!!அதுக்கும் டேங்'ஸ்!!!!!!பச்ச மொளகா,பாம்பே வெங்காயம்,வேற!
ReplyDeletemm:) kalai note this ..
Deleteவாங்க அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஏஞ்சலின்,மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..தெரியபடுத்திய இராஜேஸ்வரி மேடத்திற்க்கு நன்றி!! நீராகாரம் ஜில்லுன்னு சூப்பரா இருக்கு...
ReplyDeleteவாங்க Menaga வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteவாங்க!! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
DeleteVery nice post. I love ..morrrrrrr:)
ReplyDeleteவாங்க athiraaav வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
DeleteNever heard about some blogs. Thanks for the intro.
ReplyDeleteவாங்க வானதி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteஇன்று பகிர்ந்துள்ள நலம் மற்றும் குழந்தை வளர்பு அறிமுகங்கள் அனைத்தும் அருமை. அந்த பானையில் வைத்து போட்டுள்ள சோற்று நீர் நீராகாரம் இப்பவே குடிக்கனும் போல் இருக்கு, என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஏஞ்சல்..
ReplyDeleteவாங்க ஜலீ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Deleteசின் எ பிள்ளையில் காலையிலேயே பல்லே தேய்க்காமல் சம்பா அரிசி சோற்று நீர் நார்த்தங்காய் மற்றும் வெங்காயத்துடன் சாப்பிடும் சுகமிருக்கே அடடா...!
ReplyDeleteம்ம்ம் :) ஞாபகம் வருதே !! மன கலயத்தில் சாப்பிடும்போதுதான் டேஸ்ட் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteஅக்கா நலம் நலமறிய ஆவல் ..late ஆஅ வந்துட்டேன் ..சோ வாழ்த்துக்கள் சொல்லிட்டு எஸ் ஆரேன் ..நாளைக்கு இதுக்கும் சேர்த்து வைச்சி கும்முவேன்
ReplyDelete:) நாளைக்கா :) பதிவை பார் யார் யார கும்மினான்னு தெரியும் :)
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Delete